Blog Archive

Wednesday, December 30, 2009

சென்னையில் பசுமை தேடி....

சென்னை ஹார்டி கல்சுரல் சொசைட்டிக்கும் எங்களுக்கும் நீண்ட நாட்கள் பந்தம் உண்டு.
இருப்பத்தாறு வருடங்களாக அங்கிருந்து செடிகள் கொண்டு வருவதும், செம்மண் , உரம் எல்லாம் வாங்கி வருவோம்.

நடுவில் மகன் பெங்களுருவில் வசித்த
நாட்களில் அங்கே இந்தோ அமெரிக்கன் சொசைடியில் இருக்கு,கள்ளி செடிகளும், கண்ணுக்கு இதமான வண்ணங்களோடு இருக்கும் பூச்செடிகளும் வாங்கி வந்து நட்டு அவை பெரியதாகி மீண்டும் சொசைட்டிக்கே விற்று விடுவோம்.
நேற்று மீண்டும் அங்கே போகவேண்டிய அவசியம்.
சிங்கம் சார் அவர் வேலையைப் பார்க்கப் போய் விட்டார்.
நான் வண்டியை விட்டு வெளியே வந்து அந்தப் பசுமையை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.
அனுமதி வாங்கிக் கொண்டால் இங்கேயேதினசரி நம் நடைப் பயிற்சியை வைத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது.



இதென்ன மரம் என்று தெரியவில்லை. பலாவோ?




நம்மை வீட்டில் இருப்பதை விட இன்னும் ஆரோக்கியமாக இருக்கும் தாவரங்கள்.
தண்ணிர் விடும் பெரியவர் எதோ பேசியபடி மண்ணைக் கெட்டிப் படுத்திக் கொண்டிருந்தார்.


இது எங்க வீட்டு அந்தூரியம் செடி. பக்கத்தில் மீனாட்சி இல்லாத தொட்டி.





கார்த்திகைக்கு வந்துவிட்ட மாங்கனி. மார்கழியில் சுவாமிக்கு அர்ப்பணம் செய்தாச்சு.இது ஒட்டு மாம்பழம், ''இமாம் பசந்த் '' என்று பெயர். ஸ்ரீரங்கம் தோட்டத்திலிருந்து வாங்கி வந்தது.
இன்று புத்தகக் கண்காட்சியும் ஆரம்பித்துவிடும்.
வலை நண்பர்கள் அனைவரின் புத்தகங்களும் கண்ணாரக் காணலாம். இன்று பாபாசி , ஒருங்கிணைப்பாளர் சொல்லியது போல, நம் தமிழ்ப் புத்தகங்கள் தான் விலை குறைவாம். முடிந்த அளவு வாங்கலாம்.
புதிது வாங்குவதற்கு முன், இருக்கும் புத்தகங்களை முடிக்க வேண்டும்.
திரு பாரதி மணி அவர்களின் பலநேரங்களில் பல மனிதர்களை ஆரம்பித்திருக்கிறேன்.
அருமையான சம்பவங்கள் சுவையாகக் கூறப்பட்டிருக்கின்றன.
அனைவருக்கும் வரும் புத்தாண்டு இனிமையும் ஆரோக்கியமும் செழிப்பும் வழங்க இறைவன் அருள் புரியட்டும் .






எல்லோரும் வாழ வேண்டும்.

16 comments:

துளசி கோபால் said...

அதென்ன முள்ளில்லா பலா!!!!!

சூப்பர் கார்டனா இருக்கே. என்னையும் அங்கே கூட்டிட்டுப் போங்கப்பா.

சாந்தி மாரியப்பன் said...

கண்ணுக்கு இதமா, பசுமையா இருக்கும்மா..
இமாம் பசந்த் எனக்கும் பசந்த்.:-)

ராமலக்ஷ்மி said...

முள்ளில்லா பலாவா என நான் கேட்க நினைத்ததே முதல் பின்னூட்டமாக:)!

பசுமையான பதிவு!

கண்மணி/kanmani said...

