Blog Archive

Friday, January 02, 2009

பிஐடி புகைப்படப் போட்டிக்கு ...ஜனவரி

போட்டி அறிவிப்பைப் படித்ததும் படங்களை ஆராய்ச்சிக்கு எடுத்தேன்.

இந்தப் படம் தன்னையே தேர்ந்தெடுத்துக் கொண்டது.

அமெரிக்காவிலிருந்து திரும்பும் வழியில் சூரிக் விமானதளத்தில் சில மணித்துளிக்கள் இருக்க வேண்டிய கட்டாயம்.

குழந்தைகளை விஒட்டு வந்த சோகம். மீண்டும் வீடு திரும்பியதும் காத்திருக்கும் அவசர வேலைகள்.

உடலில் இருக்கும் அசதி. மீட்ண்டும் சுறுசுறுப்பாக இயங்குவோமா என்ற சுய அலசல்.:)

எங்களுக்குச் சொல்லப்பட்டிருந்த லௌஞ்சிற்குள் நுழையும் போது ஒருவரையும் காணொம். இன்னும் அரைமணி நேரமே இருக்கும் நிலையில் ,இந்த இடம் இப்போழுது மனிதர்களால் நிரம்பி இருக்க வேண்டும்.!!

குழந்தைகளின் ஓட்டம், முதியவர்களின் அசதி. ஐரோப்பியர்களின் அதீத வாசனைகள். இன்னும் சில பேரின் அலட்சியப் பார்வைகள்.

ஓ,!!!நான் பயணங்களிலிலேயே இருப்பவன் என்று பறை சாற்றிக்கொள்ளும் சிறிய கணினிக்காரர்கள்.

இன்னும் இதுபோல் எத்தனையோ நடமாட்டம் இருக்கும். அந்த அதிகாலைப் பொழுது ஸ்விட்சர்லாண்தின் மெயின் டெர்மினலுக்கு ஒவ்வாத சூழலாக இருந்தது!!

உடனே போட்டோ பிடித்தேன்.

இப்போது அந்தப் படத்தைப் பார்க்கும்போது அந்த இடத்துக்கே ஒரு

அமைதியும்,காத்திருக்கும் மௌனமும் தென்படுவதாக எனக்குத் தோன்றியது.

கனத்த மௌனம் என்று சொல்லலாமா!!

எல்லாமே என் கற்பனைதான். அடுத்த ஒரு மணியில் அந்த இடம் நிரம்பியது.

எங்களைப் போலவே வெவ்வேறு இடங்களிலிருந்து வருபவர்கள் தங்கள் விமானத்தாமதத்தால் நேரம் கழித்து வந்திருக்கிறார்கள். அவ்வளவுதான்.

இருந்தும் அந்த அரைமணித் தனிமை விநோதமாகத்தான் இருந்தது.

Posted by Picasa

25 comments:

சந்தனமுல்லை said...

வாழ்த்துக்கள் வல்லியம்மா!!
உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

ஆயில்யன் said...

//ஓ,!!!நான் பயணங்களிலிலேயே இருப்பவன் என்று பறை சாற்றிக்கொள்ளும் சிறிய கணினிக்காரர்கள்.//

:)

ஆயில்யன் said...

//அமைதியும்,காத்திருக்கும் மௌனமும் தென்படுவதாக எனக்குத் தோன்றியது./

ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பயணிகள் விட்டுச்செல்லும் நினைவுகளை சுமந்தபடி மெல்ல அசைப்போட்டு காத்திருக்கும் தருணம்

கனத்த மெளனம்தான் :)))

வல்லிசிம்ஹன் said...

வாங்கம்மா புதுவருட முதல் பெண்ணே:)

பப்பு அம்மாவுக்கும் பப்புவுக்கும் என் ஆசிகள்.
வாழ்த்துக்களுக்கு நன்றிம்மா.
உங்கள் வாழ்வும் வளமோடும்,மகிழ்ச்சியோடும் மனம் நிறைந்த வாழ்வாகச் செல்ல எங்கள் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கம்மா ஆயில்யன்.
புது ஆண்டு எப்படி இருக்கிறது...
சென்னை வரும் நாளெப்போது?

இந்த லவுஞ்சுக்குள் காத்திருக்கும்போது நிறைய சுவாரசியமான விஷயங்களைக் காணலாம். வெகு இயல்பாக இருப்பவர்கள் ஸ்விஸ் காரர்கள். கைகளில் பிடித்த புத்தகம் இருக்கும். படித்துக் கொண்டே விமானம் ஏறுவார்கள். எளிமையான உடை. படித்துக் கொண்டே இறங்குவார்கள்.:)

அபி அப்பா said...

படமும் எனக்கு அருமையா இருந்துச்சு!அதுகு நீங்க கொடுத்த அருமையான கற்பனையும் ரொம்ப நல்லா இருந்துச்சு!புத்தாண்டு வாழ்த்துக்கள் வல்லியம்மா!!

தமிழ் said...

புத்தாண்டு வாழ்த்துகள்


வெற்றி பெற வாழ்த்துகள்

Geetha Sambasivam said...

வாழ்த்துகள் வல்லி, அருமையாப் படம் பிடிக்கிறீங்க. நல்லா வந்திருக்கு, பரிசும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

Geetha Sambasivam said...
This comment has been removed by a blog administrator.
ராமலக்ஷ்மி said...

