About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Saturday, May 30, 2009

கோபாலகிருஷ்ணன்

என் மன அமைதிக்காக அவனைப் பற்றிப் பதிந்துவிட்டேன். சிங்கம் போலப் பார்வை!
புதன் கிழமை மேமாதம்
27 ஆம் தேதி நம் அருமைச் சகோதரி துளசிகோபால் வீட்டு வளர்ப்புச் செல்லம்
(பூனை என்று சொல்ல மனம் வரவில்லை) 14 வயதான கடமை வீரன்,
எட்டு வருடங்கள் துளசியின், திரு.கோபாலின் அன்பன்
சிறிது நாளாக நோய்வாய்ப்பட்டு இருந்து ,அதிக சிரமப் படாமல், துளசி வணங்கும் திருமலைப் பெருமாளின் சரண் புகுந்தான்.

// ஜிகே பாவம்ப்பா. வீட்டுலே சாமான்களை எடுத்து அடுக்குறதையெல்லாம் கவனிச்சுக்கிட்டே ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கான்.கேட்டரியில்தான் விட்டுட்டு வரணும். //

இது துளசியும் கோபாலும் இந்தியாவோ , வெளியூரோ போகும்போது மன வருத்தத்தோடு செய்யும் விஷயம்.
இனிமே அம்மா அப்பா ரெண்டு பேருக்கும் அந்தக் கவலை வேணாம்னு நினைச்சுட்டானோ.அவனை அங்கே விட்டுவிட்டு நம்ம துளசி படும் கவலை இருக்கே,அது இன்னும் பரிதாபம்.

இந்த ஜிகேப் பையன். என்ன செய்தானோ, சரியாச் சாப்பிட்டானோ என்றேல்லாம் கவலைப் படுவார்கள்.

அதற்கு ஏற்றார்ப்போல் இவர்கள் திரும்பி அவனை அழைத்துப் போகும்போது இரண்டு நாள் கோபமாக இருப்பானாம்.

கோபால் அடிக்கடி டூர் போகும்போதும் வீட்டைச் சுற்றி நடமிட்ட படி இருப்பான் என்று துளசி சொல்லுவார்கள். வேளை முடிந்த பிறகு துளசி காலடியில் வந்து படுத்துக் கொள்ளுவானாம்.

துளசியும் கோபாலும் அவனை மறக்க முடியாது. அமைதியாக அடங்கிய அவனை மனத்தில் போற்றிக் காப்பார்கள்.

எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.
16 comments:

ராமலக்ஷ்மி said...

பதிவுக்கு நன்றி.

கோகியை நம்மாலும் மறக்க இயலாது.

அபி அப்பா said...

எனக்கே மனசு கஷ்ட்டமா இருக்கே, அவங்களுக்கு எப்படி இருக்கும்:-((

கீதா சாம்பசிவம் said...

//திரு.கோபாலின் அன்பன்
சிறிது நாளாக நோய்வாய்ப்பட்டு இருந்து ,அதிக சிரமப் படாமல், துளசி வணங்கும் திருமலைப் பெருமாளின் சரண் புகுந்தான்.//

அட கடவுளே!!! எங்க மோதியோட இழப்பையே பத்து வருஷம் ஆகியும் என்னாலே மறக்க முடியலை! :)))))))))))))) இது என்ன கொடுமை!!!!!!!

கீதா சாம்பசிவம் said...

நாங்க விட்டுட்டுக் கூடப் போகாமல் மாத்தி மாத்திக் காவல் காத்துட்டு இருந்தோம். ஆபீஸுக்கு லீவு போட்டுட்டு அவர் வீட்டிலே இருப்பார், நான் வெளியே போனால். ஆனாலும்.................

கோபிநாத் said...

:-(

naanani said...

