About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Friday, October 31, 2008

பயணம் முடியும்,தொடங்கும் நேரம்

கூகிளாரின் ஹேலோவீன்


கடையில் ஒரு தனித்தலை.தீபாவளிக்குச் செய்த கோதுமை அல்வா. ஆயில்யனுக்குத் தனியே எடுத்து வச்சாச்சு.:)
செயிண்ட் லூயிஸ் ஆர்ச். ஆடுவது போலத் தோன்றியது.ஆடியதா இல்லை பிரமையா???

மிஸ்ஸீஸிப்பி நதியில் உலாப் போகக் காத்திருக்கும் ஓடங்கள்.


வீட்டு வாசலில் நிறம் மாறிய மரங்கள்.பேரன் தயாரித்த ப்ராஜெக்ட். ஒரு புத்தகத்துக்கு விளம்பரம் எழுதினான். அதற்கான லே அவுட், மற்றும் அலங்காரங்கள்.

அவன் பெருமையில் நான் குளிர்காய்கிறேனோ!!!
Posted by Picasaசிங்கம் தயாரித்த ஆடும் குதிரை.
மீண்டும் பொட்டிகளைக் கட்டும் வேளை வந்தாகிவிட்டது. பத்து நாளில் அமீரகம் போய்ச் சேரணும்.

அலையும் காற்று. குளிரும்
ஆரம்பித்து விட்டது. காற்று சத்தம் இரவுத்தூக்கத்தைக் கெடுக்கிறது.
ஊருக்குப் போயேன் என்று சொல்கிறதோ:)

இன்று ஹாலோவீன் என்று சொல்லப்படும் கொண்டாட்டம்.
வீட்டுக்கு வீடு பேய்களின், கல்லறைகளின், வடிவங்கள்.
தொங்க விடப்பட்ட ஜாக் ஓ லாண்டர்ன்.
பரங்கிக்காயை அலங்கரித்து இந்த வீட்டு வாசலிலும் வைத்திருக்கிறது.
நம்ம ஊர் பொங்கல் நாள் நினைவுக்கு வருகிறது.

இங்கே இந்தப் பழக்கம் வேண்டாத மூடநம்பிக்கைகளை விரட்டவும், அறுவடை முடிந்து வரும் போது நேடிவ் அமெரிக்கர்கள் வழிபறிகொள்ளை நடத்தாமல் இருக்க பந்தங்களைக்
கொளுத்தி அவர்களை விரட்டியதாகவும் ஒரு கதை.
ஊரைச் சுற்றி ஒரே கலகலப்பு.

ராஜகுமாரிகளும், க்ளியோபாட்ராக்களும், ஃப்ரான்கன்ஸ்டீன் களும், எலும்புக்கூடுகளும் வலம் வருகிறார்கள். நடு நடுவே சாத்தான்களும், டெவில்களும் உண்டு.

அம்மாக்களும் வேஷமிட்டு குழந்தைகளோடு வருவது புதிதாக இருக்கிறது.
மணப்பெண் வேஷத்தில் ஒரு பெண்குழந்தை அதனுடைய அப்பாவோடு வந்தது.
இந்திய அம்மாக்களுக்கும் குறைவில்லை.
பாதுகாப்புக்காக என்று நினைக்கிறேன். அவர்களும் புதுமையாக வேடங்கள் தரித்து வந்தார்கள்:)
இந்த வருடம் எப்போதுமில்லாமல் நல்ல வானிலை. அவ்வளவு குளிர் இல்லை. அதுவே இந்தக் குழந்தைகளுக்கு உற்சாகம்.
நாங்களும் பேரனுடைய பள்ளிக்கு அந்த ஊர்வலத்தைப் பார்க்க்ப் போயிருந்தோம்.
.
நம்ம ஊர் நவராத்திரி சுண்டல், இங்க ட்ரிக் ஆர் ட்ரீட். ஸ்வீட்ஸ்.
கிட்டத்தட்ட ஐம்பது அறுபது குழந்தைகள் வந்து போயாச்சு.
எல்லாவற்றுக்கும் கை நிறைய சாக்கலேட் கொடுத்தாகிவிட்டது.
பக்கத்து வீட்டுக்கு மட்டும் ஒரு குழந்தையும் போக வில்லை.
அங்கே ரெக்ஸ்(ஜெர்மன் ஷெப்பர்ட்) யாரையும் உள்ளே விடவில்லை.
குரைத்து விரட்டி விட்டது.
பாவம் பாட்டி. ஜன்னல் வழியாகப் பார்த்துக் கையசைத்துக் கொண்டிருந்தார்.
.
போட்டோக்கள் அடுத்த பதிவில். தொடரும்:)

18 comments:

ராமலக்ஷ்மி said...

எங்கள் ஊர் அல்வா உங்களுக்குப் பிடிக்குமா:)?

