Blog Archive

Wednesday, November 19, 2008

இது ஒரு பதிவு!

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்னு ஒரு பதிவு போடணும்னு நினைத்தேன்.


ஏதாவது யோசனை தோணினால் தானே எழுத.
நல்லதாப் போச்சு எல்லார் சொல்கிற மாதிரி நாமும் உண்மையாவே எழுத்தாளி ஆகிட்டோம் போலிருக்கு. இந்த மெண்டல் ப்ளாக் வந்திடுத்து.
மெண்டல் ப்ளாக் வந்தால் கட்டாயம் நாம் எழுத்தாளர் என்பது லாஜிக்.


அதாவது தலைவலின்னு ஒண்ணு வந்தால் தலை இருக்கு என்பது நிதர்சனம்,
ஒண்ணு இருக்கு என்று நிரூபிக்க வேண்டும் என்றால் அது இல்லாமல் மேல ஒண்ணும் நடக்காது என்று சொல்லணும்.
அதே போல முதிய பதிவாளர் என்றால் அப்பப்போ உணர்ச்சிகரமா ஏதாவது எழுதவேண்டும்.(என்னை மாதிரி)
வர்த்தி ஏத்தவேணும். அதாவது கொசுவர்த்தி. (அதே என்னை மாதிரி)
கவிதை எழுதலாம்.அநேகமா அது உரைநடைல இருக்கணும்.
ஐயோ ஏன் இந்த அம்மா இப்படி வதைக்கிறாங்கன்னு நாலு பேராவது நினைக்கணும்.

பந்தபாசம்,படிக்காத மேதை, கணவனே கண் கண்ட தெய்வம் ,பொன்னித் திருநாள், மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் இந்த மாதிரி புதுப் படங்களுக்கு ரெவ்யூ எழுதலாம். பழசுக்கு எப்பவும் மதிப்பு இல்லையா.

இதெல்லாம் இந்த துபாய்க்கு வந்த பிறகு எனக்குத் தோன்றிய எண்ணங்கள்.
சிகாகோ குளிருக்குப் பயந்து இங்கே வந்தால், இங்க வீட்டுக்குள்ள குளிருகிறது.



வெளியில் நல்லா இருக்கிறது.

வெளி வராந்தாவை சிங்கம் குத்தகை எடுத்து விட்டதால், வீட்டுக்குள்ள ஸ்வெட்டரைப் போட்டுக் கொண்டு, என்னடா எனக்கு வந்த சோதனைன்னு யோசித்தேன்.


பாப்பா தூங்கின பிறகு வாங்கி வைத்திருக்கும் குங்குமம்,விகடன் எல்லாம் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.


உள்குளிர் நம்மளை வெளியில் தள்ளினாலும், ஏற்கனவே நமக்கு அனுபவம் இருப்பதால் கொஞ்சம் யோசனையாக இருக்கிறது.



ஆகக்கூடி செய்ய வேண்டிய ஒரே கடமை,
அரபு நாடுகளுக்கு ,அமீரகத்துக்கு நாம் விஜயம் செய்யும் விஷயத்தை ஒரு பதிவாப் போட்டுடலாம்


அப்புறம்,மொக்கை பதிவே போடாத நல்ல பதிவர்களின் அர்த்தமுள்ள பதிவுகளைப் படித்துத் தேறி, அறிந்த தெரிந்த விஷயங்களை எழுத வேண்டியதுதான்.
அமீரகப் பதிவர்களுக்கு என் வணக்கம்.:)

18 comments:

பொன்ஸ்~~Poorna said...

வல்லி,
//உள்குளிர் நம்மளை வெளியில் தள்ளினாலும், ஏற்கனவே நமக்கு அனுபவம் இருப்பதால் கொஞ்சம் யோசனையாக இருக்கிறது//
இது என்ன மேட்டர்ங்க?

வல்லிசிம்ஹன் said...

