Blog Archive

Sunday, November 02, 2008

ஒரு விவாதம்.. அறுபதுக்கும் பத்துக்கும்





ஊருக்குக் கிளம்பப் போகிறொம் என்ற முஸ்தீபுடன் பேரனுடன் ஒரு அதிகாலை
பேச உட்கார்ந்தேன்.
அவன் தன்னுடைய காலை நேரத் தியானம் முடித்துக்கொண்டு, உடல்பயிற்சியும்
செய்த பிறகு ,என்னுடன் வந்து உட்கார்ந்தான்.
அவன் முகத்தில் கேள்வி. ஒன் மோர் அட்வைஸ் செஷனா
என்ற கேள்வி அவன் முகத்தில்.

எங்கள் அறையில் படுப்பதால் எங்களுடனேயே எழுந்திருக்கும் வழக்கம் வந்துவிட்டது.
அவனுக்கு வீட்டுப்பாடங்கள் இல்லாத நாளகப் பார்த்து,
நேரம் இருக்கும் போது, மெஷின் துப்பாக்கி, வான்வெளி, குற்றங்கள் தண்டிக்கப் படவேண்டியவை
என்று ஒரே வேகமாகப் பேசுவான்.
எனக்கோ பயமாக இருக்கும். ஒரு வேளை அதிகமாகக் கற்பனை உலகத்தில் ,இருக்கிறானோ. நிறைய வீர தீரப் புத்தகங்கள் படிப்பதால் இத்தனை தீவிர சிந்தனைகள் வருகிறதோ என்று நினைப்பேன்.
''
பையா, இவ்வளவு உணர்ச்சி வசப்பட வேண்டாம், அது உடலுக்கு நல்லதில்லை.
எதையும் தீர்மானம் செய்வதற்குள் தீர யோசிக்கணும்'' என்று நான் முடிப்பதற்குள்
பாய்ந்து வரும் பதில்கள்.

அப்படித்தான் என் பள்ளிப்பருவத்தையும் அவனுடைய தற்போதைய பாடங்களையும் நேற்று
பேசிக்கொண்டிருந்தோம். '' உனக்கு இவ்வளவு பெரிய புத்தகங்கள் இருந்ததா பாட்டி?
நீ ஆந்தையைப் பற்றி பிராஜெக்ட் செய்திருக்கியா.
ஆப்ரஹாம் லின்கன் பற்றி என்ன தெரியும்.'' என்றேல்லாம் கேட்டபோது நான் என்னுடைய ' நாலாப்பு'
எப்படி இருந்தது என்று யோசித்து முடிந்தவரை சொன்னேன்.

என்னுடைய தேடல்கள் கூகிளில் தான். மற்றும் புத்தகங்களிருந்து இப்போதுதான்
எனக்கு வேண்டும் என்பதைநிறையப் படிக்கிறேன் என்றும் சொன்னேன்

ஆந்தை சாப்பிட்ட உணவை(எலிகள்) எப்படித் திருப்பிக் கக்கிவிடும் என்றும்
அதை (எலியின் எலும்புகளை) அவர்கள்
பரிசோதனைக் கூடத்தில் அறுத்துப் பார்த்ததாகச் சொன்னதும்
எனக்கு வியப்பு தாங்கவில்லை.
''அந்த எலும்புகளை என் லாக்கரில் ஒரு ப்ளாஸ்டிக் பையில் சீல் செய்து வைத்திருக்கிறேன்' என்று
வேறு சொன்னான்.
அது நல்லதில்லையே தொத்து நோய் ஏதாவது வந்துவிடாதா என்றதும், நாங்கள் எல்லோருமே அப்படித்தான் வைத்திருக்கிறோம்,ஒன்றும் வராது''என்றான்.
எதற்கு இதையெல்லாம் தெரிந்து கொள்ளணும் என்றேன். 'சுற்றுச் சூழல் பற்றி தெரிந்து கொண்டால்தானே
நாம் ஒழுங்காகப் பிழைக்க முடியும் என்று பதில் வந்தது.

