Blog Archive

Friday, March 13, 2009

மார்ச் புகைப்படம்..போட்டிக்கு


பெசண்ட் நகர் கடற்கரையில் ஒரு மாலை நேரம்.

தோழிகளுடன் அரட்டை.

காமிராவும் நானும் இணைபிரியாத நண்பர்கள் ஆகிவிட்டோம்.

என் நண்பிகளும் அப்படியே.

அதில் இந்தப் படம் தோதாகப் போட்டிக்கு அமைந்தது;0)

உங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லுங்கள் நட்புகளே.

Posted by Picasa

28 comments:

Geetha Sambasivam said...

ஒரு உலகப் படம் போல மேகங்கள், அதில் இந்தியா போன்ற உருவகம், அருமையாப் பிடிச்சிருக்கீங்க, கை தேர்ந்த புகைப்பட நிபுணராயிட்டு வரீங்க. வாழ்த்துகள்/
\
மீ த ஃப்ர்ஷ்டு???

ராமலக்ஷ்மி said...

தோதாக அமைந்த படம் தோற்காமல் வெல்லவும் போகிறது. அத்தனை அருமை. வாழ்த்துக்கள் வல்லிம்மா!

அபி அப்பா said...

வல்லிம்மா! சூப்பர்!

ஆயில்யன் said...

//இந்தப் படம் தோதாகப் போட்டிக்கு அமைந்தது;0)//

கரீக்ட்டு...!

இந்த படம் தோதாக போட்டிக்கு அமைந்திருக்கிறது :))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா.
வெற்றி கொடுக்குமான்னு தெரியவில்லை.
ஏனெனில் ஸ்பெஷல் கறுப்பு வெள்ளை காமிராவில் எடுத்த படம் இல்லை.
இரண்டு இல்லை வந்திருக்கிறது பார்த்தீர்கள பதிலில்:)
பார்க்கலாம்.நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ராமலக்ஷ்மி. படம் அழகுதான். பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்த மாதிரி பின்னூட்டம் வரணும்னே பதிவு போட்டேன்:0)

வல்லிசிம்ஹன் said...

அபி அப்பா, வாங்க.

ரொம்ப நாளாச்சே,

ஏதாவது கவன ஈர்ப்புப் படம் போடலாம்னு தான் இந்தப் படத்தைப் பதிவேற்றினேன்:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கம்மா ஆயில்யன்,

தோதாக அமைந்தது.

வெற்றிப்படங்களில் முதல் பத்திலாவது வருமான்னு பார்க்கிறேன்.
வாழ்த்துகளுக்கு நன்றிம்மா.

KarthigaVasudevan said...

கவித்துவமா இருக்கு வல்லிம்மா மேகச் சிதறல்...கூடச் சேர்ந்து பஞ்சு போல மனதையும் பறக்க வைத்து விடும் போல புகைப் பட மேகம். போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்.

goma said...

வல்லியம்மா உங்கள் இந்த படம் பார்த்ததும் என் மனதில் டக்கென்று வந்த வாக்கியம் “வல்லியம்மா நீங்கள் கில்லியம்மா”
[மனதில் என்ன தோன்றுகிறதோ அப்படியே சொல்ல...வாய்ப்பு:)-தரப்பட்ட வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன்

goma said...

அடுத்த முறை பெசண்ட் நகர் வரும்போத்து சொல்லுங்கள் சந்திப்போம்

இலவசக்கொத்தனார் said...

இதுவரையில் நீங்கள் தந்ததில் சிறந்த படம் இது. அப்புறம் உங்க தொலைபேசி எண்ணை மின்னஞ்சலில் அனுப்புங்க.

வல்லிசிம்ஹன் said...

அச்சோ பரணிகயல் டவுட்!!!!
தான்க்ஸ்பா. நீங்க எழுதி இருக்கிறது இன்னும் இனிமையா இருக்கு.
படம் எடுக்கும்போது கூட இவ்வளவு எஃபெக்ட் வரும்னு நினைக்கவில்லை.

வல்லிசிம்ஹன் said...

வலைச்சர நட்சத்திரத்துக்கு இனிய வரவேற்பு.

