Blog Archive

Sunday, June 15, 2014

உலகத் தந்தையர் தினம், வாழ்த்துகள்



தந்தையர் தினம்.
தாய்கள் தினத்துக்குப் பிறகு வருவது ஏன்.
மங்கை முதலில் பிறந்து மணவாளன் பின்னால் பிறந்தானா.
எங்கள் வீட்டுத் தந்தையைப் பற்றி எழுத எனக்கு அவ்வளவு தகுதி இல்லை. சின்ன வயசில் பரணில் ஏறி, என் மரயானையை,
தும்பிக்கை உடைந்த யானையை, எட்டாத ஒரு முக்காலி மேல் ஏறி எடுத்துக் கொடுத்தவரும்,
பள்ளிக்கு அழைத்துச் சென்று,ஆங்கிலம் பேசும் மரியாதைக் குரிய மதர் சுபீரியரிடம், என் பெண்ணுக்கு அவ்வளவு ஆங்கிலம் தெரியாது. நீங்கள்தான் பார்த்து அவளுக்கு இந்தப் பள்ளியில் இடம் கொடுக்க வேண்டும் என்று சொன்ன போது எனக்கு வயது 12.
இப்போதென்றால், பிள்ளைகளொ பெண்ணொ தாங்களே தகுதிகளைச் சொல்லி மனதில் இடம் பிடித்து விடுவார்கள்.
ஊமையாக இருக்கும் என்னை நிறையப் பேச வைத்தவர். எழுத வைத்தவர். உலகின் பல்கோணங்களைக் காட்டிக் கொடுத்தவர்.
அப்புறம் அடடா,இப்படிப் பேசுகிறதே என்று சங்கடப் பட்டவரும் அவர்தான்:)
 
இன்று நான் நினைவு கொள்ளப் போவது அவரை அல்ல.
எத்தனையோ தந்தைகள், குழந்தைகளுடனும் இருக்க முடியாமல்,
வெளிநாடுகளுக்குப் போய்ச் சம்பாதித்து வந்து, நேற்றுப் பார்த்த பெண்ணும்,பையனும் இன்னும் 10 செண்டிமீட்டர் உயர்ந்து விட்டதையும்,
அவர்கள் எண்ணங்கள் வித விதமாக மாறி இருப்பதையும்,
தான் வாங்கி வந்த அன்பளிப்புகள்
எதுவும் பிடித்தது போலத் தெரிந்தாலும் காண்பித்துக் கொண்டாலும்,
சம்திங் மிஸ்ஸிங், என்ற ஒரூணர்வு தெரிகிறதே, உணர்கிறார்களே, அந்தத் தந்தைகளுக்குத் தான்
இந்தத் தந்தையர் தின வாழ்த்துகளைச் சொல்லுகிறேன்.
அம்மா ஒரு இடம், அப்பா ஒரு இடம் என்று வேலை பார்க்க, பாட்டி தாத்தாக்களிடம் வளரும் குழந்தைகளுக்குத் தந்தையாக இரட்டிப்பு வேலை செய்யும் தாத்தாக்களுக்கும் என் வணக்கம்.

எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa

34 comments:

Geetha Sambasivam said...

//எத்தனையோ தந்தைகள், குழந்தைகளுடனும் இருக்க முடியாமல்//

வயிற்றுப் பிழைப்பு, பாவம், அனைத்துத் தந்தையருக்கும் இனிய வாழ்த்துகள்.

sury siva said...

// அவர்கள் எண்ணங்கள் வித விதமாக மாறி இருப்பதையும்,
தான் வாங்கி வந்த அன்பளிப்புகள்
எதுவும் பிடித்தது போலத் தெரிந்தாலும் காண்பித்துக் கொண்டாலும்,
சம்திங் மிஸ்ஸிங், என்ற ஒரூணர்வு தெரிகிறதே, உணர்கிறார்களே, அந்தத் தந்தைகளுக்குத் தான்
இந்தத் தந்தையர் தின வாழ்த்துகளைச் சொல்லுகிறேன்.//

உண்மையே.

