Blog Archive

Saturday, July 26, 2008

க்ரிண்டெல்வால்ட் மலைத்தொடர்..ஸ்விஸ்
















































ஒரு வழியாக அடுத்த நாளும் வந்தது.


ஏன் ஒருவழியாகன்னு சொல்றேன், தூங்க முடியாத அளவுக்கு ஒரே


புழுக்கம்.




அப்பவே தெரியும் அடுத்த நாள் நிச்சயம் மழை இருக்குனு.


பாத்திரம் பண்டங்களுடன் குடைகளும் பெட்டிகளில் ஏறிக்கொண்டன.




மொத்தம் ஆறு பெட்டிகள்.


முதல் ஆரம்பத்திலியே பையன் சொல்லீட்டான்,'அம்மா எந்தப் பெட்டி பக்கமும் போகாதே. இன்ஃபாக்ட் உன் கைப்பை கூட பொட்டிக்குள்ள போட்டுடு.
மருந்தெல்லாம் நான் வச்சுக்கிறேன்.

அப்புறம் அவன் தடுக்கினான் இவன் தடுக்கினான்னு வம்பே வேண்டாம். ஃப்ரீயா கைவீசி நட.'' என்று சொல்லி நிறுத்தியவன்''வேண்டாம் கை வீச வேண்டாம்,சும்மாவே வா'' :)))
என்று 1 மணி வண்டியைப் பிடிக்க நடையைக் கட்டினோம்.




அது இரண்டு மணி நேரத்தில் இண்டர்லாக்கன் வந்தது.
அங்கேயெ கொஞ்சம் சுத்தலாம் என்றால் இரவு சாப்பாடு செய்ய,
சீக்கிரமே க்ரிண்டெல்வால்ட் கிராமத்துக்குப் போய்ச் சேரணும், அதனால் அடுத்த வண்டியைப் பிடித்தோம். இதோ,


போன தடவை

(2007) போய் வந்த இடம் தான் இந்த வால்ட் கிராமம்.

மேல இருக்கிற லின்கில் சொல்லிப் படம் போட்டு இருக்கேன்.


என்ன ஒரு வித்தியாசம்,அப்ப தமிழ்ல எழுதலை.

அடுத்தது அது ஒரு நாள் பயணம்.

இப்ப வந்தது ' நான்கு நாள் இருந்துட்டுப் போகலாமேன்னு'' சொல்லுவாங்க இல்லையா அந்த மாதிரி இந்த மலைகள் எல்லாம் என்னிடம் சொல்லி இருந்தது.அதனால் வந்த பயணம்:)



வந்துட்டோம்.:)) உண்மையில் மிக மிக இதமான இடம். மனதை அள்ளிக்கொள்ளும் இயற்கைவளம். எங்கே பார்த்தாலும் காற்றின் ஒலியும் தண்ணீர் ஓடும் சப்தமும்.
கொண்டுவந்த இட்டிலியும் புளியோதரையும் டெக் மாதிரி இருந்த இடத்தில் வைத்துக் கொண்டு சாப்பிட்டோம்.
எப்பப் பார்த்தாலும் புளியோதரையானு அலுத்துக் கொள்ளக் கூடாது. மெஸ் இல்லாமப் பாக் செய்து எடுத்துப் போக இவையே உகந்த வகைகள்.
பையன் பாக் செய்யறதையே பார்த்துக் கொண்டிருந்தேன். எத்தனை சீக்கிரம் இந்தப் பசங்கள் குடும்பத்தில் இணைந்து எல்லா சமாசாரமும் கற்றுக்கொள்ளுகிறார்கள் என்று பெருமையாக இருந்தது.
நன்றாக வளத்தோடு வாழணும்.
பழங்காலமா இப்ப. நாம் ஊருக்கு ரயில் பிடிக்கணும்னா
டிக்கட்டிலிருந்து எல்லாம் பத்ரமா எடுத்துக் கொண்டு வழிக்குப் பால் டப்பா,நாப்கின்,ஃப்ளாஸ்க் இத்தியாது இத்தியாதி எடுத்து தயாரா இருக்கணும். சாமி , கடைசி நேரத்தில் வொர்க் ஷாப் வேலை வராம இருக்கணுமே, ரயில் நிக்கும் போதே,புறப்படறதுக்கு முன்னாடி ஏறணுமே. ம்ம் என்னவெல்லாமோ டென்ஷன்.
அப்படிப்பட்ட வேலை பளு. இப்ப எல்லாமே வேற மாதிரி.
இங்கேயும் செரி, மற்ற இரண்டு இடங்களிலும் சரி, கணவனாகப் பட்டவர்கள் சரி சமானமாக வேலை செய்கிறார்கள். அடுத்த நாள் பயணத்தை மீண்டும் படங்களோடு பதிகிறேன். பார்க்கலாம்.












