Blog Archive

Wednesday, October 27, 2021

அக்டோபர் 31 2008

கூகிளாரின் ஹேலோவீன்

கடையில் ஒரு தனித்தலை.
தீபாவளிக்குச் செய்த கோதுமை அல்வா. ஆயில்யனுக்குத் தனியே எடுத்து வச்சாச்சு.:)
செயிண்ட் லூயிஸ் ஆர்ச். ஆடுவது போலத் தோன்றியது.ஆடியதா இல்லை பிரமையா???
மிஸ்ஸீஸிப்பி நதியில் உலாப் போகக் காத்திருக்கும் ஓடங்கள்.
வீட்டு வாசலில் நிறம் மாறிய மரங்கள்.
பேரன் தயாரித்த ப்ராஜெக்ட். ஒரு புத்தகத்துக்கு விளம்பரம் எழுதினான். அதற்கான லே அவுட், மற்றும் அலங்காரங்கள்.
அவன் பெருமையில் நான் குளிர்காய்கிறேனோ!!!
Posted by Picasaசிங்கம் தயாரித்த ஆடும் குதிரை.
மீண்டும் பொட்டிகளைக் கட்டும் வேளை வந்தாகிவிட்டது. பத்து நாளில் அமீரகம் போய்ச் சேரணும்.
அலையும் காற்று. குளிரும்
ஆரம்பித்து விட்டது. காற்று சத்தம் இரவுத்தூக்கத்தைக் கெடுக்கிறது.
ஊருக்குப் போயேன் என்று சொல்கிறதோ:)
இன்று ஹாலோவீன் என்று சொல்லப்படும் கொண்டாட்டம். வீட்டுக்கு வீடு பேய்களின், கல்லறைகளின், வடிவங்கள். தொங்க விடப்பட்ட ஜாக் ஓ லாண்டர்ன். பரங்கிக்காயை அலங்கரித்து இந்த வீட்டு வாசலிலும் வைத்திருக்கிறது. நம்ம ஊர் பொங்கல் நாள் நினைவுக்கு வருகிறது.
இங்கே இந்தப் பழக்கம் வேண்டாத மூடநம்பிக்கைகளை விரட்டவும், அறுவடை முடிந்து வரும் போது நேடிவ் அமெரிக்கர்கள் வழிபறிகொள்ளை நடத்தாமல் இருக்க பந்தங்களைக் கொளுத்தி அவர்களை விரட்டியதாகவும் ஒரு கதை. ஊரைச் சுற்றி ஒரே கலகலப்பு.
ராஜகுமாரிகளும், க்ளியோபாட்ராக்களும், ஃப்ரான்கன்ஸ்டீன் களும், எலும்புக்கூடுகளும் வலம் வருகிறார்கள். நடு நடுவே சாத்தான்களும், டெவில்களும் உண்டு.
அம்மாக்களும் வேஷமிட்டு குழந்தைகளோடு வருவது புதிதாக இருக்கிறது. மணப்பெண் வேஷத்தில் ஒரு பெண்குழந்தை அதனுடைய அப்பாவோடு வந்தது. இந்திய அம்மாக்களுக்கும் குறைவில்லை. பாதுகாப்புக்காக என்று நினைக்கிறேன். அவர்களும் புதுமையாக வேடங்கள் தரித்து வந்தார்கள்:) இந்த வருடம் எப்போதுமில்லாமல் நல்ல வானிலை. அவ்வளவு குளிர் இல்லை. அதுவே இந்தக் குழந்தைகளுக்கு உற்சாகம். நாங்களும் பேரனுடைய பள்ளிக்கு அந்த ஊர்வலத்தைப் பார்க்க்ப் போயிருந்தோம். . நம்ம ஊர் நவராத்திரி சுண்டல், இங்க ட்ரிக் ஆர் ட்ரீட். ஸ்வீட்ஸ். கிட்டத்தட்ட ஐம்பது அறுபது குழந்தைகள் வந்து போயாச்சு. எல்லாவற்றுக்கும் கை நிறைய சாக்கலேட் கொடுத்தாகிவிட்டது. பக்கத்து வீட்டுக்கு மட்டும் ஒரு குழந்தையும் போக வில்லை. அங்கே ரெக்ஸ்(ஜெர்மன் ஷெப்பர்ட்) யாரையும் உள்ளே விடவில்லை. குரைத்து விரட்டி விட்டது. பாவம் பாட்டி. ஜன்னல் வழியாகப் பார்த்துக் கையசைத்துக் கொண்டிருந்தார். . போட்டோக்கள் அடுத்த பதிவில். தொடரும்:)

