Blog Archive

Saturday, August 30, 2008

பயணம் 3,பகுதி 6

திவா கேட்ட கண்ணாடித்தரையின் வியூ,சி.என்.டவர்
ஸ்கைலான் நயாகரா


நயாகரா வீதிகளில் ஒன்று. காசீனோஒன்றும் இங்கே இருக்கிறது.



போட்டோ எடுக்காமல்போக முடியூமா:0)





ட்டொரண்ட்டொவிலிருந்து திரூம்புகிறோம்.






கம்பீரமா நிற்கும் ஒரு இந்தியப்பெண்.







நயாகராவின் கரையோரம்








கண்ணாமூச்சி ஆடும் நதி.
நம்ம் ஊரில் இப்படி ஒரு சாலை நினைவுக்கு வரூகிறது.
கரூர் சேலம் பாதைதான் அது.அகண்ட காவேரியில்லிருந்து பிரிந்து வரும் ஒரு அகண்ட வாய்க்கால் தண்ணீர் சலசலக்க பஸ்ஸோடூ கூடவரும்.
அந்தப்ப் பதினெட்டு வயதுக் கனவில் மூழ்கீய நாட்களில் ஒவ்வோருபயணமும் குட்டியோ ,,பெரிசோ
அலுப்பே தட்டாது. அதுவூம் அந்த மாதம் நாலாவது மாதத்தில்
கருவாக உள்ளே இரூந்த பையனிடம் பேசீக்கொண்டு வந்தநினைவு:)
எல்லாமே அதிசயமாக இரூந்த நேரம்.
சரி இப்போ நயாகராவுக்கு வந்துவிடுவோம்:)
வாடகைக்காரில் வந்த்து எம்பசி ஸ்வீட்ஸில் 34ஆவது மாடிக்குப் போகையில் பேரனுக்கு இருந்த சந்தோஷம் சொல்லீ முடியாது:))))))
அதுவும் அறைக் கதவைத் திறந்ததும் தெரிந்த காட்சி ....நயாகரா நயாகரா.
எல்லோரும்
ஓடிவிட்டோம் அந்த்த ஜன்னல் பக்கம்.
அப்போதிருந்து எடுத்த படங்கள்
இன்னும் (வலையில் ஏற்றாதது) நிறைய இருக்கின்றன.முதல்
நாள்நாங்கள் போக விரும்பிய இடம் காசூ நிறைய புழங்குமே காசினோ...அங்க.
ஆளுக்கு பத்து கனடியன் டாலர் மாற்றிக் கொண்டோம்.
நான் கவனமாக கைக்கடிகாரத்தைக் கழட்டீவைத்தூவிட்டேன்.
எல்லாம் ஒர்
முன்னேற்பாடு தான். நம்மை மீறி தர்மபுத்திரர் வெறி வந்துவிட்டால்:)

மாப்பிள்ளை அழைத்துப் போனார். அப்ப நேரம் இரவு10 இருக்கும். பெண் அரை மணி
நேரத்தில் வரலை என்றால் கதவு திறக்கப் படாது என்று சிரித்தாள்.
பெரிய பேரனுக்கு ஒரே வருத்தம்.
இதெல்லாம் தப்பு தாத்தா. யூ ஷுட் நாட் டூ இட். வேனுமானால்
நான் ஹெல்புக்கு வரேன். என் கிட்ட 100 டாலர் இருக்கு என்றானே பார்க்கணும்:)
அவன் வயசுப் பையன்களை விட மாட்டார்கள்
என்று தெரிந்ததும் சப்பென்று போய் விட்டது:)

அத்தனாம் பெரிய இடத்தை நான் பார்த்ததே இல்லை.
வரிசை வரிசையாக ஸ்லாட் மெஷின்கள். இரவு பகல் என்று பாராமல் விளையாடும் மனிதர்கள் மனுஷிகள். பாட்டி தாத்தாக்கள்.
அவர்களுக்கு வேண்டும் என்பதை தர பணியாளர்கள். பூம் பூமென்று அலறும் இசை.
கர்மமே கண்ணாயினாராக ஏதோ ஒரு கணக்கோடு விளையாடும்
அவர்கள், ஒரு ஆயிரம் பேராவது இருக்கும்.

