About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Friday, August 29, 2008

இந்த நாட்டு நடப்பு


பேச்சு மேடைப் பேச்சு.
அமெரிக்க அரசியல் வாணங்கள் வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கின்றன இப்போது
எல்லா தொலைக் காட்சி நிகழ்ச்சிகளிலும்.


சிஎன் என், ஒபாமா பக்கம் என்று நினைக்கிறேன். ஃபாக்ஸ் நியூஸ் அந்தப்பக்கமோ:00
எப்படியொ ''எல்லன் டிஜெனரஸ் ஷோ''விலயும் ஹிலாரி க்ளிண்டன் வந்துட்டுப் போயிட்டாங்க.
இன்னும் 67 நாட்கள் இருக்கின்றன இந்த ஊருத் தேர்தலுக்கு.
1998இல் இருந்த அதே வுல்ஃப், கிங் எல்லோரும் இப்பவும் இருக்கிறார்கள்.
அப்போது பிரசிடெண்டாக இருந்த ஹிலரி வீட்டுக்காரர் மகா சங்கடத்தில் மாட்டிக் கொண்டிருந்தார்.
அதை அப்போது வெளு வெளு என்று வெளுத்தார்கள்.
இதை ஜீரணம் செய்யவே எனக்கு அப்போது சிரமமாக இருந்தது. இவ்வளவு பப்ளிக்கா இந்த சமாசாரத்தை அலசுகிறார்களே!
குழந்தைகள் டிவி பார்த்தால் கேள்விகள் கேட்குமே என்றேல்லாம் தோன்றும்.
அப்போது பெரிய பேரன் கைக்குழந்தை. அதனால் எங்களுக்கு இந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் அவ்வளவு சங்கடம் இல்லை.
அந்தப் பொண்ணு என்ன ஆச்சோ ,,,தெரியாது எங்கயோ நியூயார்க்
பக்கம் நாடு கடத்தப் பட்டதாகக் கேள்வி.
அதெல்லாம் நமக்கு இப்ப வேண்டாம்.:)
ஆனால் இந்த ஜனநாயகக் கட்சி டென்வர் மாநாட்டில் ஹிலரியும் க்ளிண்டனும் பேசியதைப் பார்த்தோம்.
எங்களுக்குத் துளியும் சம்பந்தமில்லாத அரசியல்தான். இருந்தாலும் இந்த வீட்டுக்காரங்க ஏழு மணியிலிருந்து பத்து மணிவரை
அவங்க பேசினதை டிவி +டின்னர் வைத்துக்கொண்டு பார்த்தார்கள்.
நம்ம ஊரில அடுத்த நாள் ஹிந்துவில் படிப்போம். இல்லாவிட்டால் இதில் நமக்கென்ன இருக்கப் போகிறது என்று விட்டுவிடுவோம்.
அந்த மாதிரி செய்வது நல்ல பொறுப்புள்ள பொதுஜனம் செய்யும் வேலை இல்லை. இருந்தாலும்ம்ம்ம்
பொறுப்போடு ஓட்டுப் போடுவதோடு முடிந்தது.
அவ்வளவு கசப்பு.

இங்க ஊடகங்கள் பூடகங்களாக இல்லை.வெளிப்படையாக கேள்விகள். பதில்கள்.
நம் ஊரில் எல்லாம் அத்தனை வெளிச்சம் விழுவதில்லை அரசியல் வாதிகள் மேல். விழுந்தாலும் ஆட்டோவுக்குப் பயந்து பேச மறுக்கிறார்களோ.ஜூ.வி,நக்கீரன்,சோ அவர்களின் துக்ளக் இப்படி சில பத்திரிகைகள் இருந்தாலும் யாரை யார் நம்புகிறார்கள் என்பதே பெரிய பிரச்சினை.
இதில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது இன்னும் பெரிய சோதனை. இருக்கிறதிலியே கொஞ்சம் நல்ல் நடத்தை உள்ளவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம்னு நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.:)


இங்க நவம்பரில் நாலாம் தேதிக்குள் இன்னும் எத்தனை நாடகங்கள் நடக்குமோ.
ஜனநாயகக் கட்சி வந்தால் நம் ஊருக்கு என்ன லாபம் என்று பார்த்தேன். தெரியவில்லை. அதை நம் பதிவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

10 comments:

முத்துலெட்சுமி-கயல்விழி said...

