Blog Archive

Wednesday, April 08, 2009

ஏப்ரில் உணர்வுகள்


நாங்கள் அமெரிக்காவில் தங்கியிருந்த நாட்களில் இரண்டு மூன்று சிறு பயணங்கள் மேற்கொண்டோம்.


அதில் ஒன்று மிஸ்ஸௌரி மாகாணத்திலிருக்கும் செயிண்ட் லூயிஸ் நகரம்.


அங்கிருக்கும் ஜெஃபர்ஸன் ஆர்ச் பார்த்துவிட்டுத் திரும்பும்போது,

குதிரைகள் இழுத்துவரும் சுற்றுலா வண்டிகளைப் பார்க்க நேர்ந்ததது. இரண்டு குதிரைகள் உள்ள வண்டியும், ஒரு குதிரை மட்டுமே இழுக்கும் வண்டியையும் பார்த்தோம்.

அதில் ஒரே ஒரு குதிரை, ஈக்கள் அதன் முதுகு மேலே உட்கார, நொந்தது போல் தன் முகத்தை வைத்துக் கொண்டு நின்றது.

நான் அதன் அருகில் போய் அதைத் தடவிக் கொடுக்கலாமா என்று கேட்டதுக்கு மகள் மறுத்துவிட்டாள். சரி தூரத்திலிருந்தே அதனுடன் ஒபேசிப் படம் எடுக்கலாம் என்று காமிராவை அதன் மேல் ஃபோகஸ் செய்ய,

தேர்ந்த கலைஞன் போல உயிரோட்டம் உள்ள ஒரு பார்வை பார்த்தது.

அங்கு எடுத்த படங்களில் இதுவும் ஒன்று.

ஒரு களைத்த குதிரை.:(


எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.


Posted by Picasa

12 comments:

ராமலக்ஷ்மி said...

//எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும். //

அந்த எல்லோரிலும் எல்லா உயிரினங்களும் அடக்கம் எனக் காட்டி விட்டீர்கள்.

நல்லெண்ணங்கள் வாழ வேண்டும்.
உலகெங்கும் உயர்ந்த எண்ணங்கள் ஓங்க வேண்டும்.

படம் அருமை.

வாழ்த்துக்கள் வல்லிம்மா!

ஆயில்யன் said...

//ஒரு களைத்த குதிரை.:(//


வெகு சிலருக்கே தோன்றும் எண்ணம்!

அருமை அம்மா!

Geetha Sambasivam said...

பாவம் குதிரை!

சந்தனமுல்லை said...

படம் அருமை! குதிரை ஏதோ சொல்ல வருவது போல இருக்கிறது!

அமுதா said...

/*ஒரு களைத்த குதிரை.:(*/
:-((

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ராமலக்ஷ்மி.
அந்தக் குதிரை முகத்தில அத்தனை சோர்வு.
வாயில்லாத ஜீவன்.
அதான் போட்டோ எடுத்தேன்.

ஜீவராசிகள் எல்லாம் வாழட்டும் நன்றாக வாழட்டும் நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும்மா ஆயில்யன். நம்ம ஊரு மாடுகள் பாரவண்டி இழுக்கும்போது கஷ்டப்படுமே அந்த நினைவு வந்தது இந்த குதிரையப் பார்த்ததும்.
கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தது!

வல்லிசிம்ஹன் said...

பாவம்தான் கீதா. அது சும்ம நிக்கக் கூடாதுன்னுட்டு மேலேயும் கீழேயும் நடத்திக் கொண்டிருந்தார்கள். அதற்குக் காலில் ஏதோ வேதனை,. மாற்றி மாற்றி வைத்துக் கொண்டிருந்தது.

வல்லிசிம்ஹன் said...

சந்தன முல்லை. உங்களுக்கும் அப்படித்தோன்றியதா.
இன்னும் கொஞ்சம் க்ளோசப் எடுத்திருக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்பா அமுதா. நிஜமாவே களைத்து ஓய்வுக்காக நின்றது. அந்த நேரம் அதை ஓட்டுபவர் சக சவாரிக்காரரோடு பேசப் போனார். கொஞ்சம் தண்ணீர் ஏதாவது கொடுத்திருக்கலாமோ என்னவோ??

திவாண்ணா said...

வானம் பின்புலமா இல்லாம மரங்களா இருக்க கொஞ்சம் நகர்ந்து நின்னு இருந்தா குதிரை மேலே இன்னும் வெளிச்சம் இருந்து இருக்குமோ?

வல்லிசிம்ஹன் said...

எடுத்து இருக்கலாம் வாசுதேவன்,

எனக்கே களைப்பாக இருந்தது.

குதிரை நின்ற இடம் ஒரு சாலையில். அதற்கு இடது பக்கம் போய் போட்டோ எடுத்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும்.
போன வருஷம் அக்டோபர் மாதம் இந்த வருஷம் ஏப்ரலை நினைக்கலை:))))