மாப்பிள்ளை எப்படி விளையாடவேண்டும் என்று காண்பித்தார்.
பத்தே நிமிடத்தில் எங்கள் பத்து டாலரை அந்த யந்திரம் முழுங்கிவிட்டது.
சரி நமக்குக் கட்டுப்படியாகாது என்று நினைத்தவாறு எழுந்துவிட்டோம். பக்கத்திலிருந்த
பணக்காரப் பாட்டி, இன்னோரு நூறு டாலரை
மாற்றிக்கொண்டிருந்தாள்.:)
ஏற்கனவே ஜெயித்த பணத்தை அழகாகப் பையில் போட்டுக் கொண்டாள்.அவள் அநேகமாக அடுத்த நாள் காலை வரை இருப்பாள் என்று நினைத்தபடி ,காலாற அருவியைப் பார்க்க நடந்தோம்.








Friday, August 29, 2008

இந்த நாட்டு நடப்பு


பேச்சு மேடைப் பேச்சு.
அமெரிக்க அரசியல் வாணங்கள் வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கின்றன இப்போது
எல்லா தொலைக் காட்சி நிகழ்ச்சிகளிலும்.


சிஎன் என், ஒபாமா பக்கம் என்று நினைக்கிறேன். ஃபாக்ஸ் நியூஸ் அந்தப்பக்கமோ:00
எப்படியொ ''எல்லன் டிஜெனரஸ் ஷோ''விலயும் ஹிலாரி க்ளிண்டன் வந்துட்டுப் போயிட்டாங்க.
இன்னும் 67 நாட்கள் இருக்கின்றன இந்த ஊருத் தேர்தலுக்கு.
1998இல் இருந்த அதே வுல்ஃப், கிங் எல்லோரும் இப்பவும் இருக்கிறார்கள்.
அப்போது பிரசிடெண்டாக இருந்த ஹிலரி வீட்டுக்காரர் மகா சங்கடத்தில் மாட்டிக் கொண்டிருந்தார்.
அதை அப்போது வெளு வெளு என்று வெளுத்தார்கள்.
இதை ஜீரணம் செய்யவே எனக்கு அப்போது சிரமமாக இருந்தது. இவ்வளவு பப்ளிக்கா இந்த சமாசாரத்தை அலசுகிறார்களே!
குழந்தைகள் டிவி பார்த்தால் கேள்விகள் கேட்குமே என்றேல்லாம் தோன்றும்.
அப்போது பெரிய பேரன் கைக்குழந்தை. அதனால் எங்களுக்கு இந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் அவ்வளவு சங்கடம் இல்லை.
அந்தப் பொண்ணு என்ன ஆச்சோ ,,,தெரியாது எங்கயோ நியூயார்க்
பக்கம் நாடு கடத்தப் பட்டதாகக் கேள்வி.
அதெல்லாம் நமக்கு இப்ப வேண்டாம்.:)
ஆனால் இந்த ஜனநாயகக் கட்சி டென்வர் மாநாட்டில் ஹிலரியும் க்ளிண்டனும் பேசியதைப் பார்த்தோம்.
எங்களுக்குத் துளியும் சம்பந்தமில்லாத அரசியல்தான். இருந்தாலும் இந்த வீட்டுக்காரங்க ஏழு மணியிலிருந்து பத்து மணிவரை
அவங்க பேசினதை டிவி +டின்னர் வைத்துக்கொண்டு பார்த்தார்கள்.
நம்ம ஊரில அடுத்த நாள் ஹிந்துவில் படிப்போம். இல்லாவிட்டால் இதில் நமக்கென்ன இருக்கப் போகிறது என்று விட்டுவிடுவோம்.
அந்த மாதிரி செய்வது நல்ல பொறுப்புள்ள பொதுஜனம் செய்யும் வேலை இல்லை. இருந்தாலும்ம்ம்ம்
பொறுப்போடு ஓட்டுப் போடுவதோடு முடிந்தது.
அவ்வளவு கசப்பு.