கனத்த மனம்
கவனித்து உணர்ந்தது
கனத்த மவுனம்!
காமிராவை அடைந்தது
கவிதையாய் அத்தருணம்!

வெற்றி பெற வாழ்த்துக்கள்!

எல்லோரும் பிட் என்க, நீங்கள் பிஐடி என விளித்த விதமும் அருமை.

துளசி கோபால் said...

வரவர உங்கள் பதிவுகளில் சொற்கள் கவிதையா வந்து விழுது!!!!!

புத்தாண்டு வாழ்த்து(க்)கள் வல்லி.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்து(க்)கள்.

கோபிநாத் said...

நல்லாயிருக்கும்மா...;))

வாழ்த்துக்கள் ;))

Anonymous said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் வல்லிம்மா

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,துளசி சொல்கிறதைக் கவனித்தீங்களா.

கவிதை எழுதறவங்களோட கூட்டுக்காரியா இருக்கிற வாசனை.:)

உண்மைதான் நம் மனநிலைமை நம்மச் சுற்றித் தெரிவது போல ஒரு பிரமை.
உங்கள் கவிதைக்கு நன்றி. அப்சர்வேஷன்,நுணுக்கமா எல்லாத்தையும் கவனிக்கிறது சூப்பர்மா லக்ஷ்மி:)

வல்லிசிம்ஹன் said...

அபி அப்பா, வரணும்பா. புத்தாண்டு வாழ்த்துகள்.

படம் சாதாரணம்தான்ன்.

எனக்குப் பிடித்ததால் அனுப்பினேன் இன்னும் மற்ற படங்களைப் பார்க்க ஆசையாக இருக்கிறது.
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் திகழ்மிளிர்.
உங்களுக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துகள்.
நலமே நடக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும்மா கீதா.

படம் உணர்ச்சியை அடித்தளமாய் வைத்து எடுத்தேன். மற்றபடி அதில் டெக்னிகலா சொல்ல ஒண்ணுமில்லை:)

பங்கெடுத்துக்கணும் இல்லையா,.அதான்:)
நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா துளசி,
அப்படியா தோணுது!!
நாமதான் மடக்கி எழுதிக் கவிதை படைக்கிறவங்களாச்சே:))
போட்டி இருக்கட்டும்பா. நீங்க எல்லாரும் நல்லா இருக்குன்னு சொல்றதுதான் பிடிச்சிருக்கு!!!

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துகள் கோபிநாத். உங்களை தொலைபேசியில் கூப்பிட நினைத்தேன்.
உங்கள் வேலை நேரத்தை உத்தேசித்து விட்டுவிட்டேன்.
எப்பவும் நன்றாக வளமோடு இருக்கவேண்டும்.
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வாங்கம்மா, சின்ன அம்மிணீ.
உங்க ஊரு ஃபையர்வொர்க்ஸ் டிஸ்ப்ளே யும் . நூசிக்காரங்களோட காட்சிகளையும் சிஎன் எனில் பார்த்து சந்தோஷப்பட்டேன்.

புத்தாண்டு நம் எல்லோருக்கும் அமிர்தமாக இருக்க வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.

goma said...

வெறிச்சோடியிருக்கும் விமானம் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்வது போலிருக்கிறது.இன்னும் ஒரு சில நிமிடங்களில்,களிப்பு கவலை,மன இறுக்கம்,மன நிறைவு பிரிவுபசாரம்,வழிஅனுப்பும் வைபவம் என்று பலதரப்பட்ட மன ஓட்டங்களை ஜீரணிக்கத் தயாராக சுத்தமான ஸ்லேட் போல் நிற்கிறது

வல்லிசிம்ஹன் said...

வா(ஹ்)!வாவ்!!
கோமா வாங்கப்பா.
சரியாச் சொன்னீங்க.
சுத்தம். ஸ்லேட் ரெண்டுமே சரி.
அந்தச் சாம்பல் பூத்தாற்போல வர்ணம்.

மேகம் மூடிய வானம். பாதி இருள். என் மனதில் இருந்த வெறுமை அப்படியே அந்த இடத்தில் பிரதிபலித்தது.

நீங்கள் இன்னும் அழகா சொல்லி இரூக்கிறீர்கள். ரொம்ப நன்றிப்பா.

சதங்கா (Sathanga) said...

//ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பயணிகள் விட்டுச்செல்லும் நினைவுகளை சுமந்தபடி மெல்ல அசைப்போட்டு காத்திருக்கும் தருணம் //

கவிதை மாதிரி சொல்லிட்டீங்க ஆயில்யன்.

வல்லிம்மா, வழக்கம் போலவே உங்கள் கற்பனையில் எங்களையும் கரைத்துவிட்டீர்கள் :)))

ambi said...

//ஓ,!!!நான் பயணங்களிலிலேயே இருப்பவன் என்று பறை சாற்றிக்கொள்ளும் சிறிய கணினிக்காரர்கள்.
//


மிகவும் ரசித்தேன்.

வெய்டிங்க் தான் தலைப்பா?

வல்லிசிம்ஹன் said...

அம்பி,உண்மையிலியே
அப்படித்தான்:)

என்ன போன்பேச்சு. என்ன சுறுசுறுப்பு.

வெயிட்டிங் என் தலைப்பு. அவங்க என்ன நினைக்கறாங்களோ:)