Blog Archive

Friday, November 13, 2009

நவம்பர் பதிமூன்று அன்புக்கான நாள்

இன்று உலக அன்பு நாள். அதாவது கைண்ட்னஸ் டே.

அன்புள்ளவர்களுக்கு இந்த உலகம் அடிமை.

வயதானவர்களுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் .

கவனித்துக் கொள்ளும் செவிலியர்கள்.

உடல்நலம் இல்லாதவர்களைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவர்களும்
பெற்றொரைப் பாராட்டும் பிள்ளைகள்
பிள்ளைகளைக் காக்கும் பெற்றோர்கள்
இப்படி நீளும் பட்டியல்.

எல்லாவற்றுக்கும் அடிப்படை கருணையும் அன்பும்தான்.
இதற்கென்று ஒரு நாள் இருப்பதே இன்றுதான் தெரியும்.

அதுவும் எங்கள் இருவருக்கும் மிகவும் வேண்டப்பட்டவரின் பிறந்தநாள்.
அவருக்கு மயில் வாழ்த்துகள் அனுப்பலாம் என்றுதான் பொட்டியைத் திறந்தேன்:)
பார்த்தால்,

KINDNESS DAY என்று வருகிறது. இன்னிக்கு ஸ்பெஷல் இதுதான்.
நல்ல நாளில் தான் பிறந்திருக்கிறார் இந்த அன்பர்.
அவரும் இன்னும் அன்பாக ,மனித நேயத்தோடு வாழும் எல்லோரும் சிறப்பாக
இயங்க வாழ்த்துகள்
























பெற்ற பையனுக்கு வயதாகிறது என்று எந்தத் தாயும், முக்கியமாக இந்தத் தாய் :0) ஒப்புக் கொள்ள மாட்டாள்......
குழந்தைக்கு வாழ்த்துகள்.





எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

25 comments:

ஆயில்யன் said...

எதை நீ பிறரிடமிருந்து எதிர்பார்க்கிறாயோ அதையே நீ மற்றவர்களுக்கும் கொடு என்று சொன்ன அறிஞர்களின் கருத்துக்களினடியெற்றி அன்பினை கருணையினை மற்றவர்களுக்கு அளித்திட முயலுதல் வேண்டியது தான் கருணை நாளில் கடைப்பிடிக்கவேண்டிய விசயம்!

பகிர்வுக்கு நன்றி வல்லியம்மா :)

ராமலக்ஷ்மி said...

அன்பு பொங்கும் அற்புதப் பதிவு. பகிர்தலுக்கு நன்றி வல்லிம்மா.
இந்த தினத்தில் பிறந்தநாள் கொண்டாடுபவருக்கு இனிய நல்வாழ்த்துக்கள்!

Jayashree said...

மறுக்க முடியாத உண்மை Mrs Simhan !!. Even a deaf can "hear" and a blind can "see" through the act of kindness. பிறந்தநாள் வழ்த்துக்களூம்!!உரியவருக்கு!! charity begins at home இல்லையா? HOME என்பது சுற்றம் மட்டும் இல்லையே? நமக்கும் தான் . நான் பலமுறை யோசிப்பேன் பிறத்தியாரிடம் காண்பிப்பதுபோல " How often and how mindfully we practice this act of kindness on us? " நு .அந்த dimension ல யோசிக்க பல தடவை மறந்தே போயிடும் The golden retriever and the dear picture is adorable!!.

கோமதி அரசு said...

// இன்று உலக அன்பு நாள்//

அற்புதமான அன்பை காட்டும் படங்கள்.

அன்பே தெய்வம்!
அன்பே ச்த்தியம்!
அன்பே நித்தியம்!
அன்பே ஆனந்தம்!
அன்பே அனைத்தும்!
அன்பே சிவம்.

அன்பும் கருணையும் நிறைந்த வாழ்க்கை தான் மனிதநேயம் .

உங்களுக்கு மிகவும் வேண்டப் பட்ட இன்று பிறந்தநாள் காணும் அன்பருக்கு
வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!

எல்லோரும் வாழவேண்டும் என்ற
மனிதநேய மிக்க நீங்களும் பல்லாண்டு வாழ்க!

தாய்க்கு என்றும் தன் குழந்தை குழந்தைதான்.

சந்தனமுல்லை said...

தங்கள் நண்பருக்கு வாழ்த்துகள்!! :)

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஆயில்யன். தூய அன்பும் கருணையும்
எப்போதும் மனதில் இருக்கணும். இல்லாவிட்டால் கசப்பு புரையோடி நம் மனதைக் கெடுக்கிறது.

உங்களைப்போல பிள்ளைகள் தான் எங்களைப் போன்றவர்களுக்கு என்றும் ஆதரவு.

pudugaithendral said...

என்னோட வாழ்த்தையும் சொல்லிடுங்க.

அன்பு பொங்கும் அற்புதப் பதிவு. //

ஆமாம். ஆனால் எனக்கென்னவோ பதிவு படிச்சா மாதிரி இல்ல. உங்களை சந்திச்ச போது அந்த இனிமையான கனிவான பேச்சு மனதில் சிம்மாசனம் போட்டு உக்காந்திருச்சு. நீங்க அன்போட நேரில் பேசற மாதிரி இருக்கு இந்த பதிவு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி, எங்கள் பையனிடம் உங்கள் அன்பு வாழ்த்துகளை அனுப்பி விடுகிறேன். நன்றி..

வல்லிசிம்ஹன் said...

True Jayashree.

wonder abt your vast knowledge!!
thank you for the Greetings sent with affection.

