Blog Archive

Thursday, April 30, 2009

ஒரு தங்க மரம் பூக்கும் நேரம்



































வீட்டில் உள்ள செடிகளொ மரங்களோ பூக்கும்போதும் காய்கள் காய்க்கும்போதும் கிடைக்கு இன்பம் தனிதான்.
இறைவன் எத்தனை வண்ணங்களை அள்ளித் தெளிக்கிறான்.
செம்பருத்தி, நித்திய மல்லி
டெம்பிள் ட்ரீ என்று பலவிதத்தில் பூகள் பூத்த வண்ணம் இருக்கின்றன.
ஆனால் இங்கே பூத்திருக்கும் தங்கமரம் என்று அழைக்கப் படும் கேசியா ஃபிஸ்டுல்லா
 
போன வருடன் சிறிய மரமாக இருந்தது.
சென்ற வருடம் அதிக மழை என்று கேள்விப்பட்டோம். நாங்கள் அந்தச் சமயம் சென்னையில் இல்லை.
இந்த மரங்கள் அத்தனையும் தண்ணீரை உள்வாங்கிக் கொண்டு
பூக்களாகச் சொரிகின்றன இப்போது.
நன்மை சிறிதளவு கிடைத்தால் கூட இன்னும் பல மடங்காக த் திருப்பித் தரும் இயற்கை அன்னையும்,
எதையுமே எதிர்பாராமல்
 
அன்பு பொழியும் அன்னையும் எப்பவுமே ஏமாற்றுவது இல்லை.
ஏமாற்ற நினைப்பதும் இல்லை.


எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.







Posted by Picasa

Monday, April 27, 2009

நீங்க .........????

http://naachiyaar.blogspot.com/2009/04/blog-post_25.html
இதன் தொடர்ச்சி இந்தப் பதிவு....


சரி ஒரு வழியாப் பசங்களுக்கும் பெண்ணுக்கும் திருமணங்கள் நடந்து முடிந்ததும் ,நமக்கு'' நீ யாரு...''.கேள்வி அவ்வளவாக எழாது என்று நினைத்தேன்.

அப்படியெல்லாம் நிற்குமா.
நாங்களும் பசங்க இருக்கிற ஊருக்குப் போக ஆரம்பித்தோம்.
அங்கே ஏற்கனவே இந்தச் சிநேகிதப் பசங்க போய் செட்டிலாயிருக்காங்க.
முதல் குழப்பம் பார்க்கலாமா.!
மும்பையில் போய் இறங்கியதும், வீட்டில் எல்லாம் சரியாக இருக்கிறதா, வேறு ஏதாவது வாங்கி வரணுமா என்று கேட்டபடி வந்த மனிதரைப்
பார்த்தால், ஏதோ தெரிந்த மாதிரி இருக்கிறதேஎன்று நினைத்தபடி,
அவரை வரவேற்று,'' வசந்தன் தானே நீ''
விவேகாவில ரேஸ் எல்லாம் ஓடுவியே.கல்ச்சுரல்ஸ்ல மோகன் பாட்டுக்கள் எல்லாம் பாடுவியே'' என்றதும்
அவன் சிரித்துவிட்டான்...
இல்லைம்மா, நீங்க என்னைப் பார்த்ததே இல்லை. ''பார்ன் அண்ட் ப்ராட் அப்
இன் மும்பை.''
என்றது அந்தப் பையன்.
எங்க பையனோட ஃப்ரண்ட் ஒருத்தன் இங்க இருக்கான் அவந்தானோ
என்று நினைத்தேன்.''என்றேன்.
மேற்கொண்டு அவனிடம் ஒன்றும் பேசாமல் இவர் தடுத்தாட் கொண்டார்.


சாயந்திரம் பையன் வந்ததும் அப்பாவுக்கும் மகனுக்கும் சிரிக்க விஷயம் கிடைத்தது.
அதன் பிறகு நிஜ வசந்தனே வந்த போது அடையாளமே தெரியவில்லை.
1988ல் பார்த்த முகம் 96ஆம் வருடத்துக்குள் மாறிவிட்டிருந்தது.
தலையில் வழுக்கை. அவனும் முன் பின் சொல்லாமல் வந்தான்.
''
''
அம்மா அப்பா எப்படி இருக்கிறீர்கள் மும்பையில் இன்னும் எவ்வளவு நாள் இருக்கப் போகிறீர்கள். நான் பக்கத்துத் தெருவில் இருக்கிறேன்.
இன்று ரயிலில் பையனைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன்'' இன்னும் ''அதே மாதிரி டிவியை மியூட்டிலயும், ரேடியோவில பாட்டுக் கேக்கறதுமா இருக்கீங்களான்னு ''வேற சிரித்ததும், ஆஹா இவந்தான் வசந்தன் என்று புரிந்தது.

