எப்பவோ நடந்தது!!
+
டூ ஃபார் த ரோட் என்று ஒரு படம் 40 ஆண்டு இருக்குமா...அப்ப வந்தது. நம்ம மை ஃபேர் லேடி ஆட்ரி ஹெப்பர்னும் இன்னோருவரும் அவர் பெயர் மறந்து விட்டது.
வண்டிப் பயணமாகவே வாழ்க்கை அமையும் அவர்களுக்கு. வறிய நிலைமையில் ஒரு பயணத்தின் நடுவில் சந்தித்துக் கொள்வார்கள். கதாநாயகிக்கு ஒரு 18 வயதும் கதாநாயகனுக்கு 25 வயதுமாக ஆரம்பிக்கும் காதல் இரு பிள்ளைகள் பெறும் வரை அழகாகப் போகும்.
அவனும் கட்டிடத் தொழிலில் பணம் சம்பாதித்து ஆளுக்கொரு கார் வைத்துக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்து விடுவார்கள்.
தனியாகப் பயணம் செய்யும் போது அவனுக்குச் சபலம் தட்டும் . அப்படி இப்படி இருந்து விட்டு மீண்டும் கணவனும் மனைவியும் ஒரு கசந்த மனப்பான்மையில் ஒரு நீண்ட பயணம் (ரோட் ட்ரிப்) மேற்கொள்வார்கள்.
அப்போது தங்கள் இளமைக்கால காதல் நினைவுகள் இருவருக்கும் பசுமையாக நினைவுக்கு வரும். குழந்தைகள் தொந்தரவு, மனைவியின் ஆடம்பரம்,தனது இயலாமை எல்லாம் அவனை விரட்டும்.
அந்த நிலைமையில் ஒரு விடுதியில் எதிரும் புதிருமாக இருவரும் உட்கார்ந்து எங்கோ பார்த்தபடி உணவு அருந்துவார்கள்.
அவள் ,அவனைக் கேட்பாள். ''இது போல் இருவர் உரையாடாமல் ஒரே இடத்தில் உணவருந்தினால் என்ன பொருள் என்று நினைக்கிறாய்?
உடனே பதில் வரும் அவனிடமிருந்து ,அவர்கள் இருவருக்கும் திருமணமாகியிருக்கும் '' என்று.
அந்த வசனம் வரும் இடம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
வாழ்க்கையில் சின்ன விஷயங்கள் நம்மை எப்படி மாற்றிவிடுகின்றன. என்று.
இப்போதும் எந்த வெளியிடத்திலும் அளவளவிய வாறே உணவருந்தும் தம்பதியரைப் பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.
திருமணமான புதிதில் அப்போது ராஜகுமாரி என்னும் தியேட்டர் ஒன்று பாண்டிபஜாரில் இருந்தது. அதில் ஆங்கில படங்கள் திரையிடப்படும். நாங்கள் இருவரும் ஓரிரு படங்களும் அங்கே பார்த்திருக்கிறோம்.
படம் பார்த்த கையோடு டிலக்ஸ் என்ற உணவு விடுதியில் ருசிகரமான டிபன் வகையறாக்களோடு எங்கள் மாலை முடிவுறும்.
இருவரும் மாற்றி மாற்றி ஏதாவது புதிது புதிதாகப் பேசிக்கொண்டிருப்போம்.
இப்பவும் சென்னைக்கு ,வந்த இந்த இரண்டு வாரங்களில் அடிக்கடி வெளியே சாப்பிட வேண்டிய நிர்ப்பந்தம் வருகிறது. வீட்டுக்கு வர்ணம் பூசும் வேலை, பூச்சி ஒழிப்பு வேலை என்று நடப்பதால்.
கடனே என்று சரவணபவனுக்குப் போய் விட்டு,அந்தக் கசமுசா சத்தம் நடுவே மற்றவர்களை வேடிக்கைப் பார்த்தே எங்கள் உணவை முடித்துக் கொள்கிறொம்.
இதிலும் தவறு ஒன்றும் தெரியவில்லை. இனி பேசுவதற்கு ஒன்றும் பரபரப்பான தலைப்புகள் இல்லையோ:)


24 Comments:
கதாநாயகன் ஆல்பர்ட் ஃபின்னி. இன்னும் இருக்கிறார்.
யாரோ ஒருத்தர் இப்ப இதைச் சொல்ல என்ன அவசியம்னு கேட்கப் போகிறார்:)
ஒரு காலக்கட்டத்தில் மனவி என்பவள், வீட்டில் இருக்கும் மற்ற மேசை ,நாற்காலி சோஃபா போல ஒரு பொருள் ஆகி விடுவாள். அப்புறம் என்னத்தை தினம் கவனிச்சுப் பேசறது?
இன்றைய நாளில் யாராவது நடுவயதுக் காரர்கள் பேசிக்கிட்டே சாப்பிட்டால் இப்போதான் கலியாணமானவர்கள்ன்னு சொல்லிறலாம்:-)
நல்லாருக்கு!!!! எனக்கும் இதே மாதிரி தோணினதுண்டு!!:-):-)
வரணும் துளசி. தமிழ்மணத்தில பதிவைச் சேர்த்ததுக்கு நன்றிப்பா.
