About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Friday, June 19, 2009

32 கேள்விகளும் பதில்களும்!!

மதுரையம்பதி என்னும் சந்திரமௌலி என்னையும் அங்கீகாரம் கொடுத்து இந்த 32 கேள்விகளை அனுப்பி வைத்து இருக்கிறார்.கொஞ்சம் சீரியசாக இருக்கிறதோ என்று மீண்டும்படித்தேன். சாதாரணமாகத் தானிருக்கிறது:)பயமில்லாமல் படிக்கலாம்.

நன்றி மௌலி.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்கள் பெயர் பிடிக்குமா?

பிடிக்கும். ரெண்டு மூணு பேரு இருக்கு. எல்லாமே பிடிக்கும். அம்மா அப்பா வைத்தால் முதல் பெயர் பிடிக்கும்:)


2. கடைசியாக அழுதது எப்பொழுது?

என் தம்பி மறைந்த போது.


3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?

முன்பு அழகாக இருந்த போது பிடிக்கும்


4. பிடித்த மதிய உணவு என்ன?

ரசம்,உ.கிழங்கு பொடிமாஸ்

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

கொஞ்சம் யோசிப்பேன்.ஆனால் நட்பு பிடிக்கும்.


6. கடலில் குளிக்கப் பிடிக்குமா?

அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

கடல் என்னை இழுத்ததால் பயம். அதனால் அருவியை ரொம்பப் பிடிக்கும்.


7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?


கண்கள். நேராகப் பார்த்துப் பேசுபவரிடமே என்னால் பேச முடியும்.
 
8. உங்ககிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

எதற்கும் படபடப்பு அதைப் பிடிக்காது. பிடித்தது மிஞ்சி இருக்கும் நகைச்சுவை:)


9. உங்க சரிபாதிகிட்ட உங்களுக்குப் பிடித்த பிடிக்காத விஷயம் எது?

பிடித்தது சுறுசுறுப்பு. பிடிக்காததுன்னு ஒண்ணும் இல்லை.
 
10. யார் பக்கத்துல இல்லாம இருக்கிறதுக்கு வருந்துகிறீர்கள்?
என் பெற்றோர்கள்,தம்பி.மூவரிடம் ஏதாவது அறிவுரை கேட்டுக் கொண்டே இருப்பேன்:)


11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
பிடித்த பச்சைவண்ணத்தில் புடவை ,பச்சை வண்ணத்தில் ப்ளௌசும்.


12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்கீங்க?
விஜய் சினிமா அவார்ட்ஸ்.
 
 
13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வண்ணமாக உங்களுக்கு ஆசை?
ஆரஞ்சு வண்ணம்.


14. பிடித்த மணம்?
நித்திய மல்லி,ஜாதி மல்லி உயிர்.


15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
நான் அழைக்க நினைப்பது துளசியையும்,
 
கீதாவையும்,கொத்சையும், அபி அப்பாவையும்
 
நாலு பேருமே கற்பனை வளம் நிறைந்தவர்கள். மிகவும் படித்தவர்கள். எல்லாவற்றையும் விட அன்பானவர்கள்.
எல்லோருமே நிறைய வேலைகளில் பொதிந்து இருக்கிறார்கள்.
அழைக்கப் போகிறேன். எப்போ முடிகிறதோ அப்போது எழுதுவார்கள் என்று நம்புகிறேன்.


 
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
அவருடைய எல்லாப் பதிவுகளையும் படித்துவிட்டதாகச் சொல்ல மாட்டேன். சில பதிவுகளைப் படித்திருக்கிறேன். அதில் தொனிக்கும் உயர்ந்த கருத்துகளும், ஆன்மீகச் சிந்தனைகளும்,தேடுதலும் பிடிக்கும்

17. பிடித்த விளையாட்டு:
ரிங் டென்னிஸ்.


18. கண்ணாடி அணிபவரா?


கண்ணாடி இல்லாமல் நான் இல்லை:0)


19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
மாயா பஜார்,மிஸ்ஸீயம்மா, கலாட்டா கல்யாணம் இந்த மாதிரி சிரிக்க வைக்கவே எடுத்தார்களே அந்தக் காலத்தச் சேர்ந்தவள்.


