About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Thursday, May 07, 2009

நாமக்கல் நரசிம்மனும் ஆஞ்சனேயனும்உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோமுகம்

ந்ருசிம்ஹம் பீஷ்ணம் பத்ரம்ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்//இன்று நாள் நல்லதொரு நிகழ்ச்சியோடு தொடங்குகிறது .
தங்கை திருமணத்துக்கு வந்த அழகர் ஆற்றில் இறங்கியிருப்பார். வழக்கமாக் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் காண்பிப்பார்கள்.
இன்றொ ஒன்றும் காணக்கிக்டைக்கவில்லை. நமக்கும் அவ்வப்போது சஞ்சயன் போல ஞானக்கண் இருந்தால் தேவலையே என்று நினைத்து, தொலைக்காட்சியைத் திருப்பினால்,
வந்துவிட்டார் அழகர்.!!!!!!
 
இந்தக் கருணையை என்ன சொல்வது!!!!
ஆஹா அந்த தங்கக் குதிரையைச் சொல்லவா,அழகனின் அழகைச் சொல்லவா. தோளழகு கொண்ட சுந்தர ராஜனைச் சுமந்த குதிரையின் கம்பீரம்!! அந்தப் பச்சைப் பட்டாடையின் செய்தியைச் சொல்லவா. கள்ளழகனைச் சுமந்து வந்துவிட்டேனே. நம்பிக்கை இழக்கப் பார்த்தாயே என்பது போலப் பார்வை அழகனின் குதிரைக்கு.
இந்தக் காட்சியைக் கொடுத்தவர்களுக்கு நன்றி.

சித்திரை பவுர்ணமியும், ஸ்ரீ நரசிம்மனின் ஜயந்தியும் ,எதிர்சேவையும் இணைந்த தினம் இன்று.
அஞ்சேல் அஞ்சேல் என்று அபயம் கொடுத்தவனின் அவதார நாள்.
மானசீகமாக எல்லா நரசிம்மர்களையும் போய்ப் பார்க்கமுடியாவிட்டாலும், சில சுந்தரநரசிம்மர்களைப் பதிவில் இடலாம் என்று
நாமக்கல் ஸ்ரீலக்ஷ்மிந்ருசிம்ஹனைப் படம் எடுத்து,கூகிளார் உதவியால் இங்கு கொடுத்திருக்கிறேன்.
நாமக்கல்லில் அஞ்சனை மைந்தனுக்கு அருள் புரிந்தவன் இந்த நரசிம்மன்.
அவனுடைய
(அரக்கனைக் கொன்ற )உக்கிரம் தணிய,
தன் பதிக்காக லக்ஷ்மி தேவி தவமிருந்த இடம். கமலாலயம்.
அவள் தவம் இருக்கும் குளக்கரையில்
ஆஞ்சனேயன் கையில் இருக்கும் சாளக்கிராமத்தை வைக்க,அது விஸ்வரூபம் எடுக்கிறது.
அந்த மலையே நாமம் சொல்லும் நாமக்கல் ஆகிறது.

ஆஞ்சனேயனுக்கு சிங்கப்பிரான், ராகவனாகக் காட்சி தருகிறான்.
அவனை அப்போதே பார்த்துக் கரங்கள் குவித்தநிலையில் அனுமன் நிறக நமக்கு இரண்டு சக்திகள் நாமக்கலில் கிடைத்துவிட்டன.
ஒங்கி விஸ்வரூபனாய் ஆஞ்சனேயனும், அவன் கைகூப்பி வணங்கும் வண்ணம் அழகியசிங்கனும் எதிர் எதிரே இருக்கிறார்கள்.
இந்தக் கோவிலில் ப்ரஹலாத வரதனும்,மற்ற சகல தெய்வங்களும் இருப்பதால் நாம் தனித் தனியே தேடி அலைய வேண்டாம்.
சிவன்,பிரம்மா,அவர்களின் தேவியர்,சிறுவன் பிரகலாதன்
எல்லோரும் அந்தப் பிரம்மாண்டமான நரசிம்ம மூர்த்தியை வணங்கிய வண்ணம் இருக்கிறார்கள்.

