Blog Archive

Wednesday, August 06, 2008

அமெரிக்கா!! திரும்புகிறோம்























ஜுலை19,
ஜுங்ஃப்ரௌவிலிருந்து திரும்ப சாயந்திரம் ஆகிவிட்டது.
அங்கே சந்திக்கக் கிடைத்த தமிழர்கள் தான் ஒரே காரணம்.....
சீதா ட்ராவல்ஸ் மூலம் வந்த ஒரு குழுவும்,தாமஸ்குக் குழுவொன்றும் நிறைய இந்தியர்களை இறக்கியது.
அவர்களைக் காபந்து செய்து கூட்டிக் கொண்டு வந்தவர் கிட்டத்தட்ட ஆடு மாடுகளை மேய்ப்பது போல் காட்சி அளித்தார்,.
அங்கேயும் ஒரு பாலிவுட் ரெஸ்டாரந்த், இந்திய சாப்பாடு தயராக வைத்திருந்தது. அதில் ஜெயின் சாப்பாடு வேற.
என் திலகத்தைப் பார்த்து இரண்டு(என்னைவிட வயதான) பாட்டிகள் ஜாக்கிரதையாக விசாரித்துக் கொண்டார்கள். ''நோ கார்லிக் நோ ஆனியன்''
இதுதான் தாரக மந்திரம்.
நம்மைவிட இவர்கள் இன்னும் மகா ஆசாரம் உணவு விஷயத்தில்
என்று புரிந்து கொண்டேன்.
மரபு முறையைப் பின்பற்றுவதில் அவர்கள் விட்டுக் கொடுக்காமல் உறுதியாக இருப்பதை என் பெண் ஏற்கனவே சொல்லி இருக்கிறாள்.
அவளுடைய வீட்டு மனையைத் தேடிக்கொடுத்த ஒரு ஏஜண்ட்
ஜெயின் தானாம்.
கிரண் என்று பேரு. அந்த அம்மாவும் ஒரு தடவை இங்க
நேபர்வில் வீட்டுக்கு சாப்பிட வந்திருந்தார்கள்.
அப்போதுதான் அஹமதாபாத் போய் வந்திருந்தார்கள். அங்கே துவாரகா பக்கத்தில் ஒரு கோவில் அவங்களோட சமண மத குருக்களோடது இருக்காம்.
தன் பெண் திருமணம் நல்ல படியா நடக்க வேண்டும் என்பதற்காக,
மூன்று மாதம் அங்கே ஒரு குடில்(காட்டேஜ்) எடுத்துத் தங்கி,
தினம் காலையில் குளித்து விட்டு உணவு அருந்தாமல் அந்த மலையை ஏறி சாமி கும்பிட்டுவிட்டுக் கீழே இறங்கி மதியம் மூன்று மணிக்குத் தான் உணவு அருந்துவார்களாம்.!!
சேனு போச்சுப்பா.
நாமும் இருக்கோமே. பெண், பையன்கள் கல்யாணத்துக்கு வரன் தேடினதையே ஒரு பெரிய போர் நடத்தின மாதிரி நினைத்துக் கொண்டிருந்தோமே, இந்த அம்மாவை ப் பார்த்துக் கத்துக் கொள்ளணும்னு நினைத்தேன்.
இவர்களுக்குப் பணம் குறைவில்லை. படிப்பக் குறைவில்லை.
ஒரே ஒரு கட்டுப்பாடு அவர்கள் பிரிவுக்குள்ளேயே பையனோ பெண்ணோ
பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதிலும் இவர்கள் பின் பற்றும் அதே குருவை வணங்குபவர்களாகவும் சைவ முறையை அனுசரிப்பவர்களாகவும் இருக்க வேண்டுமாம்.
என்னையும் அவர்கள் வீட்டுக்கு அழைத்திருக்கிறார்கள் சாப்பிட.
கைகால் நகம் எல்லாம் சுத்தமாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டுப் போகவேண்டும்.:)
கிரணோட பெண் நன்றாகப் படித்து நல்ல வேலையில் இருக்கிறது. மாப்பிள்ளை கிடைக்கத்தான் சிரமப் படுகிறார்கள்.
சரி இப்ப நாம ஜுங்ஃப்ரௌவில இருக்கிற பனிக்கட்டி குகைக்குப் போகலாமா.
அங்கே இருக்கும் சிற்பங்களைப் போன பதிவில் போட்டிருந்தேன்.
அந்தக் குகைக்குள் நான் போகவில்லை.
ஆக்சிஜன் குறைவு,குளிர் அதிகம்.
ஏற்கனவே டிட்லஸ் மலையில் இன்னும் வயது குறைவாக இருந்த போது ஒரு ஆறு வருடங்களுக்கு முன்னால் பார்த்தாச்சு.
அங்கே உள்ளே போய்விட்டு முகம் வெளுத்து வருபவர்களைப் பார்த்தேன்....ம்ஹூம் நமக்கு ஒத்து வராது. வழி நெடுகக் கைப்பிடி இருக்கும். என்ன தொந்தரவு என்றால் அதுவும் வழுக்கும்.
ஐஸ் மாதிரி இருக்கும்.ஐஸ் மாதிரி என்ன ஐசேதான்.
இந்த அழகில நாட்டியக் குதிரை மாதிரி நாம் போயி,அங்க வேற யாராவது சைனீஸையோ,ஜப்பான்காரனையோ பிடித்துத தள்ளி....நினைக்கவே பயமாக இருந்தது.:)
அதுகள் பேசுவதே ஏதோ கீச்சு கீசென்று ஆனைச்சாத்தன் மாதிரி இருக்கு.கொஞ்சம் கட்டை ஆனைச்சாத்தான் வச்சுக்கலாமே:)
இன்னும் ....வேண்டாம்பா, இருக்குமிடம் வைகுந்தம் என்று நல்லா வெயில் உறைக்கும் இடத்தில் பேத்தி தூங்க நானும் காவலுக்கு ஒரு சூடான காப்பியோடு உட்கார்ந்து விட்டேன்.
அப்போதுதான் மைலாப்பூரிலிருந்து வந்த இரண்டு பெண்களைப் பார்த்தேன். கணவர்களை வீட்டைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு,
இருவரும் விடுமுறை எடுத்து வந்திருந்தார்களாம்.
ஆளுக்கு முறையே ஒரு பெண்ணும் பையனும். கல்லூரியில் படிக்கிறார்களாம்.
அதிசயமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது.
நாட்கள் மாறிவிட்டன.!!
இன்னிக்கு நாம பாசல் திரும்புகிறோம். நாளைக்கு (ஜூலை 20)மீண்டும் ஸ்விஸ் ஏரில் சிகாகோ பயணம்.
ஒன்பதரை மணி நேரம்!!!
ம்றுபடி சந்திக்கும் வரை............தொடரும்.