செல்லங்கள் மேல் அதீத பாசம் வைக்கக் கூடாதோ? துள்சிக்கும் திரு கோபால் அவர்களுக்கும் என் ஆறுதலைச் சொல்லவும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி, அபி அப்பா, கீதாம்மா, கோபிநாத், நானானி எல்லோருக்கும் நன்றி. துளசியும் கோபாலும் அந்தக் குழந்தை மேல் வைத்து இருந்தது அதீதமான
அன்பு. இயல்பிலியே நல்ல மன படைத்த உள்ளங்கள்.
அவர்களது கனிவான பாதுகாப்பில் வளர்ந்த அவன்
நன்றாகவே இருந்தான். சர்க்கரை நோயும், வயசானதும் காரண்மாக அமைந்தது அவனுக்கு இறைவன் அழaiப்பு வந்துவிட்டது.
இத்தனைக்கும் அவனைப் படங்களில் பார்த்ததுதான். செல்லப் பிராணியாக நினைக்க முடியாத ஏதோ ஒரு பந்தம் எனக்கே இருந்தது என்றால் அவர்கள் அனுபவிக்கும் சிரமம் நன்றாகவே புரிகிறது. அமைதி கிடைக்கும் நாள் பொறுத்தாவது.

துளசி கோபால் said...

அன்பு வல்லி,

கோகி இப்படி எல்லார் மனசையும் கொள்ளையடிச்சுருக்கானா?

கொடுத்துவச்ச மகராசாவாப் போயிட்டான்ப்பா.

உங்கள் அனைவரின் அன்புக்கும், இந்தப் பதிவுக்கும் நன்றி. ரொம்பவே நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அவனை நினைக்காமல் இருக்க முடியவில்லை துளசி,.
உங்க பதிவுகள் போலவே அவனும் ஒரு இணை பிரியாத தோழனாகி விட்டான்.

நல்ல வேளை கொஞ்ச நாள் கஷ்டத்தோடு நீங்க சொன்ன மவராசனாப் போய் விட்டான்.

அவன் வலியில் சிரமப்பட்டால் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா.

அபி அப்பா said...

இல்லை வல்லிம்மா எனக்கு புரியும் இந்த வலி! என் ஆரம்பகாலம் முதல் நீங்க படித்து வருகின்றீர்கள்! டைகர் பாப்பா கூடவே இருக்கும்!

பின்ன திடீர்ன்னு அதை விட்டு விட்டேன். ஏன்னா அவன் செத்துட்டான். அவன் கருப்பா இருப்பதால் வெள்ளையடிக்க கொண்டு போனதா அப்போ பாப்பா கிட்ட சொன்னோம்.

பாச மலர் said...

அஞ்சலிகள்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு அபி அப்பா, அன்பு உள்ளங்கள் கோண்டவர்கள் அனைவருமே புரிந்து கொள்ளும் மொழிதானே பாசம்.

உங்களுக்கு வலி புரியாமல் இருக்குமா.

செல்லம் என்று ஒரு உயிரை வளர்க்கும்போதே நாம் மற்றதுக்கும் தயாராகி விட வேண்டுமோ:(

வல்லிசிம்ஹன் said...

நன்றி பாசமலர்.

கவிநயா said...

அதிகம் சிரமப்படாமல் என்று நீங்க சொன்னதில் ஒரு ஆறுதல் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகிறேன் கவிநயா.

வலி இருந்தாலும் சொல்லத்தெரியுமா அந்த ஜீவனுக்கு....பாவம்பா. சிரமப்பட்டிருக்க மாட்டான் என்றே நம்புவோம். நன்றிம்மா.

துளசி கோபால் said...

ஆறுதல் சொன்ன அன்பு உள்ளங்கள் அனைத்துக்கும் மீண்டும் எங்கள் நன்றி.

சிரமப் படாமல் போய்ச் சேர்ந்தான். நம்ம வெட்னரி டாக்டர் அருமையானவர். எளிதாக அவனுக்குச் சிரமம் ஒன்றுமில்லாம் எல்லாம் நடத்திக்கொடுத்தார்.

உண்மையிலே கொடுத்துவச்சவந்தான் கோகி.