முதல்ல எல்லார்கிட்டயும் மாப்பு கேட்டுக்கறேன். கொத்ஸ், துளசி,ராமல்க்ஷ்மி,
நீங்க அனுப்பி இருந்த பின்னூட்டங்கள் பதிவுப்பக்கத்திலிருந்து கமெண்ட்ச் பக்கம் வரத்துக்குள்ள காணாமப் போயிடுத்து.
இப்படி எப்பவுமே ஆனதில்லை.
பப்ளிஷ் செய்யாதீங்கன்னு சொல்லி வர மெயிலைக் கூட பத்திரமா வைக்கிற ஆளு நான்.:(


சாரிப்பா.

மெளலி (மதுரையம்பதி) said...

வணக்கம் வல்லியம்மா...பதிவு முழுவதும் ஆங்காங்கே நகைச்சுவையை தூவி எழுதியிருக்கீங்க, ரசிச்சேன் :)

வல்லிசிம்ஹன் said...

http://naachiyaar.blogspot.com/2007/08/2_21.html,
http://naachiyaar.blogspot.com/2007/08/blog-post_21.html
-----------------------------------------------------------------------------
பொன்ஸ் வாங்கப்பா. ஆழம் தெரியாம கால் விட்டுட்டீங்களே:)

என்னிட்ட ஒரு லீடிங் க்வெச்டின் கேட்டா மகா நீளமாக் கதை சொல்ல ஆரம்பிச்சுடுவேனே:)

ஒண்ணுமில்லப்பா, போன அமீரக விசிட் போது,

வெயில்ல மாட்டிகிட்டது,(ஜூலை)
பஸ் காரன் நம்மளையும் தள்ளிவிட்டு பஸ்ஸை ஓட்டினது, எல்லாம் விலாவாரியா எழுதி இருந்தேன்.


நமக்குத்தான் கட்டில் காலே தடுக்கும் இல்லைய்யா:))
அதுமாதிரி இரண்டு அனுபவங்களை மேல லின்கில கொடுத்திருக்கேன்.
இந்த அனுபவத்துக்குப் பிறகு எனக்கு வெளியே போக தடா போட்டுட்டாரு எங்க மூத்த மகன்:)
அதான் ஒரே சோகம்:))))

தருமி said...

அங்க இருந்து புறப்படுறேன் அப்டின்னதும் 'இங்க' வரப் போறீங்கன்னு நினச்சேன்.

எங்க இருந்தா என்ன? நல்லா இருங்க.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி,

நகைச்சுவை இருக்கா. நான் இதை மொக்கைன்னு பேரு வைக்கணும்னு நினைச்சேன். அப்புறம் சே சே நாம எழுதினதை நாமே கொண்டாடலைன்னாலும் பழிக்கக் கூடாதுன்னுட்டு விட்டுட்டேன்:)

வல்லிசிம்ஹன் said...

கொத்ஸ்,
இங்க இருக்கறவங்களுக்கு வணக்கம் சொல்லியாச்சு. அங்க இருக்கிறவங்களுக்கு பைபை சொல்லியாச்சு:)
இங்க சினேகிதங்களை ஒவ்வொருத்தரா ரம்பம் போட்டுக் கொண்டு இருக்கேன்.
ஒருத்தர் உங்களை ரொம்ப விசாரிச்சார்:)

வல்லிசிம்ஹன் said...

துளசி,

மெண்டலா நாமா... நோ நோ.

நம்ம மத்தவங்களைத்தான் மெண்டல் செய்யணும்.:)
அதுக்குத்தானே பதிவு வச்சிருக்கோம்:)

வல்லிசிம்ஹன் said...

ராமலக்ஷ்மி வாங்கப்பா.

நானெல்லாம் விமரிசனம் செய்ய ஆரம்பிச்சா, முதல்ல வர பாட்டில் இருந்து கடைசிப் பாட்டு ,சுபம்,மங்களம் வரைக்கும் எழுதுவேன்.


ஒருத்தருக்கும் சஸ்பென்ஸே இருக்காது.