அவன் நிறைய ஏமாந்திருக்கிறான்.
ரேடியோவில் ஏதாவது பாடும். தொலைக்காட்சியில் ஏதோ படம் போய்க் கொண்டிருக்கும். '''அம்மா எப்படி இந்தப் படத்தில அந்தப் பாட்டு வருது? என்று, வெறித்தபடி இருப்பான்.
அப்புறமாகப் பக்கத்தில் பாடிக் கொண்டிருந்த கையடக்க ட்ரான்சிஸ்டரைக் காண்பித்ததும் ,
ஏமாந்து போயிட்டேனே என்பான்:))


சிலபல குளறுபடிகள் இப்ப வேண்டாம். பெரியதாக நான் செய்த கோளாறைப் பார்க்கலாம்:)
ஸ்விட்சர்லாண்டில் போய் இறங்கினோம்.
அங்கும் அவன் சிநேகிதர்கள்சிலர் ஒரு நாலைந்து பேர்,நாங்கள் சென்றுகொண்டிருந்த வண்டியில் வந்துகொண்டிருந்தார்கள்.
எனக்கு மற்றவர்களைப் பற்றி அதிகம் தெரியாது. அவர்களில் ஒருத்தருக்கு அப்பதான் மணமாகியிருந்தது. இன்னோருவருக்கு குழந்தைகள் உண்டு என்று தெரியும்.

இருவர் முகங்களும் அறிமுகமான பழகிய முகங்களாகவே இருந்தன.
மருமகள் என்னிடம் ஒருவரைக் காட்டி அவர் இவர்தாம்மா மனோஜ்கஷ்யப் என்றதும்,
நானும் அவருக்கு ஒரு ஹலோ சொல்லிவிட்டு'' ஓஹோ நீங்கள் எங்க வீட்டிற்கு வந்திருக்கிறீர்களே'
உங்க மாம்னார் , கஷாயம் ச்யவனப்ராசம் எல்லாம் கொண்டு கொடுத்ததை எடுத்துக் கொள்ள வந்தீர்கள் இல்லையா? குழந்தைகள் எப்படி இருக்கிறீர்கள் என்று (ஆங்கிலத்தில்தான்) கேட்டதும்.
அவர் முகம் சிவந்து விட்டது..

இதற்குள் எங்களுக்கு எதிர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சின்னவன் திரும்பிப் பார்க்க, சரி அம்மா பேசிட்டார் போல இருக்கு என்று பக்கத்தில் வந்தான். என்னம்மா என்ன கேட்ட அவர் முகம் இப்படி சிவந்து போச்சு, என்று கேட்க,மருமகள் விவரம் அளிக்க ,''
''சாரி மனோஜ், ஷி மஸ்ட் ஹேவ் கன்ஃபுயூஸ்ட் யூ வித் அதர் கஷ்யப்''''
என்றபடி என்னைப் பார்த்தான். என்னாச்சுடா என்றால், இப்போது அவன் முகம் சிவந்தது. சிப்பை அடக்க முடியாமல்.

ஐய்யோ அம்மா நீ பார்த்தது ,நம்ம வீட்டுக்கு வந்தது பரத்வாஜ் கஷ்யப்.
இவனுக்கு இன்னும் ஆங்கிலமே சரியா வராது. வேற ஊர்க்காரன். இவனிடம் குழந்தை பொண்டாட்டின்னு சொன்னேனா.என்ன அர்த்தம்.
அவனுக்கு இன்னும் கல்யாணமே ஆகலைம்மா'' என்றான்.