.
நீ எதையாவது டைசெக்ட் செய்திருக்கிறாயா??
நான்; ஏதோ பூக்களைப் பிரித்துப் பார்ப்போம். ஒரு தவளை, ஒரு காக்ரோச்,ஒரு எலி டைசெக்ட் செய்திருக்கிறேன்''
அதுவும் நான் கல்லூரிக்குப் போனபோதுதான் என்றதும்,

உனக்கு ரொம்ப ஸ்லோ எஜுகேஷன் இல்லை??? என்று வேறு கேட்டான்.
நான் இந்திய கல்விமுறையைச் சோதிக்கும் பாட்டிலிருந்து விடுபட ,அப்படிப் படித்தே நம் ஊரில் ஏகப்பட்ட விஞ்ஞானிகள் வளர்ந்தார்கள்,இருக்கிறார்கள் என்றும்
மேற்கோளோடு எடுத்துச் சொன்னேன்.

நான் மேம்போக்காக , ' பரிசோதனைன்னு சொல்லி கினிபிக் எல்லாம் கொல்லறாங்களே
அது தப்புனு தோணுகிறது' என்று சொன்னதும்.
அப்படிப் பார்க்கப் போனால் ''நீ செடியிலிருந்து பூவைப் பறிக்கிறதும் தப்புதான்.''
பூ செடியிலிருந்தால்தான் அந்தச் செடிக்கு நல்லது. நீ அதப் பறித்து சுவாமிக்கு வச்சு அது வாடிப் போய்க்
குப்பைக்குப் போகிறது.'' என்றான்.

ஒருவேளை மனிதர்களை வைத்துப் பரிசோதித்தால் இன்னும் பலன் கிடைக்குமோ என்னவோ என்று என்னை யோசனையோடு
பார்த்தான். என்னிடம் என்ன பதில் வருமென்று சோதனை செய்கிறான் என்று புரிந்தது:)
எனக்குச் சந்தேகம் வந்துவிட்டது. தாத்தா வாசனை பேரன் பேரில் பட்டிருக்கிறது என்று. அவருக்குத் தான் இந்தச் செடியில் பூக்களைப் பறிக்கிறது எல்லாம் பிடிக்காது.

அவனுடைய எண்ணங்கள், செயல்கள் எல்லாமே வித்தியாசமாகவே எனக்குத் தெரியும்.
கொஞ்ச வருடங்களா இருக்கின்றன அவனுக்கும் எனக்கு இடையில்.
ஐம்பது வருடங்கள்.!!!




41 comments:

வல்லிசிம்ஹன் said...

இது புது இடுகையா இல்லையா? இல்லை என்கிறது தமிழ்மணம்.:)
இந்த ஊரில் நேரம்தான் ஒரு மணி நேரம் முன்னுக்குப் போய்விட்டது என்று நினைத்தேன்

பதிவு பின்னுக்குப் போகுமா? தெரியவில்லையே:)

இலவசக்கொத்தனார் said...

:))

கூகிள் மட்டும் இல்லைன்னா நம்ம நிலமை என்ன ஆகும்ன்னு யோசிச்சுப் பார்த்தீங்களா? :)

வல்லிசிம்ஹன் said...

யோசிக்க முடியலைம்மா கொத்ஸ். ஆன்சர்ஸ்.காம்., ராகா.காம்,இப்ப நீங்க எல்லாம் எழுதுகிற பதிவுகள்,+கூகிள் இவைதான் என் கல்விக்கூடங்கள் ஆகி இருக்கின்றன. கணினி வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்த என் கடைசிப் புதல்வனைத்தான் நினைத்து நன்றி சொல்கிறேன். அதுவும் ஆச்சு ஒரு பதினோறு வருஷம்:) பதினோரு வருமா,பதினாறா??
பத்து +ஒன்று!!

cheena (சீனா) said...