20. கடைசியாகப் பார்த்த படம்?
தியேட்டர் பக்கம் போய் வருடக்கணக்காகி விட்டது. மிஸஸ்.டவுட் ஃபையர்னு நினைக்கிறேன்.


21. பிடித்த பருவகாலம் எது?
குளிர்காலம்.மார்கழி.


22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
ஸ்ரீராமாயணத்தில் சுந்தரகாண்டம்.


23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
ரொம்பப் போரடித்தால் வருடத்துக்கு ஒரு முறை.


24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்தது மழையின் சன்ன இசை. பிடிக்காதது இடிச் சத்தம்


25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?


அமெரிக்கா, கானடா.
 
26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?


இருக்கலாம். மற்றவர்கள்தான் சொல்லணும்


27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?


பொய் பேசுவது.


28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்.


29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலா தலம்?
மதுரை.


30. எப்படி இருக்கணும்ன்னு ஆசை?
இன்னும் நிறையப் படிக்க வேண்டும்,என்னை விட வயதானவர்களுக்கு உதவ வேண்டும்.


31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?
ஒன்றுமே இல்லை.


32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.


எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைக் கொஞ்சம் லேட்டாகச் சொல்லிக்கொடுக்கும் டீச்சர்.:)எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

30 comments:

வல்லிசிம்ஹன் said...

கேள்விகள் முடிந்து விடைகளோடு ஓய்ந்து விட்ட காலத்தில் லேட்டாக வந்த பேப்பராகிவிட்டது:)

ராமலக்ஷ்மி said...

பதில்கள் யாவும் சுவாரஸ்யம். சில சிந்திக்க வைப்பதாகவும் உள்ளன. நன்றி!

மதுரையம்பதி said...

உங்களைக் கூப்பிட்ட போது, உங்களுக்கு இதில் விருப்பம் இருக்குமோ இல்லையோ என்று ஒரு நிமிடம் நினைத்தேன். உடனே கேள்விகள் ஏதும் எடக்கு-முடக்காக இல்லாததால் கண்டிப்பாக எழுதுவீர்கள் என்றே நினைத்தேன். மிக்க நன்றி வல்லியம்மா.

மதுரையம்பதி said...

//இன்னும் நிறையப் படிக்க வேண்டும்,என்னை விட வயதானவர்களுக்கு உதவ வேண்டும். //

இதான் உங்களது ஆர்வம் மிகுந்த இயக்கு சக்தி என்றே நினைக்கிறேன் :)

மதுரையம்பதி said...

//மாயா பஜார்,மிஸ்ஸீயம்மா, கலாட்டா கல்யாணம் இந்த மாதிரி சிரிக்க வைக்கவே எடுத்தார்களே அந்தக் காலத்தச் சேர்ந்தவள். //

நான் இந்தக்காலத்தவனும் இல்லை, உங்கள் காலத்தவனும் இல்லை, ஆனால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்தப் படங்கள் எனக்கும் ரொம்பப் பிடிக்கும் வல்லியம்மா. :)

இந்தப் படங்களில் வரும் பாடல்கள் கேட்கக் கேட்கத் தெவிட்டாதவை அல்லவா?.

மதுரையம்பதி said...

//சில பதிவுகளைப் படித்திருக்கிறேன். அதில் தொனிக்கும் உயர்ந்த கருத்துகளும், ஆன்மீகச் சிந்தனைகளும்,தேடுதலும் பிடிக்கும்//

அகம்பாவி, கற்ற திமிர் என்று சிலர் கூறுகையில் உங்களைப் போன்ற பெரியவர்களிடத்தூ இப்படி பாராட்டு மகிழ்வளிக்கவே செய்கிறது. மிக்க நன்றி.

மதுரையம்பதி said...

//எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைக் கொஞ்சம் லேட்டாகச் சொல்லிக்கொடுக்கும் டீச்சர்//

உங்களது அனுபவம் பேசுகிறது....இது போன்றவை எங்களுக்கும் உதவும். :)

மதுரையம்பதி said...

