About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Saturday, November 08, 2008

மாற்றம்,ஒபாமா,லின்கன்மற்றும் உழைப்பு

லின்கன் பிறந்த எளிமையான வீடு.
பதினாலாவது ஜனாதிபதியும் அவரது கடைசி மகனும்.

பிரெசிடெண்ட் எலெக்ட் பராக் ஒபாமா.
ஏப்ரஹாம் லின்கன் 17 ஆண்டுகள் வாழ்ந்த வீடு ஸ்ப்ரிங்ஃபீல்ட்

திரு ஏப்ரஹாம் லின்கன் 14 ஆவது ஜனாதிபதி,அமெரிக்கக் குடியரசு


மரக்கட்டைகளை உடைத்துச் சம்பாதித்தவர் நாட்டுக்குத் தலைவர்.
--------------------------------------------------------------------------------------

இப்போது இன்றைய செய்தி ஒபாமாவைச் சுற்றி.
----------------------------------------------------------------

இன்னும் அதிர்வுகள் ஓயவில்லை. சிகாகோவின் கிராண்ட் பார்க்,அதில் நடந்த வெற்றி ஏற்புப் பேச்சு
பார்வையாளர்களின் உணர்ச்சி,கண்ணீர்,குதூகலம்
எல்லாம் ஓய நாளாகும்!!
ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் 44ஆவது பிரசிடென்டாகப் பதவி ஏற்கப் போகும் ஒபாமாவுக்கு
மனம் கனிந்த வாழ்த்துகள்.
எனக்கிருக்கும் ஒரே பிரார்த்தனை இந்த மகிழ்ச்சி என்றும் இவர்களுக்கு நிலைக்கவேண்டும் என்பதுதான்.

உடனே நினைத்தது ஏப்ரஹாம் லின்கன், அவர்களைத்தான்.
நாங்கள் ஸ்ப்ரிங்ஃபீல்ட் (இல்லினாய் மாகாணத்தின் தலை நகரம்) போகும்போது , அவர் குடியிருந்த வீட்டையும்,
அவரது நினைவு நூலகத்தையும்
அவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக அந்த ஊரிலிருந்து கிளம்பிய
ரெயில்வே ஸ்டேஷன், டெப்போ என்று அழைக்கப்படும் இடத்தையும்தான்.
அவரும் அவரது மனைவி மேரி,குழந்தைகள் வளர்ந்த அந்த வீடு இப்போதைய
நிலைப்படி மிகச் சிறியது. அத்தனூண்டு வீட்டுக்குள் 700 நபர்களுக்கு விருந்து
கொடுத்தார்களாம்.
ஒரு சின்ன வரவேற்பறை.
ஒரு விளையாட்டு அறை, ஒரு சாப்பாட்டு அறை கீழ்தளத்திலும், மேல ஏப்ரஹாமுக்கு,மேரிக்கென்று தனித்தனி அறைகளும் இருந்திருக்கின்றன,.
சமையலறை நம் வீடுகளை விடச் சின்னது.
ஒரே ஒரு அம்மணியின் துணையோடு வீட்டை நிர்வாகம் செய்திருக்கிறார்.
நடுவில் ஒரு மகனை எலும்புருக்கி நோய்க்கும் பறி கொடுத்திருக்கிறார்கள்.
மிகுந்த ஏழ்மையான பெற்றோர்கள் வளர்த்த மகனாக் ஏப்.
நல்ல செல்வச் செழிப்பில் வளர்ந்த மேரியைத் திருமணம் செய்ததும், அந்தப் பெண்மணி தன்
கணவரின் சமூக(society) வாழ்க்கைக்கு உண்டான நாகரீகங்களைக் கற்றுக் கொடுத்ததாக எங்களுடன் வந்த கைட்
சொன்னார்.
அவர் அந்த ஊரைவிட்டு ஜனாதிபதி பொறுப்பு ஏற்க, ரயில்வண்டியில் கிளம்பிய இடத்தையும் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். ஸ்ப்ரிங்ஃபீல்டிலிருந்து வாஷிங்டன் வந்து சேர எட்டு நாட்கள் ஆனதாம்!!!!
இப்போது ஒரு எட்டு மணி நேரம் ஆகுமோ என்னவோ:)
அந்த நிலைமையில் அவர் சொன்ன வாக்கியம் எல்லாமனிதர்களும் சமமானவர்கள்.
all men are equal'' .ஏப்ரஹாம் லின்கனைப் பற்றிய படம் ஒன்றும் பார்த்தோம்.
அவர் பிறந்ததாகக் கூறப்படும் சின்ன மரத்தினாலான காபினையும் பார்த்தோம்.
அவர் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த அடிமைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு
மற்றவர்களின் பகைமையையும் சம்பாதித்துக் கொண்டார்.
அமெரிக்காவின் 14 ஆவது ஜனாதிபதியாக அவரைக் குடியரசு கட்சி
தேர்ந்தெடுத்தது.மக்களும் அவரை ஓட்டுப் போட்டு வெள்ளைமாளிகைக்கு அனுப்பினார்கள்.
இத்தனை சம்பவங்களும் எனக்கு நினைவில் ஓடுவதற்குக் காரணம்,
அன்று நான்காம்தேதி இரவில் மக்கள் முகத்தில் பார்த்த நம்பிக்கையும்.,ஆனந்தக் கண்ணீரும் தான்.
1861ஆம் வருடம் ஏப்ரஹாம் லின்கனால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம்,
மார்ட்டின் லூதர் கிங்க் போன்றவர்களால்
ஊட்டம் பெற்று,
இன்று 21ஆம் நூற்றாண்டில் ஒரு கறுப்புத் தோல் கொண்ட அமெரிக்கப் பிரஜை
நாட்டின் தலைமைத்தளபதியாக வருவதற்கு அடிகோலியிருக்கிறது.
கிட்டத்தட்ட 150 வருடங்கள்.
வேறு ஒன்றும் தோன்றவில்லை.
விடிவு என்பது வரக்காத்திருக்கிறது எல்லோருக்கும்.
துன்பத்திலிருப்பவர்கள் எல்லோருக்கும் விடிவு நிச்சயம்.
தீரமும் தன்னம்பிக்கையும்,என்றும் தளரா முயற்சியும் தான் வேண்டும்.
வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்,வாழிய பாரத மணித்திரு நாடு.