Blog Archive

Thursday, August 20, 2009

சங்கடங்கள் எடையைக் குறைக்குமா?



சில நாட்களுக்கு முன் என் தோழியைப் பல வருடங்களுக்கு அப்புறம் சந்தித்தேன்.
ஒரு திருமணத்தில் பார்த்தபோது அவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை.
எனக்கோ அவளைப் பார்த்ததுமே புரிந்துவிட்டது.
நான் அவள் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு, எங்க 64ஆம் வருட பரிசோதனைக் கூட நாட்களை நினைவு படுத்தியதும் தான் சிரித்த வண்ணம் ஒத்துக்கொண்டாள் நான் நான் தான் என்று.
என்னசெய்வது அவள் எதிர்பார்த்தது 48 கேஜி
ஒட்டடைக் குச்சியை.
இப்போது பார்ப்பது கிட்டத்தட்ட ( ம்ஹ்ம்ம்) ஒரு 75 கிலோ பாட்டியை.:)
அவள் மட்டும் ஓரிரண்டு நரை முடியைத் தவிர
அது என்ன 50 கேஜி தாஜ் மகால் ஆகவே இருந்தாள். அவள் என்னை சுற்றிச் சுற்றிப் பார்த்தாள்.
'
கொஞ்சம் அதிர்ச்சி,நிறைய வியப்பு என்று என்னை நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டே இருந்தாள். நீ எப்படி இவ்வளவு வெயிட் போட்ட. என்னாச்சு. சாப்பாட்டுப் பிரச்சினையா. சந்தோஷம் அதிகமானா சாப்பாடும் கட்டுப்பாடில்லாம போகும்னு சொல்லுவாங்களே, அதுப்போல
உனக்கும் வாழ்க்கை இனிமையாகப் போயிருக்கும். நீதான் படிக்கிறதை 18 வயசிலியே நிறுத்திட்டியே.???
படிப்ப நிறுத்தினா உடம்பு பெருக்குமா என்ன. கணக்கு சரியாயில்லையே என்று நான் அவளை முறைப்பதை அவள் கண்டு கொள்ளவே இல்லை.
ஷி வாஸ் இன் ஷாக்!!!
பசங்க உண்டா எப்படி இருக்காங்க கல்யாணம் ஆச்சா அவங்களுக்கெல்லாம். பேரன் பேத்திகள் உண்டா என்று அவள் மூச்சு விடாமல் கேட்க எனக்கு மூச்சு வாங்கியது.
பின்னே!
அவள் எறும்பை விட வேகமா நடந்து கொண்டே பேசினால் நான் என் சரீரத்தையும் அழைத்துக் கொண்டு பின்னால் போக வேண்டியது சுலபமான காரியமா.
நாற்காலிகளுக்கு நடுவே படு சுலபமாக அவள் போக, நான் எல்லாருடைய கால்களை இடித்து, பாதங்களை மிதித்து,
அவர்களின் நற நறக் கடிப்பு வார்த்தைகளைக் காதில் போட்டுக் கொள்ளாமல் போனேன்.
ஒருவழியாக நாதஸ்வர இரைச்சலிலிருந்து(!!!) கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தாள்.
'இப்போ சொல்லு. எப்படி இருந்த நீ இப்படி ஆன??
என்ன சொல்லன்னு தெரியாமல் விழித்தேன்.
ஒரு 45 வருஷக் கதையை அவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியுமா....
தொடரும்( சங்கடங்கள்.
)









எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

22 comments:

வல்லிசிம்ஹன் said...

test

துளசி கோபால் said...

ஏம்ப்பா...ஒல்லியா இருப்பது முக்கியமா ? இல்லை சந்தோஷமா இருப்பது முக்கியமா?

சந்தோஷமா இருப்பதால் நாம் எடை கூடுனோம் என்றால் நம்ம வயசில் ஒல்லியா இருக்கறவங்க துக்கத்தோட இருக்காங்கன்றதுதானே உண்மை.

குண்டோ ஒல்லியோ எல்லாம் அவரவர் குடும்ப வாகு.

குண்டா இருப்பவர்கள் ஏற்கெனவே குண்டா இருக்கோமேன்னு நொந்துக்கிட்டு இருப்பாங்க. இதுலே தான் ஒல்லியா இருப்பதால் அடுத்தவங்களை இளக்காரமா நினைப்பது தப்பில்லையா?