எப்போதுமே உனக்கு என்ன வேணும் என்று கேட்காத குழந்தைகள் இல்லை.

நமக்கு வேண்டும், பிடிக்கும் என நினைத்து அவர்கள் வெளி நாடுகளிலிருந்து வாங்கிகொண்டு வரும்
பல்வேறு பொருடகளையும் ஏற்கனவே ஆண்டு அனுபவித்து அலுத்துப்போய் இருக்கும் நமது வயதான‌
உள்ளங்களுக்கு, " செல்வங்களா ! நீங்கள் எங்கள் அருகில் இரு ந்தாலே போதும் ! "
என்று சொல்லமுடியாமல் இருக்கிறோம்.

இது அந்தக்காலம் இல்லை. கூட்டுக்குடும்பம் இல்லை. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் எனத் தெளிவாகத் தெரியும் காலம்.

தினம் ஒரு தடவையாவது உன் முகத்தை வெப் காமிலே காமிடா என்று சொல்லத்தயக்கமாகவும்
இருக்கிறது.

ஒவ்வொரு மகனுக்கும் மகளுக்கும் தான் தந்தையாகும்போது அல்ல, முதிய வயதை அடையும்பொழுதுதான்
த்ததம் அப்பாக்களின் மனதில் என்ன இருக்கிறது என அறிவார்களோ என்னவோ ?

அது வரை சம்திங் மிஸ்ஸிங் அல்ல. எவரிதிங் மிஸ்ஸிங்.

சுப்பு ரத்தினம்.
http://arthamullavalaipathivugal.blogspot.com

ராமலக்ஷ்மி said...

மிக மிக அருமையான ஆழ்ந்த சிந்தனை அக்கறையுடனான வாழ்த்து வல்லிம்மா! தள்ளியிருக்கும் தந்தையர் பலரை வலையுலகிலேயே பார்க்கிறோம். குழந்தைகளை நினைத்துப் பதிவிட்டு மனதை ஆற்றிக் கொள்வது பார்த்து நெகிழ்கிறோம்.

வயது காலத்தில் பேரப் பிள்ளைகளை பார்த்துக் கொள்ளும் பாட்டித் தாத்தாக்கள் வணக்கத்துரியவர்கள். எல்லோருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்!

கோபிநாத் said...

அனைத்து தந்தையர்களுக்கும் வாழ்த்துக்கள் ;)

அருமையாக சொல்லியிருக்கிங்க வாழ்த்தை...;)

வல்லிசிம்ஹன் said...

எப்படி உலகம் மாறி விட்டது பார்த்தீர்களா கீதா.
நாமும் குழந்தைகளைப் பிரிந்து இருக்கப் பழகிவிட்டோம்.!

தினமும் காலையில் எழுந்திருக்கும் போது அவரவர் இடத்தில் அவரவர் நன்றாக இருக்கட்டும் என்று நினைக்கவும் ஒரு சந்யாச நிலையில் நம்மைத் தள்ளியாச்சு.:(

வல்லிசிம்ஹன் said...

அன்பு சூரி,
உங்கள் வேதனை எனக்கு நன்றாகவே புரிகிறது.

