Blog Archive

Monday, August 25, 2008

யு எஸ் ஏ பயணம்3 பகுதி 5

இந்த வண்டில ஒரு 75 டாலர் கொடுத்தால் ஒரு சுற்று போய் வரலாமாம்:)

கத்திரிப் பூ வர்ணம்.என்ன பூவோ.மம்ஸ்னு சொல்றாங்களே அதுவா இருக்கலாம்.


கல்யாணப்பொண்ணு கடைப்பக்கம் வந்தா...





நிலவில் குளித்திடும் நயாகரா மங்கை






கரையோரம் நடக்கும் சீனியர் சிடிசன்ஸ்







ஆதவனை நோக்கி எழும் நீர் .....ஆவி.








சிலையாகி நொந்திருக்கும் அமெரிக்க இந்தியன்.









பொங்கும் பிரவாகம்










நீல பாலிதீன் உறைகளில் படகில் பயணிப்பவர்கள்.











பொம்மைகள் மியூசியம்












தொடவேண்டாம் என்ற எச்சரிக்கையோடு சின்னஞ்சிறு குழந்தை பொம்மைகள்.

எங்க நிறுத்தினேன் கதையை. ஆ! வண்டியை இடித்து பிறகு வீட்டிற்குப் போகும் சமயம் அந்த பொண்ணு(நம்ம வண்டி கிட்ட ராங் செய்த பொண்ணு வந்து''கான் ஐ டிராப் யூ சம்வேர், ஏதாவது வாங்கிக்கொடுக்கட்டுமா'' என்று வேறு கேட்டாள்.