ஏன் இப்படி ஒல்லியா சனிக்கிழமை சாவுறமாதிரி இருக்கே? துக்கமான வாழ்க்கையான்னு திருப்பிக் கேட்டா எப்படி இருக்கும்?

இங்கிதம் தெரியாதவர்கள் உலகில் நிறையப்பேர் இருக்காங்க(-:

எங்கூர்லே முந்தியெல்லாம் வயசாகியும் குச்சி மாதிரி இருக்கப்பட்டவங்களை என்ன சொல்வாங்க தெரியுமா?

உடம்பெல்லாம் வினையும் கெட்ட எண்ணமும். அதான் திங்கறது எதுவும் உடம்புலே ஒட்டலை(-:

துளசி கோபால் said...

சொல்ல விட்டுப்போச்சு....
பிள்ளையார் சூப்பர்.

அவரை ஒல்லியாக்கணுமா? :-)))))

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்பா. துளசி,
அன்னிக்கு சோகமா இருந்தது.
ஒரு நாள் சோகத்தில இளைச்சதா சரித்திரமே இல்லையே.:)

அப்பாடி எனக்கு ஆறுதலா ரெண்டு வார்த்தை சொல்ல ஆளு கிடச்சாங்களே அதைச் சொல்லணும்.!!
பிள்ளையாரைச் சுருக்கவில்லை. டெம்ப்ளேட் ஒரே தடியா(:))
ஆட்டம் போடுது. மாத்திடறேன்:)

துளசி கோபால் said...

புள்ளையாரை ஏன்ப்பா சுருக்கணும்? படம் நல்லாத்தானே இருக்கு.

தோழி பிள்ளையாரையும் ஒல்லி ஆக்குவாங்களான்னு கேட்டேன்:-)))))

வல்லிசிம்ஹன் said...

பிள்ளையாரை மூணு அவதாரமா மாத்திட்டேன்:)
ஓகேயா.
அந்த சினேகிதி இப்ப பெரிய ஆபீசரா ரிசர்வ் பாங்க்ல வேலை செய்யறாங்க.
பணம்,தங்கம் எல்லாம் நிறைய பார்த்து உடம்பு இளைச்சுட்டாங்களோ என்னவோ!!

துளசி கோபால் said...

இருக்கட்டுமே....
பதவியால் மட்டும்தான், மனுசனுக்கு மதிப்பா?

என்னமோ போங்க.....

கோபிநாத் said...

அட எங்க பிடிச்சிங்க பிள்ளையாரை...அட்டகாசம் ;))

தொடரும்ன்னு போட்டுவிட்டு கூடவே சங்கடங்கள்ன்னு போட்டா எப்படிம்மா அதை தொடர சொல்ல எங்களால முடியும் ;(

வல்லிசிம்ஹன் said...

Thank you,
earn at home.

வல்லிசிம்ஹன் said...

கோபிம்மா,

நான் வேற எங்க தேடுவேன். கூகிள் ஆண்டவர்தான் உதவறார். இவரை
ஃபோட்டொ பக்கெட் ல பிடிச்சேன்.
சங்கட நாசன கணேசனைப் படமாப் போட்டுட்டு கவலைப் படலாமா.

சரியாகிவிடும். குண்டா இருந்தா நம்ம பிரச்சினையை விட
நம்மளைப் பார்க்கறவங்களுக்கு
இன்னும் சங்கடமாப் போயிடுது:))
அதைச் சொன்னேன்!!!!

Geetha Sambasivam said...

என்னத்தைச் சொல்ல, ரொம்ப நாள் கழிச்சு உங்க பதிவுக்கு வந்தா பதிவே திறக்கலை, என்னனு பார்த்தா பிள்ளையார், இன்னும் என்னோட "சேத்தி" விடலை போல! :))))))

போகட்டும் அருமையா இருக்கார் பிள்ளையாரும், அவரைப் பத்தின பதிவும். நானும் உங்க கட்சி தான். ஆனால் ஒண்ணு, குண்டா இருக்கிறதிலே நான் அனுபவிச்ச, அனுபவிக்கும் சங்கடம் என்னன்னா, எனக்கு மட்டும் நல்லா வேலை செய்யமுடியும், நிறையவும் செய்யமுடியும், உடம்பு களைச்சுப் போகாதுனு மத்தவங்க நினைக்கிறது தான்! :)))))))) மத்தபடி நான் குண்டா இருக்கிறதிலே பிரச்னை எதுவும் இல்லை.

