About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Sunday, April 05, 2009

நினைத்ததைத் தொடர.....

கங்கை நதியைப் பற்றி எழுதுவதோ,
அது களங்கப்படுவதை விவரிப்பதோ, இந்நதியைச் சுத்தப் படுத்த ஆரம்பிக்கப் பட்ட இயக்கம் அப்படியே நிற்பதோ
பெரிய ,அகண்ட அழுக்கடைந்த காவியம் ஆகிவிட்டது.
ஓடும் நதிக்கு அழுக்கு கிடையாது என்பது பழைய வரி.

கங்கை நதி சீர்குலைவதை ஒவ்வொரு இடத்திலும் பதிக்கப் பட்ட வார்த்தைகளிலும்
படிக்க நேர்ந்தது.
மனம் சோர்ந்த போதுதான் இந்த ஆங்கிலேயர் வில்லியம் டார்லிம்பிள் எடுத்த குறும்படத்தைப் பார்த்தேன்.


அதுவே போதும். இனிமேல் கங்கையை நோக்கிப் பயணம் வேண்டுமா என்ற நினைப்பே மேலிடுகிறது.
இவ்வளவு கோடி மக்களை வசீகரிக்கும் கங்கையம்மா, இனி நீயே உன்னைப் புனிதப் படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.


அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல நீயும் உன்னை இகழ்வாரையும் தாங்கிக்கொண்டு இன்னும் சளைக்காமல் ஓடுகிறாய்.


உன்னைத் தூய்மையாக்க இன்னுமொரு


சாணக்கியனோ,அசோகனோ,சந்திரகுப்தனோ
தென்னாட்டிலிருந்து உன்னைச் சந்திக்க வந்த சேரனோ சோழனோ மறு பிறவி எடுத்தால் நீயும் வளம் பெறுவாய்.
இது எனக்குக் கிடைத்த சிறு செய்திகள் மூலம் நான் பதிய வந்த விஷயம்.
குறையிருக்கச் சாத்தியக் கூறுகள் ஏராளம்.
கங்கை அன்னை வாழ்க.

12 comments:

ராமலக்ஷ்மி said...

கங்கை அன்னை அவள் மங்கையானதாலே தாங்கி நிற்கிறாள் பொறுமையாய்.

//சாணக்கியனோ,அசோகனோ,சந்திரகுப்தனோ
தென்னாட்டிலிருந்து உன்னைச் சந்திக்க வந்த சேரனோ சோழனோ மறு பிறவி எடுத்தால் நீயும் வளம் பெறுவாய்.//

அரசு மனம் வைத்தால் இந்த அரசர்கள் மறுபிறவி எடுக்கக் காத்திராமல் செய்யலாம். செய்வார்களா :( ?

ஆயில்யன் said...

அகண்ட நதியாக பிரம்மிக்கவைத்துக்கொண்டிருக்கும் கங்கை பலரையும் புனிதப்படுத்தி தான் கெட்டுப்போயிருக்கிறது - புனிதப்படுத்தப்பட்டவர்களால் கெட்டுப்போயிருக்கிறது - இயற்கையினை நாசம் செய்துக்கொண்டிருக்கிறோம் என்பதற்கு இன்னுமோர் எ.கா :(

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,
எத்தனைஇ சத்தியமான வார்த்தை. அவ்ளொரு மங்கை.
சிவனின் சடாமுடியால் மட்டுமே நிறுத்தப்படக்கூடிய்ய சக்தி படைத்தவள்.
அவளுடைய ஆக்ரோஷத்தைப் பார்க்கும் போது மனம் பூரிக்கிறது. அவள் இத்தனை மானுடர்களின் கழிவுகளையும் ஏற்றுக் கொண்டு மறு சொல் சொல்லாமல் ஓடுகிறாள்.

