About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Wednesday, May 13, 2009

தேர்தல் 2009
தேர்தல் முடிந்துவிட்டது. சரிதான்..
எங்களுக்கும் இன்னும் எங்கள் போல நூற்றுக்கணக்கானவர்களுக்கும் ஓட்டுப் போடுவதற்கான அடையாளம் இருந்தும் , ஓட்டுப் போட முடியவில்லை.
நடிகர் கமலஹாசனுக்குக் கூட அந்த லிஸ்டில் பெயர் இல்லையாம்.
நாங்கள் இதெ
தெருவில், வீட்டில் இருந்து வருகிறோம் கிட்டத்தட்ட 35 வருடங்களாக இருக்கிறோம்.
எங்கள் வரிகளை ஒழுங்காகக் கட்டுகிறோம்.
2006 ஆம் வருடம் எல்லோரையும் போல போட்டோ ஐடிக்காக படம் எடுத்துக் கொண்டு,
பெயர்,விலாசம்,வார்டு எண் எல்லாம் பொறித்த அட்டையும் கொடுக்கப்பட்டு,
அந்தத் தேர்தலில் ஓட்டும் போட்டோம்.
நடுவில் இருந்த மூன்று வருடங்களில் என்ன மாற்றம் வந்தது என்றுதான் தெரியவில்லை.
புதிதாக லிஸ்ட் எடுத்தால் அதில் எங்கள் பெயர்கள் விட்டுப் போன காரணம் என்ன.
புதுலிஸ்டிலும் இருக்கும் பல பேர்களுக்கும் ஓட்டுப் போட முடியவில்லை. அது ஏன்.?
பிறகு எப்படி இந்த கட்டமைப்பில் நம்பிக்கை வரும் தெரியவில்லை:(

எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

20 comments:

துளசி கோபால் said...

அச்சச்சோ'ஓஓஓஓஓஓஓஒ'

ambi said...

உண்மை தான். அரசாங்க வேலை பார்ப்பவர்கள் கவனமாக வேலை செய்யறதில்லை. எல்லாரையும் சொல்லவில்லை. எனக்கு தெரிந்து பெர்சனல் கேர் எடுத்து வேலை செய்யற ஆபிசர்களும் இருக்காங்க.

நம்ம கடமையை (வரி கட்றதை சொன்னேன்) ஒழுங்கா ஆத்திடுவோம். மீதியை தெய்வம் நின்று ...

ராமலக்ஷ்மி said...

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு அத்தனை சிறப்பாக இருக்கிறது:(!

ராஜ நடராஜன் said...

//பிறகு எப்படி இந்த கட்டமைப்பில் நம்பிக்கை வரும் தெரியவில்லை:(//

கணினி மயமாக்கப்படும் தேர்தலின் துவக்க காலத்தில் இப்படி சில குழறுபடிகள் ஏற்படுமென்றே நினைக்கிறேன்.சொந்த வீட்டில் குடியிருப்பவர்களை விட வாடகை வீடு,இடம் மாறுதல் இன்னும் பல பிரச்சினைகள் இருக்கிறது.வெளிநாடுகளில் உள்ள Civil ID Card Database முறையை மட்டும் வைத்துக் கொண்டு ரேஷன் கார்டு முதற்கொண்டு பல ஆவணங்களை காண்பிக்கும் முறை தகர்க்கப் படவேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அச்சச்''சோ'' வா.:)
துளசி. அப்படித்தான் ஆச்சு!!

வல்லிசிம்ஹன் said...

அம்பி உங்களால் ஓட்டு போட முடிந்ததா.

ஒரு தேர்தலிலும் ஓட்டுப் போடாமல் இருந்தது இல்லை.:(
எதிர்த்த வரிசையில் வீடுகளில் கிட்டத்தட்ட 20 பேர் லிஸ்ட்ல இல்லை.

வல்லிசிம்ஹன் said...