இங்க ஊடகங்கள் பூடகங்களாக இல்லை.வெளிப்படையாக கேள்விகள். பதில்கள்.
நம் ஊரில் எல்லாம் அத்தனை வெளிச்சம் விழுவதில்லை அரசியல் வாதிகள் மேல். விழுந்தாலும் ஆட்டோவுக்குப் பயந்து பேச மறுக்கிறார்களோ.



ஜூ.வி,நக்கீரன்,சோ அவர்களின் துக்ளக் இப்படி சில பத்திரிகைகள் இருந்தாலும் யாரை யார் நம்புகிறார்கள் என்பதே பெரிய பிரச்சினை.
இதில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது இன்னும் பெரிய சோதனை. இருக்கிறதிலியே கொஞ்சம் நல்ல் நடத்தை உள்ளவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம்னு நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.:)


இங்க நவம்பரில் நாலாம் தேதிக்குள் இன்னும் எத்தனை நாடகங்கள் நடக்குமோ.
ஜனநாயகக் கட்சி வந்தால் நம் ஊருக்கு என்ன லாபம் என்று பார்த்தேன். தெரியவில்லை. அதை நம் பதிவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

Monday, August 25, 2008

யு எஸ் ஏ பயணம்3 பகுதி 5

இந்த வண்டில ஒரு 75 டாலர் கொடுத்தால் ஒரு சுற்று போய் வரலாமாம்:)

கத்திரிப் பூ வர்ணம்.என்ன பூவோ.மம்ஸ்னு சொல்றாங்களே அதுவா இருக்கலாம்.


கல்யாணப்பொண்ணு கடைப்பக்கம் வந்தா...





நிலவில் குளித்திடும் நயாகரா மங்கை






கரையோரம் நடக்கும் சீனியர் சிடிசன்ஸ்







ஆதவனை நோக்கி எழும் நீர் .....ஆவி.








சிலையாகி நொந்திருக்கும் அமெரிக்க இந்தியன்.









பொங்கும் பிரவாகம்










நீல பாலிதீன் உறைகளில் படகில் பயணிப்பவர்கள்.











பொம்மைகள் மியூசியம்












தொடவேண்டாம் என்ற எச்சரிக்கையோடு சின்னஞ்சிறு குழந்தை பொம்மைகள்.

எங்க நிறுத்தினேன் கதையை. ஆ! வண்டியை இடித்து பிறகு வீட்டிற்குப் போகும் சமயம் அந்த பொண்ணு(நம்ம வண்டி கிட்ட ராங் செய்த பொண்ணு வந்து''கான் ஐ டிராப் யூ சம்வேர், ஏதாவது வாங்கிக்கொடுக்கட்டுமா'' என்று வேறு கேட்டாள்.

