About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Monday, September 28, 2009

அன்னைக்கு வணக்கம் ,போற்றி எங்கள் தாயே


பராசக்தி

நாயகிகள்


குகப்படலம்
நம்ம வீட்டு மல்லிகைப்பூஉறவினர் வீட்டு கொலு

புது மகாலட்சுமி
வெண்ணைக் கண்ணன்

கல்கத்தா அம்மா

பரிமுகப் பெருமாள்


நவராத்திரி ,தசரா எல்லாம் ஓய்ந்து,இதோ தீபாவளிக்கான கலகலா ஆரம்பித்துவிட்டது. இந்த நவராத்திரி கொஞ்சம் விசேஷமானது.
பெண்பதிவர்கள் வீடுகளுக்கும் போக அழைப்பு கிடைத்தது.
நானானி அவர்களின் கொலுதான் விட்டுப் போய்விட்டது.
கீதாம்மா,துளசிதளம் அம்மா இவங்க வீடுகளுக்குப் போகும் பாக்கியம் கிடைத்தது.
நேரம் தெரியாமல் சுப்புக்குட்டி வரும் போகும் விவரங்களைத் திறந்தவாய் மூடாமல் கேட்டேன். ஒரு ஜாக்கிரதைக்காகக் கால்களை
உட்கார்ந்திருந்த நாற்காலியின் சட்டத்தில் வைத்துக் கொண்டேன்.
அதுக்குத் திடீர்னு எங்களைப் பார்க்க ஆசை வந்துவிட்டால்!!!!
நினைத்தாலே நடுங்குகிறது இல்லையா.:)))
ஒரு ஆன்மீகக் களஞ்சியம், ஒரு வரலாற்றுக் களஞ்சியம் இருவரும்
உரையாட நான் , ஆ''வெனத் திறந்தவாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.
 
இவர்களும் எழுதுகிறார்கள்....நானும் எழுதுகிறேன் என்ற
சோகமே என்னைத் தாக்கி விட்டது:)
கீதா நல்ல வடையும் இட்டிலியும் செய்து கொடுத்து, செவி உணவோடு வயிற்றுப் பசியையும் தணித்தார்கள்.
அடுத்த விசிட் அலைகள் அருணா. அங்கயும் சாப்பாடே பிரதானமாக இருந்துவிட்டுச் சில நல்ல விஷயங்களியும் பார்த்து கேட்டு உய்யும் வழி இதுவல்லவோ என்று தெளிந்தேன்!!
இன்னுமொரு நாள் துளசிதளம் அம்மா வீடு.,அங்கேயும் சுண்டல்,மைபா,
,முறுக்கு என்று தூள் கிளப்பியாகிவிட்டது.
 
சனி,ஞாயிறு,திங்கள் நம் வீடு விழாக்கோலம் கொண்டது. தம்பதி சமேதராக அனைவரும் வந்து இருந்து மகிழ்ந்து மகிழ்வித்துச் சென்றார்கள்.
இனிதே பூர்த்தியானது நவமான ஒன்பது தினங்களும்,விஜயதசமியும்.
இதே ஆனந்தமும் நட்பும் நிலைபெற எல்லோருக்கும் வாழ்த்துகள் சொல்லிக் கொள்ளுகிறேன்.


எல்லோரும் வாழ வேண்டும் .

27 comments:

ராமலக்ஷ்மி said...

உங்கள் கையைப் பிடித்துக் கொண்டு நாங்களும் எல்லோர் வீட்டுக்கும் போய் வந்த மாதிரியான உணர்வு:)! படங்களுக்கும் நன்றி வல்லிம்மா!

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் வல்லியம்மா!

ஹெட்டர் படம் அழகு!!

புதுகைத் தென்றல் said...

அனைவரையும் சந்திச்சிருக்கீங்க.

சந்தோஷமா இருக்கு. வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

புது கஜலக்ஷ்மி கொள்ளை அழகு.

நம்ம வீட்டுக்கு(ம்)வந்து கௌரவித்ததுக்கு நாங்கதான் நன்றி சொல்லி இருக்கணும் வல்லி.

எல்லாம் நல்லாதாவே அமைஞ்சது. ரொம்ப மகிழ்ச்சிப்பா.

அடுத்த வருசம் நான் எங்கே இருக்கேனோ?