நாங்கள் தர்மசங்கடமாக முகத்தை வைத்துக் கொண்டு வேணாம்ம்மா.நாங்களே பார்த்துக்கறோம். எங்களுக்கு இங்கே நண்பர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டோம். பிறகு எண்டர்ப்ரைசஸ் என்ற கம்பெனிக்கு போன் செய்து ஒரு டாட்ஜ் வண்டி வாடகைக்கு எடுத்து அடுத்த நாள் மதியம் கிளம்பி டெட்ராய்ட்டிலிருந்து டொரண்டோ வந்தோம்.
ஆர்ச்சார்ட் லேக் ரோட்+ மைலைத் தாண்டும் போது எல்லோருக்குமே படபடப்பாகத்தான் இருந்தது. சரி ஏதோ போதாத நேரம்தான். ஒரு நாள் வீணாகிப் போனது. லயன் சஃபாரி போக முடியவில்லை. குழந்தைகளும் நாங்களும் மிகவும் எதிர்பார்த்தது இந்தக் காட்டுப் பயணத்தைத்தான்.
டொரண்டோ வந்து சேர்ந்த போது ஆறு மணியாகிவிட்டது. விடுதியில் உடை மாற்றிக்கொண்டு 'சப்வே ' தேடிப்போனோம்.
ஒரு இந்தியர்தான் அந்தக் கடையை நடத்திக் கொண்டிருக்கிறார். அவ்வளவு சுமுகம் இல்லை. போனால் போகிறது. எங்களுக்கு வானவில்லையும், ஏர்போர்ட் அழகும், பிளேன் வந்து இறங்கும் அழகும் பற்றிப் பேசவே நேரம் சரியாக இருந்தது . அடுத்த நாள் சிஎன் டவர் பார்த்து விட்டு நயாகரா கிளம்ப வேண்டும் என்கிற ஆவலே உற்சாகமாக இருந்தது. காலையில் எழுந்து கீழே வந்து இலவச காலை உணவையும் உள்ளே தள்ளி, இணையத்தையும் பார்த்து முடித்தபோது 11 மணியாகிவிட்டது.
சிஎன் டவர் கூட்டம் நிறைய இருக்கும்.அன்று ஞாயிற்றுக்கிழமை வேறு.
நினைத்தது போலவே கியூ நீளமாக இருந்தது டவர் அடிவாரத்தில்.
இரண்டரை மணி நேரமாவது நிற்கவேண்டும் என்றார்கள். என்னடா செய்யலாம் என்று யோசித்தபோது மாப்பிள்ளைக்கு நல்ல யோசனை ஒன்று தோன்றியது.
'இந்த டவர் கூட பார்க்கவில்லைன்னா நம்ம பயணம் குறையாகவே இருக்கும். இதன் முக்கால் உயரத்தில் ஒரு சுழலும் ரெஸ்டாரண்ட் இருக்கு. அங்கே போகலாம். அத்ற்கு வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை'என்றார். அதாவது சிஎன் டவர் என்கிற இந்தக் கோபுர சுமார் 1800 அடி உய்ரம் என்றால், இந்த உணவு விடுதி 1500 அடியில் இருந்தது. அதற்கு 360 டிகிரி என்று பெயர். அது ஒரு சுற்று முடிக்க 72 நிமிடங்கள் ஆகிறது என்று எழுதி வைத்திருந்தார்கள். இதைவிட உயரமானது நம்ம துபாய் டவர்தான். (ஆமாம் நாம்தானே கட்டினோம்:) நாம இல்லாட்ட என்ன நம்ம அபி அப்பா கட்டியிருக்கிறாரே:)
அந்த உணவு விடுதியில் வெஜிடேரியன் உணவு கேட்ட போது ''இருக்கு' ''என்றார்கள். எல்லாம் பெரிய சைஸ். குடமிளகாய், எக்ப்லாண்ட்,தக்காளி எல்லாவற்றையும் ஆலிவ் எண்ணெயில் வதக்கிக் கொண்டு வந்து வைத்தார்கள். நாங்கள் ஏறி வரும்போது நகரத்தின் ஒரு பக்கத்தை கண்ணாடிச் சுவரில் பார்த்தபடியே (லிஃப்டில்) ஏறினோம். அங்கு சாப்பிட்டால் அந்த ஸ்கை வாக் பகுதியும் பார்க்கமுடியும் என்றார்கள். படு கமர்ஷியல்மா. இல்லாவிட்டால் இவ்வளவு பணம் இங்க சேருமா!!
சரிதான் நாம் க்ராண்ட் கான்யானிலியே அந்த ஸ்கைவாக் பார்க்கவில்லை. இங்கயாவது பார்க்கலாம். என்று சாப்பிட்டு முடித்தவுடன் அங்கே போனோம். ஒரு முப்பது சதுர அடி இருக்கும் ன்று நினைக்கிறேன். நானும் அந்தக் கண்ணாடித் தரையில் நின்று பார்த்தேன். என் பெண் வர மறுத்து விட்டாள். நானும் இரண்டு பேரன்களும் நின்று படம் பிடித்துக்கொண்டோம்.திகில்தரைதான் அது எல்லோரும் படுத்துக் கொண்டு படமெடுத்துக் கொண்டார்கள். அதில் தமிழ் அம்மாக்கள் அதிகமாகவே இருந்தார்கள். நமக்கெ வீரம் அதிகம்தான்:)
கீழே பார்த்துவிட்டால் கொஞ்சம் நடுக்கம்.கீழே சாலையில் போகும் கார் மற்றவாகனங்கள் எறும்பாகத் தெரிந்தன,.
அப்போது எப்பவோ கேட்ட ஜோக் ஞாபகத்துக்கு வந்தது.''பாருடா கீழே காரெல்லாம்,மனிதரெல்லாம் எறும்பாகத் தெரிகிறார்கள் என்று ஒரு அப்பா தன் முதல் விமானப் பயணத்தில் சொல்ல ,அது நிஜ எறும்புப்பா. இன்னும் ப்ளேன் கிளம்பவே இல்லை என்று பையன் சொல்லுவான்:)''
இது அந்த மாதிரி இல்லை. உண்மையாகவே பூமிக்கும் நமக்கும் இடையில் இந்தக் கண்ணாடித்தரைதான். த்ரில்லிங்காக இருந்தது.
கீழே வப்து வழக்கமா வாங்குகிற குட்டி சூவனீர்கள் எல்லாம் வாங்கி கனடியன் டாலரைக் கொடுத்து வெளியே வந்தோம்.
மாப்பிள்ளை வண்டி ஓட்ட, அவருக்குத் தூக்கம் வராம இருக்க இவர் பேசிக்கொண்டு வர நான் கிருஷ்ணாவின் பக்கத்து சீட்டில் அமர்ந்து வன் மழலையோடு பேசுவதைக் கேட்க, பெரிய பேரனும் பெண்ணும் அதற்குப் பின்னால் இருந்த சீட்டில் ஹாரி பாட்டர் பார்க்க, வந்து சேர்ந்தோம் நயாகராவுக்கு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!