நாங்கள் தர்மசங்கடமாக முகத்தை வைத்துக் கொண்டு வேணாம்ம்மா.நாங்களே பார்த்துக்கறோம். எங்களுக்கு இங்கே நண்பர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டோம். பிறகு எண்டர்ப்ரைசஸ் என்ற கம்பெனிக்கு போன் செய்து ஒரு டாட்ஜ் வண்டி வாடகைக்கு எடுத்து அடுத்த நாள் மதியம் கிளம்பி டெட்ராய்ட்டிலிருந்து டொரண்டோ வந்தோம்.
ஆர்ச்சார்ட் லேக் ரோட்+ மைலைத் தாண்டும் போது எல்லோருக்குமே படபடப்பாகத்தான் இருந்தது. சரி ஏதோ போதாத நேரம்தான். ஒரு நாள் வீணாகிப் போனது. லயன் சஃபாரி போக முடியவில்லை. குழந்தைகளும் நாங்களும் மிகவும் எதிர்பார்த்தது இந்தக் காட்டுப் பயணத்தைத்தான்.
டொரண்டோ வந்து சேர்ந்த போது ஆறு மணியாகிவிட்டது. விடுதியில் உடை மாற்றிக்கொண்டு 'சப்வே ' தேடிப்போனோம்.
ஒரு இந்தியர்தான் அந்தக் கடையை நடத்திக் கொண்டிருக்கிறார். அவ்வளவு சுமுகம் இல்லை. போனால் போகிறது. எங்களுக்கு வானவில்லையும், ஏர்போர்ட் அழகும், பிளேன் வந்து இறங்கும் அழகும் பற்றிப் பேசவே நேரம் சரியாக இருந்தது . அடுத்த நாள் சிஎன் டவர் பார்த்து விட்டு நயாகரா கிளம்ப வேண்டும் என்கிற ஆவலே உற்சாகமாக இருந்தது. காலையில் எழுந்து கீழே வந்து இலவச காலை உணவையும் உள்ளே தள்ளி, இணையத்தையும் பார்த்து முடித்தபோது 11 மணியாகிவிட்டது.
சிஎன் டவர் கூட்டம் நிறைய இருக்கும்.அன்று ஞாயிற்றுக்கிழமை வேறு.
நினைத்தது போலவே கியூ நீளமாக இருந்தது டவர் அடிவாரத்தில்.
இரண்டரை மணி நேரமாவது நிற்கவேண்டும் என்றார்கள். என்னடா செய்யலாம் என்று யோசித்தபோது மாப்பிள்ளைக்கு நல்ல யோசனை ஒன்று தோன்றியது.
'இந்த டவர் கூட பார்க்கவில்லைன்னா நம்ம பயணம் குறையாகவே இருக்கும். இதன் முக்கால் உயரத்தில் ஒரு சுழலும் ரெஸ்டாரண்ட் இருக்கு. அங்கே போகலாம். அத்ற்கு வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை'என்றார். அதாவது சிஎன் டவர் என்கிற இந்தக் கோபுர சுமார் 1800 அடி உய்ரம் என்றால், இந்த உணவு விடுதி 1500 அடியில் இருந்தது. அதற்கு 360 டிகிரி என்று பெயர். அது ஒரு சுற்று முடிக்க 72 நிமிடங்கள் ஆகிறது என்று எழுதி வைத்திருந்தார்கள். இதைவிட உயரமானது நம்ம துபாய் டவர்தான். (ஆமாம் நாம்தானே கட்டினோம்:) நாம இல்லாட்ட என்ன நம்ம அபி அப்பா கட்டியிருக்கிறாரே:)
அந்த உணவு விடுதியில் வெஜிடேரியன் உணவு கேட்ட போது ''இருக்கு' ''என்றார்கள். எல்லாம் பெரிய சைஸ். குடமிளகாய், எக்ப்லாண்ட்,தக்காளி எல்லாவற்றையும் ஆலிவ் எண்ணெயில் வதக்கிக் கொண்டு வந்து வைத்தார்கள். நாங்கள் ஏறி வரும்போது நகரத்தின் ஒரு பக்கத்தை கண்ணாடிச் சுவரில் பார்த்தபடியே (லிஃப்டில்) ஏறினோம். அங்கு சாப்பிட்டால் அந்த ஸ்கை வாக் பகுதியும் பார்க்கமுடியும் என்றார்கள். படு கமர்ஷியல்மா. இல்லாவிட்டால் இவ்வளவு பணம் இங்க சேருமா!!
சரிதான் நாம் க்ராண்ட் கான்யானிலியே அந்த ஸ்கைவாக் பார்க்கவில்லை. இங்கயாவது பார்க்கலாம். என்று சாப்பிட்டு முடித்தவுடன் அங்கே போனோம். ஒரு முப்பது சதுர அடி இருக்கும் ன்று நினைக்கிறேன். நானும் அந்தக் கண்ணாடித் தரையில் நின்று பார்த்தேன். என் பெண் வர மறுத்து விட்டாள். நானும் இரண்டு பேரன்களும் நின்று படம் பிடித்துக்கொண்டோம்.திகில்தரைதான் அது எல்லோரும் படுத்துக் கொண்டு படமெடுத்துக் கொண்டார்கள். அதில் தமிழ் அம்மாக்கள் அதிகமாகவே இருந்தார்கள். நமக்கெ வீரம் அதிகம்தான்:)
கீழே பார்த்துவிட்டால் கொஞ்சம் நடுக்கம்.கீழே சாலையில் போகும் கார் மற்றவாகனங்கள் எறும்பாகத் தெரிந்தன,.
அப்போது எப்பவோ கேட்ட ஜோக் ஞாபகத்துக்கு வந்தது.''பாருடா கீழே காரெல்லாம்,மனிதரெல்லாம் எறும்பாகத் தெரிகிறார்கள் என்று ஒரு அப்பா தன் முதல் விமானப் பயணத்தில் சொல்ல ,அது நிஜ எறும்புப்பா. இன்னும் ப்ளேன் கிளம்பவே இல்லை என்று பையன் சொல்லுவான்:)''
இது அந்த மாதிரி இல்லை. உண்மையாகவே பூமிக்கும் நமக்கும் இடையில் இந்தக் கண்ணாடித்தரைதான். த்ரில்லிங்காக இருந்தது.
கீழே வப்து வழக்கமா வாங்குகிற குட்டி சூவனீர்கள் எல்லாம் வாங்கி கனடியன் டாலரைக் கொடுத்து வெளியே வந்தோம்.
மாப்பிள்ளை வண்டி ஓட்ட, அவருக்குத் தூக்கம் வராம இருக்க இவர் பேசிக்கொண்டு வர நான் கிருஷ்ணாவின் பக்கத்து சீட்டில் அமர்ந்து வன் மழலையோடு பேசுவதைக் கேட்க, பெரிய பேரனும் பெண்ணும் அதற்குப் பின்னால் இருந்த சீட்டில் ஹாரி பாட்டர் பார்க்க, வந்து சேர்ந்தோம் நயாகராவுக்கு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!