34 comments:

Geetha Sambasivam said...

//ஒரே ஒரு கட்டுப்பாடு அவர்கள் பிரிவுக்குள்ளேயே பையனோ பெண்ணோ
பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதிலும் இவர்கள் பின் பற்றும் அதே குருவை வணங்குபவர்களாகவும் சைவ முறையை அனுசரிப்பவர்களாகவும் இருக்க வேண்டுமாம்.
என்னையும் அவர்கள் வீட்டுக்கு அழைத்திருக்கிறார்கள் சாப்பிட//
ரொம்ப சரி, ஜைனர்கள் பத்திச் சொன்னது, இன்றும் அவங்க பூமிக்குக் கீழே விளையும் எந்த உணவுப் பொருட்களையும் சாப்பிட மாட்டாங்க, உ.கி. வெங்காயம் மட்டுமில்லை, வேர்க்கடலை, கிழங்கு வகைகள் எதுவும், இன்னும் பூமிக்குக் கீழே விளையும் எதுவா இருந்தாலும், நோ தான். ஆனாலும் இவை எதுவும் இல்லாமலேயே, இன்னும் சொல்லப் போனால் கரம் மசாலா போடாமலேயே சுவையான உணவு தயாரிப்பார்கள், அருமையாக இருக்கும் அவங்க சப்ஜியும், ரொட்டியும். தைரியமாய்ச் சாப்பிடலாம். வட இந்தியாவில் ஜைனர்கள் திருமணமும் ரொம்ப ஆடம்பரமாக இருக்கும். எவ்வளவு தினுசு ஸ்வீட் இருக்கோ, அத்தனை கோடி பணம் இருக்கும்னு விளையாட்டாச் சொல்லுவாங்க. பையன் வீட்டு சார்பில் நண்பர்களாய்ப் போனால் கூட உங்களுக்கு ஒரு பரிசு அது வெள்ளியாகத் தான் இருக்கும், நிச்சயம்! தைரியமாப் போய்ச் சாப்பிட்டுட்டு வாங்க! நாங்களும் நோ ஆனியன், நோ கார்லிக் என்று பிடிவாதம் பிடிக்கிறதால் எங்களுக்கு ஒத்துப் போகும்! :))))))))))))))