ஐம்பதாண்டு கால தலைமுறை இடைவெளி, இந்தியா மற்றும் அயலகத்தில் உள்ள கல்வி முறைகளில் உள்ள வித்தியாசங்கள், இவை யாவும் நம்மை நம் பேரப்பிள்ளைகளிடம் இருந்து வித்தியாசப்படுத்துகின்றன. தற்கால ஐக்யூ கற்கால ஐக்யூவிலிருந்து பல மடங்கு வளர்ந்து விட்டது. ஆகவே இவை தவிர்க்க முடியாதவைதான்.

பேரனுக்கு நல்வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன் said...

உண்மையெ சீனா சார்.
ஆனால் எனக்குக் கிடைத்த விளையாட்டு நேரம் இவனுக்கு இல்லை. கோடை காலத்தில் குழந்தைகள் விளையாடினதுதான்.
தினம் ஒரு வகுப்பு,பாட்டு,நீச்சல் என்று இவர்கள் நேரம் ஒரு நாளைக்கு 25 மணிநேரம் போதாதோ என்று தோன்றுகிறது.

இவ்வளவையும் மீறித்தான் நாம் அவனிடம் பேசவேண்டி இருக்கிறது:)

ஆயில்யன் said...

//அவன் முகத்தில் கேள்வி. ஒன் மோர் அட்வைஸ் செஷனா
என்ற கேள்வி அவன் முகத்தில்//

ரசித்தேன் சிரித்தேன்! :)))

ஆயில்யன் said...

//உனக்கு ரொம்ப ஸ்லோ எஜுகேஷன் இல்லை??? என்று வேறு கேட்டான்.
நான் இந்திய கல்விமுறையைச் சோதிக்கும் பாட்டிலிருந்து விடுபட ,அப்படிப் படித்தே நம் ஊரில் ஏகப்பட்ட விஞ்ஞானிகள் வளர்ந்தார்கள்,இருக்கிறார்கள் என்றும்
மேற்கோளோடு எடுத்துச் சொன்னேன்

கலக்கலான பதில் ஆனாலும் கூட உண்மையில் ஒத்துக்கொள்ள வேண்டிய விசயமாக படுவது படிப்பு விசயத்தில் நம்ம கொஞ்சம் லேட்டுதான் :(

கோபிநாத் said...

;-))

\\எனக்குச் சந்தேகம் வந்துவிட்டது. தாத்தா வாசனை பேரன் பேரில் பட்டிருக்கிறது என்று. அவருக்குத் தான் இந்தச் செடியில் பூக்களைப் பறிக்கிறது எல்லாம் பிடிக்காது.
\\\

மொத்த பதிவும் அழகு...அதுவும் இந்த வரிகள் கூடுதல் அழகு இல்லையம்மா!! ;))

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஆயில்யன். பையன் ரொம்பப் பொறுமை. புத்திசாலி.

வயசுக்கேத்த பிடிவாதம். நாம் ஏதாவது சொன்னால் ஏண்டா ராமான்னு ரீஆர்க்யுமெண்ட் கொடுக்கறான்.:)

அப்பா சொல்கிறதையெல்லாம் தலை ஆட்டிக் கேட்ட நாங்க எங்க ,இந்தப் பிள்ளை எங்க!!!
உண்மைதான் இங்கே வழங்கப்படும் கல்வி முறை ஆர்வம் கொடுக்கிறது. நம்ம ஊருக்கு எப்போது இந்த வசதி எல்லாம் வரும்னு ஆவலா இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா, கோபிநாத் , நீங்க எங்க சிங்கம் கட்சியா.
பூக்களைத்தான் பறிக்காதீங்கனு பாடிடுவீங்க போலிருக்கே.:)

துளசி கோபால் said...

ஸ்லோ எஜுகேஷந்தான். நாலாப்புலே சமுத்திர குப்தன் சந்திரகுப்தர்களின் பொற்காலம் மரம் நட்டது, குளம் வெட்டுனதுன்னு சரித்திரம் படிச்சோமுன்னு சொல்லலையா?

பூக்களைப் பறிக்கறது எனக்கும்தான் பிடிக்கறது இல்லை.

செடியிலே இருந்தால் சாமிக்குப் பிடிக்காதா?