உண்மையில் அந்த வெளிப் பொருட்கள் ஒன்றும் வேண்டாம். என்று நாங்களும் சொல்லிவிட்டோம்.
நீங்கள் எங்களோடு ஒரே மேஜையில் உட்கார்ந்து சாப்பிடுங்கள்.
மகனோ மகளோ வீட்டில் இருக்கிறார்கள் என்றால் உடலில் யானை பலம் வந்து விடுகிறது.
அவர்கள் கிளம்பும் நாள் கனத்துப் போகிறது. இது இந்தத் தலை முறைக்கான விதிக்கப்பட்ட சட்டம் என்றே நம்புகிறேன்.
அவர்கள் குழந்தைகள் வளரும் நாளை நினைத்து இப்பவே எனக்குக் கவலை வருகிறது.
நம் பேரன் பேத்திகள் இன்னும் சுதந்திரமாகச் செயல் படுவார்கள்.
அப்போது நம் குழந்தைகள் நிலைமை எப்படி இருக்கும்!
புரியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ராமலக்ஷ்மி.
அபி அப்பா, ஆயில்யன் இவர்களை எல்லாம் நினைத்தல் நிஜமாகவே இவர்கள் தனித்து இருக்கிறார்களே,.
குடும்பத்தோடு இருக்க வேண்டிய வயதில் இப்படித் தனித்து,உழைத்து
பொருள் ஈட்டும் வழியாகி விட்டதே என்று தோன்றுகிறது.
.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோபி நாத். வருங்காலத் தந்தையர்களுக்கும் வாழ்த்துகள்.:)

ஆகாய நதி said...

அருமையான விதத்தில் வாழ்த்தி நெகிழ்த்திவிட்டீர்கள்!

வல்லிசிம்ஹன் said...

வரணும்பா ஆகாயநதி. ரொம்ப நன்றி. உங்கள் வீட்டுத் தந்தையர்க்கும் வாழ்த்துகள்.

துபாய் ராஜா said...

"எத்தனையோ தந்தைகள், குழந்தைகளுடனும் இருக்க முடியாமல்,
வெளிநாடுகளுக்குப் போய்ச் சம்பாதித்து வந்து, நேற்றுப் பார்த்த பெண்ணும்,பையனும் இன்னும் 10 செந்திமீட்டர் உயர்ந்து விட்டதையும்,
அவர்கள் எண்ணங்கள் வித விதமாக மாறி இருப்பதையும்,
தான் வாங்கி வந்த அன்பளிப்புகள்
எதுவும் பிடித்தது போலத் தெரிந்தாலும் காண்பித்துக் கொண்டாலும்,
சம்திங் மிஸ்ஸிங், என்ற ஒரூணர்வு தெரிகிறதே, உணர்கிறார்களே, அந்தத் தந்தைகளுக்குத் தான்
இந்தத் தந்தையர் தின வாழ்த்துகளைச் சொல்லுகிறேன்.
அம்மா ஒரு இடம், அப்பா ஒரு இடம் என்று வேலை பார்க்க, பாட்டி தாத்தாக்களிடம் வளரும் குழந்தைகளுக்குத் தந்தையாக இரட்டிப்பு வேலை செய்யும் தாத்தாக்களுக்கும் என் வணக்கம்."

என்போன்ற தந்தையரின் இதயத்தில் வலி ஏற்படுத்தும் வரிகள்.

அன்பு தந்தையர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நம்ம தந்தையர் தின கவிதை இங்கே சென்று படியுங்கள். http://rajasabai.blogspot.com/2009/06/blog-post_20.htm

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராஜ சபை, உங்களுக்கு மனவலி கொடுக்க எழுதப்பட்ட வரிகள் இல்லைப்பா.

மாறி விட்ட சமுதாயத்தின் கோணங்கள் மாறிவிட்டன,.
அவை ஏற்படுத்தும் மாற்றங்கள் அங்கீகரிக்கப் பட்டு விட்டன, அதைத் தான் சொல்ல வந்தேன்.

எல்லாம் பணம் ஈட்டி குடும்ப ரக்ஷணைக்காக.
அந்தத் தந்தைகள் மனம் படும் பாடுகளுக்காகத் தான் எழுதினேன், வணக்கமும் ,மேலும் வாழ்த்துகளும் பதிவிட்டேன்,.

மணிநரேன் said...

மிகவும் வித்தியாசமாக மற்றவர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.

Muruganandan M.K. said...

