Blog Archive

Monday, August 04, 2008

யுங் ஃப்ரௌ பகுதி ..2

கூடவந்தவங்க யாரையோ எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒருவர் முர்ரன் ஸ்டேஷனில்!

ரயில் சென்ற பாதையில் இன்னொரு கிராமம்.




இந்த இரண்டு பேரில் யார் க்ராஃப்னு சொல்லுங்க பார்க்கலாம்:)





ஆழ்ந்த யோசனையில் இருக்கு சக பயணி. இவர் தலையை நான் பிடிக்கவில்லை:)







தங்கியிருந்த விடுதி வாசலில் வரவேற்கும் ஆடுகள்.









யங்ஃப்ராவின் முதல் வியூ


July19th காலையில்

ரெசிடென்சி யின் இலவச காலை உணைவை முடித்து எட்டரை மணிவாக்கில் கிளம்பி விட்டோம்.


எங்களோட இந்தக் குட்டிப் பேத்தியும் தயாராகக் காலைக் கொட்டிக் கொண்டு நின்றதுதான் அதிசயம். அதுக்கு ஒரே உற்சாகம்.

போன வருடம் இருந்த அழுகை எல்லாம் இப்போது இல்லை.
இந்தக் காலைக் கொட்டிக் கொண்டு என்க்கிற வார்த்தைக்கு ஒரு கதை உண்டு.
புக்ககத்தில் இதை தாமல் கிராமத்தில் இருந்து வந்த இன்னோரு பாட்டி சொல்வதைக் கேட்டேன்.
அதாவது வீட்டில் அடைந்து கிடப்பதை விரும்பாமல் வெளியே சுற்றும் மருமகளைப் பற்றிய செய்தியைச் சொல்லிக் கொண்டிருந்தார் எங்க ஆஜிப் பாட்டியிடம்.
''கேட்டியோம்மா, இந்த அநியாயத்தை!(இப்ப நீங்கள் தோள் பட்டையில் முகத்தை இடித்துக் கொள்வதை கற்பனை செய்ய வேண்டும்:)) )
இன்னாரோட மருமகள் சாப்பாடு ஆன கையோட, காலைக் கொட்டிக் கொண்டு மத்த வீடுகளுக்கு வம்பு பேசவும், காஞ்சீபுரத்துக்குச் சினிமா பார்க்கவும் கிளம்பும் அதிசயத்தைச் சொல்லுவார்.
'எங்க பாட்டிக்கு அவ்வளவு ரசிக்காது. போனப் போறதும்மா. சின்ன வயசு தானேன்னு'' பேச்சை மாற்றி விடுவார்.
நானும் மாடிப்படி வளைவில் சுஜாதாவையோ,புஷ்பா தங்கதுரையையோ நிறுத்திவிட்டுக் காதைத் தீட்டிக் கொண்டு ஒட்டுக் கேட்பேன்:)
கொஞ்ச நேரத்துக்குச் சத்தமே வராது.
இடுக்கு வழியாக எட்டிப் பார்த்தால் வந்த பாட்டி சைகை பாஷையில் என்னைப் பற்றி கேட்டுக் கொண்டிருப்பது தெரியும்.
அடராமா இப்பத்தானே சூடா காப்பியும், நேத்திக்குச் செய்த மைதாமாவு பிஸ்கட்டையும் உங்க கையில கொடுத்தேன் அதுக்குள்ள என்னைப் பத்தியே கேக்கிறாங்களேன்னு சுர்ருன்னு ஒரு கோபம் வரும்.
எங்க பாட்டி அசர மாட்டார்.
''அவள் நாம பேசும்போது இங்க நிற்க வேண்டாம்னு மாடிக்குப் போயிட்டாள்'
அப்படீன்னு சத்தமா சொல்லுவார்,.
அடுத்த கணம் நிஜமாவே மாடி அறைக்குப் போய்விடுவேன்.:)
அப்பவும் காலைக் கொட்டுவது எப்படி என்று யோசனையாக இருக்கும். கைகளைக் கொட்டலாம். காலை??
இப்படியாகத்தான் இருக்கும், இந்த மாஜிக் படத்திலெல்லாம் ஒரு பெண் கண்ணை இமைத்ததும் காட்சி மாறுமே அப்படி...காலைக் கொட்டி விட்டு நடப்பார்கள் போலிருக்கிறது.:)
கிட்டத்தட்ட பரத நாட்டியப் போஸ் மாதிரி இருக்கும்.
வாசலில் செருப்பப் போட்டுக் கொள்வதற்கு முன்னால் காலைக் கொட்டினால்
எப்படி இருக்கும்னு யோசித்தேன். அந்த சமயத்தில் வெறும் திண்ணையே இருந்தது . சாலையோடு போகிறவர்கள் எல்லாரும் பார்க்கலாம்.
ஏதுடா இந்தப் பெண் அபிநயம் பிடிக்கிறதே என்று கூட நினைக்கலாம்:)
காலைக் கொட்டிக் காயைக் கூப்பி
''ஆஜி நான் லைப்ரரி போயிட்டு வரேன்''
என்று சொல்லிப் பார்த்தேன் அநியாயத்துக்குச் சிரிப்பு வந்தது.
ஆகக்கூடி ஜுங்ஃப்ரோவுக்குப் போகலாம இப்ப. அது ஒரு பத்தாயிரம் அடி உயரத்தில இருக்கிறது.
க்ரிண்டெல்வால்டிலிருந்து சாதாரண ரயிலில் ஒரு பயணம்,பிறகு பல் சக்கரம் வைத்த குட்டி ரயில் ஒரு பயணம்.
நடு நடுவில் குளிருக்கு இதமாகக் கீழே இறங்கணும்னு நினைச்சோமோ
போச்சு.
விரைத்துப் போய்விடும் கைகால்கள்.
செங்குத்தாக ஏறும்போது உட்கார்ந்திருக்கும் இருக்கையோடு முதுகு ஒட்டிக் கொள்ளும்.
ஞொய்னு காது அடைத்துக் கொள்ளும்.
எல்லாவற்றையும் தாண்டி கடைசில் ஜுங்ஃப்ரௌ வந்ததும் அந்தச் சிகரங்களோட அழகை வர்ணிக்க முடியாது. கூடவே நம்ம இமயமலை மாதிரி வருமா. கங்கை மாதிரி வருமா என்ன என்று நினைப்புத் தோன்றும்.
இத்தனைக்கும் இரண்டையும் பார்த்ததில்லை:)
எங்கள் பெற்றொர் பார்த்துச் சொன்ன அனுபவம்தான்.
நம்ம ஊரிலிய்ம் இவ்வளவு போக்கு வரத்து வசதி இருந்தால் இன்னும் எத்தனை பேர் பணம் செலவழித்துப் போவார்கள் என்றும் தோன்றியது.
கஷ்டமோ இல்லையோ நம்ம கீதா(சாம்பசிவம்) அழகாப் போய்விட்டு வந்து பயணக் கட்டுரையும் எழுதினாங்க.
இன்று ஆடிப்பூரம். மானிடராகப் பிறப்பவருக்குத் தெய்வ தரிசனமே அரிது.
அதிலும் அந்த ஆண்டவனையே மணாளனாகவும் அடைந்த அவள் பெருமை
என்னவென்று சொல்வது.
இப்போது முழங்கும் பாசிடிவ் தின்கிங் அப்பவே அவளுக்கு இருந்திருக்கிறது.
முடியுமா என்ற சந்தேகமே இல்லை. நடத்திக் காட்ட்விட்டாள்.
ஆண்டாள் திருவடிகளுக்கு வணக்கங்கள் சொல்லி மீண்டும் பார்க்கலாம்.