இப்ப உலகத்தைப் பத்துன பார்வை மாறி வருதுப்பா. சின்னப் புள்ளைகளுக்கு அதுவும் வெளிநாட்டுலே இருக்கும் பிள்ளைகளுக்கு வாழ்க்கையைப் பற்றிய புரிதல் வேறு ரகம்.

நோ உருப்போடுதல். அதனாலேயே உருப்படுவாங்க.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அண்ணன் தங்கைக்கு இதுதான் வேலை.

அசோகன்ல ஆரம்பிச்சு, கௌதம பூடா வரை சொன்னேன்பா. புத்தக சைஸ் கேட்டான். அவன் புத்தகம் அளவு,நான் ஒரு வகுப்பில கூடப் பார்த்ததில்லை.

உனக்கும் எங்க ஹிஸ்டரி தெரியாது. எனக்கும் உங்க கிஸ்டரி தெரியாதுன்னு விட்டு விட்டேன்.

உண்மைதான் நல்லாப் புரிஞ்சுகிட்டுத்தான் படிக்கிறாங்க. சுதந்திரம் அதுதான் ஏ ப்ளஸ் வாங்க வைக்கிறது.

Unknown said...

எங்க வீட்டு விவாதங்கள் நினைவுக்கு வருது:-) டபுள் ஸ்பீக்கர் எங்க வீட்டுல. என் பேச்சு ஆக்ஸென்ட்டும் கிண்டல் செய்யப்படும்.

பேரனுக்கும் (பாட்டிக்கும் ) வாழ்த்துகள்

Geetha Sambasivam said...

பூக்கள் யாருமே பறிக்காமல் இருந்தாலும் உதிர்ந்து தானே போகும், அவை ஒரு நல்ல விஷயத்துக்காகப் பறிப்பதில் தவறே இல்லை. என்றாலும் நம்ம படிப்பு ஸ்லோனு என்னால் ஒத்துக்க முடியலையே??? ம்ம்ம்ம்ம்ம்????

Geetha Sambasivam said...

//இது புது இடுகையா இல்லையா? இல்லை என்கிறது தமிழ்மணம்.:)//

அட, இந்தத் தமிழ்மணம் அப்படித்தான் என்னையும் கேட்குது! எதுக்கும் பப்ளிஷ் கொடுத்து அரை மணி கழிச்சு தமிழ்மணத்தில் சேருங்க. உடனே சேர்க்கப் போனால் நீ எதுவுமே எழுதலையே, ஏன் வந்தேனு கேட்குது! :P:P:P

தருமி said...

பேரனோடு ஆங்கிலத்தில்தான் பேச முடிந்திருக்கும் அப்டின்னு நினைக்கிறேன். எனக்கு மொழிப்பிரச்சனை அதிகமா போச்சு .. அதான் கேட்டேன்...

ராமலக்ஷ்மி said...

பேரனின் புல்லட் கேள்விகளும் பாட்டியின் பாந்தமான பதில்களும் சுவாரஸ்யம்.

ராமலக்ஷ்மி said...

படமும் கார்டும் பதிவுக்குப் பொருத்தம். ரசித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கெ.பிக்குணி..
அவன் என்னிடம் ரொம்ப நிதானமாதான் கேட்கிறான். கேள்விகளுக்குப் பதில் சொல்லும் வேகம் தான் ஆச்சரியமா இருக்கு. இளங்கன்று.:)டபிள் ஸ்பீக்கரும் சேர்ந்தா வம்புதான். எப்படியோ நீங்களும் அவங்களை மாதிரி இன்னர் நெட், ஆடர்(otter) அப்டீனு பேசிடுங்களேன்:))

வல்லிசிம்ஹன் said...

நம்ம படிப்பு ஸ்லோனு சொல்றது ஐம்பது வருஷத்துக்கு முன்னால் கீதா.
அவன் தன் வயசில் நான் என்ன செய்தேன்,தாத்தா என்ன படித்தார் இதெல்லாம் தெரிந்து கொள்ளவே இந்தக் கேள்விகள் கேட்டான்.


