Blog Archive

Thursday, November 12, 2009

பின்னூட்டத்துக்காக ஒரு பதிவு

வாண்டுகள் இரண்டின் படம் கிடைத்தது . ஆனால் நான் எடுத்த படம் இல்லை. போட்டிக்கு அனுப்ப முடியாது .
தெரியாமல், டெலிட் செய்ய வேண்டிய பதிவை பப்ளிஷ் செய்து விட்டேன்.
அதற்கு ஜெயஸ்ரீ அவர்கள் பின்னூட்டமும் இட்டு விட்டார்கள்.
அனாவசியமாக ஒரு ஒரு வரிப் பதிவு போட்டு எண்ணிக்கை கூட்டக் கூடாது என்கிற ஒரே ஒரு நேர்மையான (;) ) எண்ணத்தில் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

வீட்டுக் குழ்ந்தைகளின் (பேரங்கள் , பேத்திகள் படத்தை இணையத்தில்

இடுவதற்கு அனுமதி மறுக்கப் பட்டுவிட்டது.:(

மற்ற வாண்டுகள் விளையாடும்போது எடுத்த படமும் இருக்கிறது. ஒரே ஒரு இடர் . அவர்களும் என் பதிவுகளைப் படிப்பவர்கள் :)
அதனால ரிஸ்க் எடுக்கக் கூடாது .
உங்க பேரன் படம் போடக்கூடாது, எங்க பசங்க படம் போடலாமான்னு ஒரு கேள்வி கேட்டுட்டாங்கன்னா அவ்வளவா நல்லா இருக்காது இல்லையா.

நான் எழுதாத பதிவிக்கு பின்னூட்டம் போட்ட நியுசிலாந்து அம்மையாருக்கு நன்றி.
பூ பேரெல்லாம் தெரியாது ம்மா. எதோ கிடைச்சதைப் போட்டேன்:)










எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.
p

8 comments:

Jayashree said...

என்ன? gladioli யொட glad ஆயாச்சா இந்த post ல?:)))
US ஆ, SWISS ஆ, Holly யா ( holland)

ராமலக்ஷ்மி said...

இப்போ இந்தப் பின்னூட்டம் போடலாமா தெரியலையே:(?

கால்மேல் கால் போட்டு கம்பீரமா போஸ் கொடுக்கும் உங்கள் வாண்டுகளை PiT-ல் பார்த்து விட்டேனே:)! மிகவும் அருமையான படம்.

ஆமா அனுமதி நினைத்தே என்னிடம் இருக்கும் வாண்டுகள் யாரையும் போட யோசித்தபடியேதான் இருக்கிறேன்:)!

வடுவூர் குமார் said...

இவ்வளவு பெரிய header படமா? முதல் முறையாக பார்க்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

பின்னூட்டம் போடலாமே ராமலக்ஷ்மி:)
அந்தப் பழைய படத்தை ஸ்கான் செய்து பெரிசு செய்து அப்லோட் செய்யறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிவிட்டது.
பங்கெடுக்காம இருக்கக் கூடாது இல்லையா. என் பிள்ளைகள் ஒண்ணும் சொல்ல மாட்டார்கள்னு தைரியம்!!!
நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

Jayashree,
It is from a site called photobucket.
No Swiss, No holly,No US.:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல தலைப்பு நல்ல காரணம்...

எனக்கு உங்க நேர்மை பிடிச்சிருக்கு.. :))

வல்லிசிம்ஹன் said...

வரணும் குமார். எவ்வளவு நாளாகி விட்டது உங்களைப் பார்த்து!
ஹெடர் மாற்றிவிட்டேன்.
பாண்ட்வித் பிரச்சினை. ஆசை இருக்கு தாசில் பண்ண கதைதான்

வல்லிசிம்ஹன் said...

எனக்குக் கூட என் நேர்மை பிடிச்சிருக்கு. இந்தப் படம் எங்க சிங்கம் எடுத்தது. மைசூர் zoo.
நன்றிப்பா கயல்.