38 comments:

ராமலக்ஷ்மி said...

எங்கள் ஊர் அல்வா உங்களுக்குப் பிடிக்குமா:)?

//இன்று ஹாலோவீன் என்று சொல்லப்படும் கொண்டாட்டம்.//

ஆமாம், பிள்ளைகளுக்கு இந்த நாள் வந்தாலே கொண்டாட்டம்தான். என் தங்கை இருப்பது செயிண்ட் லூயிதான். வீட்டு முகப்பை நன்கு அலங்கரித்து குழந்தைகளுக்குக் கொத்துக் கொத்தாக சாக்லேட் எல்லாம் தொங்க விடுவாள். பெரியவன் வேடமிட்டுக் கொண்டு ஜாலியாகக் கிளம்பி விடுவான் எல்லோரையும் மிரட்ட அசத்த. சின்னவன் கூட இவளும் போயாக வேண்டும். இந்த வருடம் என்ன வேடம் தரித்தார்கள் என்று இனிதான் தெரிய வரும்.

ராமலக்ஷ்மி said...

சொல்ல மறந்து விட்டேனே. ஆடும் குதிரை அற்புதம். பாராட்டுக்களைச் சொல்லுங்கள்.

//அவன் பெருமையில் நான் குளிர்காய்கிறேனோ!!!//

பேரன் பெருமையில் பெருமிதம் அடையும் உரிமை முதலில் பாட்டிகளுக்குதான்:)!

இலவசக்கொத்தனார் said...

சிங்கத்தின் குருத ஜூப்பரு!!

அதுக்குள்ள கிளம்பறீங்களா? :(

ஆயில்யன் said...

//தீபாவளிக்குச் செய்த கோதுமை அல்வா. ஆயில்யனுக்குத் தனியே எடுத்து வச்சாச்சு.:)
//

ஹய்ய்ய்ய்! நன்றி! நன்றி!நன்றி!


அழகாய் இருக்கிறது ஆடும் குதிரை!

ஆஹா! அடுத்து அமீரகமா வாழ்த்துக்கள்!

//பாவம் பாட்டி. ஜன்னல் வழியாகப் பார்த்துக் கையசைத்துக் கொண்டிருந்தார்.
//

நம்ம ஊருக்கார பாட்டியா இருந்திருந்தா “எலேய் தம்பி அதை புடிச்சு கொல்லையில்ல கட்டுடா வர்றவங்கள பார்த்து குலைச்சுக்கிட்டே இருக்குன்னு அதட்டியிருப்பாங்க “

:))

Thamiz Priyan said...

அல்வா முந்திரிப்பருப்பு எல்லாம் போட்டு சூப்பரா டேஸ்ட்டா இருக்கும் போல இருக்கே.. அதென்ன ஆயில்யனுக்கு மட்டும் ஸ்பெஷல்.. எங்களுக்குக் கிடையாதா?.. ;)

பேரனோட ப்ராஜெக்ட் பாட்டிக்கு பெருமை தானே...:)

துளசி கோபால் said...

தேர் கிளம்புதா? நிலைக்கு எப்போ வருமுன்னு சொல்லுங்க.

குதிரை அட்டகாசம். அதுக்குப் பெயர் வச்சாச்சு. மாயக்குதிரை:-)

நியூஸிக்கு, அல்வா அரைக்கிலோ பார்ஸேல்.........................

