Blog Archive

Tuesday, September 30, 2008

வருமுன் காத்தல் மாந்தருக்கு அழகு






































Posted by Picasaஇந்த வண்ணங்களைப் பார்த்தால் மனசுக்கு இன்பம் கிடைக்குமென்று கூகிளில் பறித்து வைத்தேன்.
அனைவருக்கும் இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள்.
நன்மை தழைத்திங்கு நானிலம் பிழைத்திட வந்திடுவாள் பராசக்தி.
முந்தின பதிவில் இதயப் பரிசோதனை செய்து கொண்டதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.
இன்றோடு அந்த மலிவு விலை சோதனைக் காலம் முடிகிறது.
அதாவது 300 டாலர் கொடுக்கவேண்டிய இடத்தில் நூற்றம்பது டாலரோடு முடிந்தது.
மருந்த மறந்து நான் நயகரா போனது நினைவு இருக்கலாம். அப்போது ப்ரிஸ்க்ரிப்ஷன் எழுதிக் கொடுத்து என்னைக் காப்பாற்றியவர்.:)
அவருக்கு நன்றி சொல்லிப் பணமும் கொடுக்கப் போனபோதுதான் எனக்கு இதய முப்பரிமாண சோதனைக்கு சீட்டு எழுதிக் கொடுத்தார்.
சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு, இதயபாதிப்புக் கட்டாயம் வரும்.முன்னெச்செரிக்கையாக இருப்பது நல்லது என்றுதான் அவர் சொன்னார்,.
நான் பண செலவை யோசித்தபோதுதான், வருமுன் காப்பது நல்லது என்று தோன்றியது.
ஏனெனில் எங்கள் வீட்டில் எல்லோருக்கும்(பிறந்த வீட்டில்) இந்த இதயம் சோதித்துவிட்டது.
பெண்ணிற்குக் கவலை.
அவள் இணையத்தில் தேடியபோது எட்வர்ட்ஸ் ஆஸ்பத்திரியில்
இந்தச் சோதனை செப்டம்பர் 30 வரை வெறும் 150 டாலருக்குச் செய்து கொடுப்பதாகச் சொன்னதும், உடனே பதிந்து கொண்டாள்.
போயாச்சு,வதாச்சு.
இப்போது நிலைமை என்னவென்று தெரியும். அதற்கேற்ற மருந்துகளும் கொடுத்துவிட்டார்கள்.
இன்ஸுரன்ஸ் செய்திருக்கிறோம்.
இந்த செகப்பிற்கு ரி எம்பர்ஸ் செய்ய மாட்டார்களாம்.
பரவாயில்லை.
இந்தியாவில் செய்திருந்தாலும் இதே செலவுதான் ஆகியிருக்கும்.
நான் இவ்வளவு விலாவாரியாக இதை எழுதுவதற்குக் காரணமே
சில உறவுகள் ,ஏன்யா, சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுக்கிற என்று
என்னைச் சலித்துக் கொண்டதுதான்.
இந்தச் சோதனையை நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் செய்து கொள்ளலாம்.
ஊசி, இந்த இதயத்துக்குள்ள செலுத்தற சாயம் அதெல்லாம் கிடையாது(ஆஞ்சியோ கிராம்)
ஒரு பத்து நிமிடம் சோதனைக்குப் போய்விட்டு,கேள்விகளுக்குப் பதில் சொல்லி வீட்டுக்குத் திரும்பி விடலாம்.
இதுதானப்பா விஷயம் சரியா.

25 comments:

ராமலக்ஷ்மி said...

நவராத்திரி நல்வாழ்த்துக்கள்.

இதயத்துக்கு இதம் தரும் மலர்களை இணையத்தில் தேடி எடுத்துத் தந்து இதயத்தை முன்னெச்சரிக்கையாய் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை எல்லோருக்கும் வழிமொழிந்திருக்கும் அக்கறைக்கு
வணக்கங்கள் வல்லிம்மா! உங்கள் நலத்துக்கும் என் பிரார்த்தனைகள்!

துளசி கோபால் said...

எச்சரிக்கை விட்டதுக்கு நன்றிப்பா.

இந்தப் படங்களில் ரெண்டாவது ரொம்ப சூப்பரா இருக்கு. மூணாவதுக்குப் பெயர் ஃபாக்ஸ் க்ளவ். ( நரி கையுறை போட்டுக்குமா?)

யார் சொன்னதையும் காதுலே போட்டுக்காம இருக்கப் பழகணும்.இல்லே?

Geetha Sambasivam said...