மத்தபடி இந்தியா பற்றி அவனுக்கு நல்ல அபிப்பிராயம் தான்.
எனக்கு என் கல்விமுறை பிடித்துதான் இருந்தது.
நல்ல அடிவாரம் இருந்ததால் பிறகு முன்னேறுவது கஷ்டமில்லை.

வல்லிசிம்ஹன் said...

பேரனுக்குத் தமிழ் அழகாகப் பேச வருகிறது தருமி சார்.

விவாதம் என்று வந்தால் ஆங்கிலத்துக்குத் தாவி விடுவான்.
பொறுப்பில்லாமல் அவனைக் கேள்வி கேட்கக்கூடாது.அவனுக்கு எது சரி என்று படுகிறதோ அதில் நிலையாக நின்றுவிடுவான் அவ்வளவுதான்:)
உங்களுக்குச் சிரமம் என்றால் நான் நம்ப மாட்டேன்:))

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ராமலக்ஷ்மி.
நன்றி. கார்டும் கூகிளே:) போட்டொவும் கூகிளே.
இன்னும் பேசினோம்.
குழந்தையைப் பற்றி நிறைய எழுதவும் யோஜனையாய் இருந்தது.

சரியான தம்பட்ட கேசுன்னு பேரு வந்துடும்:)

தருமி said...

வல்லியம்மா ,
(நீங்கள் சார் போட்டால் நான் 'அம்மா' போட்டு ஆகவேண்டியதிருக்கு .. !)

பேச ஆரம்பிக்காத பேத்தி அங்க போய் 26 மாசமாச்சு :( ஆனா இப்போ ஒரே இங்கிலிபீசு...அதுவும் அமெரிக்க உச்சரிப்பு...பாதிதான் புரிஞ்சிது. வர வர அதுவும் குறையுது.

பாட்டி தாத்தா பக்கத்தில் இல்லாத குழந்தைகள் அங்கே தமிழ் பேச கஷ்டப்படுதுகள் அப்டின்னு எனக்குப் படுது. மகள் தமிழில் பேசினாலும் அவள் மகள் ஆங்கிலத்தில்தான் பதில் சொல்கிறாள் ..

வல்லிசிம்ஹன் said...

ஓகே தருமி,
நீங்க விரிவுரையாளர் ஆச்சே.அதுக்குத்தான் சார் சொன்னேன்.
வயசுக்கு இல்ல:)
அதனால் நீங்க என்னை வல்லின்னே கூப்பிடலாம்:)
இந்த வீட்டில பெற்றோர் இருவரும் குழந்தகளிடம் தமிழில் தான் பேசுகிறார்கள். நாங்கள் வரும்போது அது இன்னும் அதிகமாகும்:)
இதே எதிர்த்த வீட்டுக் கும்பகோணம் அம்மா அப்பா பசங்களுக்குத் தமிழ் புரிந்தாலும் பதில் ஆங்கிலத்தில்தான் வழா வழானு பதில் சொல்கிறது.

Kavinaya said...

பேரனுக்கு அன்பான வாழ்த்துகள் வல்லிம்மா.

சதங்கா (Sathanga) said...

நல்ல செய்திகள். பேரனின் புத்திசாதுரியத்திற்கு வாழ்த்துக்கள்.

அறுபதுக்கும் பத்துக்கும் சொல்லிட்டிங்க. எங்க நெலமையே அப்படித் தான் இருக்கு :)) இன்னிக்கு காலை கூட மகனுக்கும், மகளுக்கும் விவாதம். இங்க அடுத்த ப்ரெஸிடென்ட் யாருனு :)) என்னென்னவோ சொல்றாங்க, நமக்கு தான் அரசியல் ரொம்ப தூரமாச்சே :))

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கவிநயா. வாழ்த்துகளுக்கு நன்றி. குழந்தை நன்றாக இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

சதங்கா, எங்க வீட்டில அபிப்பிராய பேதமே இல்லை. சின்னதே சொல்கிறது ஒபாமா பார் பிரசிடெந்ட் அப்டீங்கறான்:)

உங்க வீட்ல ரெண்டு கட்சியா:)))

குடுகுடுப்பை said...

