Blog Archive

Sunday, November 08, 2009

வாண்டுவின் ராஜாங்கம்


எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

அம்மா தூகர் வேணும். ஆ போடு.

எதுக்குடா இப்ப.(9 மணி இரவு) நீ ஹைப்பர் ஆகித் தூங்காமல் இருக்கவா.
ஆளைவிடு.
இல்லியெ, அண்ணாவுக்கு விக்கறது.!!
அதனால?
எனக்கும் இப்ப வந்துடும். :)


நாளைக்கு உனக்கு ஹேர்கட் பண்ணனும் கிஷா.
வேண்டாமேமா.
இப்பியே இக்கட்டும்மா.

கண்ணு குத்துமே
உனக்குக் குத்திலியே:))

அண்ணா இனிமெ நீ கிஷா முன்னால கெட்ட வார்த்தைகள் சொல்லாதே. உடனே பிடிச்சுப்பான்.
எதுமா ---இது அண்ணா
அதாண்டா ஐ டி ஐ ஒ ட், ஃப் ஒ ஒ எல்

என்று அம்மா ச்பெல்லிங் கொடுத்ததும் சின்னவன் சொல்லிட்டான்.

அம்மா உன்னை இடியட் சொல்லாதே ஃபூல் சொல்லாதேன்னு
சொல்றா அண்ணா:)))
அம்மா அவன் லிப் ரீடிங் கத்துண்டு இருக்கான்மா. நாம இனிமே வேற பாஷை கத்துக்கலாம் என்று சிரிக்கிறான் பெரியவன்.

14 comments:

வல்லிசிம்ஹன் said...

தூகர்.....ஷுகர்..சர்க்கரை.:)

திவாண்ணா said...

:-))))
enjoy!

Tulsi said...

பாட்டிக்கு ஏத்த பேரன்:-)))))))))))))

நடராஜன் கல்பட்டு said...

யதார்த்தம்! குழந்தைகள் நம்மை விடப் பல மடங்கு புத்திசாலிகள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வரணும் தம்பி வாசுதேவன்.

கட்டாயம். அமுத மொழிகளை ரசிக்கக் கிருபை பண்ண அந்த வாசுதேவனையும் நினைச்சுக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

இப்ப துளசி என்ன சொல்ல வராங்கன்னு தெரியலையே.

நான் மழலையில் பேசுகிறேனா.

இல்லை அவன் என்னை மாதிரி இருக்கானா :)))

வல்லிசிம்ஹன் said...

முதல் வரவு நல்வரவு ஸ்ரீ நடராஜனுக்கு.
குழந்தைகளின் பேச்சைவிட வேற என்ன உண்மை இருக்க முடியும்.
நன்றிம்மா.

meenamuthu said...

சமத்து!ஓடிவந்து அள்ளி கொஞ்சணும் போலருக்கு!

இந்த வாண்டுகள் அதுக மொழி பேசற அந்த நிமிஷம் நம் மனம்தான் எப்படி பரவசப்படுகிறது!

ராமலக்ஷ்மி said...

வாண்டுகள் என்றதும் முதலில் இம்மாத பிட் படங்களோ என நினைத்தபடி திறந்தேன்.

ராஜாங்கம் ஜோர் ஜோர்!!

Kavinaya said...

ச்வீட்! :)))

சுந்தரா said...

ரசித்துச் சிரிக்கவைத்தது வாண்டுகளின் பாஷை :)

குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்!

அபி அப்பா said...

அய்யோ இடியட் கெட்ட வார்த்தையா உங்க வீட்டு வாண்டூஸ்க்கு. நம்ம நட்டுக்கு "ஸ்கூல் போறியா" என்பது தான் பெரிய கெட்ட வார்த்தை. சொன்னா கேவி கேவி கத்துவான்:-))

குழந்தைகளுக்கு என் ஆசிகள்!

வல்லிசிம்ஹன் said...

அது வேற ஒண்ணும் இல்ல அபி அப்பா. உங்க பதிவெல்லாம் படிச்சிருப்பான்.

அதான் இந்த எஃபெக்ட்.:)அதெல்லாம் அபிப் பொண்ணு சமத்தா அழைச்சுட்டுப் போயிடுவா.

எல் கே said...

Miga arumai.. ithai pdikum pozhthu en ponnoda nuagam varuthu enaku.. avaloda konchu varthai.. athoda sugame thani.. officela irunthu tireda porapa.. appanu athu solrathum appuram namaku ppuriyatha varthaigalil andraya nigalvugali ava solrathum oru tani sugam