சாலையோரம் மஞ்சள் மந்தாரைப்பூக்கள்














வெய்யிலிலிருந்து விடுபட மரங்களும் விடுதிகளும்.















Saturday, August 23, 2008

யு எஸ் ஏ...பயணம் 3 பகுதி 4

இது இணையத்தில் கடன் வாங்கின படம்.இரவில் வர்ண ஜாலம் செய்யும் விளக்கு வெளிச்சத்தில் நயகரா.
அருகே அருகே போனோம் அப்பாடி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


முழுநிலவுக்கு இரண்டு நாள் முன்னிலவு




நீர்வீழ்ச்சியும் அதிலிருந்து வரும் மிஸ்டும் கண்ணைப்பறிக்கின்றன.அந்த சாலையில் நடைக்கையில் காற்றடித்தால் சாரல்:0)





இவ்வளவு தண்ணீரையும் கட்டுப்படுத்தித்தான் அருவியாகக் கொட்டுகிறது.அதற்கே இவ்வளவு காம்பீர்யம். சொல்லிமுடியாது இந்த அழகை.






அருவிக்குப் பின்னால் போகும் பயணம்:)







இரவில் நயகரா ராணி வண்ண ஆடை உடுத்துகிறாள்.








இந்தப் படத்தை எடுக்கும்போது யாராவது தேவதை வெளியே வருவாளோ என்ற ஒரு பிரமிப்புத் தோன்றியது.









கிடு கிடு பள்ளத்துக்கு விரையும் நதி.










மெயிட் ஆஃப் த மிஸ்ட் படகுகள் அருவியின் சமீபத்துக்கு விரைகின்றன.