அந்தப் பையன் என்ன நினைத்ததோ அடுத்த ஸ்டாப்பில இறங்கிடுத்து.
அது அவன் இறங்க வேண்டிய இடமாக இருக்கலாம். ஆனால்
தந்தையும் தனயனுமாக என்னைப் பார்த்து'' பார் நீ பண்ண கலாட்டாவில
அவன் அம்போன்னு தெரியாத இடத்தில இறங்கிட்டான். ஏம்மா உனக்கு இந்தப் பாடு''
என்று சிரிப்பாகச் சிரிக்கிறார்கள். ''எனக்கு அவன் முகத்தைப் பார்த்ததிலிருந்து,
அதில இருந்த திகிலைப் பார்த்து விபரீதமாஏதோ செய்திருப்பேன்னு தெரியும்.''
பாவம் அவனைச் சாப்பிடக் கூப்பிடலாம்னு இருந்தேன். இப்போ கூப்பிட்டாலும் வர மாட்டான்.''
எனக்கென்னடா தெரியும் எல்லாம் மகரிஷிகள் பேரை வைத்துக் கொண்டு ஒரே
மாதிரி வேற இருக்கிறார்கள். என்றேன்.:)

என்னைப் பற்றித் தெரிந்த மற்ற சினேகிதர்கள் வீட்டுக்கு வரும்போதே 'அம்மா நாந்தான் இவன். அவனில்லை'' என்று சொல்லிக் கொண்டேதான் வருவர்கள்:)

















எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Monday, April 20, 2009

ஒரு குறிஞ்சித் தோட்டம்














































இந்தத் தோட்டத்துக்குச் சொந்தக்காரர் அனுமதியுடந்தான் படங்கள் பிரசுரிக்கப் படுகின்றன.


இதே இடம் 1983ல் எப்படி இருந்தது என்று யோசித்தால்..

ஒரு எலுமிச்சை மரம்.


இடமோ சிறியது.

நான்கு மல்லிச் செடி, இரண்டு தென்னை,ஒரு வாழை. அவ்வளவே.


பசுமைப் புரட்சி செய்கிறேன் என்றெல்லாம் சொல்லி ஆரம்பிக்கவில்லை.
தனியாளாய் கடப்பாறையை எடுத்துப் பாடுபட ஆரம்பித்து இந்த 26 வருடங்களில் இத்தனை நூற்றுக்கணக்கான செடிகளாக ,வித விதமான தாவரங்கள், ஒரு மினி ஹார்ட்டிகல்சுரல் சொசைட்டியே வீட்டில் ஏற்படுத்தி இருக்கிறார் எங்கள் சிங்கம்.
இப்போது மேலும் மேலும் கவனம் செலுத்த முடியாத சமயத்தில் அந்தச் செடிக்குழந்தைகளை வரும் விருந்தினருக்கும் நர்சரிகளுக்கும் கொண்டு போய்க் கொடுத்து வருகிறார்.
மிச்சம் இருக்கும் செடிகளில் சிலவற்றை உங்கள் பார்வைக்கு வைத்தேன்.






எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.









Posted by Picasa

Monday, April 13, 2009

சித்திரைத் தமிழ் நாள் புத்தாண்டு வாழ்த்துகள்

தாயே உலக மாதா நீயும்
பாண்டுரங்கனும் ருக்மணியும்


ஸ்ரீகற்பகம் உடனுறை கபாலியும்



தீவினைகளை முறியடித்த ஸ்ரீராமனும் சீதாதேவியும்




எப்போதும் வணங்கும் துர்க்காமாதாவும்
எல்லோருக்கும் நன்மைகள் புரிந்து,இன்ப மழையில் எம்மை நீராட்டி,
இது போல் இன்னும் இனிய புத்தாண்டுகள் மேலும் மேலும் சிறப்பாக நம்மிடையே நிகழ,
உங்கள் எல்லோரையும் பிராத்திக்கிறோம்.
பதிவர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்.














எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Thursday, April 09, 2009

415,தம்பியின் கவிதைகள்


வலைக்கும் தமிழ்மணத்துக்கும் வந்து மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டது.
பின்ன நிற்குமா காலம்:)
தம்பி ரங்கன் பாட்டுகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவன்.
அதில் கொஞ்சமே தத்துவமும் சோகமும் இழையோடும்போது,
வேண்டாண்டா.
சந்தோஷமா எழுது.
என்று புத்தி சொல்லுவேன். நமக்குத்தான் புத்தி சொல்வது மிகவும் பிடித்த விஷயமாச்சே.
அவன் ஒருவன் வசமாக மாட்டிக் கொள்வான். ஆம் ஆமா... என்று தலையாட்டிவிட்டு, மீண்டும் அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் என்று பாட ஆரம்பிப்பான்.:)
போடா ஒன்னை ஒண்ணும் திருத்த முடியாது என்று விடுவேன்.
ஆனால் ஒன்று,, பாட்டில் தான் சோகம் காட்டுவான். உண்மையில் அவன் அலுவலகத்தில் அவனை அவனுக்கு சிரிப்பு (கடி)மன்னன் என்றே பெயர்.
அவனுக்கு இந்தப் பதிவு சம்ர்ப்பணம்.
இதோ அவன் பாட்டு.
********************************
பாட்டு ஒன்று எழுத முற்பட்டேன்..
பாட்டில் இலக்கணம் தேவை என்றனர்
யாப்பு இலக்கணம் கற்க முற்பட்டேன்
மூப்பெனக்கு இலக்கணமிட்டது..தெரிந்தது
கருத்தோடு கவிதை எழுத
கவிதையில் இனிமை இல்லை.
சீர் அமைத்து எழுதச்
சீராக அதில் ஏதுமில்லை.
புதுக்கவிதை புனையலாம் என்றால்
எழுந்தது அதிலும் குழப்பங்கள்
ஆசையின் விளைவில் எழுந்த நினைவுகளில்
ஓசையின் இனிமை ஒதுங்கியது
கவிஞனின் கருத்துக்கும் இலக்கணம் தேவை
அவன் எழுத்துக்கும் இலக்கணம் தேவை.
கருத்துக்கும் எழுத்துக்கும் இசை அமைந்தால்
கவிஞனின் தமிழுக்கு இயல் மகுடம்!!
பாடல்..
நா.ரங்கன்.


எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Wednesday, April 08, 2009

ஆண்டாள் கல்யாண உத்திரம்

ஆண்டாள் திருமஞ்சனம்
அலங்காரம் செய்தாச்சு.

கோளரிமாதவனும் வந்துவிட்டான்


மார்கழிப் பாவை




அவள் குடியிருக்கும் கோவில்











ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!!
எங்கள் ஆண்டாளும் ரங்க மன்னாரை மணந்தாளே.
இந்தப் பங்குனி உத்திர நன்னாளில் உங்களுடன்
மற்ற எல்லாத் திருமணங்களுடனும்
எங்கள் ஆண்டாள் வடபத்ரசாயி திருமணத்தைப் பார்ப்பதில் எனக்கு
மிகுந்த சந்தோஷம்.








ஏப்ரில் உணர்வுகள்


நாங்கள் அமெரிக்காவில் தங்கியிருந்த நாட்களில் இரண்டு மூன்று சிறு பயணங்கள் மேற்கொண்டோம்.


அதில் ஒன்று மிஸ்ஸௌரி மாகாணத்திலிருக்கும் செயிண்ட் லூயிஸ் நகரம்.


அங்கிருக்கும் ஜெஃபர்ஸன் ஆர்ச் பார்த்துவிட்டுத் திரும்பும்போது,

குதிரைகள் இழுத்துவரும் சுற்றுலா வண்டிகளைப் பார்க்க நேர்ந்ததது. இரண்டு குதிரைகள் உள்ள வண்டியும், ஒரு குதிரை மட்டுமே இழுக்கும் வண்டியையும் பார்த்தோம்.

அதில் ஒரே ஒரு குதிரை, ஈக்கள் அதன் முதுகு மேலே உட்கார, நொந்தது போல் தன் முகத்தை வைத்துக் கொண்டு நின்றது.

நான் அதன் அருகில் போய் அதைத் தடவிக் கொடுக்கலாமா என்று கேட்டதுக்கு மகள் மறுத்துவிட்டாள். சரி தூரத்திலிருந்தே அதனுடன் ஒபேசிப் படம் எடுக்கலாம் என்று காமிராவை அதன் மேல் ஃபோகஸ் செய்ய,

தேர்ந்த கலைஞன் போல உயிரோட்டம் உள்ள ஒரு பார்வை பார்த்தது.

அங்கு எடுத்த படங்களில் இதுவும் ஒன்று.

ஒரு களைத்த குதிரை.:(


எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.