நம் சந்ததி நம்மைவிட அறிவாளிகள் இதில்தான் நாம் பெருமை அடையவேண்டும்.

5 வயது மகளின் அப்பா

வல்லிசிம்ஹன் said...

நம் சந்ததிக்குக் கிடைத்திருக்கும் சுதந்திரம், கிடைக்கும் செய்திகள்
எல்லாமே அவர்களுக்கு அனுகூலமாக இருக்கின்றன.

நம்மக் கட்டுப்படுத்த பெற்றோர் எப்பவுமே ரெடி:)
நாங்கள் உங்களுக்குச் சுதந்திரம் கொடுத்தோம் பேச.
நீங்கள் அதையே கடைபற்றிக் குழந்தைகளை இன்னும் அருமையாக வளர்க்கிறீர்கள்.
அதுதான் வித்தியாசம்.

ambi said...

//தாத்தா வாசனை பேரன் பேரில் பட்டிருக்கிறது என்று. //

:))))

சிங்கத்தை சீண்டலைன்னா பொழுது போகாதே உங்களுக்கு. :p

மெளலி (மதுரையம்பதி) said...

//கொஞ்ச வருடங்களா இருக்கின்றன அவனுக்கும் எனக்கு இடையில்.
ஐம்பது வருடங்கள்.!!!//

முத்தாய்ப்பான வரிகள் வல்லியம்மா.

குழந்தைகளுக்கேயான கேள்விகள்...நிதானமான-முத்தான பதில்கள்...படிக்க ரொம்ப ஸ்வாரஸ்யமா இருந்தது. :)

குமரன் (Kumaran) said...

எனக்கு இப்போது தான் தொடங்கியிருக்கிறது. இந்தச் செப்டம்பரில் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியது முதல் நிறைய நல்ல நல்ல கேள்விகள் கேட்கிறாள். முன்பும் கேட்பாள்; ஆனால் இப்போது கேட்கும் கேள்விகள் மிகுந்துவிட்டன. பொறுமையாகப் பதில் சொல்ல இன்னும் நிறைய பொறுமை வேண்டும். :-)

சில கேள்விகளுக்குப் பதில் சொன்னால் உனக்கு இப்போது புரியாது என்று சொன்னால் கேட்பதில்லை. சொல்லுங்க; எனக்குப் புரியுதா இல்லையான்னு நான் சொல்றேன் என்கிறாள். சில நேரங்களில் 'ஆமாம்பா. புரியலை'ன்னு விடுவாள். பல நேரங்களில் 'இது புரியுதே. ஈசியா தானே இருக்கு?' என்கிறாள். :-)

வல்லிசிம்ஹன் said...

கேட்கட்டும் குமரன்.
குழந்தை மழலைக்குத் தெரிய வேண்டிய நல்ல கருத்துக்களைச் சொல்ல வேண்டியது நம்ம கடமையாச்சே.

பெரியவர்கள் ஆன பிறகு கேள்விகள் குறைந்துவிடுகின்றன. இப்போதைக்குச் சின்னப்பேரன் கண்ல பட்டதையெல்லாம் என்ன என்று கேட்டு நினைவும் வைத்துக்கொள்ளுகிறான்.

அடுத்த முறைஅவன் கேட்டு நான் தவறாகச் சொல்லிவிட்டால் ''டாய்'' என்று சிரிக்கிறான்:)

திவாண்ணா said...

எல்லாரும் எல்லாமும் கத்துக்க முடியாது. அதுக்கு தேவையும் இல்லை. வாழ்க்கைக்கு தேவையான அடிப்படையை கத்துகொண்ட பிறகு ஈர்ப்பு இருக்கிற பாடத்திலே மேலே படிக்கலாம். நான் நாலாவது வரை பள்ளிக்கே போகலை. அதுதான் என் படிப்பிலே பெரிய ப்ளஸ் ன்னு நினைக்கிறதுண்டு.
இப்ப இருக்கிறது ஓவர் எஜுகேஷன்தான். குறைக்கணும். ரொம்ப புத்திசாலியா இருந்து பள்ளியிலே எப்பவுமே முதலா வந்து பர்ன் அவுட் ஆனவங்களை பாத்து இருக்கேன்.
இந்த +2 ல முதல்ன்னு வரவங்க அப்புறமா என்ன ஆனாங்கன்னு தெரிஞ்சுக்க ரொம்பவே ஆவல். நிறைவேறுகிற வழிதான் புரியலை.