எல்லா விதமான தந்தையருக்கும் வாழ்த்துக்கள்.
சிந்தனையைத் தூண்டும் விதமான பதிவு.

வல்லிசிம்ஹன் said...

வாங்க மணிநரேன். நன்றி. உங்கள் வீட்டுத் தந்தையருக்கும் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் டாக்டர். தாய்களுக்கு உண்டான அத்தனை கடமைகளிலும் தந்தைகளும் பங்கேற்கும் சமுதாயத்தில்

சங்கடங்கள் ஏதும் வராது.
முறை வழுவும் போதுதான் குறைகள் தோன்றுகின்றன.
நன்றி.

Kavinaya said...

தந்தையரின் உணர்வு நிலையை அருமையாக நினைவு கூர்ந்திருக்கிறீர்கள். அனைத்து தந்தையருக்கும் இனிய வாழ்த்துகள்.

S.Muruganandam said...

திரைக் கடல் ஒடியும் திரவியம் தேடும் தந்தையர்கள் சார்பாக பதிவிட்டதற்க்கு நன்றி வல்லி அம்மா.

அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கவிநயா. உங்கள் தந்தைக்கும் கணவருக்கும் என் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க கைலாஷி,
நன்றிம்மா.

நானானி said...

அபி அப்பா, ஆயில்யனோடு தமிழ்பிரியனையும் சேர்த்துக்கொள்ளுங்கள், வல்லி!

அப்பாக்களுக்கு வாரிசுகளுக்கு பொருள் சேர்ககவே இப்போது நேரமிருக்கும். பின்னால் அவ்வாரிசுகளின் வாரிசுகளோடு கவலையில்லாமல் தாத்தா என்ற பெயரில் பொழுதைக்கழிக்கவும் நேரம் வரும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நானானி, பிரியனை விட்டுட்டேனா.
நீங்கள் சொல்வது போல தான் நடக்கப் போகிறது. இருந்தாலும் இப்போதைய தனிமைக்கு யார் ஜவாப்??

Unknown said...

வாழ்த்துக்கள் எங்களுக்கா! நன்றியம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சுல்தான், உங்களுக்கும்தான்.ஆசீஃப் மீரானுக்கும் தான் எனக்கு யார் யார் குடும்பத்தோடு அங்கே இருக்கிறார்கள் என்கிற விவரம் சரியாகத்தெரியாது.
இந்த அபி அப்பா, தம்பி ரிஷான் இவர்களெல்லாம் உடல் நலம் சரியில்லாமலிருந்து மீண்டதகக் கேள்விப்படும்போது, மனம் வருந்துகிற்து. இவர்களுக்கு உதவி செய்யவும் நிறிய நண்பர்ல்கள் இருப்பார்கள்.
இருந்தாலும், மனதின் மூலையிம் குழந்தைகளுக்காகவும் குடும்பத்துக்காகவும் ஏக்கம் இருக்கும்.


எங்க இருந்தால் என்ன. எல்லாத்தந்ததையர்களும் வளமாக இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அடுத்ததடவை உங்கள் எல்லோரையும் மீண்டும் சந்திக்கும் மகிழ்ச்சி கிடைக்கும் என்று நம்புகிறேன்.
நன்றிம்மா.

திவாண்ணா said...

அருமையான பதிவு! மனசை தொட்டுட்டீங்க!

திவாண்ணா said...