//பிடித்தது சுறுசுறுப்பு. பிடிக்காததுன்னு ஒண்ணும் இல்லை.//

உங்களது வெற்றிகரமான மணவாழ்வின் உண்மை இதுவாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. :)

இறையருளால் என்றும் உங்கள் மகிழ்ச்சி நீடிக்க வாழ்த்துகிறேன்.

மதுரையம்பதி said...

//நான் அழைக்க நினைப்பது துளசியையும், கீதாவையும்,கொத்சையும், அபி அப்பாவையும் நாலு பேருமே கற்பனை வளம் நிறைந்தவர்கள். மிகவும் படித்தவர்கள்//

சரியான செலக்ஷன். கீதாம்மாவை குமரன் மற்றும் சிலர் அழைத்திருக்கிறார்கள். உங்களுடன் டீச்சரையும் அழைக்க நினைத்தேன். ரீச்சர் ஏதோ 2-3வாரத்திற்கு பதிவுகள் இருக்காது என்பதால் நான் அழைக்கவில்லை. கொத்ஸ் சிலநாட்கள் முன்புவரை ஏதோ வேலை அதிகம் என்று ஸ்டேட்டஸ் மெசேஜ் போட்டிருந்தார்.

அபிஅப்பா இதுவரையில் எழுதவில்லை என்றால் ஆச்சர்யம்.

பொருத்திருந்து இவர்களது பதிவுகளைப் படிப்போம். :)

கவிநயா said...

//ரசம்,உ.கிழங்கு பொடிமாஸ்//

ஹை! என் கட்சி!

நீங்க வாழ்க்கை பற்றி சொன்னது எனக்கு ரொம்பப் பிடிச்சது! :)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ராமலக்ஷ்மி.
இன்னும் எழுதி இருக்கலாம். நேரம் , பேரன் கையில் மாட்டி இருக்கிறது:)
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி,
சுய பரிசோதனை, இல்லை ஆரய்ச்சின்னு வைத்துக் கொள்ளலாமா இந்தக் கேள்வி பதிலை.
மெய் சொன்னால் போதும். கலகலப்பாக எழுதி இருக்கலாம். பரீட்சைப் பேப்பருக்கு எடுத்துக் கொண்ட நேரத்தைவிடக் குறிவாகவே எடுத்ததால் சுருக்கமான பதில்களே கிடைத்திருக்கிறது.
உங்களை நான் மிகவும் மதிக்கிறேன். அதனால் நீங்கள் வேறு விதமாகப் பேசக் கூடாது. உங்கள்
எழுத்தில் ஏது அகம்பாவம்.

இல்லை மௌலி.

கோபிநாத் said...

வல்லிம்மா நீங்களும் ரசமா!! ;))

\\எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைக் கொஞ்சம் லேட்டாகச் சொல்லிக்கொடுக்கும் டீச்சர்.:)\\

சூப்பரு ;-)

வல்லிசிம்ஹன் said...

கவிநயா, ரசம் சுலபமாக விழுங்க முடிகிறது,

உ கிழங்கு வாரத்துக்கு இருமுறை கட்டாயம் உண்டு:)

வல்லிசிம்ஹன் said...

நான் ரசமா:) கோபிநாத் சரி.

நீங்களுமா.!!!!
உண்மைதான் ரொம்ப லேட்டாதான் வாழ்க்கை புரிகிறது.

சென்ஷி said...

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.


எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைக் கொஞ்சம் லேட்டாகச் சொல்லிக்கொடுக்கும் டீச்சர்.:)


நல்லாயிருக்குது!

வல்லிசிம்ஹன் said...

மௌலி, வாழ்த்துகளுக்கு நன்றிம்மா.

குற்றம் பார்க்கில் சுற்றமே இல்லை என்றால் மறுபாதியிடம் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேணும் இல்லையா:)

ஆயில்யன் said...

//ரசம்,உ.கிழங்கு பொடிமாஸ்//

ஜுர நாட்களில் பாட்டியின் ஸ்பெஷல் கவனிப்பில் தின்ற நாட்கள் நினைவுக்கு வந்திருச்சு :(

கீதா சாம்பசிவம் said...