வேறு யாரோ எடுத்த பட்டாசு வாண வேடிக்கை.












தங்கியிருந்த விடுதி.













கனடாவின் நீலவானம்














எங்களைப்போலவே அங்கே குழுமியிருந்த டூரிஸ்டுகள்.
நயகராவின் கதையை அடுத்த பதிவில் சொல்கிறேன்:)















கண்ணன் பிறந்தான்.



கண்ணன் திருவடிகள் சரணம்.
எல்லோருக்கும் ஸ்ரீஜயந்தி வாழ்த்துகள். கண்ணன் காக்கட்டும் நம்மை.

Friday, August 22, 2008

யு எஸ் ஏ பயணம் 3 ,பகுதி 3

நயகரா இரண்டாம் நாள்

சிஎன் டவர் முன்னால் இருக்கும் கோபுரம் தாங்கிகள்:) கூகிளில் போனால் தெரியும்.நான் போய்ப் பார்க்கவில்லை.



நாங்கள் மதிய உணவு அருந்திய இடம் 360 ரெஸ்டாரண்ட்.சுழுலுவதால் இந்தப் பெயரோ.




டவர் மேலிருந்த கிடைத்த காமிராக் கோணங்கள்.





டவருக்கு வெளியே போஸ்டரில் சிரிக்கும் மை ஃபேர்லேடி ஆட்ரி ஹெப்பர்ன்.






ஒண்டேரியோ ஏரியில் மிதக்கும் படகு.







கீழே சூவனீர் கடையில் பிரமாண்ட கரடி.








டவர் வியூ இன்னோரு பக்கம்









இந்தக் கோபுரம் தான் கோபுரங்களிலியே உயர்ந்ததாமே அப்படியா??










முதன்முதலாக எடுத்த படம் நயகரா











360 உணவுவிடுதியில் நான் தேர்ந்தெடுத்த மெனு. பார்க்கப் பயமா இருந்தாலும் சாப்பிட ருசியாக இருந்த கத்திரிக்கய்,தக்காளி,வெள்ளரி,வெங்காயம்.தொட்டுக்க் வெண்ணை. ம்ம்ம்ம்ம்












இந்தப் படம் ரெண்டு தரம் வலையேறி விட்டது.













நியூயார்க் சைட் அமெரிக்கன் நயகரா.



ஆகஸ்ட் 8ஆம் தேதி காலை அம்மாவின் மறதி தெளிவாக எல்லாராலும் விலாவாரியாக
விவாதிக்கப்பட்டது.
மற்ற இரண்டு பேரும் தொலைவில் ஐஎஸ்டி பேசும் தூரத்தில் இருந்ததால் அவர்களுக்கு செய்தி போகவில்லை.
பெண் உடனேயே நீ உட்கார்ந்துக்கோம்மா .விழுந்துவிடாதே ஏதாவது செய்து உன்னை க் காப்பாற்றி விடுகிறேன்'' என்று ஆறுதல் சொன்னாள்:). எனக்கு பெரிய கஷ்டமாக இல்லை. உள்ளூர கொஞ்சம் பயம்.
அடுத்த பிளான் நாங்கள் கனடா விசாவுக்குப் போவது,
மகள் சிகாகோவில் அவளுடைய வைத்தியர் நிலைமையைச் சொல்லி மருந்து ப்ரிஸ்க்ரிப்ஷன் கேட்பது.
அவள் சிகாகொவுக்குப் போன் போடும்முன் நான் வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டுவிட்டேன்.
..அவங்க கீட்டெ என் மருந்து பேரை மட்டும் எழுதிக் கொடுத்துவிட்டு கிடைக்கணுமே சாமின்னு பிள்ளையார்கிட்டச் சொல்லிட்டு அப்புறம் ராகவேந்திரர் கிட்ட ஒரு அப்ளிகேஷன் கொடுத்துவிட்டுக் கனடியன் அலுவலகத்துக்குப் போனோம்.
எல்லாவற்றையும் ஆராய்ந்து ஒரு மணிநேரத்தில் வந்து வாங்கிக் கொள்ளச் சொல்லவும் நாங்கள் அங்கியே உட்கார்ந்துவிட்டோம்.
ஒருவழியாக வீடு வந்து சேரும்போது மணி ஒன்று.
அதற்குள் மகள் டாக்டரிடம் பேசி,திரும்பிப் போனதும் அவளுக்கு உண்டான குசல விசாரிப்புகளைச் சொல்லுவதாகச் சொல்லி
ப்ரிஸ்க்ரிப்ஷனை லோக்கல் சிவிஎஸ் மருந்துக்கடையில் சொல்லிவிட்டாள்.