சாலையோரம் மஞ்சள் மந்தாரைப்பூக்கள்














வெய்யிலிலிருந்து விடுபட மரங்களும் விடுதிகளும்.















17 comments:

இலவசக்கொத்தனார் said...

போன பதிவுல சொன்னதுக்காக இந்தப் பகுதியில் வெறும் படமாப் போடாம கதையை எழுதவும் எழுதினீங்களாக்கும்!! நல்லாத்தான் இருக்கு!!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கொத்ஸ்.
அதேதான் இங்க விஷயம்.

நமக்கோ டையரி எழுதித்தான் பழக்கம்.
காலையில் எழுந்தேன் பல் தேய்த்தேன். வாய்ப்பாடு படித்துவிட்டுக் குளித்தேன்......
இதே மாதிரியெ இந்த பயணம் பற்றிய எழுத்தும் போகமலிருக்க்ப் பாடுபட வேண்டியிருக்கும்மா:)

துளசி கோபால் said...

நம்மகிட்டே 'ராங்' காட்டுன பொண்ணை சும்மாவா விட்டீங்க???

எல்லாருக்கும் டின்னர் வாங்கிக்கொடுன்னு படுத்தி இருக்கலாமே:-))))

ஸ்கை வாக் கொஞ்சம் பயம்தான்ப்பா. சில வருசமுன்பு ஆக்லாந்து ஸ்கை டவர்லே (கம்பியைப் புடிச்சுக்கிட்டே)நின்னு பார்த்தேன். சின்னக்குழந்தைகள் எல்லாம் அதுலே புரண்டு விளையாடுச்சுங்க. கனம் தாங்காமக் கண்ணாடி உடைஞ்சுருமோன்னுதான்..... ஹிஹிஹிஹி

நயாக்ரா படங்கள் அருமையா இருக்கு.

அந்தக் கத்திரிப்பூக்கலர் பூ 'பெடோன்னியா'

வல்லிசிம்ஹன் said...

பின்ன என்ன செய்யறது துளசி.
அதுக்கே தான் செய்தது தப்புன்னு தெரியும்.மன்னிப்புக் கேக்கறவங்களை விடறதுதான் நமக்குக் கைவந்த கலை:0)

மேலும் சிங்கமும் பொண்ணு வீட்டுக்காரரும் தூரத்திலிருந்து சைகை காட்டி பேச வேண்டாம்னு கையாட்டினாங்க.
ஸ்கை வாக்கில நானும் நடுவுக்குப் போகலை அப்டியே ஒரு ஓரமா எட்டிப் பார்த்துட்டு வந்துட்டேஎன்.நீங்க சொன்ன அதே விஷயம்தான் .கனமான விஷயம்!!!
ஓஹோ பெடோனியாவா அது பேரு.சரி சரி எல்லார் வீட்டு வாசலிலும் அதுஇருக்கு.

ராமலக்ஷ்மி said...

படங்களுடன் பயணக் கதையும் சுவாரஸ்யமா இருக்கு வல்லிம்மா.
உயரங்களே பயம்தான். அதிலும் கண்ணாடித் தரை மேலே அத்தனை உயரத்தில்..உங்கள் விவரிப்பு எங்களுக்கும் நடுக்கத்தைத் தருது! ஹி ஹி.. எனக்கு ட்ரையினில் அப்பர் பெர்ர்த்திலிருந்து கீழே பார்த்தாலே தலைக்குள் என்னவோ செய்யும்.

வல்லிசிம்ஹன் said...

ஹா,ஹா ராமலக்ஷ்மி. ஸ்வீட்.

என் பெண் ரயிலில் ரயில் போகும் திசையில் தான் உட்காருவாள்.
கண்ணாடி வழியாக விரையும் காட்சிகள் தலைவலி தரும் என்பாள்.

எனக்கு உயரங்களைப் பார்த்து பயமில்லை.நல்லவேளையாக:)
நன்றிம்மா.