20 comments:

NewBee said...

ஹை...மீ த பர்ஸ்டு...:D :D

வல்லியம்மா,

நலமா? :)

// எங்கே பார்த்தாலும் காற்றின் ஒலியும் தண்ணீர் ஓடும் சப்தமும்.
//

இன்பம் தான் :). படிக்கும் போதே ஆசையா இருக்கு.

/எத்தனை சீக்கிரம் இந்தப் பசங்கள் குடும்பத்தில் இணைந்து எல்லா சமாசாரமும் கற்றுக்கொள்ளுகிறார்கள் என்று பெருமையாக இருந்தது.
//

மருமகள் மேல் பாயும் மாமியார்களின் நடுவே நீங்கள் ஒரு மிக நல்ல அம்மா. :)).. நைஸ், நைஸ், வெரி நைஸ்..:). வாழ்த்துகள்.

தோணுச்சு சொன்னேன். நத்திங் சீரியஸ் :)

ambi said...

//எத்தனை சீக்கிரம் இந்தப் பசங்கள் குடும்பத்தில் இணைந்து எல்லா சமாசாரமும் கற்றுக்கொள்ளுகிறார்கள் //

வேற வழி இல்லை. கத்துக்கலைனா தங்கமணிகள் சாமி ஆடிருவாங்க இந்த காலத்துல.

எதுக்கு வம்பு..?

நாய அடிப்பானேன்?
_ ____________

(மீதி பழமொழி உங்களுக்கு தெரியும் தானே?) :))

ambi said...

படங்கள் எல்லாம் நல்லா இருக்கு.

ராமலக்ஷ்மி said...

படங்கள் அருமை(போன வருடம் எடுத்தவையும்). இயற்கை எழிலரசியின் ராஜ்யம். இந்தத் தலைமுறையினரின் நடைமுறை வாழ்க்கையின் கஷ்டங்களைப் பற்றிய புரிதலும் அருமை, அதுதான் வல்லிம்மா!

Vijay said...

ஹய்யா!!!!!

ஃபர்ஸ்ட் கமெண்ட் என்னுது...

Vijay said...

வல்லிம்மா

அடிக்கடி உங்க பிளாக் படிக்கும்போது தோணறது என்னன்னா வயசானாலும் உங்களை போல சந்தோஷமாவும், பிறரை சந்தோஷபடுத்தறவங்களாவும் இருக்கணும். நீங்க ஒரு முன்மாதிரிமா.. வாழ்க பல்லாண்டு...

வல்லிசிம்ஹன் said...

ஹை நியுபீ.
வாங்கப்பா.

பிள்ளைங்கள்ளாம் சமாதானமா இருந்தா சந்தோஷம்தானேம்மா.

நாம அவங்க இடத்துக்குப் போகும் போது ஏதோ கண்ணுக்கு,காதுக்குத் தெரியாம டிஃபரன்ஸ் சொல்லிக்கிட்டாங்கன்னா நமக்கு ஏதும் தெரியாது.
அவங்களே அதைச் சரி செய்துப்பாங்க.

இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் , எஸ்பெஷல்லி ஆண் விட்டுக் கொடுத்தா அழகாவே இருக்கு:)நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அம்பி வரணும் வரணும்.
அம்பிதான் வீகெண்ட் பூரா பாப்பாவைப் பார்த்துக்கிறதா செய்தி வந்தது.
அதுவே நல்லா இருந்தது கேட்க. அதனால சும்மாச் சொல்லறதெல்லாம் நம்ப மாட்டேன்:))
படங்கள் நல்லா இருக்க இயற்கையே பொறுப்பு!!!