மனசில பட்டதைச் சொல்கிறதை விட வேற வேற நல்லதும் கிடையாது.
நீங்க மைலாப்பூர் வாங்க. நானானிக்கு எங்க வீடு தெரியும்பா.கட்டாயம் சந்திக்கலாம்.

Unknown said...

வல்லி சிம்ஹன்(னி?),

படம் நல்லா இருக்கு.மேகத்தின் கிழ் பாகத்தில் நாய் உருவம் ஒன்று தெரிகிறது.

எப்போவுமே black & white அழகுதான்
charlie chaplin படங்கள் black & white பார்த்தால்தான் அழகு.

அந்த வீடு மாதிரி தெரியும் ஒன்றைப் பார்த்ததும் Hollywood படமான psycho ஞாபகம் வந்தது.psycho படத்தின் famous ஸ்டில் பார்த்திருப்பீர்கள் என்று
நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நான் வல்லி w/oசிம்ஹன்:)
அட, நாய்க்குட்டி உங்களுக்குத் தெரிந்ததா.!!

கறுப்பு வெள்ளைன்னால் ஹிட்ச் ஹாக் நினைவு வருவது மறுக்கமுடியாத உண்மை.
நினைத்தாலே சில் என்று இருக்கும் ''சைக்கோ'' படம்.
ரொம்ப நன்றிம்மா. நேரம் எடுத்துப் படம் பார்த்த்ப் பின்னூட்டம் போட்டதற்கு.

Muruganandan M.K. said...

ஒளியும் இருளும் மிகத் தோதான சேர்வை. நல்ல புகைப்படப் பிடிப்பு

வல்லிசிம்ஹன் said...

வரணும் டாக்டர். நன்றி. இந்தப் படத்துக்காக நான் மெனக்கெடவில்லை. கண் முன்னால் இருந்ததை க்ளிக்கினேன்:)

நன்றி.

கோபிநாத் said...

எனக்கு பிடிச்சிருக்கு ;))

Kavinaya said...

படம் அழகா இருக்கு அம்மா :)

வல்லிசிம்ஹன் said...

அம்மா ஒரு வரி எழுதினாக் கூடக் கொண்டாடறவங்க இந்த சார். படமே போட்டுட்டாக் கேக்கணுமா. நன்றிம்மா கோபிநாத்.

வல்லிசிம்ஹன் said...

நன்றிப்பா கவிநயா. நீங்க ஏதாவது அனுப்பி இருக்கீங்களா.

ambi said...

படமே ஒரு கவிதை மாதிரி இருக்கு. பெரிய நிபுணி ஆயிட்டீங்க நீங்க. :)

வல்லிசிம்ஹன் said...

வரணும் வரணும் அம்பி.
அப்படியா...சரி:)

எங்க வீட்டில இவரெல்லாம் ஃபோகஸ் செய்து க்ளிக்குவாங்க. நான் அந்த மேகத்தின் அழகை எடுக்கணும்னு நினைச்சேன். ஒருவிதமான தொந்தரவும் தராத சப்ஜெக்ட்:0)

நானானி said...

லேட்டாக வந்தாலும் நச்சுன்னு வந்திட்டேன். உங்க பதிலில் ரெண்டு 'இல்லை' இருக்குதான். ஆனா ரெண்டு நெகட்டிவ் சேந்தால் பாசிட்டிவ் தானே? ஆகவே 'பரிசு உங்களுக்குத்தான்...உங்களுக்குத்தான் எனக்கில்லே..' ஏன்னா? நான் கலந்துக்கவே இல்லலையே! ஒரு வாரம் ஊரிலில்லே. அதான் பெசண்ட்நகரிலும் சந்திக்க முடியல்லே!

அமுதா said...

வாவ்... மிக அழகாக உள்ளது

வல்லிசிம்ஹன் said...

வரணும்பா நானானி.

நன்றி. என்னமோ போட்டில கலந்துக்கணும்னால் அவ்வளவு ஆசை.
பெசண்ட் நகர்ல சந்திக்கணும். எப்படீன்னு தான் யோசிக்கறேன்:)

வல்லிசிம்ஹன் said...

நன்றிப்பா. அமுதா. நீங்களும் படம் பதிவிட்டிருக்கீங்களா.