அப்பவும் இந்த வருச நினைவுகளோடுதான் இருப்பேன்.

ambi said...

//கீதா நல்லவேளையாக் ருசியான் வடையும் இட்டிலியும் செய்து கொடுத்து //

நல்லா விசாரிச்சீங்களோ? அது கடைல வாங்கினதா இருக்க போகுது. :p

ambi said...

//எல்லோரும் வாழ லி. லி லி அலி காலி.
//

எது என்ன? புதசெவி.. :)))

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ராமலக்ஷ்மி. நீங்களும் சென்னையில் இருந்தால் நம் வீட்டிற்கு வந்திருக்கலாம். இனிமையான நவராத்திரி.

வல்லிசிம்ஹன் said...

நன்றி முல்லை . மாற்ற வேண்டும் என்று இன்றுதான் நினைத்தேன். தோட்டக் கதவும் திண்ணையும் அழகா அமைந்தது இல்லையா?

வல்லிசிம்ஹன் said...

வரணும் தென்றல். இணையத்தகராறினால்,
நேற்றே போட நினைத்திருந்த இந்தப் பதிவை இப்போதுதான் போட முடிந்தது. எனக்கென்னவோ என் பள்ளிக்கூட நாட்களே நினைவுக்கு வந்தன.எல்லாம் நட்பு செய்யும் மாயம்!!

மதுரையம்பதி said...

சூப்பர், திக்-விஜயம் பண்ணியிருக்கீங்க போல.... :)

கீதாம்மா பதிவுல புட்டு செய்முறை போட்டாங்களே, செய்து கொடுக்கலையா...

வல்லிசிம்ஹன் said...

துளசி வாங்கப்பா.
விஜயதசமி அன்று தான் வாங்கினேன். விலையும் குறைவாக இருந்தது..

வேறெதையும் வாங்க முடியாமல் கட்டிப் போட்டு விட்டாள் இந்த மகாலட்சுமி:)

தி. ரா. ச.(T.R.C.) said...

இவர்களும் எழுதுகிறார்கள்....நானும் எழுதுகிறேன் என்ற
சோகமே என்னைத் தாக்கி விட்டது:)

ஆடிக்காத்துலே அம்மியே பறக்கும்போது எலவந்பஞ்சுமாதிரி இருக்கிற என்கதியெல்லாம் என்னாகிறது? கொலு படங்கள் எல்லாம் நல்லா இருக்கு. அப்படியே நம்ம விட்டிற்கும் வந்திருந்தால் கொலுவோட சிங்கபூர் பேரனையும் பார்த்திருக்கலாம்.என்ன பன்ணறது
out of mind so out of sight also.

கீதா சாம்பசிவம் said...

நவராத்திரி முடிஞ்சும் உங்க பதிவுக்குக் கூட வர முடியலை, இன்னிக்குத் தான் வந்தால் எங்களைப் பத்தியே எழுதி இருக்கீங்க. சுப்புக்குட்டி ரொம்ப விசாரிச்சார் உங்களை எல்லாம்.:))))))
அம்பிக்காகக் காத்துட்டு இருக்காராம், சொல்லி வைங்க, வாயை மூடிண்டு இருக்கணும்னு!

கஜலக்ஷ்மி நல்லா இருக்கா! பரிமுகக் கடவுள் ஏன் வரவே இல்லை??? மனசாலே பார்த்துண்டேன்.

சதங்கா (Sathanga) said...

//சனி,ஞாயிறு,திங்கள் நம் வீடு விழாக்கோலம் கொண்டது. தம்பதி சமேதராக அனைவரும் வந்து இருந்து மகிழ்ந்து மகிழ்வித்துச் சென்றார்கள்.
இனிதே பூர்த்தியானது நவமான ஒன்பது தினங்களும்,விஜயதசமியும்.
இதே ஆனந்தமும் நட்பும் நிலைபெற எல்லோருக்கும் வாழ்த்துகள் சொல்லிக் கொள்ளுகிறேன்.
//

படிக்கவே இனிமையாக இருக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

கீதா சாம்பசிவம் said...

பரிமுகக்கடவுள் தரிசனம் இந்த அதிகாலையில் நல்லாக் கிடைச்சது, நன்றி.

கீதா சாம்பசிவம் said...