வல்லிசிம்ஹன் said...

நன்றிப்பா ராமலக்ஷ்மி.

நிறையப் புரிதலும் பொறுமையும் இருக்கு இந்தக் கால குழந்தைகளிடம்.
நிதானமாக வாழ்க்கையைத் திட்டம் செய்து நடத்துகிறார்கள். கடவுள் துணை எப்பவும் இருக்கணும் உங்க எல்லோருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

விஜய்,

அறுபது தாண்டும்போது இன்னும் இருக்கும் நாட்களைச் சமாதனமாகவும் மகிழ்ச்சியாகவும் கழிக்கணும் என்கிற எண்ணம் தானே மேலோன்றும்.
சின்னச் சின்ன மனத்தொந்தரவுகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அதைச் சகித்துக் கொள்ளும் பக்குவம் கொஞ்சமாவது வந்திருக்குன்னுதான் நினைக்கிறேன். மிக மிக நன்றி உங்கள் நல் வார்த்தைகளுக்கு.

இலவசக்கொத்தனார் said...

//கணவனாகப் பட்டவர்கள் சரி சமானமாக வேலை செய்கிறார்கள். //

ஆஹா!! நாடு முன்னேற ஆரம்பிச்சிடுத்தா? சரி சமானமா அவங்களும் வேலை செய்ய ஆரம்பிச்சுட்டாங்களா? :)))

வல்லிசிம்ஹன் said...

கொத்ஸ் கவலையே தனிதான்.:)
நிறைய வேலை செய்யலை.

சமமா செய்யறாங்கன்னு சொன்னேன்மா கொத்ஸ்!!
நாடு முன்னேறாம:))

இலவசக்கொத்தனார் said...

ஹய்யோ ஹய்யோ!! அம்மா, நான் சொன்னது தங்கமணிகள் சமமா வேலை செய்ய ஆரம்பிச்சாச்சான்னு!!!

வல்லிசிம்ஹன் said...

அட கடவுளே!! கொத்ஸப்பா!!
ஏதுடா இந்தப் பிள்ளை ஏதோ வழிக்கு வருதேன்னு பார்த்தால் இதுக்குத்தானா:)))))

முழுசும் நீங்க செய்யலை.அவங்க பாதி செய்யறாங்கன்னு சொல்ல வரீங்க.
மோசமாத்தான் இருக்கு நிலமை.:)))

சயந்தன் said...

சுவிற்சர்லாந்து வலைப்பதிவர் பேரவையின் சார்பில் சுவிசுக்கு வரவேற்கிறேன். :)

சுவிசிலிருந்து தமிழில் பதியும் மூவரில் ஒருவன்
http://blog.sajeek.com

கயல்விழி said...

ரொம்ப நல்ல படங்கள் வல்லி மேடம். :)

வல்லிசிம்ஹன் said...

வாங்க வாங்க கயல்.

மேடம் வேண்டாம்பா. வல்லிம்மா
போதும்.

படங்களுக்கு இயற்கை பொறுப்பு:)

Geetha Sambasivam said...

//நான்கு நாள் இருந்துட்டுப் போகலாமேன்னு'' சொல்லுவாங்க இல்லையா அந்த மாதிரி இந்த மலைகள் எல்லாம் என்னிடம் சொல்லி இருந்தது.அதனால் வந்த பயணம்:)//

ம்ம்ம்ம் ஊட்டி மலைகள் கூட இப்படித்தான் என் கிட்டே சொல்லறாப்பலே இருக்கும்! :(((( ஆனாலும் இந்த மலைகள் இருக்கும் இடங்களே கொள்ளை அழகுதான் போங்க, படங்கள் எல்லாம் நீங்களேவா எடுத்தீங்க?? சூப்பர்!

வல்லிசிம்ஹன் said...

சயந்தன் நன்றிம்மா.
அடுத்த தடவை பார்க்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா ஒரு குட்டி கானன் டிஜிகாம் இருக்கு.
அதில உடனுக்குடன் பார்த்து அப்லோட் செய்து விடலாம். அந்த ஊருக்கு மட்டும் இறைவன் அவ்வளவு அள்ளித் தந்திருக்கிறான் வளத்தை.

நன்றாக இருக்கணும் அவர்கள்.