Geetha Sambasivam said...

அட, கேட்க மறந்துட்டேனே??? மீ த பர்ஷ்டு????? சிகாகோ செளகரியமாய்ப் போய்ச் சேர இறைவன் அருள் புரிவான்.

Geetha Sambasivam said...

//இன்னிக்கு நாம பாசல் தும்பறோம்//

புரியலை!! என் மாதிரி கு.வி.& கை.நா. க்களுக்குப் புரியறாப்போல் எழுதி இருக்கலாமோ???

சதங்கா (Sathanga) said...

வல்லிம்மா,

//கட்டை ஆனைச்சாத்தான்//

சூப்பரு ...

வெல்கம் டூ த யுனைடட் ஸ்டேட்ஸ் ....

ambi said...

//கிரணோட பெண் நன்றாகப் படித்து நல்ல வேலையில் இருக்கிறது. மாப்பிள்ளை கிடைக்கத்தான் சிரமப் படுகிறார்கள்.
//

மெசேஜ் நோட்டட். :))

இதெல்லாம் ஒரு வருஷத்துக்கு முன்னடியே சொல்றதில்லையா? (தங்கமணி இந்த பக்கம் வந்தா இருக்கு எனக்கு மண்டகபடி). :p

திரும்பறோம்னவுடனே சென்னைக்கோனு நினைச்சுட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும்பா கீதா. இதை இதைத்தான் நானானி கிட்டச் சொன்னேன். அப்ப்பாடி சாமி எவ்வளவு விஷயம் தெரிஞ்சிருக்கு உங்களுக்கு. கேக்கும்போது என் பையன் ஒஏசற மாத்ரியே இருக்கு அவனும் இப்படித்தான் அவனுடய சமண மத சினேகிதர்கள் அனுஷ்டிக்கும் முறைகளை ரொம்பச் சிலாகித்துச் சொல்லுவான்.
நன்றி கீதா. தும்பறதைத் திருப்பிட்டேன்:)0)
பாசல்(மகனுடைய இடம்) திரும்பி ,சிகாகோ வந்து 18 நாட்கள் ஆச்சும்மா.

வல்லிசிம்ஹன் said...

காலை நல் வணக்கம் சதா.

நன்றிங்கோவ்.

கதை நினைவுகளில் ஓடிக்கிட்டிருக்கு. என் பயணக்கதையைச் சொன்னேன்:)
நாங்க இங்க வந்து கோடையை அனுபவித்துக் கொண்டிருக்கிறொம்.:)
பத்தாம் பாகம் வந்துட்டதான்னு இனிமேதான் பார்க்கணும் வழக்கம்போல்(இல்)!!!

சதங்கா (Sathanga) said...

வல்லிம்மா,

கதை சூப்பரு. நான் பயணக்கதையை சொன்னேன். பின்னே ! வல்லிம்மா பதிவுகள் படிக்கறோம்னா, எங்களுக்கும் குசும்பு பிடிக்காதா என்ன :)))

ஓ. இங்க வந்தாச்சா. உங்க ஊருல இருந்து எங்க ஊரு பத்து மணி நேரம் ட்ரைவ். அப்படியே ஒரு எட்டு வந்துட்டு போங்க :))

ஆமா, கதை பத்தாம் பாகம் போயாச்சு, சீக்கிரம் வந்து படிங்க.

வல்லிசிம்ஹன் said...