எனக்கு வெட்கம் ஒரு புறம் அவமானம் ஒரு புறம். பிரச்சினை தீர்த்துக் கொடுத்தாளே மகராஜின்னு நன்றி ஒரு புறம்.
நண்பருக்கு நன்றிகள் சொல்லிவிட்டு வண்டியை எடுத்து பெட்ரோல் ஸ்டேஷனுக்கு வந்தோம்.
அங்கேயிருந்து மருந்துக்கடையில் அவர்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி, 30 டாலர் மனசு
ஆகாமல் கொடுத்துவிட்டு வெளியே வந்தோம்.
'ஆம்லாங் ஏ' நம்ம ஊரில இந்த விலைக்கு ஐந்து ஸ்ட்ரிப் வாங்கி இருக்கலாம்.
எப்படியோ நிலைமை கட்டுக்கு மீறாமல் காப்பாற்றித் தந்த அந்த டாக்டரம்மாவைச் சொல்லணும்.
இவ்வளவு முயற்சியும் எடுத்துக் கொண்ட மகளையும் சொல்லணும்.
மருந்துக்கடையிலிருந்து வெளி வந்து சூசன் அம்மா சொல்கிறதைக் கேட்டுக் கொண்டு ஆர்சார்ட் லேக் அண்ட்
13 மைல் ரோடில் திரும்பினோம்.
இந்த ஒரு திருப்பத்துக்கப்புறம் இனிமேல் ஒரே நகைச்சுவைதான் சரியா.
இந்தத் திருப்பத்தில் பின்னாலிருந்து வந்த ஒரு வெள்ளைக்கார அம்மா எங்க வண்டி பம்பரை ஒரு தட்டு தட்டிவிட்டு
வண்டியைக் குறுக்கே போய்க் கொஞ்சம் தள்ளி நிறுத்தினாள்.
நாங்கள் அலறிவிட்டோம்.
அவள் இடித்த சைடில் இருந்த சின்னது அதோட கார்சீட்டில் ஷாக் அடித்த மாதிரி அழ ஆரம்பித்துவிட்டது.
அன்று நாங்கள் டொரண்டோ கிளம்பப் போவதில்லை என்பது தெளிவாகியது.
ஏனெனில் கொஞ்ச நேரத்தில் போலீஸ் மாமாவும் வந்துவிட்டார். மிசிகன் சட்டப்படி இரண்டு பேரும் ம்யுச்சுவல்
செட்லிங் செய்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டுப் போனார்.
மாப்பிள்ளை இன்ஷுரன்ஸுக்கும், கார் ரிப்பேருக்கும் போன் செய்ய ஆரம்பித்தார்.
நாங்கள் வண்டியில் உட்கார்ந்து கொண்டு கேட்டுக் கொண்டிருந்தோம்.
சிங்கம் நடுரோடில் நின்ற காருக்கு அவசிய சிகித்சை செய்தார்.
ஒரு இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும், கிளம்பி வந்த நண்பர் வீட்டுக்கேப் போய்ச் சேர்ந்தோம்.
விருந்தோம்பலில் சலிக்காத அந்தப் பெண்ணை நான் மறக்க முடியாது.