ராமலக்ஷ்மி, எல்லா இடங்களிலும் இப்படி நடக்கவில்லை. ராதாகிருஷ்ணா ரோட், தி.நகர் இங்க எல்லாம்
வார்டுகள் லிஸ்ட் சரியாகத்தான் இருந்திருக்கிறது.
பக்கத்து வீட்டில் அம்மாவைத்தவிர மத்தவங்களுக்கு ஓட்டு இருந்தது:))

மதுரையம்பதி said...

அடக் கடவுளே!, :(

முன்னாடியெல்லாம் நாம போகும் முன்னாடியே நம்ம பெயரில் கள்ள ஓட்டுப் போட்டுடுவாங்க...இப்போ இப்படி ஒரு பிரச்சனையா?....நமது அரசு ஊழியர்களுக்கு வேலையில் இருக்கும் சிரத்தைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு?

புதுகைத் தென்றல் said...

:(

தி. ரா. ச.(T.R.C.) said...

வீடு வீடாக சரி பார்க்கிறேன் என்று பத்தாவது கூட பாஸாகாத ஆளுங்களைப் போட்டு அவர்களும் ஒரு தெருவில் வீட்டுக்கு ஒருத்தரை மட்டும் சரி பார்த்ததின் விளைவுதான் இது.திட்டமிடப்பட்ட கள்ளஓட்டுதான் இது.

வல்லிசிம்ஹன் said...

ராஜ நடராஜன்,

சிரத்தையில்லாமல் எடுத்த வேலை எதுவும் சீராக நடப்பதில்லை. இரண்டு நபர்கள் எங்கள் காலனியைக் கணக்கெடுத்திருக்கிறார்கள்.

நாங்கள் வீட்டில் இருக்கும்போதும் இங்க வராமல் கடந்திருக்கிறார்கள்.. பக்கத்துவீட்டில் கீழே இருப்பவர்களுக்கு லிஸ்டில் பெயர் இருக்கிறது. மாடி வீட்டு அம்மாவுக்கு இல்லை:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் மௌலி:)

யாரோ உங்க்க வோட்டைப் போட்டிருக்கிறார்கள் என்றும் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். காலம்:)

வல்லிசிம்ஹன் said...

வாங்க்கப்பா தென்றல். ஓட்டுப் போடமுடிந்ததா!!

வல்லிசிம்ஹன் said...

தி.ர.ச சார்!

அங்க்க இருந்தவர்கள் கிட்ட கேட்டேன், இதே கேள்வியை.

அப்படி ஏதும் நடக்காதும்மா என்று சொல்லிவிட்டார்கள். நம்புவோம்.

கீதா சாம்பசிவம் said...

விஐபி ஆயிட்டீங்க, வாழ்த்துகள். :D
ஆனால் பெரும்பாலும் தென் சென்னையிலே தான் இந்த மாதிரி நடந்திருக்கு. அதையும் கவனிங்க. இது திட்டமிட்டு நடத்தப் பட்ட ஒன்றுதான்! :((((((((((

வல்லிசிம்ஹன் said...

கீதா, வோட் பூடாத வி ஐ பி:)

நீங்க்கா சொல்றது சரிதான். இந்த இடங்க்களில் மட்டும் தான் தகறாரு. திருவல்லிக்கேணியில்

சில இடங்க்களிலி இப்படித்தான் ஆனதாகக் கேள்விப்பட்டேன்.
நம்மளை ராமன் ஆண்டா சரியா ராவணன் ஆண்டா சரியாங்கற நிலைமைக்குத் தள்ளிடுவாங்க

புதுகைத் தென்றல் said...

ஓட்டுப் போடமுடிந்ததா!!//

நீங்க வேற வல்லிம்மா,

ஓட்டை சென்னையில விட்டுட்டு நான் எங்கெங்கோ சுத்திகிட்டு இருக்கேன். :((

வல்லிசிம்ஹன் said...

அடப் பாவமே. எங்க்க பிள்ளைங்களுக்கும் ஓட்டு இங்கதான். இருந்தது. லிஸ்ட் எடுக்கும்போது அவங்க இல்லாததால் இப்பக் கிடையாது.

கிருஷ்ணமூர்த்தி said...

வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் பல குளறுபடிகள் இருப்பதும், அரசு ஊழியர்களின் மெத்தனமும் தெரிந்தது தான். அதை விட, நம்முடைய மெத்தனமும் ஒரு பெரிய கோளாறாக இருப்பது மட்டும் ஏனோ நமக்குத் தெரிவதே இல்லை!

சென்ற ஏப்ரல் பதின்மூன்றாம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்தால் சேர்ப்பதற்கும், புதிய வாக்காளராகப் பதிவு செய்து கொள்வதற்கும் வசதி இருந்ததே, ஏன் அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை? தேர்தல் ஆணையம், நேரே நமது வீட்டுக்கு வந்து, பதிவு செய்யும் என்று சும்மா இருந்து விட்டீர்களா? சேர்க்கப் படுவதும், நீக்கப் படுவதும், தானே நிகழ்ந்து விடுவதில்லையே:-)

பெயர் நீக்கம் என்பது அரசியல் கட்சிகளால், தங்களுக்கு ஒட்டுக் கிடைக்காது என்றெண்ணும் பகுதிகளில் இப்படித் திருவிளையாடல்கள் நடப்பது சகஜம் தான்! அதே போல, பட்டியலைச் சரிபார்க்க வரும் ஊழியரிடம், உங்கள் பக்கத்து வீட்டுக்காரரே கூட, உங்களைப் பற்றிய விவரம் தெரியாது என்று சொல்லி இருக்கலாம்,

இப்படிப் பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமான கோளாறு, உரிய காலத்திலேயே, நமது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா, விடுபட்டிருக்கிறதா என்பதை சரிபார்க்கத் தவறும் நம்மிடமே இருக்கிறது.

வெய்யில் காலம், வெளியில் போக முடியவில்லை என்றால், இணையத்திலேயே நம்முடைய தொகுதியில் வாக்காளர் பட்டியலில், நமது பெயர் இருக்கிறதா இல்லையா என்பதைப் பார்த்து இருக்கலாம், தேவை இருந்தால் படிவம் 6 ஐ இணையதளத்தில் இருந்தே தரவிறக்கம் செய்து ஆக வேண்டியதைப் பார்த்திருக்கலாமே, அம்மா!

சுதந்திரம், ஜனநாயகம் என்பதில், நமக்கும் சில பொறுப்புக்கள் இருக்கிறது, அதை மறந்து விட்டுப் பேசும்போது, இப்படித்தான் இருக்கும், சரிதானா?

வல்லிசிம்ஹன் said...

நாங்கள் யு.எஸ்.ஏ சென்றிருந்த போது 2007ல் வந்து பார்த்துவிட்டு வீடு பூட்டி இருப்பதைப் பார்த்துவிட்டு,உங்க்களுக்கு ,இதுதான் நவசிக்கும் இடம் என்பதை நிரூபணம் செய்யுங்க்கள் என்ற கடிதம் அபனுப்பினார்கள்.
ஆறு மாதம் கழித்து 2008 மே மாதம் நகராட்சிக்குப் போய் நாங்கள் இருப்பதை நிரூபித்துவிட்டு வந்தோம்.

அப்போது வோட்டுப் போடும் உரிமையும் இருப்பதையும் ப்ரூஃப் எடுத்துக் கொண்டுவந்தோம்..
அதனால் இப்போதும் இருப்பதாக நினைத்து விட்டோம். இவ்வளவு நேரம் இணையத்தில் இருக்கும் நேரம் ,நீங்கள் சொல்வது போல லிஸ்டை சரிபார்த்திருக்கலாம். தப்புதான்.
நன்றி கிருஷ்ணமூர்த்தி சார்.
2011க்குள் எங்க்களுக்கு மாற்று லிஸ்டில் இடம் கிடைத்துவிடும் என்றே நம்புகிறேன்.

ஆனால் லிஸ்டில் இடம் இருப்பவ்ரகளுக்கும் மறுக்கப் பட்டிருக்கிறதே!!அவர்கள் கையில் கட்சிக்காரர்கள் கொடுக்கும் ஸ்லிப் இல்லை என்பதால்!