//கீதாம்மாவை குமரன் மற்றும் சிலர் அழைத்திருக்கிறார்கள்.//

mmmmmm????குமரனோட அழைப்புத் தான் கண்ணிலே பட்டது. வேறே யாரு??? தெரியலை, போகட்டும். எழுதக் கொஞ்ச நாட்கள் ஆகும். :))))))))

கீதா சாம்பசிவம் said...

//நாலு பேருமே கற்பனை வளம் நிறைந்தவர்கள். மிகவும் படித்தவர்கள்//

ஹிஹிஹிஹிஹிஹி, மத்தவங்களைப் பத்தி சரி, நானுமா??????? ஹிஹிஹி அதுக்குத் தான், மத்த மூணு பேருக்கும் இல்லை.துளசியின் இணக்கமான தன்மையோ, கொத்தனாரின் அறிவோ, அபி அப்பாவின் நகைச்சுவை உணர்வோ என் கிட்டே கிடையாது. இருந்தாலும் என்னையும் அழைத்ததுக்கு நன்றி வல்லி. சீக்கிரம் போடப் பார்க்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சென்ஷி,

ஆமாம். தாமதமாகத் தான் எல்லாம் புரிகிறது. நிறைய பள்ளம் மேடு எல்லாம் பார்த்து, அக்கரைப் பச்சையெல்லாம் தெரிந்து, ஓஹோ இதுதான் வாழ்க்கையான்னு நினைக்கும் போது 60 கட்டாயம் தாண்டிவிடும்.
அப்ப வாவது தெரிந்தால் பிழைத்துக் கொள்ளலாம்.:))))

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆயில்யன்,

அடப் பாவமே,

பாட்டி உ கிழங்கு கொடுத்திருக்க மாட்டாங்களே. மிளகு ரசமும் பருப்புத் துகையலும் இருந்திருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் தலைவின்னா, சங்கக் கண்மணிகள் எல்லோரும் கூப்பிட்டு இருக்க மாட்டார்களா)

என்ன செய்யறது. ஒப்ளைஜ் செய்துதான் ஆகணும் . இன்னும் நாலு வாரம் ஆனாலும் சரி. நீங்க போடலாம்.

பாச மலர் said...

உங்கள் எழுத்தின் மூலம் உங்களைப் பார்த்த எங்களுக்கு, உங்கள் பதில்களின் மூலம் இன்னும் அதிகப்படியாகப் பார்க்க முடிகிறது...

வல்லிசிம்ஹன் said...

கொத்ஸ் பத்திச் சொல்லவே வேண்டம். அபி அப்பா போடறேன்னு சொல்லிட்டார். போட்டு விடுவார்.
சும்மா தமாஷ் தானே ஒருத்தருக் கொருத்தர் அறிமுகம். நல்ல விஷயம்தான் கீதா:)))

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் மலர்.

மதுரையம்பதியான மௌலிக்குத் தான் நன்றி சொல்லணும்.
ஒரு நல்ல உள்முகப் பயிற்சி.
நன்றிமா.

தமிழ் பிரியன் said...

வல்லிம்மாவையும் கேள்விக்கு பதில் சொல்ல வச்சுட்டாங்களே..;-))
சுவாரஸ்யமா தான் சொல்லி இருக்கீங்க..:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா தமிழ் பிரியன்.
ஆமாம் இல்ல.!!!

என்னையும் கேள்வில சேர்த்துட்டாங்க.:)

ஆனால் பதில் சொல்லியே பழகிவிட்டதால்,(கொஞ்சம்)சுவாரஸ்யமாக இருக்குன்னு நீங்க சொல்கிறதை நான் நம்புகிறேன்:))))))

'இனியவன்' என். உலகநாதன் said...

பதிலகள் நல்லா இருக்கு.

ஆனா, ஏன் எல்லாமே நடுவில் இருக்கு.படிக்க கஷ்டமா இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

நல்வரவு இனியவன்.
ரொம்ப நடு நிலைமையா இருக்கோ:).
அலைன்மெண்ட் மாறி இருக்கிறது.
நான் ஒரு கணினி கைநாட்டு.
இந்த மாதிரி நான் மாற்றவில்லை. வேறு ஏதோ செய்யும்போது
தவறாக இப்படி வந்திருக்கிறது.
யோசித்து

வேற ஏற்பாடு செய்கிறேன். சரியா.
நன்றிம்மா.