Blog Archive

Thursday, October 09, 2008

கொலுநாட்களின் கோலாகலம்

சின்னப் பெண்களுக்கு வளையல்கள்
நவராத்திரி நாயகிக்கு மரியாதை
வந்தவர்களுக்குத் தாம்பூலம்


குடி பாக்ஸ் எனப்படும் சுண்டல்,சாக்கலேட்,மோதிரம் வைத்த பைகள்



அன்று வீட்டில் செய்த மைசூர்பாகு:)


இவர் இந்த ஊரில் தென்படவில்லை. கும்பகோணத்து ஒப்பிலிஅப்பன் கோவில் யானை. கொலு பூர்த்தியானதும்மா. சர்வ மங்களம்.










Posted by Picasa

31 comments:

S.Muruganandam said...

நவராத்திரி நல்வாழ்த்துக்கள் ( தாமதமாக). வல்லியம்மா.

திருநரையூர் கல் கருட சேவை படங்களை ஒரு அன்பர் தந்துள்ளார் அதை சரி செய்து விரைவில் பதிவாக இட உள்ளேன் அவசியம் வந்து சேவியுங்கள் அம்மா.

கோபிநாத் said...

வல்லிம்மா எப்படி இருக்கிங்க? ;)

\\அன்று வீட்டில் செய்த மைசூர்பாகு:)\\

நான் ரெண்டு துண்டு எடுத்துக்கிட்டேன் ;)

இலவசக்கொத்தனார் said...

கொலு பார்த்தாச்சு!

goodie bags என்பதைத் தமிழில் குடி பாக்ஸ் என எழுதி சிலரை எங்கே எங்கேன்னு தேட வெச்சுட்டீங்களே!

ஆயில்யன் said...

அந்த அம்புட்டு பெரிய தாம்பூல தட்டினையும்,கூடவே எக்ஸ்ட்ராவா மைசூர் பாக் தட்டினையும் தந்தால் மனம் மகிழ்ந்து ஏற்றுக்கொள்ள காத்திருக்கிறேன் :))))

துளசி கோபால் said...

கடைசி ரெண்டி ஐட்டமும் எனக்கு வேணும்:-) ரொம்பப் பிடிக்குதுப்பா!

நவராத்ரி விழா முடிஞ்சதுன்னு ஓய்வா உட்கார முடிவா என்ன? தீபாவளிக்கு இன்னும் 15 நாள்தான் பாக்கி.

சீக்கிரம் ஆரம்பியுங்க அந்த வேலைகளை:-))))

சந்தனமுல்லை said...

வாழ்த்துக்கள்!! ம்ம்..சூப்பர். படங்களாலேயே விளக்கிவிட்டீர்கள்...நேரில் பார்த்த உணர்வு!!

Geetha Sambasivam said...

வாழ்த்துகள்

ambi said...

கொலுவுக்கு நாங்க வந்து போன எபக்டை குடுத்துட்டீங்களே. :D

நல்ல வேளை பாட சொல்லலை. :))

மெளலி (மதுரையம்பதி) said...

உள்ளேனம்மா போட்டுக்கறேன் :)

வல்லிசிம்ஹன் said...

அன்பு கைலாஷி, உங்கள் ஆன்மீக சேவை, அமிர்தமாக இருக்கு.
ஆர்ம்சேர் ட்ராவலாக் மாதிரி அத்தனை விஷயங்களையும் கொடுத்து இருந்தீர்கள்.

திருநரையூர் பக்ஷிராஜாவையும் பார்த்தால் ,ஒரு பூரண உணர்வு கிடைக்கும். நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோபிநாத்.
நல்லா இருந்ததா மைசூர்பாகு:)
அங்க யாராவது கொலுவுக்கு வரச் சொன்னாங்களா??

வல்லிசிம்ஹன் said...

அட ராமச்சந்திரா. கொத்ஸ்,

'குட்டி' பைன்னு போட மனசில்லாம குடின்னு போட்டேன்.அழகா ஆங்கிலத்தில எழுதி இருக்கலாம்:)

வல்லிசிம்ஹன் said...

ஊருக்கு வந்தப்பறம்
ஆயில்யனுடைய விருப்பங்களான தாம்பூலத்தட்டும், மைசூர்ப் பாகுத் தட்டும்:)

பரிசளிக்கப்படும் என்று சொல்லிக் கொள்கிறேன்:)

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

இங்க என்ன ஓடிக் களிக்கிறது. மாப்பிள்ளை எங்க ரெண்டு பேருக்கும் துணிமணி வாங்கி வந்துட்டார்.

இங்க ஸ்ரீ கிருஷ்ணா கேட்டரிங்னு ஆரம்பிச்சு இருக்காங்க. அவங்க கிட்டச் சொன்னா மனோராப் பணியாரமும், பாதுஷாவும் சொல்லல்லாமுன்னு இருக்கேன்.