உள்ளூர் அரசியலே பெரும் அரசியல் எனக்கு ...

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் முத்து.

அத்தனை அரசியல் வாதிகள். அத்தனை குழப்பங்கள்.
பெரிய நாடு.பெரிய அரசியல். நேர்மையோ, பதில் சொல்லும் பக்குவமோ இல்லாததுதான் எனக்குக் குறையாகத் தோன்றும்.

சதங்கா (Sathanga) said...

வல்லிம்மா,

நல்ல அலசல். நமக்கும் இந்த அரசியலுக்கும் ரொம்ப தூரம், அதனால

//அதை நம் பதிவர்களிடம் தான் கேட்க வேண்டும்.//

நானும் வெய்ட்டீஸ்.

இலவசக்கொத்தனார் said...

அரசியல் சரி. நுண்ணரசியல் என்றால் என்ன? :))

வல்லிசிம்ஹன் said...

கொத்ஸ் சார். நுண்ணரசியலுக்கு விளக்கம் கேட்டால் என்னவென்று சொல்வது.

மாமியார் உடைத்தால் அப்டீன்னு ஒரு பழஆஆஆஆஅம்ம்ம்ம்ம்ம்ம்ம்மொழி உண்டு.
இப்ப அது கொஞ்சம் மாறியிருக்கு. யார் உடைத்தாலும் மகனுக்குத்தான் நஷ்டம்:0)

உடைக்கும் போது கார்த்தால வேளையாயிருந்தா ஒரு வார்த்தை போகும் அதுவே சாப்பாடும் உள்ள போயி எல்லாரும் குளிர்ந்திருக்கும் மாலைவேளையாய் இருந்தால் போனாப் போறது அப்டீன்னு தோணும். மனசுக்கு ஏத்த மாதரி மாத்திக்கிறதுக்குப் பேர்தான் குடும்ப நுண்ணரசியல்:)
ஏதாவது புரிஞ்சுதா.

கீதா சாம்பசிவம் said...

//ஏதாவது புரிஞ்சுதா//

நல்லாவே புரிஞ்சது! :)))))))

வல்லிசிம்ஹன் said...

சதங்கா வரணும்.
எங்க பேரனும் இதையே சொல்கிறான். எப்பப் பார்த்தாலும் ஒபாமா,மாக்கெயின்னு என்ன பாட்டி,டிவி ரிமோட் என் கையில வரமாட்டெங்கிறதுன்னு ஒரே கம்ப்ளெயிண்ட்:)

வல்லிசிம்ஹன் said...

கீதாவுக்குப் புரியாம என்ன.

நாம எல்லாம் ஒரே படகுல சவாரி செய்யறோம்.:0)
கொத்ஸ் பசங்களோட சேர்த்தி.
அதனால நம்ம பசங்க அப்பப்போ ஒண்ணும்தெரியாம கஷ்டப்படற மாதிரி அவரும் நுண்ணரசியலின் மகத்துவம் என்னன்னு கேக்கறார்:)))))))

ராமலக்ஷ்மி said...

நுண்ணரசியல் பற்றி இத்தனை நுணுக்கமா சொல்லியிருப்பதற்கு நன்றி வல்லிம்மா:)!

//ஜூ.வி,நக்கீரன்,சோ அவர்களின் துக்ளக் இப்படி சில பத்திரிகைகள் இருந்தாலும் யாரை யார் நம்புகிறார்கள் என்பதே பெரிய பிரச்சினை.
இதில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது இன்னும் பெரிய சோதனை. இருக்கிறதிலியே கொஞ்சம் நல்ல் நடத்தை உள்ளவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம்னு நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.:)//

அதே!

வல்லிசிம்ஹன் said...

நுண்ணரசியலைச் சிரிப்புடன் அணுகுவதற்கு கொஞ்சம் வயசாகணும் ராமலக்ஷ்மி:)

சின்ன வயசில எடுத்தோம் கவிழ்த்தோம்னு ரோசம் வரும்,ஆஹா நம்மளைக் கூட ஒருத்தர் சொல்லப் போச்சா....அப்டீன்னு.
இப்ப அரசியல்ல இதெல்லாம் ஜகஜம்பா அப்படீனு 20% தெளிவு வருது:)))))))