About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Friday, August 28, 2009

மனதில் நிற்கும் காட்சிகள்

வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பூங்கா


ஒரு சர்ச்

போகும் பாதை .

சைக்கிள் கடை.


கல் பதித்த தெரு
ஒன்று.பாலம் இரவு நேரத்தில் ,


இப்போது மழைக்காலம் சென்னையில். இனிமையாக இருக்கும் வீட்டினுள் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு.
இதே மழையின் போது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பப் பட்டபாடும் இப்போது இனிமையாக இருக்கிறது.
மூன்று குழந்தைகளும் மூன்று பள்ளியில் படித்தார்கள்.
அதில் பெரியவனின் பள்ளிப் ஸ்கூல் பஸ் காலை 7 மணிக்கு வந்துவிடும்.
அதற்குள் சாப்பிடக் கொடுத்து கையிலும் டிபன் பாக்ஸ் கொடுக்க வேண்டும்.
அடுத்தவண்டி பெண். அடுத்தாற்போல் சின்னவன்.
மழையில் ஒவ்வொருவரையும் அவரவர் வண்டி நிற்கும் இடத்திற்குக் குடையையும் பிடித்துக் கொண்டு, குழந்த கையையும் பிடித்துக் கொண்டு போவது, இல்லாத ப்ளாட்ஃபார்மில் நடந்து, பஸ்ஸில் வழுக்காமல் ஏறுகிறதா என்று பார்த்துவிட்டு
கையில் குடை பறக்க, (அந்தக் குடை மேல்நோக்கித்தான் பார்க்கும்:) )
எதிர்த்தாற்போல் இருக்கும் ராமதூதனையும் கண்டுகொண்டு,
வீட்டிற்குத் திரும்பினால்,
பெரியவர்களின் வேலைகள் காத்து இருக்கும்.
அசை போட வைத்த மழைக்கும் நன்றி.
கூடவே சூடு பறக்கும் வேர்க்கடலை வாசமும்,
தொலைக்காட்சி இல்லாத புத்தக நாட்களானதால்,
வானொலியில் நல்ல பாடல்களும்,
கைகளில் புத்தகமுமாகக் கழிந்த வருடங்கள் ஒரு ஐந்து எண்ணம் இருக்குமா:)
படங்கள் இல்லாமல் பதிவு போட மனமில்லை.
ஸ்விட்சர்லாண்ட் காட்சிகளை,
மகன் இருக்கும் ''பாசில் ''பேட்டையைப் படங்களால் நினைவு கொள்கிறேன்.
எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

18 comments:

சந்தனமுல்லை said...

கலக்கலா இருக்கு நினைவலைகள்...எனக்கும் என்னோட ஸ்கூல் டேஸ் நினைவுக்கு வந்துடுச்சு! :)) ஃபோட்டோஸ் அருமை!!

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா முல்லை.
நன்றி.
இப்போ உங்க வேலைகளோட, அலுவலகமும் போய்க் கொண்டு
மழைல குழந்தை நனையாம இருக்காளா என்கிற கவலை எல்லாம் சேர்ந்து கொள்ளும் இல்லையா.:)

Jayashree said...

I wondered why this site had gone idle for sometime . Nice to see it back in action !!
Kudai mela thirimbina paravalla Mrs Simhan. Enga oorula pudavai thirumbi "sky going" akkidum. Athunala pazhakkamilladha kuppayam than :)) Ippo enna photo blogaa!.Swiss thani azhagu than . Enga oorum nanna than irukkum. Aana konjam adhwanam. Munthaikku ippo thevalai. 58 sheep kku oru manushan than !!

வல்லிசிம்ஹன் said...

Well Jayashree!! welcome back.
I can say I was busy with other things. it might be also true. but the truth is I did not have anything
to write abt:) just kidding.
can I make a guess? do you live in Newzealand?
somehow I associate sheep with Newzealand. remainder of my Essie Summer days:)

Jayashree said...

Hah Haa
Where else on earth.Guessed it right.:))

வல்லிசிம்ஹன் said...

Then you shd be aware of our best blogger from there.

கோமதி அரசு said...

’’அது ஒரு கனாக்காலம், நினைவுகள் உலாப்போகும்.’’

மழைக் காலத்தில் சூடான வேர்க்கடலையும்,வானொலியில்பழைய இனிமையான பாடலும்,கையில் கதைப்
புத்தகமும் எவ்வளவு இனிமையான நாட்கள்.

அசை போடவைத்த மழைக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வாங்க கோமதி.
எல்லா அம்மாக்களுக்கும் எத்தனை மழைக்கால நினைவுகள் இருக்கும். நீங்களும் எழுதலாமே.
நன்றி.

கவிநயா said...

Beautiful அம்மா! உங்க வீட்டுக்கு பக்கத்திலயோன்னு நினைச்சு குழம்பிட்டேன், ஒரு நிமிஷம் :) பாலம் ரொம்ப பிடிச்சிருக்கு :)

வல்லிசிம்ஹன் said...

மகன் வீட்டை நம் வீடுன்னும் சொல்லலாம். இல்லையா கவிநயா.

மகன்வீடு என்று எழுதினது பதிவாகும் போது ஓடிவிட்டது:)

பாலத்தில் நின்றால் காற்றும் ,மனதை மயக்கும் நீரோட்டமும்
ஆளை நகர விடாது.

கோபிநாத் said...

நல்ல கொசுவத்தி...;)

மதுரையம்பதி said...

:-)

வல்லிசிம்ஹன் said...

வேற என்ன செய்யலாம் கோபி!!
கொசுவர்த்தியே அப்பப்ப தான் வைக்கிற மாதிரி இருக்கு.:)
குட்நைட் ரிஃபில் பாக் எல்லாம் வந்தாட்டு!!!

வல்லிசிம்ஹன் said...

Mauli!!
Thanks.

மாதேவி said...

'பாசில் ''பேட்டைப் படங்களுடன்
மழைக்கால நினைவுகள் எங்களையும் நனைய வைக்கின்றன.

சதங்கா (Sathanga) said...

//தொலைக்காட்சி இல்லாத புத்தக நாட்களானதால்,
வானொலியில் நல்ல பாடல்களும்//

ஈரம் நிறைந்த வரிகளில், எங்களையும் அசை போட வைத்துவிட்டீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க மாதேவி. எத்தனை சமையல் குறிப்புகள். பார்க்கவே சுவையாகக் கொடுக்கிறீர்கள்.

ஒரு மழை லின்க் ஆரம்பித்தடலாமா:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் சதங்கா.
மழை ,அதுவும் இரவோடு இரவா வந்துச் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிவிட்டுப் போகிறது. ஊரைக் குளிர வைத்துவிட்டது. இந்த மழை காய்ந்த வயல்களிலும் பெய்ய இறைவனை வேண்டுகிறேன்.