//இன்று ஹாலோவீன் என்று சொல்லப்படும் கொண்டாட்டம்.//

ஆமாம், பிள்ளைகளுக்கு இந்த நாள் வந்தாலே கொண்டாட்டம்தான். என் தங்கை இருப்பது செயிண்ட் லூயிதான். வீட்டு முகப்பை நன்கு அலங்கரித்து குழந்தைகளுக்குக் கொத்துக் கொத்தாக சாக்லேட் எல்லாம் தொங்க விடுவாள். பெரியவன் வேடமிட்டுக் கொண்டு ஜாலியாகக் கிளம்பி விடுவான் எல்லோரையும் மிரட்ட அசத்த. சின்னவன் கூட இவளும் போயாக வேண்டும். இந்த வருடம் என்ன வேடம் தரித்தார்கள் என்று இனிதான் தெரிய வரும்.

ராமலக்ஷ்மி said...

சொல்ல மறந்து விட்டேனே. ஆடும் குதிரை அற்புதம். பாராட்டுக்களைச் சொல்லுங்கள்.

//அவன் பெருமையில் நான் குளிர்காய்கிறேனோ!!!//

பேரன் பெருமையில் பெருமிதம் அடையும் உரிமை முதலில் பாட்டிகளுக்குதான்:)!

இலவசக்கொத்தனார் said...

சிங்கத்தின் குருத ஜூப்பரு!!

அதுக்குள்ள கிளம்பறீங்களா? :(

ஆயில்யன் said...

//தீபாவளிக்குச் செய்த கோதுமை அல்வா. ஆயில்யனுக்குத் தனியே எடுத்து வச்சாச்சு.:)
//

ஹய்ய்ய்ய்! நன்றி! நன்றி!நன்றி!


அழகாய் இருக்கிறது ஆடும் குதிரை!

ஆஹா! அடுத்து அமீரகமா வாழ்த்துக்கள்!

//பாவம் பாட்டி. ஜன்னல் வழியாகப் பார்த்துக் கையசைத்துக் கொண்டிருந்தார்.
//

நம்ம ஊருக்கார பாட்டியா இருந்திருந்தா “எலேய் தம்பி அதை புடிச்சு கொல்லையில்ல கட்டுடா வர்றவங்கள பார்த்து குலைச்சுக்கிட்டே இருக்குன்னு அதட்டியிருப்பாங்க “

:))

தமிழ் பிரியன் said...

அல்வா முந்திரிப்பருப்பு எல்லாம் போட்டு சூப்பரா டேஸ்ட்டா இருக்கும் போல இருக்கே.. அதென்ன ஆயில்யனுக்கு மட்டும் ஸ்பெஷல்.. எங்களுக்குக் கிடையாதா?.. ;)

பேரனோட ப்ராஜெக்ட் பாட்டிக்கு பெருமை தானே...:)

துளசி கோபால் said...

தேர் கிளம்புதா? நிலைக்கு எப்போ வருமுன்னு சொல்லுங்க.

குதிரை அட்டகாசம். அதுக்குப் பெயர் வச்சாச்சு. மாயக்குதிரை:-)

நியூஸிக்கு, அல்வா அரைக்கிலோ பார்ஸேல்.........................

நம்ம வீட்டுக்கும் ஹாலோவீனுக்குன்னு யாரும் வரலைப்பா. ஜிகேயைப் பார்த்தே பயந்துட்டாங்க போல:-)))))


இங்கே ஒரு பக்கம் ஸ்ட்ரேஞ்சர் டேஞ்சர்னு சொல்லிக்கிட்டு, ஹாலோவீனுக்குத் தெரியாத ஏரியாவில் போகும் ஆபத்தை விளக்குவதனால் இருக்கலாம்.

இன்னொரு பக்கம், அமெரிக்கப் பழக்கம் நமக்கு ஏன்?ன்னு ஒரு கூட்டம் சொல்லுது.

ஆனால் கடைக்காரர்கள் மட்டும் முகமூடி, இன்னபிற ஐட்டங்கள் வித்துக்கிட்டு இருக்காங்க.

பேரன் மட்டுமில்லை, பக்கத்து வீட்டுப் பசங்க பண்ணின ப்ராஜெக்டும் நமக்குதான் பெருமை:-)

கீதா சாம்பசிவம் said...

ஒரு கிலோவுக்குக் குறையாமல் அல்வா எனக்கும் எடுத்துவைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஆயில்யன் என்ன ஸ்பெஷல்?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்.........

சதங்கா (Sathanga) said...

வல்லிம்மா,

அட்டகாசம் போங்க. அல்வா, ஹாலோவீன், பேரனின் ப்ராஜக்ட், சிங்கத்தின் குதிரை ... என எல்லாம் படங்களோட போட்டு அசத்திட்டீங்க.