வல்லிசிம்ஹன் said...

வேண்டப்பட்டவருக்கு அவங்க ஊர் நேரப்படி வாழ்த்துகள் சொல்லிட்டேன்.
ரொம்ப நன்றி கோமதி. இத்தனை அன்பு நிறைந்த உள்ளத்துக்கு என்ன கைமாறு செய்ய முடியும்.
நம் இணைய அன்பும் நிலைக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி முல்லை. பாப்பாவோட இன்னோரு வீடியோவும் பார்த்தென். பெண்ணுக்கும் அனுப்பி விட்டேன். அப்படியே ஸ்கூல் மேம் பார்க்கிற மாதிரி இருந்ததுன்னு சிலாகிச்சு சொன்னார்கள்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா தென்றல்.
இதைவிட அன்பை எப்படி வெளிப்படுத்த முடியும்!
அன்பு மட்டுமே எனக்கு ஆகாரம் ஆனதுபோலத் தோன்றுகிறது. என் நியூசி நண்பி சொல்வார்கள் சிலசமயம் மனசு சந்தோஷமா இருந்தா சாப்பாடு கூட வேணாம்பான்னு.
அது ஞாபகம் வந்தது. மிக மிக நன்றி. வாழ்த்துகளை மானசீகமாக அனுப்பிவிட்டேன் மகனுக்கு.

துளசி கோபால் said...

மகருக்கு பிறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள். அப்படியே இன்று பிறந்தநாள் கொண்டாடும் இனிய நண்பர்கள், உலகத்தார் அனைவருக்கும் இங்கேயே எங்கள் அன்பான வாழ்த்துகளைப் பதிவு செய்கிறோம்.

நல்லா இருக்கட்டும் எல்லோரும்.

வல்லிசிம்ஹன் said...

சொல்லிட்டேன்பா. துளசி, கட்டாயம் இன்று மட்டுமில்லை எல்லா நாட்களில் பிறந்தவர்களுக்கும் நம் வாழ்த்துக்கள் என்றும் உண்டு.

சுந்தரா said...

அன்பான பதிவு மனசைத் தொட்டது வல்லிம்மா...படங்களும்தான்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நண்பருக்கும் வாழ்த்துக்கள்!

அன்பும், கருணையும் எங்கும் நிலைக்கட்டும்.

Unknown said...

இந்த
mega mall மாதிரி
இல்லன்னாலும் ஒரு
பங்க் கட rangeக்காவது வரணும்ன்னு
நான்,
ஒரு முட்டு சந்து ஓரமா
புதுசா கட விரிச்சிருக்கேன்.

http://vaarththai.wordpress.com/

அப்டியே
அந்தான்ட…இந்தான்ட‌
போறசொல‌
நம்ம கடையான்ட வந்து
எட்டி பாருங்கோ… Senior

Anonymous said...

Vallimmaa, you are number one in my list of bloggers who show unconditional kindness! :) Really!

Can I get a hint on the sugar for vikkal? Does it work for 8 month old? I tried a 1/4tsp on my baby but wasnt sure how to do, and it didnt work that immediately. I dont mind the vikkals - they always had it from birth, but these days they cry everytime it happens and want to be pampered until its gone, with twins that is impossible, since the other gets restless! :) I wish I knew a short cut like sugar technique! What exactly should be done - and how much sugar? (They are taking solids already, paruppu saadham and all ...)

வல்லிசிம்ஹன் said...

முதல் வருகைக்கு வணக்கம். லொடுக்கு. பதிவில மெகா மால் ,டீக்கடை எல்லாம் ஒண்ணுதான்.
விஷயம் இண்டரஸ்டிங்ஆ இருக்கணும் அவ்வளவுதான். உங்க பின்னூட்டமே ரசிக்கும்படி இருக்கு. அதனால பதிவும் நல்லா இருக்கும்னு நம்பறேன். கண்டிப்பா அங்க வரேன். நன்றி.

வல்லிசிம்ஹன் said...

Dear Madura,
thank you so much for the good word.

by old methods vikkal shows graoth of the baby and her digestive system.
a quarter teaspoon shd do the magic. other wise you can give gripe water.

If you are able to get GOOD BOTTLE OF PURE HONEY TOO,
you can just dab some on their tongues. not too much of anything. if they cry too much,better make sure there there is no colic problem. water and and sugar mixture may calm them.
hope they get past this fast.
God Bless.

Kavinaya said...

அன்பு பொங்கும் பதிவிற்கு அன்பான நன்றி வல்லிமா! உங்க பிள்ளைக்கும் தாமதமான, ஆனால் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்! படங்களும் செய்தியும் அருமை. அன்னங்களும்தான் :)

Vetirmagal said...

அருமை!

உள்ளத்தை நெகிழ வைக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கவிநயா, தாமதமாகப் பதில் அளிப்பதற்கு மன்னிக்கணும்.
உங்கள் வாழ்த்துகளை மகனாரிடம் அனுப்பிவிட்டேன். நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெற்றிமகள், வாங்கப்பா.
ரொம்ப நாளாச்சு பார்த்து. அன்புக்கு நன்றிம்மா.

அபி அப்பா said...

அட இப்பதான் இந்த பதிவை பார்த்தேன். நன்றியும் வாழ்த்தும் வல்லிம்மா!

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துக்களுக்கும் அன்பு சொல்கிறதுக்கும் நாள் நட்சத்திரம் உண்டா அபி அப்பா.:)
நீங்களும் ,அபிஅம்மா, குழந்தைகளோட தீர்க்காயுசுடன் மகிழ்ச்சியாக இருக்கணும்.