மத்தது என்ன, திரட்டிப்பால், உக்கோரை,முத்துதேன்குழல்.

பட்டாஸு வாங்கியாச்சு.:)
ஓட தள்ளலை துளசி.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சந்தனமுல்லை,
உங்க கொலுவையும் பார்த்தேன்.
பப்பு ஆட்ட பாட்டமெல்லாம் நல்லா சுவையா இருந்தது.
எங்க கிருஷ்ணாவையும் விளையாட்டுக்கு அனுப்பறேன். சேர்த்துக்குங்க. விஷமம் தாங்கலை.:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி கீதாம்மா.
இந்த ப்ளூ காய்ச்சல் வாட்டாமல் இருந்தால் இன்னும் நிறைய எழுதி இருக்கலாம்.
ஒண்ணுமே தேவை இல்ல அக்கடான்னு நீட்டினா போதும்னு இருக்குப்பா:)

வல்லிசிம்ஹன் said...

அம்பி, யார் விட்டா உங்களை. நல்லாப் பாடுவீங்களாமே.
அடுத்த கொலுவும் போது குடும்பத்தோடு வந்து பாட வச்சிட மாட்டேன்:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி. நீங்க வந்த அம்பாளும் வந்த மாதிரி தான்.
நன்றிம்மா.

Kavinaya said...

மைஜூர்பா ஜூப்பர் :) நல்லா ஓய்வெடுத்துக்கோங்க வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

ஓஓ யெஸ். கவிநயா.உங்க கொலுவைக்கூட இன்னும் பார்க்கவில்லை.

என் கவலை எல்லாம் ஒரு பீஸ் கூட எனக்குக் கிடைக்கலியே என்பதுதான்(மை.பா) :)

சதங்கா (Sathanga) said...

வல்லிம்மா,

தாமதமா வந்திருக்கேன். படங்கள் அருமை. கஜராஜா வீராப்பா இருக்காரு. உங்களுக்கே மை.பா இல்லைனு சொல்லிட்டா, நாங்க பேசாம போயிடணும். கரெக்டா ? :)))

வல்லிசிம்ஹன் said...

கஜராஜா வயசானவர். வீராப்பு இல்லாமயா:)

உடம்பு முடியாமப் போயிடுச்சுப்பா. அதனால் மைஇ.பா தீர்ந்து போச்சு:)
நோ வொரி. பிள்ளைங்க சாப்பிட்டால் நாம சாப்பிட்ட மாதிரிதானே!!

ராமலக்ஷ்மி said...

நானும் தாமதமாகத்தான் வந்திருக்கிறேன்:)! ஆனாலும் என்ன? தாம்பூலம் எடுத்துக் கொண்டேன். மைசூர்பாகு பார்க்கவே சூப்பர் [ஒப்பிலியப்பன் கோவில் பிள்ளையாரப்பனும்தான்:)!]

நானானி said...

குட்டி வெண்கல உருளியில் குட்டி குட்டி மிதக்கும் விளக்குகள்!!!அழகு!

பொன்ஸ்~~Poorna said...

மிஸ் உப்பிலி கலக்கறாங்கோ..

வல்லிசிம்ஹன் said...

ராமலக்ஷ்மி, வாங்கப்பா.

நான் பார்க்கறதுக்கு முன்னாடி வந்துட்டுப் போயீட்டீங்களா:)
நன்றிப்பா.நட்பானவர்கள் வந்ததுனாலத் தான் கொலு சோபிச்சுது.

வல்லிசிம்ஹன் said...

வரணும்பா நானானி. எல்லாம் நம்ம சுக்ரா உபயம்தான்:)

உருளி ராசில வாங்கினது.

வந்தவங்க அத்தனைபேரும் தாம்பூலம் எடுத்துக்கிட்டதுக்கு நன்றி::)

வல்லிசிம்ஹன் said...

பொன்ஸம்மாவை யானை கூப்பிட்டு விட்டாரா:)

உண்மையிலியே என்ன ஒரு காரக்டர் இந்த யானையின் முகத்தில் பத்தீங்களா பொன்ஸ்??

அமிர்தவர்ஷினி அம்மா said...

வல்லிம்மா

மைசூர் ப்பாகு

ஒரு குரல் குடுத்திருந்தீங்கன்னா ஓடி வந்திருக்கமாட்டேன்.

ம் நான் குடுத்து வச்சது அவ்ளோதான்.

வல்லிசிம்ஹன் said...

இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகவில்லை வர்ஷினி அம்மா.

ஊருக்கு வந்ததும்
ஒரு மைசூர்பாகு பார்ட்டி வச்சு,பதிவர்கள் மீட்ட்டிங் போட்டுடலாம். வருவீங்கதானே:)