About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Tuesday, November 11, 2008

அமெரிக்கப் பதிவர்களுக்கு பை பை

இந்தக் காட்சி கண்ணில பட்டுக் குளிர் எடுக்கும்முன்னால் கிளம்புகிறோம்.


வாய்ப்பிருந்தால் மீடுன் பார்க்கலாம்.


கண் கொண்ட அளவு காட்சிகள்,
நயாகரா,
ஸெயிண்ட் லூயிஸ் நகரம்,
பக்கத்தில் இருக்கும் உள்ளூர்க்காட்சிகள்,
கோவில்கள்
எல்லாம் போய் வந்தாச்சு.
இனி கிளம்ப வேண்டியதுதான் பாக்கி.
பொட்டிக்கு ஐம்பத்தொன்று பவுண்டு ஏற்றி நாலு பெட்டிகளும் தயார்.
சின்னப் பேரன் இன்னிக்குப் போயிட்டு நாளைக்கு வான்னு சொல்லிட்டான்.
வெள்ளாடணூமே' அவன் கவலை அவனுக்கு:)
ஆதலால் சக பதிவர்களிடம் விடை பெறுகிறேன்.
முயற்சித்திருந்தால் பார்த்துப் பேசி இருக்கலாமோ.
தெரியவில்லை.
எழுத்துதானே நமக்கு சங்கிலி.
அது வழியாகவே
பேச்சும் தொட்ர்பும்,ஆரம்பமாகி முடிகிறது.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
குறையில்லாமல் இருக்க என் பிரார்த்தனைகள்.
போய் வருகிறோம்.

26 comments:

ஆயில்யன் said...

அமெரிக்காவுக்கு பை பை!

அமீரகத்துக்கு ஹாய்! ஹாயா!

வாழ்த்த்துக்கள்!

பழமைபேசி said...

பயணம் சிறக்க வாழ்த்துக்கள்! தொடர்புல இருங்க!!

சதங்கா (Sathanga) said...

வல்லிம்மா,

நல்லா போய் வாங்க. பயணம் சிறப்புற அமைய வாழ்த்துக்கள்.

//முயற்சித்திருந்தால் பார்த்துப் பேசி இருக்கலாமோ.
தெரியவில்லை.
எழுத்துதானே நமக்கு சங்கிலி.
அது வழியாகவே
பேச்சும் தொட்ர்பும்,ஆரம்பமாகி முடிகிறது.//

கேள்வியும் எழுப்பி, பதிலும் சொல்லி அசத்திட்டீங்க :)))

வற்றாயிருப்பு சுந்தர் said...

அட. இங்கிட்டுத்தான் இருந்தீஹளா இம்புட்டு நாளும் - தெரியாமப் போச்சே! சரி. அடுத்த தடவை வரும்போது சொல்லுங்க.

பயணம் சிறப்பாக அமையட்டும்! உடல்நலத்தைக் கவனித்துக்கொள்ளுங்கள்!

குடுகுடுப்பை said...

பயணம் இனிதாகுக.

துளசி கோபால் said...

பத்திரமா வந்து சேருங்க.

தேர் கிளம்பிருச்சு:-))))

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆயில்யன்,பழமைபேசி,சதங்கா.
குடுகுடுப்பை,சுந்தர், துளசி,

இரண்டு மூணு நாட்கள் கழித்து மீண்டும் பேசலாம். நன்றி எல்லோருக்கும்.

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

வல்லியம்மா, இனியும் உங்கள் பயணம் இனிதே அமையட்டும். முடிந்த போது பதில் போடுங்க!

கவிநயா said...

எங்கே இருந்தாலும் ஒரே மாதிரிதானம்மா. அருகிலும், தொலைவிலும் ஒரே சமயத்தில் :) பயணம் இனிதாக அமையட்டும்.

கோபிநாத் said...

வாங்க..வாங்க ;)))

இங்கே கதை எப்படின்னு தெரியல!! ;))

cheena (சீனா) said...

பயணம் இனிதே சிறப்புடன் முடிய நல்வாழ்த்துகள்

Sridhar Narayanan said...

சிகாகோலயா இருந்தீங்க? எங்க? ஷாம்பர்க்? நான் அந்தப் பக்கதில கொஞ்ச நாட்கள் இருந்திருக்கிறேன். தற்போது கலிபோர்னியா.

எங்க இருந்தாலும் எல்லாம் கூப்பிடும் தூரம்தானே.

சின்னப் பேரன் சொன்னதை ஞாபகம் வச்சிக்குங்க. 'நாளை'க்கு சீக்கிரம் வந்திருங்க :-)

மதுரையம்பதி said...

வல்லியம்மா,

தாய்த்திருநாடு உங்களை இனிதே வரவேற்கிறது...

பயணம் நல்லபடி அமைய வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

பயணம் இனிதாக அமைய எனது வாழ்த்துக்கள்.

நானானி said...

தேர் நிலைக்கு வரும் நாள் என்றோ?

இலவசக்கொத்தனார் said...

போய் வா அம்மாவே போய் வா!! :)

வல்லிசிம்ஹன் said...

கெ.பி,
வாங்கப்பா. உங்களுக்கும் மெயில் செய்யாமல் கிளம்பிட்டேன்.

மீண்டும் சந்திக்கலாம் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்,
நமக்கே இப்படித்தான் பதிவிலியே சந்திப்பும் பிரிவும்:)

நன்றிம்மா. மீண்டும் சந்திப்போம்.

வல்லிசிம்ஹன் said...

கோபிநாத், கதை எப்படி இருந்தாலும் நட்பு ஒன்றும் மாறாதே:)

வல்லிசிம்ஹன் said...

சீனா, வாங்க.

வாழ்த்துகளுக்கு நன்றி. எந்த நேரத்திலும் வாழ்க்கைப் பயணம் நன்றாகவே அமைய வேண்டும்.
நன்றி வாழ்த்துகளுக்கு.

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீதர், நேப்பர்வில்லில் இருந்தோம்.

அடுத்த சந்தர்ப்பத்திலும் பார்க்கலாம். நமக்குத்தான் வானமே வீடு. பிறகு கவலை என்ன:)

வல்லிசிம்ஹன் said...

மௌலி, ரொம்ப நன்றிம்மா. என் கவலையெல்லாம் விலைவாசியை நோக்கிப் போய்விட்டது:)

தாய்நாடுதான் நமக்குச் சரிப்படும் எப்படியிருந்தாலும்.:)

வல்லிசிம்ஹன் said...

ராமலக்ஷ்மி, நன்றிம்மா. பங்களூருக்கே வந்திடலாமா:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா நானானி.

தேர் கிளம்பி உருள ஆரம்பித்தாச்சு. டிசம்பர் 11 சென்னை வந்துவிடும் கடவுள் கிருபையில்.
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

கொத்ஸ்!!

போய்வருகிறேன் மகனே போய்வருகிறேன்:)

திவா said...

ரொம்ப லேட்டா வந்துட்டேன்!
கிளம்பறப்ப ஞாபகமா நாலு குடம் நயாகரா தண்ணி எடுத்துக்கிட்டீங்களா இல்லையா? இங்கே மழையே காணோம்!