//அப்படியே நம்ம விட்டிற்கும் வந்திருந்தால் கொலுவோட சிங்கபூர் பேரனையும் பார்த்திருக்கலாம்.என்ன பன்ணறது
out of mind so out of sight also.//

@திராச சார், நாங்களும் இந்த வலை உலகில் தான் இருக்கோம். மறந்துட்டீங்க போல சிங்கப்பூர் பேரன் வந்ததில். :((((((((((((((((((((((((

பேரனுக்கும் உங்கள் மகன், மருமகளுக்கும் எங்கள் மனமார்ந்த ஆசிகள்.

வல்லிசிம்ஹன் said...

அம்பி ரொம்ப நன்றி.
நல்ல வேளையாகச் சுட்டிக் காட்டினீர்கள். இல்லாவிட்டால் காலியாகவே நின்றிருக்கும்.
அப்புறம் இட்லிவடை எல்லாம் கீதா கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி அன்போட கொடுத்த பட்சணங்கள் தான். என்னால்தான் பாயசம் சாப்பிடமுடியவில்லை:((

வல்லிசிம்ஹன் said...

வாங்கம்மா மௌலி.


அம்பாள் அற்புதமாக உங்கள் வீட்டில் கொலு இருந்திருப்பாள். வெள்ளிக்கிழமை புட்டு சமைப்பது வழக்கம்தான். நாங்கள் வெள்ளிக்கிழமை போகவில்லையே.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு தி.ரா.ச
நீங்க கொலு வைத்திருப்பதே எனக்குத் தெரியாதேம்மா.
இல்லாட்ட வர என்ன தடை:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா.

உங்க ஊரிலிருந்து வெளியூர் வர மாதிரி இருக்கு மைலாப்பூர். நீங்க வரவில்லையேன்னு வருத்தம்தான்.
அம்பி கிட்ட சுப்புக் குட்டியைப் பற்றிச் சொல்லியாச்சு.:))
பரிமுகப் பெருமாளைப் பார்க்க முடிந்ததில்
சந்தோஷம்மா.

துளசி கோபால் said...

பரி முகனை அறிமுகம் செய்ததுக்கு அரி(மா)முகத்துக்கு ஒரு ஓ...........போட்டாச்சு:-)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சதங்கா.

இரண்டு நாளாக இணையம் கொஞ்சம் தகராறு. செய்துவிட்டது.
இனிமேல்தான் எல்லாப் பதிவுகளையெல்லாம் படிக்க வேண்டும்.
வாழ்த்துகளுக்கு நன்றிம்மா.

ராஜ நடராஜன் said...

ஆமா!இத்தனை படங்கள் வெச்சிருக்கீங்களே!புகைப்பட போட்டிக்கு படம் அனுப்பினீங்களா?CVR,தீபா எல்லோரும் காத்துகிட்டு இருக்காங்க!

விசயதசமி இதோ வாசப்படி பக்கத்துல நின்னுகிட்டு இருக்குது.அதுக்குள்ள தீபாவளி வந்துட்டாரா?

கோமதி அரசு said...

//இதே ஆனந்தமும் நட்பும் நிலைபெற
எல்லோருக்கும் வாழ்த்துகள் சொல்லிக்
கொள்ளுகிறேன்.//

நானும் வாழ்த்துக்களை சொல்லி கொள்கிறேன்.

பொம்மைகள் மிக அழகு.

நல்லப் படியாக கொலு முடிந்து ,நவ ராத்திரி விழாவிற்கு வந்த உறவினர்
நேற்று ஊருக்கு போய்விட்டார்கள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராஜநடராஜன்,
அனுப்பத்தான் எடுத்துப் போட்டிருக்கிறேன். ஒரு பதிவு.எது நல்ல படம்னு சொல்லுங்க.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கோமதி.
ஆமாம் எல்லாம் நல்லபடியா பூர்த்தியானது.
உறவினர்களும் வந்திருந்தால் கொண்டாட்டத்தோடு வேலையும் ஏறி இருக்குமே.நல்லபடியாகச் சமாளித்திருப்பீர்கள்

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கோமதி.
ஆமாம் எல்லாம் நல்லபடியா பூர்த்தியானது.
உறவினர்களும் வந்திருந்தால் கொண்டாட்டத்தோடு வேலையும் ஏறி இருக்குமே.நல்லபடியாகச் சமாளித்திருப்பீர்கள்