நம்ம வீட்டுக்கும் ஹாலோவீனுக்குன்னு யாரும் வரலைப்பா. ஜிகேயைப் பார்த்தே பயந்துட்டாங்க போல:-)))))


இங்கே ஒரு பக்கம் ஸ்ட்ரேஞ்சர் டேஞ்சர்னு சொல்லிக்கிட்டு, ஹாலோவீனுக்குத் தெரியாத ஏரியாவில் போகும் ஆபத்தை விளக்குவதனால் இருக்கலாம்.

இன்னொரு பக்கம், அமெரிக்கப் பழக்கம் நமக்கு ஏன்?ன்னு ஒரு கூட்டம் சொல்லுது.

ஆனால் கடைக்காரர்கள் மட்டும் முகமூடி, இன்னபிற ஐட்டங்கள் வித்துக்கிட்டு இருக்காங்க.

பேரன் மட்டுமில்லை, பக்கத்து வீட்டுப் பசங்க பண்ணின ப்ராஜெக்டும் நமக்குதான் பெருமை:-)

Geetha Sambasivam said...

ஒரு கிலோவுக்குக் குறையாமல் அல்வா எனக்கும் எடுத்துவைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஆயில்யன் என்ன ஸ்பெஷல்?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்.........

சதங்கா (Sathanga) said...

வல்லிம்மா,

அட்டகாசம் போங்க. அல்வா, ஹாலோவீன், பேரனின் ப்ராஜக்ட், சிங்கத்தின் குதிரை ... என எல்லாம் படங்களோட போட்டு அசத்திட்டீங்க.

//நம்ம ஊருக்கார பாட்டியா இருந்திருந்தா “எலேய் தம்பி அதை புடிச்சு கொல்லையில்ல கட்டுடா வர்றவங்கள பார்த்து குலைச்சுக்கிட்டே இருக்குன்னு அதட்டியிருப்பாங்க “
//

ஹா ஹா ... ரசிக்க வைக்கும் வரிகள் ஆயில்யன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும்மா ராமலக்ஷ்மி.
அது எங்க ஊரும் தானே, அதனால் ரொம்பவே பிடிக்கும்.
நெல்லையில் தாத்தா வீடு இருந்த போது, தாமிரபரணியும், அல்வாவும் ருசிக்காத நாளே கிடையாது:)

இப்ப அந்தக் கடை மாதிரி நிறைய கடைகள் வந்துவிட்டதாமே:(

உங்க தங்கை செயிந்ட் லூயிஸ்ல இருக்காங்களா. தெரியாமப் போச்சே.
குழந்தைகள் நல்லா சந்தோஷமா இருந்தாங்க.

வல்லிசிம்ஹன் said...

கட்டாயம் அவர் கிட்டச் சொல்றேன். ரொம்ப சந்தோஷப்படுவார் ராமலக்ஷ்மி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கொத்ஸ்.
ஊரை விட்டுக் கிளம்பும்போதே இவர்கள் எல்லோரிடமும் நாங்கள் அவரவர்கள் இடத்தில் எத்தனை நாட்கள் இருப்போம் என்று காண்ட்ராக்ட் போட்டுதான் கிளம்பினோம்.
நோ எக்ஸ்டன்ஷன்:)
அவசியமும் இல்லை. குளிர் வேற வந்துவிட்டது. விடு ஜூட்தான்!!

வல்லிசிம்ஹன் said...

பக்கத்து வீட்டுப் போலந்து பாட்டி, மகா தைரிய சாலி. ஆங்கிலம் அவ்வளவு வராது.
ஆயில்யன்,

அவங்க அந்த ரெக்ஸைக் கொஞ்சுவதைப் பார்க்கணும். அதுவும் அவங்களும் ஒரே உயரம். செல்லக் கன்னுகுட்டி மாதிரி அவங்க சொன்ன பேச்சைக் கேட்டு அடங்கி நடக்கும்.