கூகிளில் கிடைத்த யுங்ஃப்ரௌவும் வெண்ணிலாவும்.











25 comments:

வல்லிசிம்ஹன் said...

இது என்ன பயணக்கதையா, சொந்தக் கதையான்னா ரெண்டும்தான்.

நான் பயணம் போனால் நினைவுகளும் கூடவே பயணிக்கிறது என்ன செய்யலாம்:)

தி. ரா. ச.(T.R.C.) said...

இது சொந்த பயணக்கதை. படங்கல் ஜோர்.பாட்டியும் பேத்தியும் ஜோடி சேர்ந்தாச்சு.இனி அவ்வளவுதான் கதை நல்லாப் போகும்

இலவசக்கொத்தனார் said...

நல்ல பயணம்தான்!! :))))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் தி.ரா.ச.
பேத்தி என்னை விடவில்லை.நானும் அவளைப் பிடித்துக் கொண்டேன்:)

ஐந்து நாட்கள் போன வகையே தெரியவில்லை!!
அதுக்குக் கதை கேக்கிற வயசு. ம்ம்ம் சொல்லு சொல்லுன்னு உற்சாகப் படுத்தும். அப்புறம் என்ன நீங்க சொன்ன மாதிரி கதைதான்:)

வல்லிசிம்ஹன் said...

சரி சார் கொத்ஸ்.
கூடவே வந்த மாதிரி இருக்குனு சொல்லலீயா:))))

G.Ragavan said...