ரொம்ப நல்லது வல்லி, நல்லபடியாக சோதனை முடிந்ததுக்கு. இது ஒண்ணும் சும்மா இருக்கிற சங்கை ஊதிக்கெடுக்கும் வேலை இல்லை, தேவையான ஒன்றே. போகட்டும், எல்லாப்பூக்களுமே மனதை மகிழ்விக்கும் பூக்களே.

அது சரி, தினம் தான் வர முடியலை, கொலுவுக்காவது வரக் கூடாதா?? துளசி முதல்நாளே வந்துட்டுப் போயிட்டார், நியூசிலாந்தில் இருந்து வரணுமேனு, சீக்கிரமா வந்துட்டாங்க போலிருக்கு, நீங்களும் வந்து பார்த்துட்டுச் சுண்டல் எடுத்துட்டுப் போங்க! :)))))) இப்போல்லாம் வரதே இல்லை, யாருமே! :(

வல்லிசிம்ஹன் said...

நன்றி, ராமலக்ஷ்மி.
உண்மைதான்,.
உடல் நலத்தில் சரியான அக்கறை இளம் வயதில் நான் எடுக்கவில்லை.
வேளை கெட்ட வேளை சாப்பாடு. அதிக நேரப் பட்டினி.
அப்போது விளங்காதது இப்போது விளங்குகிறது.

அதுதான் எல்லாச் செக்கப் மாதிரி இதையும் செய்து கொள்ளலாமேன்னு எழுதினேன்.

இறைவன் துணையிருக்கட்டும் எல்லோருக்கும்.
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

துளசி, பிரதிபலிப்பு தலைப்பில் கிடைத்த படங்கள் இவை.

நரி க்ளாவ்ஸ் போட்டாத்தானே திராட்சைப் பழம் எட்டும்:)

யாரும் சொல்றதைக் காதில யாரு போட்டுக்கிறாங்க,தோட்டைத்தவிர.:)

நல்லா எழுதணும்னு நினைச்சேன்,. இன்னும் கொஞ்சம் விளக்கி எழுதி இருக்கலாம்.

Kavinaya said...

எங்கே பறிச்சாலும் பூக்கள் வெகு அழகு! :) நன்றி வல்லியம்மா. உடல் நலத்தை கவனிச்சுக்கோங்க.

cheena (சீனா) said...

உடல் நலம் பேணுங்கள் - நல்வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்

வல்லிசிம்ஹன் said...

வாங்க வாங்க ,கீதா. காடவுளெ நான் பார்க்காம விட்டேனே.
இங்க கொலு வைக்கிறதில முயற்சி.நேரம் போறதே தெரியலை. இன்னிகு உங்க கொலுவுக்கு வந்துடறேன்.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்குமா. எனக்கு அரக்குக் கலர் ப்ளவுஸ் ஒரு மீட்டர் வேணும்:)
முதலில் அன்ந்த பெரிய கூண்டுக்குள் போகணுமேனு பயமாக இருந்தது.
பிறகு
இவ்வளாவுதானான்னு வெளியில் வந்துவிட்டேன்.
நல்லதுக்குத்தான் சோதனை:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் கவிநயா. உங்க ஊரில கொலு ஏற்பாடுகள் எப்படி இருக்கு.

நல்லாவே இருக்கும் நீங்க கவீ பாடியே அலை,கலை,திரு எல்லோரைஇயும் மகிழ்வித்துவிடுவீர்கள்.

ரொம்ப நன்றிம்மா. கலைவாணியின் கடாட்சம் நமக்கு எப்பவும் இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க சீனா.

நாம் உடல் நலம் பேணினால் மற்றவர்களுக்குத் தொந்தரவு இல்லாமல் இரூக்கும் இல்லையா.
அதுவும் ஒரு காரணம்.
நவராத்திரி நல் வாழ்த்துகள்.
நன்றிம்மா.

இலவசக்கொத்தனார் said...

வர வர துளசி ரீச்சர் பதிவு மாதிரி ஓவர் படமா போயிக்கிட்டு இருக்கு. டெஸ்ட் எல்லாம் ஓக்கேதானே? எதாவது உதவி வேணுமுன்னா சொல்லுங்க. சில இடங்களில் இது இலவசமாகக் கூட பண்ண வழி இருக்கும். நம்ம நண்பர்களைக் கேட்டுச் சொல்லறேன்.

ஆயில்யன் said...