அம்பி,
தலைப்ப்பை மாத்திடறோம். றேன்.
தங்கமணியைச் சீண்டறதே வேலையாப்போச்சு உங்களுக்கு:)
அவங்களுக்கு நம்ம முறைகள் எல்லாம் ஜுஜூபி ப்பா.!!
நாம என்ன குறஞ்சா போயிட்டொம். தங்கமணி மாதிரி கிடைக்குமா.

வல்லிசிம்ஹன் said...

கீதா பையனைப் பேச வைக்கிறதுக்குப் பதிலா ஏச வச்சுட்டேன். தட்டச்சுப் பிழை பொறுத்தருள்க:)

வல்லிசிம்ஹன் said...

சதங்கா எந்தப் பக்கம் பத்துமணி.
கிழக்கே போகும் ரயிலா:)
இதோ போய்க் கீட்டே இருக்கேன் கோவிந்தையும் இண்டியயும் பார்க்க:)
குசும்பு இல்லாம நாம் பொழைக்க முடியுமா.

Geetha Sambasivam said...

//மெசேஜ் நோட்டட். :))

இதெல்லாம் ஒரு வருஷத்துக்கு முன்னடியே சொல்றதில்லையா? (தங்கமணி இந்த பக்கம் வந்தா இருக்கு எனக்கு மண்டகபடி). :p//

@அம்பி,
என் நல்ல காலம், உங்க கெட்ட காலம் தங்கமணியோட நம்பர் இருக்கு, இதோ இப்போவே தொலைபேசிச் "ஜொள்ளினதை" சொல்லிடறேன், நன்னிங்கோ!! :P :P

Geetha Sambasivam said...

//கட்டை ஆனைச்சாத்தான்//

சூப்பரு ...//

அதே!!! ரிப்பீஈஈஈஈட்ட்ட்டேஏஏஏஏஏஏஏஏ!!!!!!!!!

Anonymous said...

நாமும் இருக்கோமே. பெண்இ பையன்கள் கல்யாணத்துக்கு வரன் தேடினதையே ஒரு பெரிய போர் நடத்தின மாதிரி நினைத்துக் கொண்டிருந்தோமேஇ இந்த அம்மாவை ப் பார்த்துக் கத்துக் கொள்ளணும்னு நினைத்தேன்.
,,,

வாழ்க்கையில் தினமும் நாமும் படித்துக்கொண்டு தான் இருக்கிறேhம், அதனால் விட்டு தள்ளுங்க... பாத்துக்கலாம்

வல்லிசிம்ஹன் said...

அம்பியின் தங்கமணியே படித்துவிட்டதாகவும், சூர்யாகிட்டப் போட்டுக் கொடுத்திருப்பதாகவும் காற்றோடு வந்த செய்தி:0) கீதா!!

ஆமாம்,ஆனைச்சாத்தன் கோவிச்சுக்குமே அதை உவமை சொன்னா..அதான் கட்டையைக் கூடப் போட்டேன் கீதா.:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஆனந்த்.அதென்னவோ உண்மைதான். தினசரி ஒரு பாடமாவது கிடைக்கிறது:)

துளசி கோபால் said...

//ஏற்கனவே டிட்லஸ் மலையில் இன்னும் வயது குறைவாக இருந்த போது ஒரு ஆறு வருடங்களுக்கு முன்னால் பார்த்தாச்சு.//

அதுக்கு இப்ப 6 வயசு கூடி இருக்கு:-))))

அங்கேயும் சீனாக்காரர் ஜப்பான்காரர் தலைதானா?

இந்தியத் தலை ஒன்னும் கிடைக்கலையா?

ஜாலியா இருக்கு இப்பெல்லாம் உங்க பதிவு:-)))

ராமலக்ஷ்மி said...

