Blog Archive

Friday, November 06, 2009

மீனாட்சியும் கன்யாகுமரியும்







எங்கள் மீனாட்சி(சொக்கனா) தனியாக இருக்கிறாள்.
அவளுக்குத் துணை தேடும் சிரமும் கொடுக்கவில்லை.
நிச்சலனமாக வளைய வந்து கொண்டே அவள் வாழ்க்கை நகர்கிறது.

இந்தத் தனிமைக்கு என்ன அர்த்தம். யாரிடம் கேட்டாலும் இந்த வகை மீன்களின் வாழ்க்கை முறை இதுதான் என்கிறார்கள்.
எனக்கு மட்டும் குற்ற உணர்வு போக மறுக்கிறது.

எட்டு வயதாகி விட்டது.
ஒருவேளை அவள் பிறந்த அமெசான் காடுகளில் விட்டு வைத்திருந்தால்
குடும்பம் கிடைத்து இருக்குமோ அவளுக்கு.

எனக்குத் தெரிந்த நாங்கள் வாங்கின மீன்கள் எல்லாம் ஜோடியாகத் தான் வந்தன.
நிறைய நாட்கள் இருக்கவில்லை.

சிலவற்றை வைத்து உணவு போட்டுக் கட்டுபடியாகததால் விலைக்கும் இலவசமாகவும் கொடுத்து விட்டோம்.
இவள் மட்டும் ஒட்டிக் கொண்டு விட்டாள்.
அவளைப் பார்த்தால், நமக்கே சில சமயம் ஆன்மீகத்தில் இறங்கித் தியானம் செய்யும் ஞானி போலத் தோற்றமளிப்பாள்.

இல்லாத ஒன்றைத் தேடுவதாக மேல் நோக்கித் தாவி மூக்கில் வேறு அடி.

தபஸ் செய்வது போல ஒரே இடத்தில் வாலை மட்டும் மெதுவாக அசைத்துக் கொண்டு கண்ணாடிச் சுவர் வழியாக என்னைப் பார்க்கும் போது
இவளுக்கு கன்யாகுமரி என்று பெயர் மாற்றலாம் என்று தோன்றுகிறது.
எங்கிருக்கிறான் உன் துணைவன்?


எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

19 comments:

ராமலக்ஷ்மி said...

உங்களுடன் இருப்பதே தனக்கு மகிழ்ச்சி என வாழ்ந்து கொண்டிருக்கிறாள். மனக் கலக்கம் வேண்டாம். மனிதரின் துணையை கடவுள்தான் நிச்சயிக்கிறார் எனில் இவள் துணையையும் அவரேதான் காலம் வருகையில் கண்டிப்பாகக் காட்டித் தருவார்.

சந்தனமுல்லை said...

:-) மீனா விரைவில் நல்ல துணை கிடைக்க வாழ்த்துகள்!

கோமதி அரசு said...

நீங்களே கன்னியாகுமரி என்று சொல்லி விட்டீர்கள்,தபஸ் இருக்கிறாள்,சிவனின்
வருகைக்கு.

இந்த கன்னியாகுமரிக்காவது விரைவில்
துணை கிடைக்க வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி, இந்த வகை மீன்களுக்கு வீர்யம் ஜாஸ்தியாம்.

அதனால் துணை என்று இன்னோரு இதே வகை மீனை விட்டால்
சண்டை போட்டே ....

அதனால் இன்னும் பயம் அதிகரிக்கிறது. நானும் கேட்பதை விடவில்லை. சுயம்வரம் வைக்கலாம் என்று பார்க்கிறேன்

வல்லிசிம்ஹன் said...

ஆஹா நன்றி முல்லை.

வாழ்த்துகள் அவளுக்குப் பயன்படும்.
முதிர்கன்னி நிலைமைக்கு வந்துவிட்டாளோ என்று பயம் வந்து இணையத்தில் ,விக்கிபீடியாவில் எல்லாம் தேடினேன்!!

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கோமதி.
தபஸ் என்றால் அப்படி இப்படி இல்லை.
புரியாத புதிர் எங்கள் மீனாக்ஷி எனப்படும் கன்னியாகுமரி.

Jayashree said...

பாத்தா AROWANA மாதிரி இருக்கே Mrs Simhan.They are beautiful fish with a personality!!.ofcourse agressive towards smaller fish. ஆன ciclids, discus. blue gouramies ஓட community tank ல coexist பண்ணும். MALE FISH ஓட bond பண்ணவும் நாள் ஆஹும்.ஆனா க்ரேஸ்ஃபுல் ஸ்விம்மர்ஸ். வளக்கறவாள RECOGNISE பண்ணும்.I FEEL MOST OF THEM DO .ரூம்ல நுழைந்த உடனேயே யார் வந்திருக்கானு பாக்க வரமாதிரி எல்லாம் ஒரெடத்தில் வந்து பாக்கும்!!:)) அரோவானா ஆனா CAPTIVITY ல ப்ரீட் பண்ணறது கஷ்டம். MALE FISH COLOURS CHANGE பண்ணும். feng shui ல PROSPERITYக்காக RECOMMEND பண்ணுவா. அழகு இருக்கற அளவுக்கு இது ANGELIC ஆ நடந்துக்காது!!. ANOTHER EXAMPLE IS ANGEL FISH. நான் அதுங்களை demonic fish னு தான் சொல்லுவேன் என் டாங்க் ல சிக்லிட், குராமி, சயாமீஸ் ஃபைட்டர், பார்ப்,ஏஞ்சல் எல்லாம் ஒண்ணா இருக்கும்.சைஸ் கிட்டதட்ட ஒரே சைஸா இருந்தா சமாளிச்சுடலாம் so u 2 a fish enthusiast? good to know

வல்லிசிம்ஹன் said...

