Blog Archive

Saturday, November 08, 2008

மாற்றம்,ஒபாமா,லின்கன்மற்றும் உழைப்பு

லின்கன் பிறந்த எளிமையான வீடு.
பதினாலாவது ஜனாதிபதியும் அவரது கடைசி மகனும்.

பிரெசிடெண்ட் எலெக்ட் பராக் ஒபாமா.








ஏப்ரஹாம் லின்கன் 17 ஆண்டுகள் வாழ்ந்த வீடு ஸ்ப்ரிங்ஃபீல்ட்





திரு ஏப்ரஹாம் லின்கன் 14 ஆவது ஜனாதிபதி,அமெரிக்கக் குடியரசு






மரக்கட்டைகளை உடைத்துச் சம்பாதித்தவர் நாட்டுக்குத் தலைவர்.
--------------------------------------------------------------------------------------

இப்போது இன்றைய செய்தி ஒபாமாவைச் சுற்றி.
----------------------------------------------------------------

இன்னும் அதிர்வுகள் ஓயவில்லை. சிகாகோவின் கிராண்ட் பார்க்,அதில் நடந்த வெற்றி ஏற்புப் பேச்சு
பார்வையாளர்களின் உணர்ச்சி,கண்ணீர்,குதூகலம்
எல்லாம் ஓய நாளாகும்!!
ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் 44ஆவது பிரசிடென்டாகப் பதவி ஏற்கப் போகும் ஒபாமாவுக்கு
மனம் கனிந்த வாழ்த்துகள்.
எனக்கிருக்கும் ஒரே பிரார்த்தனை இந்த மகிழ்ச்சி என்றும் இவர்களுக்கு நிலைக்கவேண்டும் என்பதுதான்.

உடனே நினைத்தது ஏப்ரஹாம் லின்கன், அவர்களைத்தான்.
நாங்கள் ஸ்ப்ரிங்ஃபீல்ட் (இல்லினாய் மாகாணத்தின் தலை நகரம்) போகும்போது , அவர் குடியிருந்த வீட்டையும்,
அவரது நினைவு நூலகத்தையும்
அவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக அந்த ஊரிலிருந்து கிளம்பிய
ரெயில்வே ஸ்டேஷன், டெப்போ என்று அழைக்கப்படும் இடத்தையும்தான்.
அவரும் அவரது மனைவி மேரி,குழந்தைகள் வளர்ந்த அந்த வீடு இப்போதைய
நிலைப்படி மிகச் சிறியது. அத்தனூண்டு வீட்டுக்குள் 700 நபர்களுக்கு விருந்து
கொடுத்தார்களாம்.
ஒரு சின்ன வரவேற்பறை.
ஒரு விளையாட்டு அறை, ஒரு சாப்பாட்டு அறை கீழ்தளத்திலும், மேல ஏப்ரஹாமுக்கு,மேரிக்கென்று தனித்தனி அறைகளும் இருந்திருக்கின்றன,.
சமையலறை நம் வீடுகளை விடச் சின்னது.
ஒரே ஒரு அம்மணியின் துணையோடு வீட்டை நிர்வாகம் செய்திருக்கிறார்.
நடுவில் ஒரு மகனை எலும்புருக்கி நோய்க்கும் பறி கொடுத்திருக்கிறார்கள்.
மிகுந்த ஏழ்மையான பெற்றோர்கள் வளர்த்த மகனாக் ஏப்.
நல்ல செல்வச் செழிப்பில் வளர்ந்த மேரியைத் திருமணம் செய்ததும், அந்தப் பெண்மணி தன்
கணவரின் சமூக(society) வாழ்க்கைக்கு உண்டான நாகரீகங்களைக் கற்றுக் கொடுத்ததாக எங்களுடன் வந்த கைட்
சொன்னார்.
அவர் அந்த ஊரைவிட்டு ஜனாதிபதி பொறுப்பு ஏற்க, ரயில்வண்டியில் கிளம்பிய இடத்தையும் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். ஸ்ப்ரிங்ஃபீல்டிலிருந்து வாஷிங்டன் வந்து சேர எட்டு நாட்கள் ஆனதாம்!!!!
இப்போது ஒரு எட்டு மணி நேரம் ஆகுமோ என்னவோ:)
அந்த நிலைமையில் அவர் சொன்ன வாக்கியம் எல்லாமனிதர்களும் சமமானவர்கள்.
all men are equal'' .ஏப்ரஹாம் லின்கனைப் பற்றிய படம் ஒன்றும் பார்த்தோம்.
அவர் பிறந்ததாகக் கூறப்படும் சின்ன மரத்தினாலான காபினையும் பார்த்தோம்.
அவர் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த அடிமைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு
மற்றவர்களின் பகைமையையும் சம்பாதித்துக் கொண்டார்.
அமெரிக்காவின் 14 ஆவது ஜனாதிபதியாக அவரைக் குடியரசு கட்சி
தேர்ந்தெடுத்தது.மக்களும் அவரை ஓட்டுப் போட்டு வெள்ளைமாளிகைக்கு அனுப்பினார்கள்.
இத்தனை சம்பவங்களும் எனக்கு நினைவில் ஓடுவதற்குக் காரணம்,
அன்று நான்காம்தேதி இரவில் மக்கள் முகத்தில் பார்த்த நம்பிக்கையும்.,ஆனந்தக் கண்ணீரும் தான்.
1861ஆம் வருடம் ஏப்ரஹாம் லின்கனால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம்,
மார்ட்டின் லூதர் கிங்க் போன்றவர்களால்
ஊட்டம் பெற்று,
இன்று 21ஆம் நூற்றாண்டில் ஒரு கறுப்புத் தோல் கொண்ட அமெரிக்கப் பிரஜை
நாட்டின் தலைமைத்தளபதியாக வருவதற்கு அடிகோலியிருக்கிறது.
கிட்டத்தட்ட 150 வருடங்கள்.
வேறு ஒன்றும் தோன்றவில்லை.
விடிவு என்பது வரக்காத்திருக்கிறது எல்லோருக்கும்.
துன்பத்திலிருப்பவர்கள் எல்லோருக்கும் விடிவு நிச்சயம்.
தீரமும் தன்னம்பிக்கையும்,என்றும் தளரா முயற்சியும் தான் வேண்டும்.
வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்,வாழிய பாரத மணித்திரு நாடு.