Posted by Picasa

Tuesday, April 07, 2009

மீனாட்சி சுந்தரேஸ்வரர்களுக்கும் மயிலை கபாலீஸ்வர கற்பகம்பாளுக்கும் விண்ணப்பங்கள்

கற்பகமும் கபாலியும்
அறுபத்துமூவர்

மீநாட்சியும் சொக்கனும் ரிஷபாரூடராக.....




ஆண்டாள் தேரில் அரங்கனுடன்





ஒளிகாட்டும் கோபுரங்கள் மதுரையில்






கோபுர விலாசம் மதுரை.

இன்று அறுபத்துமூவர் வெகு உற்சாகமாக நடக்கிறது. திரும்பூம் இடமெல்லாம் தண்ணீர்ப்பந்தல். அண்டாக்களில் மோரும், கதம்ப சாதமும்,புளிசாதமுமாக வந்தவர்களுக்கெல்லாம் விநியோகம்.
அழகு அழகாய் உடை உடுத்தி பிக்ஷாடன சாமியைப் பார்க்கப் போகும்
கூட்டம்.
அறுபத்துமூவர் கும்பலிலும் தொலையாமல், பலூன்,
விசில்,டமாரம் இப்படிப் புதிது புதிதாக விளயாட்டுப் பொருட்களும் வாங்கிக்கொண்டு இப்போதுதான் கும்பல் சேரா ஆரம்பிச்சிருக்கு.
நம் வீட்டு வாசலில் நாற்காலி போட்டு உட்கார்ந்தால்,
வீசும் காற்றுக் கூட சிவனையும் அம்பாளையும் ,அறுபத்துமூன்று நாயன்மார்களையும் பார்த்த சந்தோஷத்தில்,
சத்தமாக வீசுகிறது.
இந்த உற்சாகக் கொண்டாட்டங்கள் பங்குனி உத்திரக் கல்யாணத்துடன் பூர்த்தியாகின்றன.
இந்த நேரம் நாளை மதுரையில் மீனாட்சியும் கும்பாபிஷேகம் கண்டு அருளுவாள்.பொதிகையில் பார்க்கக் காத்திருக்கிறோம்.
இவர்கள் எல்லோரிடமும் நாம் வேண்டி விண்ணப்பிப்பது எல்லாம்
நல்ல அரசு நமக்கு அமைய வேண்டும் என்பதுதான்.
மக்கள் நலம் காத்து நம் முன்னோர் விட்டுச் சென்றிரூக்கும் பொக்கிஷங்களைப் பாதுகாக்கவும்,
நாட்டின் அரசை நம்பி வாழும் மக்களை ஆபத்தில்லாமல் காப்பாற்றவும்,
இளைய தலைமுறை
ஆரோக்கியமான சூழலில் வளரவும் இந்தத் தெய்வங்கள் மனம் வைக்கட்டும்.





Sunday, April 05, 2009

நினைத்ததைத் தொடர.....

கங்கை நதியைப் பற்றி எழுதுவதோ,
அது களங்கப்படுவதை விவரிப்பதோ, இந்நதியைச் சுத்தப் படுத்த ஆரம்பிக்கப் பட்ட இயக்கம் அப்படியே நிற்பதோ
பெரிய ,அகண்ட அழுக்கடைந்த காவியம் ஆகிவிட்டது.
ஓடும் நதிக்கு அழுக்கு கிடையாது என்பது பழைய வரி.

கங்கை நதி சீர்குலைவதை ஒவ்வொரு இடத்திலும் பதிக்கப் பட்ட வார்த்தைகளிலும்
படிக்க நேர்ந்தது.
மனம் சோர்ந்த போதுதான் இந்த ஆங்கிலேயர் வில்லியம் டார்லிம்பிள் எடுத்த குறும்படத்தைப் பார்த்தேன்.


அதுவே போதும். இனிமேல் கங்கையை நோக்கிப் பயணம் வேண்டுமா என்ற நினைப்பே மேலிடுகிறது.
இவ்வளவு கோடி மக்களை வசீகரிக்கும் கங்கையம்மா, இனி நீயே உன்னைப் புனிதப் படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.


அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல நீயும் உன்னை இகழ்வாரையும் தாங்கிக்கொண்டு இன்னும் சளைக்காமல் ஓடுகிறாய்.