நான் அசோகனையும் சோழனையும் அழைத்தது அவர்கள் செயல் வீரர்கள் என்ற ஒரே காரணத்துக்காக.
முயன்று தோற்றவர்கள் அநேகமாக இருந்தாலும் , சிவப்பு நாடா தன்னார்வலர்களைத் தடுத்தாதாகவும் படித்தேன்.
நன்றிம்மா.

மாதேவி said...

"உன்னை இகழ்வாரையும் தாங்கிக்கொண்டு இன்னும் சளைக்காமல் ஓடுகிறாய்."

மக்களிடம் விழிப்புணர்வு வரும்வரை இவற்றைத் தடுக்க முடியாது.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஆயில்யன்.
அதுதான் அங்கே சோகம். கங்க மாதா என்கிறார்கள். பின் எப்படி இந்த அசுத்ததைச் செய்ய மனம்வருகிறது:((
சொல்ல எத்தனயோ இருக்கிறது.

இப்படிப் பார்த்துக் கொண்டுவந்தால் குமரிமுனை வரை அழுக்குதான் தெரியுமோ.

துளசி கோபால் said...

அந்தக் குறும்படத்தின் சுட்டி எங்கே என்று சுட்டுக.

நாகை சிவா said...

நியாயமான கவலை!

திவா said...

சாதாரணமாக 200 கஜம் ஒரு நதி ஓடிவிட்டால் தன்னத்தானே சுத்தம் செய்து கொள்கிறது என்பது சாத்திரம். இது அறிவியலுடனும் ஒத்துப்போகிறது.
ஆனால் நாம் ஒவ்வொரு நகரை அது கடக்கும்போது கொண்டு கொட்டும் கழிவுகள் ஏராளம் ஏராளம். குறிப்பாக கான்பூர் சாயப்பட்டரைகள்.
வாரனாசிகிட்டே வரும்போது குளீக்க பாதுகாப்பான லெவல்லேந்து 120 மடங்கு அதிக அசுத்தம் இருக்கு! கங்கை கரையில் வசிக்கிற மூணு கோடி மக்கள் செய்யற அசுத்தம் லோடு தாங்கலை!
:-((
அரசுக்கு இத பத்தி எல்லாம் என்ன கவலை? பணம் சுருட்ட முடிஞ்சதை சுருட்டிகிட்டு இருக்காங்க!
சேது சமுத்திரம் மாதிரி கான்ட்ராக்ட் கிடைக்கும்னா நாளைக்கே நடந்துடும்!

வல்லிசிம்ஹன் said...

வாங்க மாதேவி. உண்மை.

ஒரு உண்மையான அக்கறை வரக் காத்திருக்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

துளசி:)))

குறும்படம்னு தேடிப் பார்த்தோம்.யூ டியூபில் கிடைக்கலை. இப்பத்தான் ஃபாக்ஸ் ஹிஸ்டரி சானலுக்கே வந்து இருக்கு.

Shiva's Matted Locks''

அந்த டாகுமெண்டரியோட பேரு.
உங்க ஊரில வருமா??

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் சிவா. நாங்க காசிக்கு,கயாக்குப் போகணும்னு ரொம்ப நாளா ஆசை வச்சிருந்தோம்.

போகவும் செய்வோம்னு தான் நினைக்கிறேன்.:)

என்ன, காசியா,ஹரித்வாரா,ரிஷிகேசா அப்படீன்னு முடிவு செய்ய வேணும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் வாசுதேவன்.
கங்கையில் சுற்றுப்புறத் தூய்மைன்னு யூடியூபில் போட்டால் காணக்கிடைக்கின்ற காட்சிகள் ரொம்பவே அதிர்ச்சியாக இருக்கு.
அதுதான் நான் சொல்ல நினைத்தேன். சேதுவில் பணம் போடத் தயாரா இருக்காங்களே.
அடிப்படைத் தேவையான தண்ணீரைக் கவனிக்காம விடறாங்களேன்னு.
நாணய விஷயமாச்சே.
வெள்ளியப்பன் சம்பந்தப்பட்டால் நடக்குமோ என்னவோ!!