8 comments:

ராமலக்ஷ்மி said...

தகவல்களுக்கும் சிரத்தையுடன் தந்திருக்கும் படங்களுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

//விடிவு என்பது வரக்காத்திருக்கிறது எல்லோருக்கும்.
துன்பத்திலிருப்பவர்கள் எல்லோருக்கும் விடிவு நிச்சயம்.
தீரமும் தன்னம்பிக்கையும்,என்றும் தளரா முயற்சியும் தான் வேண்டும்.//

ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க. விடிவு வரட்டும்.

துளசி கோபால் said...

நம்ம இந்திய நாட்டிலும் ஊழலில்லாத ஆட்சி வரட்டுமுன்னு காத்துருக்கோம் வல்லி.

லிங்கன் பிறந்த வீட்டுப் படங்கள் எல்லாம் நல்லா இருக்குப்பா.

நான் வாஷிங்டன் லிங்கன் மெமோரியல் மட்டும்தான் போயிருக்கேன்.

உலகில் பார்க்கவேண்டியது எக்கச் சக்கமா இருக்கு!

வல்லிசிம்ஹன் said...

வரணும்பா.ராமலக்ஷ்மி.
அதேதான். இங்க நடக்கிறதைப் பார்த்தால் நம் ஊரு நினைப்பு வருவதைத் தவிர்க்க முடியவில்லை:(

எல்லோரும் இன்புற்று இருக்கணும்.
அவ்வளவுதான்.

வல்லிசிம்ஹன் said...

துளசி,
இங்க போக்குவரத்து எல்லாம் சுலபமா இருக்கு. நம்ம ஊரில ஒரு இடத்துக்கூ போகணும்னா எத்தனை திட்டம் போடணும். தொந்தரவு இல்லாம(குழந்தைகள் விஷயத்தைச் சொல்கிறேன்)போய் வரணும்னா யோசிக்கணும்.
அதையும் மீறி நாம போகாம இருக்கோமா என்ன:0

கோபிநாத் said...

படங்கள் அனைத்தும் சூப்பர் ;))

\\விடிவு என்பது வரக்காத்திருக்கிறது எல்லோருக்கும்.
துன்பத்திலிருப்பவர்கள் எல்லோருக்கும் விடிவு நிச்சயம்.
\\

அருமையாக சொல்லியிருக்கிங்க...பிடிச்சிருக்கு ;))

வல்லிசிம்ஹன் said...

படங்களும் கருத்துகளும் உங்களுக்கும் பிடித்ததில் சந்தோஷம் கோபி.

துபாயில் இரண்டு வாரமே தங்குவோம் என்று நினைக்கிறேன்.

மதுமிதா said...

ரேர் கலக்ஷன் படங்களா ரேவா. எங்கே கிடைக்குது இந்தப் படங்களெல்லாம் உங்களுக்கு.


ஹிந்தி படிக்கறப்போ 'அமர் லேகிகா ஸ்டோ' என்று ஒரு பாடம் படிச்ச நினைவு வருகிரது.

மிசஸ் ஸ்டோவிடம், அடிமைமுறையை ஒழிக்க இந்தச் சிறியவரா இத்தனை அழகான படைப்பினைக் கொடுத்தார்னு லிங்கன் சொல்வார், லிங்கனும் ஸ்டோவும் கைகுலுக்கிக் கொள்ளும்போது. 'டாம் காகா கி குடியா' என்பது அந்த நூலின் பெயர். எனக்கு அதைப் படிக்க மிகவும் விருப்பம். இதுவரை கிடைக்கவில்லை.. 'Uncle Tom's Cabin' என நினைக்கிறேன்.
எப்படி அப்பெண்னால் அடிமைமுறையை ஒழிக்கும் படடப்பினைக் கொடுக்க நேர்ந்தது என நினைப்பேன். அந்தப் புத்தகம் கிடைத்தால் முதலில் அதை த் தமிழாக்கம் செய்வேன்:)

புது வரலாறு நிகழ்ந்திருக்கிறது. ஒபாமா பற்றியும் எழுதவேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா மது. அன்கிள் டாம்'ஸ் காபின் கதை போலவே ஆப்ரஹாம் லின்கன் பிறந்த வீடும் இருந்தது.
அது வீடுன்னு சொல்லறதுக்கு ஒரு கதவு,ஒரு ஜன்னல்,கூரை ஸ்லேட் ரூஃப்.

எத்தனை சிறிய அளவிலிருந்து எவ்வளவு பெரிய அளவுக்கு வந்திருக்கிறார்.

நம் லால் பகதூர் சாஸ்திரி தான் நினைவுக்கு வந்தது.
குழந்தைகளுக்கு நம் நாட்டு சரித்திரம் கதையாகச் சொல்லிக் கொடுத்தால் இன்னும் தெரிந்து கொள்வார்களோ என்னவோ.