படங்கள்ளாம் ரொம்ப நல்லாயிருக்கு.

அப்படியே ஒங்க பாட்டி கதையும். :)

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராகவன். உங்கள் ஸ்விஸ் பயணத்தில் இங்கே சென்றீர்களோ என்று யோசித்தேன்.

படங்கள் எடுக்கத் தோதாகக் காமிரா வாங்கிக் கொடுத்தவர்களுக்கே நன்றி சொல்லணும்;0)

துளசி கோபால் said...

//இந்த இரண்டு பேரில் யார் க்ராஃப்னு சொல்லுங்க பார்க்கலாம்:)//

இது என்ன பிரமாதம்?

இடது பக்கம் கண்ணாடி போட்டுக்கிட்டு, நெத்தியில் பொட்டோடு இருக்கும் பெண் 'மணி':-))))

பாட்டியும் பேத்தியும் சரியான ஜோடி.

பொறத்தியாரைப் பத்தி வம்பு பேசாத ஆட்கள் அபூர்வம்!!!!

அவுங்களைத் தட்டிக்கழிக்கப் பயங்கர சாமர்த்தியம் வேணும். நமக்குப் பிடிக்கலைன்னாலும் எப்படியோ பேச்சுக் கொடுத்து விசயத்தைப் பிடுங்கிருவாங்க.

எனக்குத் தெரிஞ்ச ஒரு 'தோழி'....
நாம் நல்லா இருந்தாலுமே....''ஏன் மொகம் ஒரு மாதிரியா இருக்கு? நல்லாவே இல்லையே...'ன்னு அனுதாபமாப் பேசியே நம்மகிட்டே இருந்து விசயத்தை எடுத்துருவாங்க. நாமும் கனஜாக்கிரதையா இருந்தாலும் எல்லத்தையும் சொல்லிட்டு அசடு வழிவோம்(-:

வல்லிசிம்ஹன் said...

Thulasi,
absolutely right.
நாம் எப்படி இருந்தாலும் நம்மளை ஒரு வழி செய்துடுவாங்க.
அதுக்கும் மேல என்கிட்ட சொல்றதில என்ன கூச்சம்/?னு கேள்வி வேற:)
அவங்க தோழியா!!!!! அப்ப எனிமியா இருந்தா என்னா கேப்பாங்களோ:)
இந்தத் தாமல் பாட்டிகிட்ட ஆஜி வெகு சாமர்த்தியமாப் பேசிச் சாப்பாடு போட்டு அனுப்பிடும்:0
a

Vijay said...

வல்லிம்மா,

எப்போ சென்னை? நான் 13ம் தேதி போறேன். ஓரு வழியா எல்லாரையும் சமாளிச்சி லீவு வாங்கியாச்சி. நீங்க வேற யுங் ஃப்ரௌ அது இதுன்னு ஆசை கிளப்பி விட்டுடீங்களா? சரி...நான் அட்லீஸ்ட் குற்றாலம், ஊட்டின்னு சுத்த வேண்டியதுதான். பாக்கலாம்... டேக் கேர்... பை..

ambi said...

//இந்த இரண்டு பேரில் யார் க்ராஃப்னு சொல்லுங்க பார்க்கலாம்//

நெத்தில பொட்டு வெச்சுண்டு இருக்கறவங்க தான்னு எங்களுக்கு எப்பவோ தெரியுமே! :p

ஒட்டு கேக்கறது எல்லாம் அப்பவே ஆரம்பிச்சாச்சா? :))

வல்லிசிம்ஹன் said...

விஜய் நல்ல படியாப் போய் வாங்க.
மனைவி குழந்தைகள் பெற்றோரைக் கேட்டதாகச் சொல்லவும். குற்றாலத்தில பொறுமையா இருந்து
ரசிச்சுப் பார்த்ததை எழுதுங்க. நான் குற்றாலம் போனதே இல்லை:)

வல்லிசிம்ஹன் said...

அம்பி, சரியாக் கண்டுபிடிச்சிட்டீங்க:)

ஒட்டுக் கேக்காம இருக்க முடியுமா. அந்த மாதிரிக் குரல் அந்தப் பாட்டிக்குக் கிடையாது. ஒரு குட்டித் தூக்கம் போடலாம்னு போனவளை எழுப்பினதே அந்தக் குரல்தான்:)

சதங்கா (Sathanga) said...

சொந்தக் கதை, பயணக் கதை எதுனாலும் உங்கள் நினைவுகளையும் பயணிக்க வைத்து வழக்கம் போல சுவையா தந்திருக்கீங்க.