திவாண்ணா said...

படைக்கப்படுகிற எல்லா பொருட்களுக்குமே ஒரு உத்தேசம் இருக்கு. மலர்களுக்கு இறைவனடி சேருகிறதுதான் உத்தேசம். அது தப்பில்லையே? செடியிலே இருந்தா வாடாதா? முக்காவாசி பூச்செடிகளோட இனப்பெருக்கமும் பூக்கள் வழியா இல்லையே!
கன்னுக்குட்டிக்காக பசு பால் சுரந்தா நாம் ஏன் அதை குடிக்கிறோம்?

தி. ரா. ச.(T.R.C.) said...

@வல்லியம்மா இன்னிகூட லஸ் சர்சு ரோடு வழியாக வரும்போது த்ங்கமணீ இதுதானே வல்லியம்மா வீடு என்று சந்தோஷபட்டார்கள்.
சிங்கத்தை சீண்டலைன்னா பொழுது போகாதே உங்களுக்கு. :ப்
சிங்கம் எதோ உங்களைப் போல பதிவு போடலைன்ன என்ன. அவர்தான் எங்களுக்கு ரோல் மாடல். சாதுவான சிங்கம்.கல்யாணத்தின்போது நீங்க இருந்திருந்தா அப்படியே பொடி நடைலே வந்து இருப்பீங்க!

வல்லிசிம்ஹன் said...

அவன் புத்திசாலின்னு சொல்றதைவிட,ரொம்ப வாண்டரிங் புத்தி:)

அதனால ஃபோகஸ் செய்ய வைக்கணும்னு கேள்வி கேட்க்கப்போய் இவ்வளவு ஆர்குமென்ண்ட் வாசுதேவன்:)
எனக்கு 11ட்த் வகுப்பில முதலா வந்தெல்லாஅம் வழக்கமில்லை. அதனால நான் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லலை:)

வல்லிசிம்ஹன் said...

அது பெரிய வ்விஷயம். இவனுக்குப் பத்துவயதில் புரிய வஇக்க எனக்கு ,அவ்வளாவாப் போதாது.
இட்டற்காக்வ்வாவது அவன் இந்தியாவில் நம் முறைத் தெரிந்தவர்ரளிடம் கற்றுத் தெளிய வேண்டும் என்றும் எனக்கு ஆசை.
நல்ல குழந்தைகள் ,. அவனுக்கு உபநயனம் செய்யும் போதாவது, ஒரு பெரியவரை வைத்து தமிழில் ஆன்மீக விஷயங்களைச் சொல்ல ஆசை.
பார்க்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

தி.ரா.ச நீங்கள் எங்க வ்ஈட்டு வ்அழியாப் போனது ரொம்ப சந்தோஷம். புது ம்ஆமியாருக்கும் மாமனாருக்கு வாழ்த்துகள்.. பொடியாவது நடையாவது.
அங்கேயேதான் இருந்திருப்பேன்ன். உங்க வீட்டுக் கல்யாணக்காப்பி எல்ல்லாம் விட்ட்டுக் கொடுக்க முடியுமா:)

சுந்தரா said...

இங்கேயும் அதே கதைதான் வல்லிம்மா, என்னதான் படிச்சியோ,ஒண்ணுமே தெரியலன்னு நாளைக்கு ஒருதரமாவது பேச்சுக்கேட்கவேண்டியிருக்கிறது பிள்ளைகளிடம் :)

பூக்களைப் பறிப்பது தப்புன்னு பத்துவயசில் நமக்கெல்லாம் யோசிக்கத் தோணியிருக்குமா என்ன?
இக்காலக் குழந்தைகள் எல்லாம் ஞானக்குழந்தைகள்.