அவங்க வீட்டுக்கும் நம்ம வீட்டுக்கும் நடுவீல இருக்கிற வேலி பக்கத்தில கூட நாம் போக முடியாது. அது பாய்ந்து வருகிற வேகம் குலை நடுங்கும்.
குழந்தைகள் வந்ததும் அந்தப் பாட்டி ரெக்ஸை உள்ளே வைத்துப் பூட்டிவிடுவார். பசங்க போனதும் தான் வெளில வரும்.

கட்டிப் போடற வேலையெல்லாம் கிடையாது:)

வடுவூர் குமார் said...

பத்து நாளில் அமீரகம்
வாங்க வாங்க,அல்வா அதுவரைக்கும் தாங்குமா? :-)

வல்லிசிம்ஹன் said...

வாங்கமா தமிழ் பிரியன்.

ஆயில்யன் முதல்லியே ரிசர்வ் செஞ்சுட்டாரு. அதான் அவருக்குன்னு சொன்னேன்.:)
கட்டாயம் பேரனோட ப்ராஜெக்ட் பாட்டிக்குப் பெருமைதான்.
பத்து வயசில இவ்வளவு முயற்சி போட வைக்கிறாங்களே இந்த ஊரிலன்னு திகைப்பா இருக்கு.
நம்ம ஊரிலயும் இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

ஆ.அப்படியெல்லாம் இருக்காது. பாவம்ல ஜிகே.
துளசி ,நீங்க சொல்றது கரெக்ட் தான். புதுசா ,தனியா இருக்கிற வீட்டுக்கெல்லாம் போகக் கூடாதுன்னு குழந்தைகளுக்கு எச்சரிக்கை உண்டு.
நம்ம பொண்ணு இந்தப் பையனை அனுப்பிட்டு கௌரவமா கொஞ்ச நேரம் பின்னாலியே போய்ப் பார்த்து விட்டு வந்தாங்க.
அவனுக்கு அது பிடிக்காது. ஐ கன் டேக் கேர் ஆஃப் மைசெல்ஃப்:)

இந்தப் பழக்கம்,ஹாலோவீன் ஐரொப்பாலயும் இங்கயும் மட்டும்தான் போல.
நம்ம ஊரில ,சென்னைல அமர்க்களப்படும்:)) ஃபாரின் பண்டிகையாச்சே!!

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கீதா. ஒரு கிலோ போதுமா.:)

நாமதான் கற்பனைல அல்வா சாப்பிட்டு விடுவோமே. கொடுத்துட்டாப் போச்சு.

வல்லிசிம்ஹன் said...

நன்றி சதங்கா. ஊருக்குப் போகணும். இங்க நடக்கிறதையும் பார்க்கணும். அதை விட அதைப் பற்றி எழுதணும்.

தங்கவேலு மாதிரி பைரவனைத் தெரியுமான்னு கேக்க வைக்கணும். அதாம்ப்பா நமக்கு வாழ்வின் லட்சியம்:))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் குமார்.

ஓஹோ அப்டிப் போகிறதா கதை,. நம்மை வரவேற்க இன்னோரு ஆளு அங்க வந்தாச்சா:)

பேப்பர் அல்வா தானம்மா. கெட்டே போகாது:)

கோமதி அரசு said...

மலரும் நினைவுகள் அருமை.
பழைய பதிவும் அதில் சொன்ன செய்திகளும் அருமை.
சார் செய்த ஆடும் குதிரை அழகு.

படங்கள் எல்லாம் அருமை.

பழைய பின்னூட்டங்கள் மிக அருமை.

Geetha Sambasivam said...

ஆஹா! இனிமையான நினைவுகள். இன்னிக்கு முகநூலிலும் உங்கள் படத்தைப் பார்த்தேன். இப்போவும் அங்கே ஹாலோவீன் தினம் வந்திருக்கும் இல்லையா?

ஸ்ரீராம். said...