எளிமையாக இந்தப் பதிவைத் தட்டச்சி விட்டேன்.
மேலும் விபரங்கள் நாமக்கல் நரசிம்மன் பற்றிய விக்கிபீடியா,மற்றும் கூகிள் தளத்தில் கிடைக்கும்.
எனக்குத் தெரிந்த ஒரே ஒரு விஷயம், எளியவர்க்கு அந்தக் க்ஷணமே அருள் புரிபவன் நம் நரசிம்மன். தயாபரன். கருணாமூர்த்தி.
நம்மிடம் இதைக் கொடு அதைக் கொடு என்று கேட்க மாட்டான்.
இரண்டு துளசி போதும், ஒரு புஷ்பம் போதும். இரண்டு துளி தண்ணீர் போதும்.
அவன் அவதாரதினத்தன்று மட்டும்,
எங்கள் வீட்டு வழக்கப்படி பானகமும்,கேசரியும், தயிர் கலந்த அன்னமும் செய்வோம்.
அதுவும் அவனுக்கு அந்த அந்தியும் இரவும் கலக்கும் நேரம் தான் உகந்தது.
ஒரு ஆறுமணிக்குச் சாயந்திர வேளையில் தீபங்களை ஏற்றி அவன் முன்னிலையில் படைத்து அவன் பிரசாதமாக அந்த அன்னத்தை உண்ணும்போது கிடைக்கும் ஆனந்தமும் ருசியும் தனியோ தனிதான்.
மற்ற நாட்களில் செய்யும் தயிர் அன்னத்துக்கும் இன்று படைக்கப் பட்டு உண்ணும் தயிர் அன்னத்துக்கும் அபரிமிதமான வித்தியாசம்.!!
அன்புடன் படைத்த அனைவருக்கும் நன்றி.
அவன் அருள் நம்மிடம் நிலைக்கட்டும். அவன் அன்புக்கு நாமும் பாத்திரர்கள் ஆவோம்.
அவன் தாள் சரணம்.
 

எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

21 comments:

Tulsi said...

அருமையான பதிவு.

நம்ம கோவிலில் இன்றைக்கா இல்லை நாளைக்கான்னு விசாரிக்கணும்.

ஆமாம்...அது ஏன் ரெண்டு துளசி?
ஒன்னு போதாதா? :-)))))

வல்லிசிம்ஹன் said...

ஒண்ணு மட்டும் எப்படி வைக்கிறது துளசி.:0)
ரெண்டு வச்சா நாங்க ரெண்டு பேரும் ஆளுக்கொண்ணு வாயில் போட்டுக்கலாமில்ல:)
உங்க ஊரில சனிதானே உசத்தி.
அப்போதான் வைப்பாங்க,. நாளைக்குத் தான் பவுர்ணமி விரதம்.

துளசி கோபால் said...

நான் இன்னொன்னுக்கு எங்கே போவேன்? ஒன்னோடு கோபால் மாரடிப்பது போதாதா? :-)))))

கோயிலுக்குப் போன் போட்டாச்சு. இன்னிக்குத்தானாம். கிஷோர்தான் போன் எடுத்தார். 'அம்மா...உங்களுக்குத்தான் போன் பண்ணவந்தேன்னார்.

6 மணிக்கு அங்கே ஆஜராயிருவேன்:-)))

வல்லிசிம்ஹன் said...

ஓஹோ அப்ப சரித்தான்..அத்தானுக்கு மட்டும் துளசி..நல்ல கும்பிட்டுக்குங்க. ஆறு மணிதானே சிங்கம் உருவாகிற நேரம். எல்லாச் சிரமும் போகட்டும்னு இங்க இருந்தே நானும் வேண்டிக்கிறேன்.

மதுரையம்பதி said...

அருமையான படங்களுடன் நரஸிம்ம ஜெயந்தி கொண்டாடியாச்சு. :)

நானும் பதிவிற்காக படங்கள் தேடினேன், ஆனா இந்த நாமக்கல் ஸ்வாமி படம் கிடைக்கல்லையே?, உங்களுக்கு அருள்வதற்காக ஒளிந்திருந்தார் போல :).

இப்போ இங்கே சுட்டுட்டேன் :-)

Kailashi said...

நரசிம்ம ஜெயந்தியன்று நாமக்கல் நரசிம்மர் சேவை செய்து வைத்ததற்க்கு நன்றி வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மௌலி,
நிறையப் படங்கள் கிடைத்தது. இ கலப்பை சரியாக் உழாத்தால் கூடவே அது எந்தப் படம் என்று போட முடியவில்லை
நரசிம்மன் எல்லோருக்கும் சொந்தமானவன். அவன அழைத்தாலே போதுமே,உங்க வீட்டுக்கு வந்திருப்பான்.அப்போ நீங்களும் எழுதி இருக்கீங்களா, இதோ வரேன்:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் கைலாஷி.
நரசிம்மன் பிரபாவம் எவ்வளவு சத்சங்கத்தைச் சேர்க்கிறது பார்த்தீர்களா. நன்றிம்மா.

குமரன் (Kumaran) said...

அருமை அம்மா. தரிசனம் மிக நன்றாக நடந்தது உங்கள் தயவால்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி குமரன்.

எதை எதையோ எழுதிவிட்டு,நம் நரசிம்மனை எழுதாவிட்டால் மனம் கேட்காது போல இருந்தது.
அதனால் பதிந்தேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

நரசிம்ம தரிசனம் அனுமன் தரிசனம் ஆயிற்று. நன்றி.நாமக்கல்லில் ஒரு விசேஷம். ஆஞ்சநேயருடைய கண்களிலிருந்து 90 டிகிரியில் ஒரு நேர்க்கோடு வரைந்தால் அது நேராக சென்று நரசிம்மரின் பாதத்தில் சென்று முடியும். அதாவது அனுமன் எப்பொழுதும் ராமனின் பாத தரிசனம் மட்டும்தான்

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//எதை எதையோ எழுதிவிட்டு,நம் நரசிம்மனை எழுதாவிட்டால் மனம் கேட்காது போல இருந்தது//

அதானே! சரியாச் சொன்னீங்க வல்லீம்மா!