படங்களும் பதிவும் அருமை. நம்ம ஊரிலும் கிரணின் மனைவி மாதிரி பலரைப் பார்க்கலாம். விரதம் இருக்கறது, அடிப் பிர்ரதட்சணம், அங்கப் பிரதட்சணம்னு..சரி இதில் மட்டுமா என்று பார்த்தால்
//மாப்பிள்ளை கிடைக்கத்தான் சிரமப் படுகிறார்கள்.//
என்று இதிலும்தான்னு சொல்லியிருக்கீங்க! முன்பெல்லாம் குடும்ப உறவினர் தெரிந்தவர் மூலமே வரன்கள் அமைந்து விடும். இப்போது அதற்கென பத்திரிகை விளம்பரம், தொடர்ந்து வெப்சைட், நேரில், டிவியில் சுயம் வரம் வரை வந்து விட்டோம். கிரணின் பெண்ணுக்கு சீக்கிரம் வரன் அமைய வேண்டிப்போம்.

//இதெல்லாம் ஒரு வருஷத்துக்கு முன்னடியே சொல்றதில்லையா?//ன்னு வழக்கம் போல மண்டகப்படிகளுக்கு அஞ்சாமல் அம்பி சொல்லும் போது நம்ம பேச்சுலர் பதிவர்கள் சும்மா இருப்பாங்களா தெரியலயே:))!

வல்லிசிம்ஹன் said...

வரணும் துளசி.
ஆமாம் மலைக்கு வயசு கூடி ,பனி உறுகி அதுக்கும் வழுக்குது:)


இடம் மாறினா மூடும் மாறுமோ என்னவோ;)
சௌகார் ,பட்டுமாமியாக மாறியாச்சு.:)

வல்லிசிம்ஹன் said...

வரணும்மா ராமலக்ஷ்மி.
நம்ம ஊரில இன்னும் சாய்ஸ் அதிகம். இங்க வந்தப்புறம் பெண்கள் பிள்ளைகள் எல்லா மனசும் மாறிப் போகிறது. இந்தியாவிலிருந்து மாப்பிள்ளை வேண்டான்னு சொல்கிற பெண்களைத்தான் அதிகம் பார்க்க முடிகிறது.

ஆமாம் அந்தப் பெண்ணுக்கு வரன் அமையட்டும்.

பேச்சு இலர் சும்மா இருப்பாங்க.
தங்கமணி என்ன சொல்றாங்கன்னுதான் பார்க்கணும்:)

ராமலக்ஷ்மி said...

//பேச்சு இலர் சும்மா இருப்பாங்க.//

ஆமா "பேச்சு இலர்" பேசாமத்தான் இருப்பாங்க.

ரசித்தேன் வல்லிம்மா.

நானானி said...

திரும்புறோம்...ன்னதும் ஆஹான்னு வந்தேன். ஹோ! மறுபடி யூ டர்னா?
உலகம் சுற்றும் வல்லிபி ஆய்ட்டீங்க!
ஜமாய்ங்க! படங்கள் எல்லாம் கண்களுக்கு விருந்து. ஆஃப்ஸ் மலையின் சிகரங்களா அவை?

சதங்கா (Sathanga) said...

வல்லிம்மா,

//எந்தப் பக்கம் பத்துமணி.
கிழக்கே போகும் ரயிலா:)//

தென் கிழக்கே போகும் ரயில். இங்க பென்டன்வில், ஆர்கன்ஸா(ஸ்).

வல்லிசிம்ஹன் said...

ராமலக்ஷ்மி, பிடிச்சிட்டீங்க. எதைன்னு கேக்கறீங்களா.. இணைய மொழியைத்தான் சொல்கிறேன்.
பாச்சிலர் பேசுபவர்.
மணமானவர் பேச்சு இலர்:)

இங்க வந்து நான் கத்துக்கிட்ட சில வார்த்தைகள் இவை:)
அப்ப நமக்கும் இது பொருந்தும் இல்லையா.
பேசும் மடந்தை பேசா மடந்தையாவது மணத்துக்குப் பிறகுதானே!!!

ராமலக்ஷ்மி said...

//ராமலக்ஷ்மி, பிடிச்சிட்டீங்க. எதைன்னு கேக்கறீங்களா.. இணைய மொழியைத்தான் சொல்கிறேன்.//

நானும் பிடிச்சுக்கிட்டேதான் வாரேன். ஆனால் பிடிக்கப் பிடிக்க கயிறு நீண்டுகிட்டேதான் போகுது:))!

அதுசரி...பேச்சு இலரும் பேசா மடந்தையும் எப்படி சேர்ந்து வாழ்க்கை நடத்துவது? சொல்லுங்கோ:)))!