சிங்கத்தின் கைவண்ணம் சூப்பர். ராமலக்ஷ்மி சொல்லி இருப்பதுபோல பேரனின் பெருமையில் முதல் பங்கு பாட்டிக்குதான். பழைய கமெண்ட்ஸோடயே மீள்பதிவா?

Geetha Sambasivam said...

மறுபடியும் போய்ப் படிச்சேன்.குதிரை பறந்து வந்துவிடும்போல் அழகு! அதே சமயம் சிங்கத்தை நினைத்துப் பெருமையும்! என்ன அழகான அருமையான கைத்திறன்! நாம் பதிவு எழுத ஆரம்பிச்ச அந்த நாட்களின் நினைவுகளும் கூடவே வருகின்றன.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமையாக உள்ளது.நலமா? மீள் பதிவு..அதுவும் சரியாக 2008 அக்டோபரில் எழுதிய பதிவு நல்ல நடையுடன் சுவாரஸ்யமாக இருக்கிறது. உங்கள் பழைய பதிவுகளை நான் படித்ததில்லை. இப்போது வந்திருக்கும் எங்களுக்காக இப்படி எடுத்துப் போடுங்கள். .படிக்கலாம்.

அல்வா நல்ல கலர். பார்க்கவே ஜோராக உள்ளது. தங்கள் கணவரின் தயாரிப்பான ஆடும் குதிரையும் நன்றாக உள்ளது. நல்ல அமைப்புடன் செய்திருக்கிறார். பேரனுக்கு உதவும் தங்களுக்கு பாராட்டுக்கள். கருத்துரைகளை கூட விடாமல் படித்து ரசித்தேன். சுவாரஸ்யமாக இருந்தது. நேரம் இருக்கையில் உங்களது மலரும் நினைவாக இவ்விதமான பதிவுகளையும் உலா வரச் செய்யுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆடும் குதிரை அருமை...

வெங்கட் நாகராஜ் said...

கொண்டாட்டங்கள் சிறப்பு. பக்கத்து வீட்டு பாட்டி - பாவம் தான்.

அமீரகம் நோக்கி.... நல்லதே நடக்கட்டும்.

நெல்லைத் தமிழன் said...

ஆடும் குதிரை அட்டஹாசம். அதுக்கு ராமலக்ஷ்மி மேடம் பாராட்டுகளைச் சொல்லுங்கள் என்று சொன்னதற்கு நீங்க சொல்கிறேன் என்று எழுதினதைப் படித்தபோது, இது மீள் பதிவோ என்று குழம்பிவிட்டேன்.

அல்வா..... ஆஹா.. பார்க்கவே மிக அருமையா இருக்கே... நெல்லையில் (ஜங்ஷன்ல 3 கடை, பாளையங்கோட்டைல 1 கடை, டவுன்ல 1 கடை - அல்வா சும்மா ஜம்முன்னு இருக்கும். இப்போதும் கடைகள் இருக்கின்றன) அல்வா எப்போதுமே அருமை. ஆமாம் காரத்தில் என்ன பண்ணினீங்க?

அமீரகம் நல்லாவே இருக்கும். ஃபெப்ருவரி வரை கவலை இல்லை. வெளியே போகமாட்டீர்கள் என்றால் வெயில் காலத்தையும் ஓட்டிவிடலாம்.

Geetha Sambasivam said...

நெல்லைத்தமிழரே! பதிவு வந்த தேதியையும் வருடத்தையும் பாருங்கள். அக்டோபர் 2008. இது மீள் பதிவே தான். அப்போப் போட்டிருந்த கருத்துரைகளோடு மறுபடி வெளியிட்டிருக்கிறார். :)))))

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.

உங்க பதிவுதான் என் பழைய நினைவுகளைக்
கொண்டு வந்தது. நன்றி.
இங்கே தான் இருக்கு அந்த குதிரை.
இன்னும் சில படைப்புகளோடு.

