Blog Archive

Sunday, February 22, 2009

சூரியன் கண்ட பனித்துளி








அடுத்த நாள் திங்கள். முதல் பெண் யமுனா என்கிற மூன்மூனும்,
ரெண்டாவது பெண் நர்மதா என்கிற நர்மியும்
தயாராக வேண்டும். எல்.கேஜியோ ப்ரி கேஜியோ காலை 7 மணிக்கு அவிலா கான்வெண்ட் பஸ்ஸுக்குப் போய் நிற்க வேண்டும்.
சாப்பிடவைத்து யூனிஃபார்ம் மாட்டி அன்றைய காலண்டரைச் சரி பார்த்து அனுப்ப வேண்டும்.

காலையில் எழுந்ததிலிருந்து எல்லாம் தகறார்தான்.
இன்னும் தூங்கணூம்ம்ம் என்று முனகல். காலை 7.45க்குக் கிளம்ப வேண்டிய பாசு, குளியலறையிலிருந்தே இன்னும் வரவில்லை. ஹேங்கோவர்.
முதல்நாள் நடந்த கூத்தை நினைத்து அழுகையும் ஆத்திரமாக வந்தாலும் காலை நேர அவசரத்தில் அதை ஒதுக்கி வைத்துவிட்டுக் குழந்தைகளைத் தயார் செய்தாள்.

ராஜம்மாவிடம் குழந்தைகளை ஒப்படைத்து கெட்டிச் சட்னி, முறுகல் தோசை என்று தட்டில் வைத்து,
பேப்பர், ஆரஞ்ச் ஜூஸ் என்று சாப்பாட்டு மேஜையில் வைத்துவிட்டுக் குளியலறைக் கதவை ஓங்கி ஒரு தட்டு தட்டிவிட்டுத் திரும்பினாள்.

துணி துவைப்பதற்கான் ஏற்பாடுகளைக் கவனிக்கும் போது,
பின்னாலிருந்து பாசுவின் குரல் கேட்டது. ''சாரிம்மா.
இப்பவே கோவில் போய் வந்துவிடலாம்'' என்றான்.
அதுவரை சும்மா இருந்த மனசு கேட்காமல் கண்ணீரை வெளியே தள்ளியது.
அது எப்படி உங்களால் முடிந்தது பாசு, நான் பார்க்க மாட்டேன் என்று நினைத்தீர்களா.
நம் நால்வரில் நிதானமாக இருந்தது நாந்தானே?" என்று அழத்தொடங்கினாள்.''

இது எத்தனை நாள் நடக்கிறது. அவருக்கும் தெரியுமா. இதுதான் இந்த நாட்களின் கலாசாரமா. இன்னொருவனின் மனைவியைத் தொட்டுப் பேசும் அளவிற்கு எப்படி வளர்ந்தது இது. எனக்குத் தெரியவில்லையே.''
''தப்பா எடுத்துக்காதேம்மா. ஏதோ அந்த கணநேரம் நடந்து விட்டது.அவள் பழகினது, தலையில் கலக்கிய போதை,என்னுடைய சொந்த ஏமாற்றங்கள் என்னை அப்படி நடக்கச் செய்துவிட்டது.
ஆனால் இதுவே எனக்கு அதிர்ச்சி.

எத்தனையோ வெளிநாடுகள் அங்கே கிடைத்த சந்தர்ப்பங்கள் ஒன்றிலுமே நான் தடுமாறியது இல்லை. உனக்கும் தெரியும் சுதா.
ஒரு சித்தம் தடுமாறிய நிலையில் நான் அவளை அணைத்ததும் தவறுதான். நீ வந்ததும் தெளிவு வந்ததும் நிஜம். ''
இந்த நொடியிலிருந்து இந்த வீட்டிற்குள் மது நுழையாது.
என்னை மீறி என் புலன்கள் போகவும் அனுமதிக்க மாட்டேன். என் பெற்றோர் அப்படி என்னை வளர்க்கவில்லை'' என்று நிறுத்தினான்.

அவன் அலுவலகம் சென்ற அரை மணி நேரத்தில் அவனுடைய தொலைபேசியில் சுதாவின் குரல்.
''நீங்கள் மதுவைத் தொடவில்லை என்றால் உங்களைத் தொடுவதிலும் எனக்கு மறுப்பு சொல்லும் எண்ணம் கிடையாது '' என்று சொல்லி
நிம்மதியாகப் போனை வைத்தாள்.
பாசுவின் அயர்ந்த பெருமூச்சு அவளை எட்டியது.

Posted by Picasa

21 comments:

சந்தனமுல்லை said...

நல்ல முடிவு! :-)

கோபிநாத் said...

வாவ்...செம ஸ்பீடு...கலக்கல் கதை ;)

வல்லிசிம்ஹன் said...