Arowana vethaan!
வாங்கும்போது இது வாஸ்து மீன் என்று சொல்லி வாங்கவில்லை. ஜயஷ்ரீ


இவருக்கு அக்வேரியம் நண்பர் ஒருவர் வெகு நாட்கள் பழக்கம். அவர் நாலு விரல்கடை அளவே இருந்த இந்த மீனாட்சியைக் கொண்டுவந்துவிட்டார். கூடவே ஒரு சில்வர் அரொவானாவும் எங்கள் தலையில் கட்டினார். இரண்டும் சேர்த்து அப்போ 800ரூபாய் இருக்கும்.


இரண்டையும் சேர்த்து வளர்ப்பதாகத்தான் ப்ளான்.
ஆனால் ரெண்டாவது மீன் எக்கச்சக்கமா ஏதோ தொண்டையில் மாட்டிக்கொண்டு பரமபதித்துவிட்டது.

அதிலிருந்து எனக்கு வேறு வகை மீன்களை வேறு தொட்டியுள்.போட்டுப் பார்த்துக் கொண்டோம்..

அடிக்கடி வெளியூர் போகும் அவசியம் வர இதை ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டோம்.

நீங்கள் சொல்வது போல வேறு முயற்சிகளுக்குத் தைரியம் வரவழைத்துக் கொள்ளணும்:)

துளசி கோபால் said...

தபஸ்வினி நல்லா இருக்காள்.

Jayashree said...

அச்சா 400 Rs தானா. அம்மாடியோ. இங்க each fish is 300$. எனக்கும் அதே problem தான். ஆனா I have an angel friend who looks after them and the house when we are away:))I love this hobby. It is end of spring here and hence my nursery is full of frys!! all types.

Anonymous said...

போன முறை "நினைவுகள்" சம்பந்தமா ஃபோட்டோ போட்டிருந்தீங்களே மேல (டைம் மெஷின்) அத முழுசா என்னால புரிஞ்சுக்க முடியல - இன்டரஸ்டிங்கா இருந்தது! :)

மீனா பாத்தவுடனே ஹை சொல்லலாம்னு தோணுச்சு. இரண்டு குட்டீஸும் தூங்குதுனால மீனா பத்தி நிறைய படிச்சு பாத்தேன் இப்போ - ஆரோவனா - அமேசான்-லருந்தா? இன்டரஸ்டிங்கா இருந்தது ... எம்மாடியோ எவ்வளவு பெருசு - உங்க செடி ஸ்டெபலைஸர் எல்லாம் வச்சு தோராயமா யோசிச்சு பாத்தேன் - பெருசுதான்! பொண்ணுக்கு வரன் தேடுறீங்களா? ;)

வல்லிம்மா, பொண்ண சாக்கா வச்சு ஒரு ரவுண்டு சவுத் அமெரிக்கா போயிட்டு வரலாமே? பொண்ணோட பூர்விகம் தெரிஞ்சிக்கிறது ஜாலியா இருக்கும்! சும்மா போயிட்டு வாங்க, ரொம்ப யோசிக்காதீங்க, நமக்காக தானே இந்த உலகம் இருக்கு, போய் ஒரு பார்வை பாத்துட்டு வாங்க தபஸ்வியோட இடமெல்லாம்! ;) சுயம்வரம் அங்க வச்சுக்கலாமே!

வல்லிசிம்ஹன் said...

great jayashree.
well the praice for a four inch fish was 400rs:)that was seven years ago. ippo
it shd differ.
ask that angel to come here too!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு மதுரா
, நேரமும் கிடைச்சுதா உங்களுக்கு!!
டைம் மெஷின் கான்செப்ட்ல சின்ன ரேடியோ, அந்த மாதிரி பழைய சமாசாரங்கள் படம் போட்டிருந்தது. ஒரு பக்கம் பாய்ஸ் அண்ட் மென். இன்னொரு பக்கம் பெண்கள். போட்டோக்கள்.
எனக்கு அதைப் பார்த்ததும்
''all kinds of everything reminds me of you'' song came to my memory.
Take care ma. may be we shall just do that...going to south america I mean.

oh ,she does show any kind of agitation. all the same....:))

வல்லிசிம்ஹன் said...

Thapasvini said ''hi'' to you Thulasi.:)

நானானி said...

வல்லி,
மீனாட்சி சமத்தாகத்தானே தொட்டிக்குள் வலம் வந்துகொண்டிருக்கிறாள்? ஏன் வீண் கவலை?
அவளுக்கு சீக்கிரமே குருப் பார்வை கிடைக்க அந்த சொக்கனை வேண்டுவோம்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா.
நானானி.
அது சும்மாதான் இருக்கு. எனக்குத் தான் இருக்க முடியவில்லை. வயசாயிடுச்சு பாருங்க:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா.
நானானி.
அது சும்மாதான் இருக்கு. எனக்குத் தான் இருக்க முடியவில்லை. வயசாயிடுச்சு பாருங்க:)

நானானி said...

யாருக்கு?

வல்லிசிம்ஹன் said...

பாருடா,திருநெல்வேலி தல காட்டுதே நானானி, எனக்குத்தான்பா வயசயிடுத்து:)))