அக்டோபர்னு தேடினால் நிறைய பதிவுகள்
வருகிறது.
நம் நட்புகள் எத்தனை அருமை.
இப்போது ஆயில்யன், கார்த்திகா வாசுதேவன்,இன்னும்
பலர் காணவே முடியவில்லை.
அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,

படு உத்சாகமாக ஹாலோவீன் வந்து கொண்டிருக்கிறது.
வீதி நடமாட்டம் குறைந்தாலும் வீடுகளில்
ஆவி நடமாட்டம் அதிகம்:)

பல குழந்தைகள் வளர்ந்து வெளி மானிலங்களுக்குப்
போய் விட்டார்கள்.
புதுக் குழந்தைகள் தான் நடத்த வேண்டும்.

அப்போதிலிருந்து இப்போதுவரை தொடர்பில் இருப்பது
நான்,நீங்கள்,கோமதி அரசு இன்னும் சிலர்.
எல்லோரையும் முக நூலில் பார்க்கலாமோ
என்னவோ.!! நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
ஆமாம் பா. பின்னூட்டங்களைப் பார்க்கும் போது
பழைய நட்புகளையும் பார்க்கிறேன்.
13 வருடங்களுக்குப் பிறகு பதிவுலகம் நிறைய மாறிவிட்டது.

அதனாலயே அவர்கள் எழுத்தையும் பதிந்தேன்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

என்ன அழகான அருமையான கைத்திறன்! நாம் பதிவு எழுத ஆரம்பிச்ச அந்த நாட்களின் நினைவுகளும் கூடவே வருகின்றன."


அன்பின் கீதாமா,
மீள் பதிவை மீண்டும் அன்புடன் படித்ததற்கு நன்றி.
உண்மைதான் அந்த நாள் ஞாபகம் தான் நமக்கெல்லாம்.
நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
நலமுடன் இருங்கள்.

"பதிவு அருமையாக உள்ளது.நலமா? மீள் பதிவு..அதுவும் சரியாக 2008 அக்டோபரில் எழுதிய பதிவு நல்ல நடையுடன் சுவாரஸ்யமாக இருக்கிறது. உங்கள் பழைய பதிவுகளை நான் படித்ததில்லை. இப்போது வந்திருக்கும் எங்களுக்காக இப்படி எடுத்துப் போடுங்கள். .படிக்கலாம்.""

உங்களையும், நெல்லைத் தமிழனையும் நினைத்துக் கொண்டுதான்
பதிவிட்டேன்.

சந்தோஷ நாட்களை நினைக்க வேண்டும். அது மனதிற்குச் சிறிதாவது ஆறுதல்
தரும்.
எத்தனையோ வருடங்களை நொடியில் கடந்த மனம்
இப்போது தேங்கி நிற்பதைத் தடுக்கவே
இந்த எழுத்து.
நீங்களும் தவறாமல் வந்து பின்னூட்டம் இடுவது மிக நெகிழ்ச்சி. அந்தத் தோழமை தான் நிலைத்து நிற்கும்.
வரும் காலம் ஒளி பெற வேண்டும். அன்பு பெருக வேண்டும்.
நன்றி மா. வாரம் ஒரு முறை மீள் பதியப்
பார்க்கிறேன்:))))

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன். கை நிறைய திறன் அவருக்கு. கலைச்சின்னங்களை விட்டுச் சென்றிருக்கிறார்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
நலமுடன் இருங்கள்.

குதிரை எல்லோரையும் கவர்ந்து விட்டது.
நன்றி மா.
பக்கத்து வீட்டுப் பாட்டி இப்போது இல்லை. அவருடைய பெண் வேறு ஒரு நாயுடன்
இங்கே இருக்கிறார்.
அந்த ரெக்ஸின் மரணம் பாட்டியை மிகவும் பாதித்து
அவர் வெளியே வரவே இல்லை.

வல்லிசிம்ஹன் said...

"ஆடும் குதிரை அட்டஹாசம். அதுக்கு ராமலக்ஷ்மி மேடம் பாராட்டுகளைச் சொல்லுங்கள் என்று சொன்னதற்கு நீங்க சொல்கிறேன் என்று எழுதினதைப் படித்தபோது, இது மீள் பதிவோ என்று குழம்பிவிட்டேன்."