//நம்ம ஊருக்கார பாட்டியா இருந்திருந்தா “எலேய் தம்பி அதை புடிச்சு கொல்லையில்ல கட்டுடா வர்றவங்கள பார்த்து குலைச்சுக்கிட்டே இருக்குன்னு அதட்டியிருப்பாங்க “
//

ஹா ஹா ... ரசிக்க வைக்கும் வரிகள் ஆயில்யன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும்மா ராமலக்ஷ்மி.
அது எங்க ஊரும் தானே, அதனால் ரொம்பவே பிடிக்கும்.
நெல்லையில் தாத்தா வீடு இருந்த போது, தாமிரபரணியும், அல்வாவும் ருசிக்காத நாளே கிடையாது:)

இப்ப அந்தக் கடை மாதிரி நிறைய கடைகள் வந்துவிட்டதாமே:(

உங்க தங்கை செயிந்ட் லூயிஸ்ல இருக்காங்களா. தெரியாமப் போச்சே.
குழந்தைகள் நல்லா சந்தோஷமா இருந்தாங்க.

வல்லிசிம்ஹன் said...

கட்டாயம் அவர் கிட்டச் சொல்றேன். ரொம்ப சந்தோஷப்படுவார் ராமலக்ஷ்மி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கொத்ஸ்.
ஊரை விட்டுக் கிளம்பும்போதே இவர்கள் எல்லோரிடமும் நாங்கள் அவரவர்கள் இடத்தில் எத்தனை நாட்கள் இருப்போம் என்று காண்ட்ராக்ட் போட்டுதான் கிளம்பினோம்.
நோ எக்ஸ்டன்ஷன்:)
அவசியமும் இல்லை. குளிர் வேற வந்துவிட்டது. விடு ஜூட்தான்!!

வல்லிசிம்ஹன் said...

பக்கத்து வீட்டுப் போலந்து பாட்டி, மகா தைரிய சாலி. ஆங்கிலம் அவ்வளவு வராது.
ஆயில்யன்,

அவங்க அந்த ரெக்ஸைக் கொஞ்சுவதைப் பார்க்கணும். அதுவும் அவங்களும் ஒரே உயரம். செல்லக் கன்னுகுட்டி மாதிரி அவங்க சொன்ன பேச்சைக் கேட்டு அடங்கி நடக்கும்.

அவங்க வீட்டுக்கும் நம்ம வீட்டுக்கும் நடுவீல இருக்கிற வேலி பக்கத்தில கூட நாம் போக முடியாது. அது பாய்ந்து வருகிற வேகம் குலை நடுங்கும்.
குழந்தைகள் வந்ததும் அந்தப் பாட்டி ரெக்ஸை உள்ளே வைத்துப் பூட்டிவிடுவார். பசங்க போனதும் தான் வெளில வரும்.

கட்டிப் போடற வேலையெல்லாம் கிடையாது:)

வடுவூர் குமார் said...

பத்து நாளில் அமீரகம்
வாங்க வாங்க,அல்வா அதுவரைக்கும் தாங்குமா? :-)

வல்லிசிம்ஹன் said...

வாங்கமா தமிழ் பிரியன்.

ஆயில்யன் முதல்லியே ரிசர்வ் செஞ்சுட்டாரு. அதான் அவருக்குன்னு சொன்னேன்.:)
கட்டாயம் பேரனோட ப்ராஜெக்ட் பாட்டிக்குப் பெருமைதான்.
பத்து வயசில இவ்வளவு முயற்சி போட வைக்கிறாங்களே இந்த ஊரிலன்னு திகைப்பா இருக்கு.
நம்ம ஊரிலயும் இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

ஆ.அப்படியெல்லாம் இருக்காது. பாவம்ல ஜிகே.
துளசி ,நீங்க சொல்றது கரெக்ட் தான். புதுசா ,தனியா இருக்கிற வீட்டுக்கெல்லாம் போகக் கூடாதுன்னு குழந்தைகளுக்கு எச்சரிக்கை உண்டு.
நம்ம பொண்ணு இந்தப் பையனை அனுப்பிட்டு கௌரவமா கொஞ்ச நேரம் பின்னாலியே போய்ப் பார்த்து விட்டு வந்தாங்க.
அவனுக்கு அது பிடிக்காது. ஐ கன் டேக் கேர் ஆஃப் மைசெல்ஃப்:)

இந்தப் பழக்கம்,ஹாலோவீன் ஐரொப்பாலயும் இங்கயும் மட்டும்தான் போல.
நம்ம ஊரில ,சென்னைல அமர்க்களப்படும்:)) ஃபாரின் பண்டிகையாச்சே!!

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கீதா. ஒரு கிலோ போதுமா.:)

நாமதான் கற்பனைல அல்வா சாப்பிட்டு விடுவோமே. கொடுத்துட்டாப் போச்சு.

வல்லிசிம்ஹன் said...

நன்றி சதங்கா. ஊருக்குப் போகணும். இங்க நடக்கிறதையும் பார்க்கணும். அதை விட அதைப் பற்றி எழுதணும்.

தங்கவேலு மாதிரி பைரவனைத் தெரியுமான்னு கேக்க வைக்கணும். அதாம்ப்பா நமக்கு வாழ்வின் லட்சியம்:))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் குமார்.

ஓஹோ அப்டிப் போகிறதா கதை,. நம்மை வரவேற்க இன்னோரு ஆளு அங்க வந்தாச்சா:)

பேப்பர் அல்வா தானம்மா. கெட்டே போகாது:)