Anonymous said...

வல்லிம்மா, உங்க பதிவை திறந்ததுமே பிள்ளையார், அப்பறம் ஒரு பசும்புல்வெளி(மலைன்னு கூட சொல்லலாம்) ஆடு அப்படின்னு ஒரே படமா இருக்கு. எங்கே பதிவ காணமேன்னு பாத்தா கீழ இருக்கு. வேற ஏதாவது டெம்ப்ளேட் முயற்சி செஞ்சு பாருங்க. :)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சின்ன அம்மிணி, ஆடும் புல்லும், மலையும் ஒரு சிம்பாலிக்கா போட்டு இருக்கேன்.
ஆடு மாதிரி புல்லைச் சாப்பிடணும்.
மலைமேல ஹைக்கிங் போகணும். உடலை நல்லா வச்சிக்கணும்னு:)

பிள்ளையாரும் போட்டு இருக்கேன் பாருங்க.:))

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா, நாந்தான் நேரிலியே பார்த்தேனே. நீங்க எவ்வளவு சுறுசுறுப்பா இருக்கீங்கன்னு,.

எங்க மாமியார் கூட குண்டுதான். அத்தனை வேலை அசராம செய்வாங்க.
நீங்க சொல்கிற மாதிரி பார்க்கிறவங்க கண்ணில பிரச்சினை இருந்தா நாம என்ன செய்யறது:))))

ambi said...

எனக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தமே இல்லை. அப்படியே மோதகம் குடுத்தா நடைய கட்டிடுவேன். :)

பிள்ளையார் ரொம்ப கலர்புல்லா இருக்கார்.

மெளலி (மதுரையம்பதி) said...

விநாயகர் அருமை. அதிலும் 3 உருவங்களாக சூப்பர் வல்லியம்மா.

உங்கள் தோழியைப் போல பலர் இருக்காங்க. எதாவது பேசணுமுன்னு ஆரம்பிச்சு இப்படி ஆகிடறதுன்னு நினைக்கிறேன்.

Vetirmagal said...

I think your friend wanted to be admired by you. For being slim and not changing. I am sure you let her down.

Did she have some kind of old score to settle? :-)

Change is the essence oflife. Please have a look at all those old photographs in our twenties and thirties. Imagine if you were like that now? You will have a good laugh.

Please , take care. It is better to be plump and healthy. And write nice blogs.

Being officer in RBI is not so great. Three are almost thousands there. But feeling sorry for being plump is not nice.

You are healthy and happy and that is all that matters.

Cheers.

Agree with Tulasi madam's comments totally.By the way I am fat and happy :-)

வல்லிசிம்ஹன் said...

ஏன் இப்படி ஒல்லியா சனிக்கிழமை சாவுறமாதிரி இருக்கே? துக்கமான வாழ்க்கையான்னு திருப்பிக் கேட்டா எப்படி இருக்கும்?
// Thulasi . this is sooooper:;;;;:)))

வல்லிசிம்ஹன் said...

அம்பி!!!!!! அம்பிதானே!!!
மோதகம் வேணுமனா ஞாயிறு வரவும்.
சூர்யாவுக்குத் தனி பார்சல்..

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்மா. பாவம். தன் வாழ்க்கையும் பார்த்துக் கொண்டு மற்றவர்கள் வாழ்க்கையிலும்
புகுந்து
அவர்கள் பிரச்சினையைத் தலை மேல் போட்டுக் கொண்டு....கஷ்டம்தான்:)
பிள்ளையார் அழகா இருக்கார் இல்லையா. நன்றிம்மா மௌலி.

வல்லிசிம்ஹன் said...

oh yes she had some scores. you are right. We did not invite her into our clan of SEVEN!!!!

Thought she would have changed .very competetive person.
I did not have that fire then. I do not now.lucky me:))

For health reasons I want to reduce.
otherwise I am happy as I am!! thank you Vetri magal. you have given me a good boost:0))

கோமதி அரசு said...

வடநாட்டில் விநாயகர் சதுர்த்திக்கு லட்சுமியும் விநாயகரும் சேர்ந்த படம்,
சிலை விற்பார்கள்,நீங்கள் அனுப்பியிருக்கும் படம் அழகு.