About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Monday, September 08, 2008

மீண்டும் பார்க்கலாம், NIAGARA !

வாணவேடிக்கை.....தினம் இரவு ஒன்பதுக்கு என்று நினைக்கிறேன்.

வேடிக்கையில் பிடிக்க முடிந்தது சிலவற்றைத்தான்.....


அருவிக்குப் பின்னால் கட்டப்பட்ட பாதை.குகை வழி. கூகிள் உதவி.அருவியின் பின் இருக்கும் பாதையின் வரைபடம்
மிஸ்ட்,மிஸ்ட்,மிஸ்ட். இந்தத் திரை எழும்பும் வேகம்ம்ம்ம்.ஒரு பெரிய கோபுரம் மாதிரி வளர்ந்து மேலே மேகங்களாக அலைய ஆரம்பிக்கும்.

SKYLON TOWER .இங்கே மேலே ஏறவில்லை.நேரமின்மை தான் காரணம்.


இந்தப் பயணத்தை என்னால் என்றும் மறக்க முடியாது. அப்படி ஒரு சந்தோஷம் ,அந்த சாரல் மேலே தெறித்து உள்ளம் குளிர வைத்தது.
ஏதோ ஒரு சுதந்திரம் இங்கே கிடைத்தது என்றே நம்புகிறேன்.இந்த பொம்மைப் பெண் மீண்டும் பதிவுக்கு வந்துவிட்டாள்.
விடுதியிலிருந்த புகைப்படம்.

அந்திவேளை விளக்கு அலங்காரம்.இருகரைகளிலும் மினுக்குகின்றன. விடுதி ஜன்னலிலிருந்து எடுத்த படம். பறவைப் பார்வையா இது:)மாலை எட்டு மணிக்கு அருவியின் மேல் வண்ணவிளக்கு ஒளி பாய்ச்ச ஆரம்பிக்கிறது. முதல் வண்ணம் வெள்ளை.
அருவியும் பச்சை.கரைகளும் பச்சை.நடுவே இந்தப் பனிச்சாரல் மட்டும் வெள்ளையும் கருப்புமாக ஆவியாகிறது.

ஒண்டேரியோ ஏரிக்கரையோரம்.


இரவு படுக்கப் போவதற்கு முன்னால் க்ளிக்கியது.
மழையில் அருவிக்குப் பின்னால் போவது தடைப்படுமோ என்று சந்தேகம் வந்தது.
நான் நினைத்தபடி அது ஒன்றும் அத்தனை சுலபமானது அல்ல. அருவிக்கு மிக அருகில் போகலாம். ஆனால்
ஒரு மேடையில் நின்றுதான் சாரலை அனுபவிக்க முடியும் என்று தெரிந்தது.
நான் என்னவோ குற்றாலம் அருவிக்குப் பின்னால் போவது போல இங்கேயும் போகலாம்
என்று கனவு கண்டு இருந்தேன்.
நாம என்ன ஆண்டாளா:))
கனடா நாட்டில் இது ஒரு பிரமாதனமான ஏற்பாடு.
மலையைக் குடைந்து,அருவிக்குப் பின்னால் சுரங்கம் அமைத்து
நாலைந்து இடங்களில் அருவி விழும் இடம் வரை போக வழி வகுத்து இருக்கிறார்கள்.
போகும் வழியெல்லாம் தண்ணீர் கசிந்து கொண்டிருந்தது.
மேலே படபடக்கும் நதியின் ஓசை.
மஞ்சள் ப்ளாஸ்டிக் உடை எல்லோருக்கும் கொடுத்திருந்தார்கள்.
ஒரே ஒரு இடத்தில் கீழே இறங்கப் படிகள்.
வெளியே வந்தால் இடியோசையுடன் அருவி விழும் ஓசை.
இந்த அனுபவத்தை எழுத வார்த்தைகள் எனக்குக் கிடைக்க மறுக்கின்றன.ஒரு அரை மணி நேரம்
இங்கே செலவழித்தோம்.
சின்னவன் அருவி சத்தத்துக்குப் பயப்படவில்லை.அம்மாவோடு ஒண்டிக்கொண்டு அண்ணாந்து பார்த்த வண்ணம் இருந்தான். பெரியவனுக்கும் எனக்கும் கண்ணில் இருக்கும் கண்ணாடி நன்றாகப் பார்ப்பதைத் தடை செய்தது.!!
கண்ணாடி லென்ஸெல்லாம் தண்ணீர் தெறித்து பார்க்க முடியவில்லை.
நானும் அவனும் ஜோடி சேர்ந்து கொண்டோம். அருவியின் மிக அருகில் நின்று கண்ணாடிகளைக் கழற்றி விட்டோம்.
இப்போது நாங்களும் நயகராவும் மட்டுமே:)
எப்பவுமே வராத கோபம் என்மேலேயே வந்தது.
கண்களை நன்றாகப் பராமரித்திருந்தால் இப்போது
வாழ்க்கையில் எப்போதாவது ஒரு தடவை கிடைக்கும் இந்த மாதிரி அழகான
அற்புதமான அனுபவத்தை இன்னும் கூர்மையாகக் கவனித்திருக்கலாம். இல்லையா!!
கண் பழுதுபட்ட பிறகு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை:)
ஒரு நிமிடம் தான்!!!.
நயகரா மேலே சிந்திக்க விடவில்லை.குழந்தைகளாய் அங்கே இருந்துவிட்டு,மீண்டும்
பெரியவர்களாய் மேலே ஏறிச் சாப்பாட்டுக்கு விரைந்தோம்.
அடுத்த நாள் பயணம் டெட்ராய்ட்டுக்கு.
அங்கிருந்து மீண்டும் சிகாகோ வந்தாச்சு.வண்டியும் பழைய பொலிவோடு காத்திருந்தது.
நல்லநினைவுகளை மட்டும் எடுத்துக் கொண்டு,
நயகராவை நினைவுகளில் மீண்டும் சுவைத்தபடி இதோ பதிவும் இட்டுவிட்டேன்.
நன்றி எல்லோருக்கும்.