ரொம்ப நாள் முன்னே படிச்ச கதை. எதிலேன்னு மறந்து போச்சு. வெளிநாட்டிலேந்து திரும்புகிறார் நம்ம ஆளு. குழந்தைகளுக்கு பிடிக்கும்ன்னு ஏதேதோ வாங்கி வரார். பையனுக்கு இந்த சட்டை அளவு சரியா இருக்குமா? போன தரம் சரியா இல்லைன்னு ரொம்ப ரகளை பண்ணிட்டானே...இப்படி எல்லாம் யோசிச்சுகிட்டு வரார்.
வீட்டுக்கு வந்த பிறகு பாத்தா பசங்க எல்லாம் ரொம்பவே வளந்துட்டாங்க. பையனுக்கு சட்டை நிச்சயம் சரியா இருக்காது. தயங்கிட்டே கொடுக்கிறார். பையனும் தாங்க்ஸ்பான்னு சொல்லிகிட்டே போடுக்கிறான். சின்னதாதான் இருக்கு. பையனோ பரவாயில்லைப்பா, இன்செர்ட் பண்ணிக்கிறேன். ஒண்ணும் தெரியாது என்கிறான்.
அப்பாவுக்கு சந்தோஷம் இல்லே! சம்திங் இஸ் மிஸ்ஸிங் நவ்! மாறி போயிட்டானே! முன்னே மாதிரி அழுது அடம் பிடிக்க மாட்டானான்னு ஏங்குது உள்ளம்!

வல்லிசிம்ஹன் said...

தம்பிக்கு நல்வரவு.
தகப்பன்சாமி ஆகிவிட்டான் அந்தப் பிள்ளை.
பாவம் இந்த அப்பா.


அந்தக் காலம் மாதிரி இல்லாமல், இப்போது இமெயில் எல்லாம் வந்துட்டது. இனிமே கேட்டு அளவெல்லாம் வாங்கிக் கொண்டு சட்டைகள் வாங்கி வரலாம்.
பரிசுன்னு கொடுக்கும் போது அவங்களைக் கேட்டே கொடுப்பது நல்லது. என் பையன்கள் இன்னும் சொல்லிச் சிரிப்பான்கள்.

சட்டை அளவெல்லாம் குறைந்து (அவர்கள்)

ஒரு சுற்று இளைத்திருப்பதால் நான் வாங்கும் சட்டைகள் பெரிதாகவே இருக்கும்.
:)))

sri said...

டீச்ச‌ர் ப‌திவு மூல‌மா இங்க‌ வ‌ந்தேன். அப்பா! எவ்வளவு அழ‌கா எழுதி இருக்கீங்க‌! க‌டைசி வ‌ரிகளை ப‌டிக்கும் போது என்ன‌மோ ப‌ண்ணுது, அப்பா அம்மா விட்டு ச‌ம்பாதிக்க‌ வ‌ந்த நான், எங்க அப்பாக்கு எப்ப‌டி இருக்கும்னு யோசிக்க‌ வ‌ச்சுடீங்க‌!

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ஸ்ரீவத்ஸ்.
காலம் நிறைய மாறிவிட்டது. இப்படிப் பெற்ற பிள்ளைகளைப் பிரிந்திருக்க நேருவதும் எல்லோருக்கும் பழகி விடுகிறது. தினம் எழுந்திருக்கும்போது சாமி கடவுளே குழந்தைகளை நன்றாக வைத்திருன்னு சொல்லிட்டு, வேலைகளைக் கவனிக்கச் சென்றுவிடுகிறோம்.
மற்ற இடங்களில் குழந்தைகளைச் சுமந்து செல்லும் வாலிபர்களைப் பார்க்கும்போது சுரீல் என்று உரைக்கும்

ஸ்ரீராம். said...

அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள். சுப்பு தாத்தாவின் பின்னூட்டமும் அருமை.

Geetha Sambasivam said...

மீள் பதிவா? தந்தையர் தினச் சிறப்புப் பதிவு, எப்போதும் போல் சிறப்பாகவே இருக்கிறது. மறுபடி படித்தேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை அம்மா... இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்...

வல்லிசிம்ஹன் said...

நன்றி கீதா. என்ன எழுதுவது என்று யோசித்தேன். மனசுக்குப் பாரம். சரி விடு என்று பழசையேப் புதுசாப் போட்டுவிட்டேன். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தனபாலன். ரசிப்புக்கு மிக நன்றி.