Geetha Sambasivam said...

//எப்பவோ கேட்ட ஜோக் ஞாபகத்துக்கு வந்தது.''பாருடா கீழே காரெல்லாம்,மனிதரெல்லாம் எறும்பாகத் தெரிகிறார்கள் என்று ஒரு அப்பா தன் முதல் விமானப் பயணத்தில் சொல்ல ,அது நிஜ எறும்புப்பா. இன்னும் ப்ளேன் கிளம்பவே இல்லை என்று பையன் சொல்லுவான்:)''//

கோபுலு ஜோக்????????????

he he he he நானும் ராமலட்சுமி கேஸ் தான், அப்பர் பெர்த்திலே படுத்ததே இல்லை, ரயிலில் இன்னிக்கு வரையிலும், போன இத்தனை பயணங்களில், எப்படியாவது நழுவிடுவேன். ஹிஹிஹி. அ.வ.சி. :)))))))))

வல்லிசிம்ஹன் said...

இதுதான் கீதா.
கோபுலு ஜோக்கேதான். ஏதோ தீபாவளி மாஅரில் வண்ண வழுவழூ தாளில் படித்த ஞாபகம்.

நழுவுவது இருக்கட்டும். அதென்ன அ.வ.சி:)?????

ராமலக்ஷ்மி said...

மேல் பெர்த்தில் படுக்க "அடுத்தவங்க வகையா சிக்கிப்பாங்க" அதான் அ.வ.சி! சரியான்னு சொல்லுங்க கீதா மேடம்:)))!

வல்லிசிம்ஹன் said...

அடடா இப்படி ஒரூ அர்த்தம் எனக்குத் தோணாம போச்சே ராமலக்ஷ்மி! சும்மா சூப்பர்ப்பா.

கீதாவே சொல்லட்டும் என்ன வருதுனு பார்க்கலாம்:)

Geetha Sambasivam said...

அட, ராமலக்ஷ்மி, இப்படி ஒரு அர்த்தம் வருதா?? இப்போ நீங்க ரெண்டு பேரும் தான் அ.வ.சி. நான் உங்க ரெண்டு பேரையும் பார்த்து வி.வி.சி. ஓகே???? வல்லி, ஏற்கெனவே தெரியும், மறந்துட்டீங்க போல் இருக்கு! :)))) யார் வந்து சொல்றாங்கனு பார்ப்போம்!

வல்லிசிம்ஹன் said...

ஞாபகம் வந்துடுத்தே. அ வ சி அப்படீன்னா அசடு வழிய சிரிக்கிறது:)

வி.வி.சின்னா விழுந்து விழுந்துசிரிக்கிறதூ சரியா:)))))))))))))))))))))

ராமலக்ஷ்மி, ப்ளீஸ் நோட் த பாயிண்ட்:)

திவாண்ணா said...

மம்ஸா? பயந்து போயிட்டேன்.
கார் சவாரி. ம்ம்ம் நம்ம ஊர்ல குதிரை சவாரி. இங்கே கார். பரவாயில்லை.
கண்ணாடித்தரை - படமெடுக்கலையா?

Geetha Sambasivam said...

அதானே, வி.வி.சி. போட்டதும், ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே தானே?? :)))))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் திவா.எனக்கும் அதை எழுதும்போது பூவுக்கு ஏன் இந்தப் பேருன்னு நினைத்தேன்.
அது க்ரிசாந்திமம் என்பதைச் சுருக்கி அப்படிச் சொல்கிறார்கள்.

ஆனை போயி குதிரை வந்து காராயிடுத்து:0)

கண்ணாடித்தரையில் நான் நின்னேன். பெண் படமெடுத்தாள். அது அவள் காமிராவுக்குள் போய்விட்டது.
போட முடியுமான்னு பார்க்கிறேன்.நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா. அதே அதே!! கீதாம்மா. ஞாபகம் வந்திட்டது:)

ராமலக்ஷ்மி said...

//ராமலக்ஷ்மி, ப்ளீஸ் நோட் த பாயிண்ட்:)//

After noting the point, நான் வி.வி.சி:))))!

கீதா மேடம் நன்றி!