கதையும் தெரிஞ்சிடும்:)

அப்படி கேள்வி கேட்டாங்கன்னால் மீண்டும் சிடுவேஷன் விளக்கிடுவேன்.:)

வேணாம்பா. பாவம் மக்கள்.

பாச மலர் / Paasa Malar said...

வளைகுடாப்பக்கம் வந்திருக்கிறீர்கள்..நல்வரவு...

Geetha Sambasivam said...

@கொத்ஸ்,
@துளசி,
@ராமலக்ஷ்மி,

ஹாஹாஹா, மறைந்திருந்து பின்னூட்டும் மர்மம் என்ன???

வாங்க வல்லி, இந்தியாவுக்கு எப்போ??? இதுவும் ஒரு நல்ல சிந்தனையே! உரக்க யோசிச்சிருக்கீங்க!

வல்லிசிம்ஹன் said...

நட்சத்திரம் தருமி ,. வருக.


இது ஒரு வழக்கம் எனக்கு. இங்கன்னு நான் சொன்னா எல்லாருக்கும் புரிஞ்சுடும்னு நம்பற ....ஆளு:)

அஞ்ஞன இருந்து புறப்பட்டு இஞ்ஞன துபாய்ப் பக்கம் வந்துட்டோங்க:)
ரெண்டு வாரத்துக்கப்புறம் தமிழகம் வந்துடுவோம்.
புல்லுக்கட்டு கூட நூத்துக்கணக்கில(விலை போட்டு) விக்கிறாங்களாமே!!!!!!!

வல்லிசிம்ஹன் said...

வரணும்பா பாசமலர்.

வெய்யில்ல கிளம்பினோம். இப்போ நல்ல சீதோஷ்ணமா இருக்கு. அடுத்த மாதம் இன்னும் குளிரும்னு சொன்னாங்க.

வரவுக்கு நன்றி.

ambi said...

ஹிஹி, போன தடவை மாதிரி கண்காட்சிக்கு கிளம்புங்க. :)))

வல்லிசிம்ஹன் said...

அம்பிக்கு ஏன் இந்த விபரீத ஆசை.
நான் தொலைஞ்சு போனா சிங்கம் தவிச்சுப் போயிடுவாரே .:)))

ஆயில்யன் said...

அமீரகம் வந்தாச்சு சூப்பரூ!


பழைய படங்கள் பத்தி விமர்சனங்கள் நிச்சயம் வரவேற்கப்படும்!

நிறைய படங்கள் கட்டாயம் பாருங்கப்பான்னு சொல்ல வைக்கிற மாதிரியான படங்களை பத்தியும் கண்டிப்பா சொல்லணும் இதுதான் அமீரகத்து ஹோம் ஒர்க் வல்லியம்மாவுக்கு :))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஆயில்யன்,

படம்னு நான் சொல்றதெல்லாம் சும்மா ரீல் மாதிரி ஆச்சுதே:)
கீழ வீடியோ கடை இருக்கு. அதோட ஓணர் அய்யாவும் நம்ம தமிழ் பேசறவர். அவர் என்னடான்னா, ட்ரான்ஸ்போர்ட்டர் படத்தைக் கொடுத்து ரொம்ப நல்லா இருக்கும்னு சொன்னார். அதில காரைத் தவிர மிச்சதெல்லாம் கத்தியும் கபடாவும்,துப்பாக்கியுமா அலையுதுங்க.
நான் என்னத்தை விமரிசனம் பண்ண:)


நேத்திக்கு சந்தோஷ் சுப்ரமணியம் பார்த்தேன்.

அதை நீங்க எல்லோருமே பார்த்திருப்பீங்க.

பாப்பா தூங்கற நேரம்தான் போடணும்னு ஆர்டர் போட்டு இருக்காங்க.

அதுவோ அரை மணிக்கு மேல தூங்க மாட்டேன்னு பகல்வேளைல ஆட்டம் போடறது:)

கோபிநாத் said...

நானும் வணக்கம் சொல்லிகிறேன்...;))