பாட்டி - பேத்தி vs பாட்டி - பாட்டி, நினைவு கூறல்கள் வித்தியாசம், அருமை.

ராமலக்ஷ்மி said...

//இந்த இரண்டு பேரில் யார் க்ராஃப்னு சொல்லுங்க பார்க்கலாம்//

ambi said..//நெத்தில பொட்டு வெச்சுண்டு இருக்கறவங்க தான்னு எங்களுக்கு எப்பவோ தெரியுமே!//

நன்றி அம்பி. எனக்கு இப்போதான தெரியுது:)!

ராமலக்ஷ்மி said...

//நான் பயணம் போனால் நினைவுகளும் கூடவே பயணிக்கிறது என்ன செய்யலாம்:)//

கூட்டிச் செல்லலாம். நினைவுகளின்றி நாமில்லை:)!

வல்லிசிம்ஹன் said...

சதங்கா,
நினைவுகளின் அருமை வருஷங்கள் போகப் போக அதிகரிக்கிறது.
பாஅடி பேத்தி உறவு மாமியார் மருமகள் உறவு எல்லாமே அந்த ரகம்தான்.
நாம் பெரியவர்கள் ஆகும்போது அந்ததந்த ஸ்தானத்துக்கு உண்டான களிப்போ சோகமோ (நம் இளவயது)எதுவுமே இப்பவும் பிரதிபலிக்கும்.
ஒன் மோர் கம்பாரிசன்:)
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அடடா, ராமலக்ஷ்மி
அம்பி ஏமாத்தறார்மா.

வலது பக்கம் இருக்கிறது நான். இடது பக்கம் இருக்கிறதுதான் க்ராஃப்:))))))

நல்ல நினைவுகளுக்கு எப்பவுமே ஒரு பழக்கம். நல்ல விஷயங்கள் நடக்கும் போது இதோ நான் இருக்கேன், இதே மாதிரி அம்மா அப்ப்பாவோட வைகை அணைக்கட்டு போனது ஞாபகமிருக்கான்னு கேக்கும்:)

ambi said...

//வலது பக்கம் இருக்கிறது நான். இடது பக்கம் இருக்கிறதுதான் க்ராஃப்//

வலது எது? இடது எதுன்னும் இராமலக்ஷ்மிக்கு சொல்லிடுங்க. :p

உங்களுக்கு வலதா? இல்ல பாக்கறவங்களுக்கு வலதா? :))

Vijay said...

அய்யோ.... அம்பிக்கி, சோத்தாங்கை, பீச்சாங்கைன்னு சொன்னதான பிரியும். யாருக்குங்கிறதெல்லாம் அப்புறம்.....:P

வல்லிசிம்ஹன் said...

அம்பி, நமக்கு அதெல்லாம் அவ்வளவாத் தெரியாதுங்க .
ஏதோ பார்வைக்கு நல்லா இருக்கிறவங்களை அதா...அங்கிட்டு நிக்கறது நாந்தேன் அப்படின்னு சொல்கிற வழக்கம். அதனால பார்க்கிற வங்க சாய்ஸுக்கு விட்டுடலாமா:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் விஜய், இன்னும் 5 நாள் இருக்கா ஊருக்குக் கிளம்ப. ஜாலிதான்.:)
அடடா அம்பியைப் பத்தி இவ்வளவு விவரம் தெரிஞ்சு வச்சு இருக்கீங்களே.))

அம்பி சொல்லவே இல்லையே:)

ராமலக்ஷ்மி said...

அம்பி, யாருக்கு வலது யாருக்கு இடது என்பதெல்லாம் இருக்கட்டும். வரைபடத்தில் பெங்களூருக்கு இடதில் அமெரிக்கா ரொம்ப தூரம்தான். ஆனால் வலதில் சென்னை ரொம்பப் பக்கம்தான்னு வல்லிம்மா மறந்திட்டாங்க. சென்னைக்குப் போகையிலே (அவங்க வந்தப்புறமா) "டிங்டாங்"னு காலிங் பெல்லை அடிச்சாப் போச்சு:))!

ராமலக்ஷ்மி said...

//ஏதோ பார்வைக்கு நல்லா இருக்கிறவங்களை அதா...அங்கிட்டு நிக்கறது நாந்தேன் அப்படின்னு சொல்கிற வழக்கம்.//

வல்லிம்மா எனக்கு எனது இடப்புறமா தெரியற அம்மாவத்தான் ரொம்பப் பிடிச்சிருக்கு:)!

ராமலக்ஷ்மி said...

என்ன வல்லிம்மா நான் "டிங்டாங்" பண்ணலாம்தானே:(?