வல்லிசிம்ஹன் said...

நானானி அதைதான் திரும்பறோம்னு போட்டேன். யூ டர்ன் தான். அபவுட் டர்ன் இல்லை.:)

ஆல்ப்ஸ் மலையின் சிகரங்களிலே அலைந்து திரிந்தோம்னு சொல்லலாமா. ம்ஹூம் முடியாது.
சுகமா வண்டியில் உட்கார்ந்து பார்த்தோம்.

வெளியில்(உள்ளே) போட்டுக் கொள்ளும் தெர்மல் எடுத்துச் செல்லவில்லை.:(

வல்லிசிம்ஹன் said...

ஆஹா, சதங்கா. லிட்டில் ராக் இல்லையா:)

அதான் காதல் கதை கொடிகட்டிப் பறக்கிறதோ:))

வல்லிசிம்ஹன் said...

இணையக் கயிற்று நம்மளைக் கட்டிப் போடறதால்
நாம் இணைவோம்.:)

பேச்சு இலர் பேசுவார் நிறைய.
பெயர் மாற்றார்.
பேசாமடந்தை பெயர் மாறுவாள்,
பேச மாட்டாள், மந்திரம் ஓதுவாள்.

ராஜ நடராஜன் said...

படம் போடுவீங்கன்னு எதிர்பார்ப்பிலேயே பதிவுக்கு வந்தேன்.ஏமாற்றவில்லை:)

Vijay said...

அம்ம்பீ,

//ஒரே ஒரு கட்டுப்பாடு அவர்கள் பிரிவுக்குள்ளேயே பையனோ பெண்ணோ
பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதிலும் இவர்கள் பின் பற்றும் அதே குருவை வணங்குபவர்களாகவும் சைவ முறையை அனுசரிப்பவர்களாகவும் இருக்க வேண்டுமாம்.//

இது எல்லாம் படிக்கிறதே இல்லியா?

////கிரணோட பெண் நன்றாகப் படித்து நல்ல வேலையில் இருக்கிறது. மாப்பிள்ளை கிடைக்கத்தான் சிரமப் படுகிறார்கள்.
//

மெசேஜ் நோட்டட். :))//

இது மட்டும் தான் நோட் ஆகுதா? இது மாதிரி செலக்டிவ் ரீடிங் அம்னிசியா.... எப்போல இருந்து அரம்பிச்சிது அம்பி..... :P

(யப்பா... இன்னக்கி நிம்மதியா துங்கலாம்... எனக்கும் கீதா மேடத்துக்கும் அம்பிய ஒரு தடவையாவது ஓட்டலைனா தூக்கமே வரது இல்லஙக.:P)

Vijay said...

For comment follow up.

பின்ன அம்பியோட தங்கமணி பதில் தெரியலைனா தலை வெடிச்சிராதா? :P

தி. ரா. ச.(T.R.C.) said...

நாமும் இருக்கோமே. பெண், பையன்கள் கல்யாணத்துக்கு வரன் தேடினதையே ஒரு பெரிய போர் நடத்தின மாதிரி நினைத்துக் கொண்டிருந்தோமே
வல்லியம்மா எனக்குத்தானே இந்த உள்குத்து! நாங்களே வந்து பாத்தா மாதிரி இருக்கு.

Geetha Sambasivam said...

//(யப்பா... இன்னக்கி நிம்மதியா துங்கலாம்... எனக்கும் கீதா மேடத்துக்கும் அம்பிய ஒரு தடவையாவது ஓட்டலைனா தூக்கமே வரது இல்லஙக.:P)//
கூட்டுறவுக்கு நன்னிங்கோ!!!! :P

NewBee said...

ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்...வல்லிம்மா! நான் போட்ட பின்னூட்டம் காணோம்ம்ம்ம்...ம்ம்ம்ம்....ம்ம்ம்...அம்பிக்கு அடுத்து நான் தான். 'மீ த ப்ர்ஸ்ட்' ஆஃப்டர் அம்பி...

:)))))).சரி! பரவாயில்லை

பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள் அம்மா! :)

நானும் 3 வாரம் ஜூட். :D