நன்றிம்மா முல்லை. நல்ல முடிவுகள் தன் எனக்கு மிகவும் பிடிக்கும். நேருக்கு நேர் பேசி வழக்கை முடித்து விட வேண்டும் இல்லையாம்மா:)

வல்லிசிம்ஹன் said...

ஹெச்.எஸ்

மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோபிநாத்.
உண்மையாவே நல்லா இருந்ததா!!

நன்றிம்மா.

ராமலக்ஷ்மி said...

'மழையில் ஒரு நாள் முடிகையில் மனதில் ஒரு நெருடல்.
சூரியன் கண்ட பனித்துளி [தலைப்பு பிரமாதம்] முடிகையில் மனதுக்கு வருடல்.

மெளலி (மதுரையம்பதி) said...

மிக வித்தியாசமான தலைப்பு, அருமையான முடிவு...நமது குடும்பங்கள் இம்மாதிரியான விட்டுக் கொடுத்தல்களால்தான் இன்னும் நிலைத்து இருக்கிறது என்று தோன்றுகிறது. :-)

வல்லிசிம்ஹன் said...

வரணும்மா மௌலி.விட்டுக் கொடுக்காம எந்தக் கல்யாணம் நிலைக்கும்மா??

பொறுமை தான் வேண்டும்.

KarthigaVasudevan said...

கதை நல்ல முடிவு,கொஞ்சம் ரமணிச்சந்திரன் வாசம் வருதே.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,
எத்தனையோ கோவை(நாங்கள் அங்கே இருந்த போது)) வீடுகளில் இந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்.

மது அருந்துவிட்டு மலம்புழா அணைக்கட்டு ப்[ஓவது... இப்படி குடும்பம் குடும்பமாகவே செல்வார்கள்.
நிதானம் தவறும். நடக்ககு கூடாதது நடந்துவிடும்.
ஒரு நொந்த தோழியின் கதை யிது.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கயல்ரமணி.

நான் அவங்க கதைகள் படிக்கிறது இல்லை. சிம்பிள் ரீசன்,
தொடர்னு எதையாவது ஆரம்பிக்கப் போய், வெளியூர் செல்லவேண்டி வரும். நாங்க போகிற இடத்தில் அந்தப் பத்திரிகை கிடைக்கலைன்னால் கஷ்டமாகப் போகும்:)

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
Anonymous said...

:)

Radha Sriram said...

நல்லா வந்திருக்கு கதை
வல்லி!மது ஆருந்துவதினால் அவங்களுக்குள்ள ஏற்பட்டிருக்கும் மனத்தாங்கல இன்னும் கொஞ்சம் விரிவா முதல் பகுதியில எழுதிருக்காலாமோன்னு தோணுது.பாசு தவறா நடக்கறதோட ஷோக் வால்யு கூடியிருக்கும்.:)

அபி அப்பா said...

ஆஹா! வல்லிம்மா! கதை முடியட்டுமேன்னு தான் முதல் பாகத்திலே பின்னூட்டம் போடவில்லை! நல்லா இருந்துச்சூ. கவிதை மாதிரி தலைப்பு!

குறிப்பு: இந்த மிஸஸ்.டவுட் புள்ளைக்கு பதில் சொல்லாதீங்க:-))

வல்லிசிம்ஹன் said...

நன்றி தூயா:)

வல்லிசிம்ஹன் said...

அபி அப்பா. சும்மா கதைவிட்டதது தானே.:)

மிஸஸ்ஸ்.டவ்வுட் மேல உங்களுக்குஎன்ன

காட்ட்டம்னு தெரியலையே:))))))))

Kavinaya said...

தலைப்பு அழகு. நடையும், கதையும் கூடத்தான். தொடர்ந்து கதைகள் எழுதுங்கம்மா :)

வல்லிசிம்ஹன் said...

அன்பு கவிநயா,
நன்றிப்பா.. ஏதோ தண்டிக்கப்படணும்னு உங்க தலைல எழுதி இருக்கா:)

ஏனெனில் இன்னோரு கதையும் ரெடி.ஜாக்கிரதை.

பாச மலர் / Paasa Malar said...

நல்ல எதார்த்தம்..இரண்டு பதிவுகளும் படித்தேன்...மதுரையம்பதொ சொல்லியிருக்கிற மாதிரி இந்த விட்டுக் கொடுத்தல்களால்தான் நம் குடும்ப அமைப்பின் அஸ்திவாரம் பலமாகிறது..அடிக்கடி இது போல் எழுதுங்க.

வல்லிசிம்ஹன் said...

பாசமலர்

நீங்க எல்லாம் வந்து படிக்கறதே எனக்குச் சந்தோஷமா இருக்கு. இன்னும் கொஞ்சம் மசலா சேர்க்கணும்:)
கத்துக்கறேன்.