//சீக்கிரமா வந்துட்டாங்க போலிருக்கு, நீங்களும் வந்து பார்த்துட்டுச் சுண்டல் எடுத்துட்டுப் போங்க! :)))))) இப்போல்லாம் வரதே இல்லை, யாருமே! :(

//

கீதாம்மா! சுண்டல் கொஞ்சம் போல்டா போட்டிருந்தா டக்குன்னு வந்திருப்பேன்! சரி தோ கிளம்பிட்டேன் (எனக்கு நொம்ப புடிக்கும் நிறைய கொடுக்கணும் தட்டு நிறைய!!!!)

:))))

ஆயில்யன் said...

பூக்கள் படங்கள் அனைத்தும் அருமை! :)


அவ்வப்போது செக் அப் செய்து கொண்டு உடல் நலம் பேணுவதில் நலமே!

வல்லிசிம்ஹன் said...

கொத்ஸ்,
செக்கப் எல்லாம் முடிஞ்சாச்சும்மா.

அக்கறை எடுத்துச் சொன்னதுக்கு நன்றிம்மா.

பூவெல்லாம் நவரத்திரிக்காக:)

ஒன்பது நாளும் போடப்போறேன்:)))))

வல்லிசிம்ஹன் said...

ஆயில்யன், அப்படியேஇங்கயும் வந்துட்டுப் போங்க.
இன்னிக்கு ரஜ்மா.
சின்னவன் லாஜம்மான்னு சொல்றான்:)
நல்லா இருக்கேன்பா.

வல்லிசிம்ஹன் said...

ஆயில்யன், அப்படியேஇங்கயும் வந்துட்டுப் போங்க.
இன்னிக்கு ரஜ்மா.
சின்னவன் லாஜம்மான்னு சொல்றான்:)
நல்லா இருக்கேன்பா.

மெளலி (மதுரையம்பதி) said...

வல்லியம்மா,

நவராத்ரி நல்வாழ்த்துக்கள்.

டெஸ்ட் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுடுச்சுன்னும் படித்தேன்....மெடிசன் எல்லாம் சரியான நேரத்துக்கு எடுத்துக்கங்க..அது முக்கியம்.

லாஜ்மா சுண்டல் சூப்பர். :)

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி.
நவராத்திரி நல்வாழ்த்துகள்.
கட்டாயம் கவனிச்சுக்கிறேன்.மாதங்கிக்கு ஸ்பெஷல் வாழ்த்து.

ராஜ்மா போட்டோஎடுத்தேன்.
அப்லோட் செய்ய்ய முடிய்யவில்லை.:(

Geetha Sambasivam said...

//ராஜ்மா போட்டோஎடுத்தேன்.
அப்லோட் செய்ய்ய முடிய்யவில்லை.:(//
கூகிளாரைக் கேளுங்க, எத்தனை சுண்டல் வேணாலும் கொடுப்பார்! :)))))

வல்லிசிம்ஹன் said...

கீதா, ராஜ்மா கூகிள்ள நிறையக் கொட்டிக் கிடக்கு.
ஆனா நாம பண்ணற அலங்காரமெல்லாம் அவங்க செய்து வைக்கலியே :)

போனாப் போறது போன்னு விட்டுட்டேன்.
சுண்டல் கிண்டல் பிரமாதம்:0)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஒரு ஈ சி ஜி எடுப்பதை ஒரு மாத காலமாய் தள்ளிப்போட்டு கொண்டு வருகிறேன்.

உங்கள் பதிவை படித்தவுடன் கண்டிப்பாய் " வருமுன் காத்திட வேண்டும், பெரியதாக வருமுன்"

நன்றி அம்மா, உங்களின் உடல்நலம் பார்த்துக்கொள்ளவும்.

திவாண்ணா said...

mmmmmmmmmm
என்னத்தை சொல்லறது? இத பத்தி ரொம்பவும் கவலை வேணாம். உதாசீனமும் பண்ண வேணாம். நாராயணா!

வல்லிசிம்ஹன் said...

அமிர்தவர்ஷினி அம்மா,

டாக்டர் சொன்னார்னா
செய்துடணும்பா.

ஒண்ணுமே பயமில்லை. எத்தனை மருந்து தேகப்பயிற்சி எல்லாம் இருக்கிறதே.

கட்டாயம் செய்துட்டு எனக்குச் சொல்லுங்க.

வல்லிசிம்ஹன் said...

புலிவால் மாதிரியா வாசுதேவன்:)

நாராயணன் பாத்துதானே நடத்தறான்.
சரியாகி விடும்.
கொஞ்சம் கூட சபலப்படக்கூடாது சாப்பாட்டு விஷயத்தில்:)

சந்தனமுல்லை said...

வாழ்த்துக்கள், அக்கறையுடன் பகிர்ந்தமைக்கு நன்றி!

கடவுள் கிருபை என்றும் இருக்கட்டும்!!