வல்லியம்மா வாங்க உங்களுடைய பழைய [ஓல்டு] பிலாக்கருக்காக என்னுடைய பதிவின் டிஸ்கியில் உள்ள இந்த நிரலியைச் சேருங்க .பின்னூட்டம் படத்துடன் முகம் காட்டும்.

***** இது போல ஸ்டார் பார்டருக்கு கீழ் உள்ளதை காபி பேஸ்ட் பண்ணுங்க போதும்.இரு பார்டர்களுக்கு இடையில் உள்ளதை மட்டும் பயன்படுத்துங்க.

புத்தாண்டு வாழ்த்துக்கள் மா

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா துளசி, கட்டாயம் போகலாம்.காலார நடக்கலாம்.
அருமையான செடிகள். மூலிகைச் செடிகள்.பொறுமையாகப் பதில் சொல்லும் தோட்டக்காரர்கள்.
இதுதன் சரியான டைம்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா அமைதிச்சாரல்,
உங்கள் வாழ்விலும் பசுமை எப்பவும் நிலைத்திருக்கட்டும். புத்தாண்டு வாழ்த்துகள்மா.

ஆயில்யன் said...

சூப்பர் கார்டனா இருக்கே. //என்னையும் அங்கே கூட்டிட்டுப் போங்கப்பா...//


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய் அங்கேயே ஒரு மீட் போட்டுடலாமே ? :))

வல்லிசிம்ஹன் said...

வாங்க கண்மணி, நீங்க சொல்கிறதைச் செய்ய முயற்சிக்கிறேன்.
வந்தால் நன்றாக இருக்கும். மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.
கண்மணியின் பக்கங்கள் எப்பொழுதும் நகைச்சுவையோடும் ,செய்திகளோடும் மிளிரணும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வரணும் ஆயில்யன். சென்னைப் பக்கம் வரும்போது போன் செய்யுங்க.
பதிவர் மீட்டிங் வச்சுடலாம்.
மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்மா.

வல்லிசிம்ஹன் said...

வாங்கம்மா ராமலக்ஷ்மி, அது பலாவா, இல்லை வேற எதுவான்னு தெரிய வில்லை.

அழகா இருக்கு இல்ல?
இனிய நல் புத்தாண்டு வாழ்த்துகள்மா.

Simulation said...

இது பலா அல்ல. ஆனால் பெயர் மறந்து விட்டது. இந்த காயின் ஓட்டிலிருந்துதான் ஆண்டிகள் வைத்திருக்கும் "கப்பரை" எனப்படும் பிச்சைப் பாத்திரம் செய்யப்படுவதாக ஒரு முறை இந்தத் தோட்டத் தொழிலாளி ஒருவர் கூறினார்.

- சிமுலேஷன்

வல்லிசிம்ஹன் said...

நன்றி சிமுலேஷன்,
இப்படி ஒரு பயன் இந்தக் காய்க்கு இருக்கிறதா.!!

புத்தாண்டு நல்வாழ்த்துகள். வருகைக்கு நன்றி.

Simulation said...

இப்போது ஞாபகம் வந்துவிட்டது. இந்தக் காய்க்குகுப் பெயர் திருவோட்டுக் காய்.

BTW இந்த ஹார்டி கல்சுரல் சொசைட்டிக்குச் சென்றால் சென்னையில்தான் இருக்கின்றோமா என்ற எண்ணம் நிச்சயம் ஏற்படும். அப்படி ஒரு அழகான சூழல்.


- சிமுலேஷன்

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் சிமுலேஷன் . ஒவ்வொரு தடவையும் அங்கே போகும்போதும், இதை உணர்கிறேன்.
செடிகளும் மரங்களும் பாசத்தோடு நம்மை அணுகுவதாகத் தான் தோன்றுகிறது. நன்றி.

Kavinaya said...

பசுமை, மனசுக்கு குளுமையா இருக்கு வல்லிம்மா. நன்றி. இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

மாயாவி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!