//6 மணிக்கு அங்கே ஆஜராயிருவேன்:-)))//

டீச்சர்! ஆஜர் ஆயாச்சா? :)

//வல்லிசிம்ஹன் said...
ஒண்ணு மட்டும் எப்படி வைக்கிறது துளசி.:0)
ரெண்டு வச்சா நாங்க ரெண்டு பேரும் ஆளுக்கொண்ணு வாயில் போட்டுக்கலாமில்ல:)//

//நான் இன்னொன்னுக்கு எங்கே போவேன்? ஒன்னோடு கோபால் மாரடிப்பது போதாதா? :-)))))//

ஹிஹி!
துளசியை இரண்டிரண்டா தான் வைக்கணும்!
முதல் துளசி அவன் திருமார்புத் தாயாருக்கு!
இரண்டாம் துளசி தான் அவனுக்கு!

நமக்குப் பிரசாதமும் இரண்டாம் துளசி தான் தரப்படும்!
முதல் துளசி அவன் திருமார்பிலேயே தங்கி விடும்!

டீச்சர், இப்போ சொல்லுங்க! :))

VSK said...

ஆனந்த தரிசனம். எங்களூர் நாட்காட்டியில் இன்று வைஷ்ணவ ந்ருஸிம்ஹ ஜெயந்தி எனப் போட்டிருக்கிறது. துளஸியும் நீரும், புஷ்பமும் வீட்டில் இருக்கின்றன. அமர்க்களப்படுத்திறலாம்! நன்றி வல்லியம்மா!

VSK said...

ரெண்டு துளசி இலைல ஒண்ணு அவருக்கு; இன்னொண்ணு எங்களுக்கு! இது எப்டி இருக்கு!!:))

வல்லிசிம்ஹன் said...

வாங்கோ தி.ரா.ச.
இந்த நேரத்தில் கொஞ்சமாவது ஆஸ்வாசம் கிடைத்ததா.
நல்லது நடக்கும் தைரியமாக இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

ம்ம். ரவிக்கு இல்லாத பெருமாளா.
மாதவிப்பந்தலில் ஆனந்த ஊஞ்சலில் தலைவனும் தொண்டர்களும் ஆடும் காட்சியை என்ன என்று சொல்வது.:)

அவசர அவசரமாகக் கிளம்பினார் எங்க வீட்டு லக்ஷ்மிமணாளன். எங்கெ என்றேன். இன்னும் இரண்டு இடம் பாக்கி அமெரிக்காவில். நியுயாக்கும், வட கரொலினாவும் போகணும்னு பறந்தார்:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் விஎஸ்கே சார்.
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ என்று சொல்வார்கள். தி.ரா.ச.ரவி, மௌலி,நீங்கள் எல்லோரும் வந்ததும் நரசிங்கத்துக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.
நீங்கள் சொல்லி இருக்கும் மூன்று பதார்த்தங்களும் மனதுக்கு உகந்தவை ஆயிற்றே, அவனுக்கு.அழகியசிங்கனும் பிராட்டியும் நம்மை ரக்ஷிக்கட்டும்.

ராமலக்ஷ்மி said...

நரசிம்மர் அவதார தினத்தன்று இனி நானும் அவ்வாறே செய்கிறேன் வல்லிம்மா. ஊரில் இல்லாததால் இந்தப் பதிவை மிஸ் பண்ணி விட்டேன். பெங்களூர் மல்லேஸ்வரத்திலில் இருக்கையில் அங்குள்ள பழங்கால நரசிம்மர் கோவிலுக்கு செல்ல ஆரம்பித்து, இப்போது வேறிடம் வந்தபின்னரும் தொடர்ந்து செல்கிறேன். சக்தி வாய்ந்த நரசிம்மர். சன்னதியில் மின் விளக்குகள் போடாமல இருபக்கமும் ஆளுயர அடுக்கு தீபங்கள் ஒளிர லஷ்மியுடன் அருள் பாலித்தபடி இருக்கிறார். ராமர் இலங்கை செல்லும் வழியில் இக்கோவில் எழும்பியுள்ள பாறையில் இளைப்பாறிச் சென்றதாக ராமரின் பாதங்கள் பாறையில் செதுக்கப்பட்டிருக்கும்.

ராமலக்ஷ்மி said...

முதல் 4 பின்னூட்டங்களையும் ரசித்தேன் சிரித்தேன்:)))!

ஜகதீஸ்வரன் said...

Very Nice Post
-jagadeeswaran

ஜகதீஸ்வரன் said...

நாமக்கல் கவிஞர் was study in My school Kattuputher Zamindar...

see my blog http://jagadeesktp.blogspot.com/search/label/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D