மீள் பதிவேதான். லேபலிட மறந்து விட்டேன் மா .
அன்பு முரளி,
நலமுடன் இருங்கள்.
அமீரகத்தில் இருந்தவர் லண்டனுக்குப் போய்,
இப்போது ஜகார்த்தாவில் ஸ்ரீனிவாசன் அருளுடன்

இருக்கிறார்.
13 அவருடங்கள் துபாய் குளிர், வெய்யில் எல்லாம் அனுபவித்தோம்.
இப்போது நிறைய மாறி விட்டது.

அல்வா எனக்கு மிகவும் சுலபமாக செய்யவரும் இனிப்பு.
வையாளி மாதிரி முன்னும் பின்னும் சென்று வருகிறேன்.
நன்றி மா.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா முதலில் பதிவு வாசித்ததும் என்னாச்சு அம்மா ஊருக்குக் கிளம்புகிறார்களா? இந்தக் குளிரிலிருந்து கொஞ்சம் அப்பால் என்று நினைத்தேன் அதன் பின் தெரிந்ததுமீள் பதிவு என்று

ஹல்வா அட்டகாசம் போங்க!!! தின்னவேலி ஹல்வா போல!!!!

பேரனின் பெருமை கண்டிப்பாகப் பாட்டிக்கு உண்டு. நோ குளிர்காய்தல் எல்லாம்.. ஏன் தாத்தாவிற்கும் உண்டு!!

எல்லாவற்றையும் தூக்கி அப்பால் போட்டது அந்த ஆடும் குதிரை!!! என்ன கலை வண்ணம்!! அயல்நாட்டுக்காரர் பார்த்தால் கண்டிப்பாக ம்யூசியம் கு விலை பேசிடுவாங்க! அந்த அளவு பெர்ஃபெக்ஷன்!! ஹைலி டேலண்டட்!!! குதிரையை ரொம்ப ரசித்தேன்

ஹாலோவீன் கிட்டத்தட்ட நம்ம ஊர் போலத்தான் என்று தோன்றும். அந்தந்த ஊருக்கு ஏற்ப கொஞ்சம் மாறுகிறது அவ்வளவுதான்

கீதா

வல்லிசிம்ஹன் said...

@ கீதா சாம்பசிவம்,
:0) கரெக்ட். ஹோல்சேல் காப்பி பேஸ்ட் பதிவு.:)நான் மீள் பதிவு ந்னு
போட்ட லேபல் வரவில்லை!!!

வல்லிசிம்ஹன் said...

எல்லாவற்றையும் தூக்கி அப்பால் போட்டது அந்த ஆடும் குதிரை!!! என்ன கலை வண்ணம்!! அயல்நாட்டுக்காரர் பார்த்தால் கண்டிப்பாக ம்யூசியம் கு விலை பேசிடுவாங்க! அந்த அளவு பெர்ஃபெக்ஷன்!! ஹைலி டேலண்டட்!!! குதிரையை ரொம்ப ரசித்தேன்"""



அன்பின் கீதா ரங்கன்,

அப்பாடி. ஒரு வழியா பிரச்சினை முடிஞ்சுதா!!!!
நீங்க வராமப் பதிவில காத்து ஆடிக் கொண்டிருந்தது.:)
டாப் ஆர்டிஸ்ட் அப்பா.!!
அத்தனையும் உழைப்பு.
பசங்க அப்பாவுக்கு வேண்டும் என்கிற அத்தனி டூல்ஸையும்
வாங்கிக் கொடுத்தார்கள்.
அந்த மரத்துக்கு வேண்டும் என்கிற வுட் ஃபினிஷ் இங்கேயிருந்து வாங்கிச் செல்வோம்.
எல்லாம் அப்படியே கிடக்கு.ரொம்ப தாங்க்ஸ் டா.