ஆமாம் இப்ப நடுவயதுன்னா எது.
:)
நாம எல்லாம் நடுவயதுதானே???
அப்போ பேசிக்கிட்டே சாப்பிடறவங்க, அப்பத்தான் கல்யாணம் கட்டி யிருக்காங்க. சரி ஒத்துக்கறேன்:)
வாங்க கபீஷ். முதல் வரவா....நன்றி.
எத்தனை பேரைப் பார்க்கிறோம் இல்ல? இந்த மாதிரி.
கலகலப்பு எங்கியோ போயிடுது.
சில பேர்களிடம் நிலையா சந்தோஷம் இருக்கு.
//'இது போல் இருவர் உரையாடாமல் ஒரே இடத்தில் உணவருந்தினால் என்ன பொருள் என்று நினைக்கிறாய்?
உடனே பதில் வரும் அவனிடமிருந்து ,அவர்கள் இருவருக்கும் திருமணமாகியிருக்கும் '' என்று.//
:)) என்னாத்த சொல்ல! :))
//ஒரு காலக்கட்டத்தில் மனவி என்பவள், வீட்டில் இருக்கும் மற்ற மேசை ,நாற்காலி சோஃபா போல ஒரு பொருள் ஆகி விடுவாள். அப்புறம் என்னத்தை தினம் கவனிச்சுப் பேசறது?//
இப்படிப்பட்ட செக்சுவல் டிஸ்க்ரிமினேஷனை வன்முறையாகக் கண்டிக்கிறோம்!
நான் வள வளன்னு தங்கமணியோட மொக்கை போட்டுக்கிட்டுத் தான் சாப்பிடுவது வழக்கம்... இன்னும் காலம் போனால் தான் தெரியும் போல... :)
வாங்கப்பா கொத்ஸ்,
எல்லாமே ஒரு ரொட்டீன் தடத்தில் வந்துவிட்டால்,
புதுமைக்குச் சில சமயம் இடமில்லாமல் போகிறதோ.
பேசிட்டு வம்பு வளர்க்கிறதுக்குப் பதிலா பேசாம இருப்பதும் உத்தமம்.
நான் அந்த வகையறா தான். நுணல்:)
நல்லாப் பேசுங்க, தமிழ் பிரியன்.
சாப்பிடும்போது சமைச்சவங்களைப் பாராட்டறதும்,
அன்றாட நடப்புகளை அலசறதும் ரொம்பவே நல்ல பலன்களைக் கொடுக்கும்.
வரும் காலங்களும் அப்படியே இருக்கட்டும்.
:))
வேற ஒன்னும் சொல்ல முடியல ;))
//'இது போல் இருவர் உரையாடாமல் ஒரே இடத்தில் உணவருந்தினால் என்ன பொருள் என்று நினைக்கிறாய்?
உடனே பதில் வரும் அவனிடமிருந்து ,அவர்கள் இருவருக்கும் திருமணமாகியிருக்கும் '' என்று.//
எனக்குத் தெரிந்து ஒரு தம்பதி ஒரே வீட்டில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமலேயே குழந்தைகளுக்காக ஒன்றாய் வாழ்ந்து வருகிறார்கள்..அவர்களைச் சந்தித்துப் பல வருடங்கள் ஆகிவிட்டது..இப்போது சேர்ந்திருக்க வேண்டும் என்று நம்புகிறேன்..
இந்தப் பதிவைப் படித்த போது ஏனோ அவர்களின் நினைவு வந்தது..
//பேசிட்டே சாப்பிடக் கூடாது தான்! வாயுத் தொந்திரவு அதிகம் ஆகுமாம். சாப்பிடும்போது தண்ணீரும் குடிக்கக் கூடாதாம். தேவைப்படும்போது ஒரு வாய் மட்டும் குடிக்கலாம். சாப்பிட மட்டுமே வாயைத் திறக்கணும்.//
அப்பாடா, நம்மளாலே முடியாது. கூடியவரையில் தண்ணீர் மட்டும் குடிக்காமல் சாப்பிடறதை வச்சுக்கிறேன். வல்லி, நாங்க சாப்பிடும்போது தான் எல்லாத்தையும் அலசுவோம், முக்கியமா சாதத்தைத் தட்டில் போட்டு நான் உட்கார்ந்ததுமே தொலைபேசி கூப்பிடும். அப்புறம் என்னத்தை வாயை மூடறது?? வெளியிடங்களுக்குச் சாப்பிடப் போனாலும் கேட்கவே வேண்டாம், சமையல் பத்தின டிஸ்கஷன், அடுத்துச் செய்ய வேண்டியதுனு பேசணும், நம்மாலே முடியாதுப்பா!நிறுத்திக்கணுமோ?? :)))))))))))))
நிறைய சொல்லணும் கோபிநாத். அதான் சொல்ல வரேன்.
பேசாதவங்க பேசிகிட்டே சந்தோஷமா சாப்பிடணும்.:)
அடப் பாவமே பாசமலர்.