உன்னைத் தூய்மையாக்க இன்னுமொரு


சாணக்கியனோ,அசோகனோ,சந்திரகுப்தனோ
தென்னாட்டிலிருந்து உன்னைச் சந்திக்க வந்த சேரனோ சோழனோ மறு பிறவி எடுத்தால் நீயும் வளம் பெறுவாய்.
இது எனக்குக் கிடைத்த சிறு செய்திகள் மூலம் நான் பதிய வந்த விஷயம்.
குறையிருக்கச் சாத்தியக் கூறுகள் ஏராளம்.
கங்கை அன்னை வாழ்க.

Thursday, April 02, 2009

நினைத்தது நடக்கும்

ரைன் நதி
கங்கை உற்பத்தியாகும்,தோன்றும் இடம்


கங்கையில் ஒரு பாலம்



நயாகரா வெள்ளம்.

சமீபத்தில் வந்த திரைப்படம் ஒன்றில் காசி என்னும் வாராணசியின் உண்மை நிலைகள் தத்ரூபமாகச் சித்தரிக்கப்பட்டு இருந்தன.
இன்னும் பல ஆவணப்படங்கள் டிஸ்கவரி தொலைக்காட்சி சானலில் பார்த்தும் கேட்டும் தான் வருகிறோம்.
கங்கை நதியின் அவலங்களை விளக்கும் பழைய செய்தி ஒன்றையும் அதைத் தொடர்ந்து கங்கை நீரைக் காப்பாற்றும், சுத்திகரிக்கும் குழுக்கள்
அறிமுகப் படுத்தப்பட்டு
அவர்களின் செயல்பாடுகளும் விளக்கப்பட்டன.

நம்ம வீட்டு எஜமானர் 16 வயதிலியே தான் புதுடில்லி சுற்றுலாவின்போது,
கங்கையில் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டதாகவும் , அப்போது பல சடலங்களைச் சந்திக்க வேண்டிய பரிதாப நிலை இருந்ததாகவும் சொன்னார்.
உலகம் பூராவும் தண்ணீருக்கு வேண்டிய ஏற்பாடுகள் குடிக்கவும், மற்ற பயன்களுக்கும் நன்றாகக் கவனித்துச் செழுமையாகத் திட்டங்களை நடத்திக் கொண்டும் இருக்கிறார்கள்.

பாதுகாக்கப்பட்ட தண்ணீர் எல்லோருக்கும் கிடைக்கிறது.
மூன்றாவது உலகம் என்று சொல்லப்படும், ஆசியா,ஆப்பிரிக்காவின் சில நாடுகளில்
இன்னும் குடிதண்ணீருக்கு அவதிப்படும் மக்கள் இருக்கிறார்கள்.
ஐரோப்பாவின் சில நாடுகளில் தண்ணீர் கரைபுரண்டோடும் அழகையும்,
பசுமையையும் பார்த்து என்னால் ரசிக்க முடிந்த அளவு மகிழ்ச்சி அடைய முடியவில்லை. இந்தத் தண்ணீர் நம் ஊரில் இல்லையே என்ற வருத்தமே மேலிடும்.


இந்தச் சமுதாயச் சீரழிவு,குடிதண்ணீரில் ஆரம்பிக்கிறதா.
நீர் இருக்கும் இடத்தில் தான் நாகரீகங்கள்
நிலை பெற்று உயர்வடைய ஆரம்பித்தன.
அந்த நதிகளுக்கெல்லாம் ஏற்பாடாத வீழ்ச்சி கங்கைக்கு மட்டும் ஏன் ஏற்பட்டது... புரியவில்லை. யாரையும் குறை சொல்லிப் பயனும் இல்லை. இது உணர்ச்சிகள் ,நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட விஷயமாகி விட்டது.

இந்த நிலையில் தான் நேற்று ஃபாக்ஸ் ஹிஸ்டரி சானலில்
புகழ்பெற்ற எழுத்தாளர், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் வில்லியம் டார்லிம்பிள் என்பவரின்
தொலைக்கட்சிக் குறும்படத்தைப் பார்க்க நேர்ந்தது.
நான் பார்த்த படத்திற்கு லார்ட் சிவா'ஸ் மாட்டட் லாக்ஸ்
(SIVA'S MATTED LOCKS) என்று பெயர் கொடுக்கப் பட்டு இருந்தது.
தொடரும்.