இதைவிடக் கொடுமை உண்டா.
என்னிக்கோ ஏதாவது வாக்குவாதத்தில் இப்படி முடிவுக்கு வந்திருப்பாங்க. பிள்ளைங்களையும் இது பாதிக்குமே.
அவர்கள் வாழ்வில் சமாதானம் வரட்டும்.
நானும் ஒரு நாள் வரேன் உங்க வீட்டுக்கு. எல்லாரும் நல்லா பேசிட்டே சாப்பிடலாம். சரியா கீதா:)
நிறுத்தாதீங்க. சந்தோஷச் சாப்பாடு தான் ஜெரிக்கும்.
அன்றைய விஷயங்கள் பரிமாறிக் கொள்ளப் பட்ட பிறகுதான் சாப்பாடே பரிமாறப் படும் எங்க வீட்ல:)!
//மற்றவர்களை வேடிக்கைப் பார்த்தே எங்கள் உணவை முடித்துக் கொள்கிறொம்.
இதிலும் தவறு ஒன்றும் தெரியவில்லை. இனி பேசுவதற்கு ஒன்றும் பரபரப்பான தலைப்புகள் இல்லையோ:)//
இதை இப்படியும் பார்க்கலாமே வல்லிம்மா. பேசி கம்பெனி கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏதுமற்ற ஒரு புரிதலான ஒரு சுதந்திரமான சுவாதீனமான தருணங்களாக. [புரியும்படி சொல்லியிருக்கேனா தெரியலயே:(?]
அன்றைய விஷயங்கள் பரிமாறிக் கொள்ளப் பட்ட பிறகுதான் சாப்பாடே பரிமாறப் படும் எங்க வீட்ல:)!
//மற்றவர்களை வேடிக்கைப் பார்த்தே எங்கள் உணவை முடித்துக் கொள்கிறொம்.
இதிலும் தவறு ஒன்றும் தெரியவில்லை. இனி பேசுவதற்கு ஒன்றும் பரபரப்பான தலைப்புகள் இல்லையோ:)//
இதை இப்படியும் பார்க்கலாமே வல்லிம்மா. பேசி கம்பெனி கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏதுமற்ற ஒரு புரிதலான ஒரு சுதந்திரமான சுவாதீனமான தருணங்களாக. [புரியும்படி சொல்லியிருக்கேனா தெரியலயே:(?]
This post has been removed by a blog administrator.
அப்படியா ராமலக்ஷ்மி!!
பசங்க வீட்டில இருக்கும்போது சாப்பாட்டு வேளைகள் அப்படித்தான் இருக்கும்.
மத்தபடி
மௌனம் நிறைய.:)
தப்பேதும் இல்லை. பகல் வேளையில் பேச்சு உண்டு. இரவில் ஒரு நிதானம் வந்துவிடும்:)
நீங்க சொல்கிற சுவாதீனம்தான் காரணம்.
உண்மையைச் சொன்னால் நீண்டகாலமா ஒன்னா இருக்கும் தம்பதிகளுக்குள் ஒருவர் என்ன நினைக்கிறோம், என்ன சொல்ல வர்றோமுன்னு அவுங்க மனசுக்குள்ளேயும் தெரிஞ்சுருது.
ஒரே சமயத்தில் ரெண்டு பேருக்கும் ஒரே எண்ணம் வந்துருது. அதான்...இப்ப்த்தான் சொல்லணுமுன்னு ஆரம்பிக்கிறென் நீயே சொல்றேன்னு ஆகுது.
தம்பதிகள் ஏழு வருசம் ஒன்னா இருந்தால் முகஜாடைகூட ஒன்னா ஆகிருமுன்னு 'சீயக்காய்ப் பொடி( காரணப்பெயர்) சொன்னார்.
ஆமாம்பா துளசி.
அது என்னவோ நிஜம்தான்
சாப்பிடணும்னு நான் நினைக்கும்போது
சிங்கம் எழுந்து சாப்பாட்டு அறை லைட்டைப் போடுவார்.:)
அதாரு சீக்காய்ப்பொடி!!!எனக்குத் தெரியாதே.
முகம் ஒண்ணாயிடுமா!!! ஏழு வருஷம் கழிச்சுதானே. அப்ப பரவாயில்லை. முதல்லயே வந்துடுத்து என்றால் எல்லாக் குழந்தைகளும் ''சைனா டால் '' மாதிரி ஆகிடும்:))))))))))
"என் மனம் நீ அறிவாய்
உந்தன் எண்ணமும் நானறிவேன்"
இதுதான் மொத்த (வாழ்க்கை) ரகசியம்:-)))))
சித்திரம் பேசுதடி. என் சிந்தை மயங்குதடி......
கொன்னுட்டீங்கப்பா.:)
இதுதான் தாம்பத்யம்.
ஊமைகளாய் இருந்தாலும் மனம் பேசினாப் போறும் இல்லையா.
இன்னமும் .....போல் மௌனம் ஏனடி தேன்மொழியே:))))
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
Links to this post:
Create a Link
<< Home