About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Saturday, July 12, 2008

பை பை துபாய்......
பொட்டியெல்லாம் அடுக்கியாச்சு. கிளம்ப வேண்டியதுதான். என்ன முன்பு போலத் துபாய்க் கடைகளின் வசீகரம் இழுப்பதில்லை.:)
எதைப் பார்த்தாலும் வாங்க வேண்டும் என்ற நினைப்பு, ஊரில் யாருக்காவது கொடுக்க என்று வாங்கிச் செல்வதும் இப்போது கொஞ்சம் நின்றிருக்கிறது,.
காரணம் எமிரெட்ஸின் பாகேஜ் அளவுதான்.
பேரீச்சம்பழம் இங்க கிடைப்பது போல் சென்னையில் கிடைப்பதில்லை.
அதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்.
மீண்டும் லெட் களி,க்ளீன் களி உணவகத்துக்குப் போகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இது கொஞ்சம் மாறுபட்ட இடம்,இன்னும் சுத்தமான அமைப்பு.
மூக்கை உறுத்தாத மணம்.
உபசரிப்பு.அதனால் வயிற்றுக்கும் தொந்தரவு இல்லை. அதிகக் காரமில்லாத
நிறைய காய்கறிகள்,பழங்கள் சேர்த்த மெனு.
ஒப்புடன் முகம் மலர்ந்து உபசரித்து உண்மை பேசி:)
இதெல்லாம் ஒரு விலைக்கு நன்றாகக் கிடைத்தது.
இந்தத் தடவை சிங்கத்துக்கு வெளியே செல்லவும் கட்டுப்பாடு. வெய்யில் தாங்காது
என்று. அப்படியும் பையனிடம் சொல்லாமல் நழுவி விட்டார்.
எனக்குத்தான் சாமர்த்தியம் போதாது. அவசியமும் இல்லை:)
தசாவதாரம் போய்ப் பார்க்கலாம் என்ற முனைப்பும் இல்லை. தெரிந்தவர்கள் இணையத்தில் பார்த்ததாகச் சொன்னார்கள்.
Behaind enemy lines சினிமா மட்டும் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது.
அந்த பரபரப்பு என்னிடமிருந்து விலகவே சிலநேரமாச்சு.
அத்ற்கப்புறம் அந்தப் படத்தோட ரெவியூ படிச்சதும், அடடா, அவ்வளவுதானா என்று தோன்றியது.
படம் எடுக்க அவர்கள் பட்ட சிரமங்கள் இவர்கள் துண்டு துண்டு ஆகக் கிழிப்பதில் அந்த மாஜிக் போய் விடுகிறதோ.:(
வாழ்க்கையில் எல்லாமே அப்படித்தான். ஒருவர் முயற்சியில் மட்டுமே வாழ்வு அமைவது இல்லை. இருவரும் ஒத்துழைத்தால் கொஞ்சமாவது நிம்மதி கிடைக்கும்.
சற்றேறக் குறைய சம்சாரம் இருந்தால் கூறாமல் சந்நியாசம் கொள்ள நாம் என்ன அவ்வையார் காலத்திலா இருக்கோம்:)
பக்கத்து வீட்டுப் பைலட் வேற ஏர்லைன்ஸ் பார்த்துக் கொண்டுவிட்டார். அவர் வீட்டு அம்மாவுக்கு இந்த இடத்தைவிட மனசில்லை.அவங்க இங்கயும் அவர் பாஹ்ரனைக்கும் ஆகக் குடித்தனம் நடக்கிறது.
எகிப்து குடும்ப மாமனார் மாமியார் கிளம்பிட்டாங்க. அந்த குணாப் பொண்ணும் ஒழுங்காத் திருப்பி வேலைக்கு வந்து விட்டது.
இப்போதைக்கு எல்லாம் சுபமே. இப்படியே இருக்கட்டும்
நாங்களும் தேச சஞ்சாரம் கிளம்பறோம்.
மீண்டும் சென்னைக்குப் போனால்தான் நமக்குச் சரிப்படும்.
உப்பும் தண்ணியும் எங்க எல்லாம் போட்டு இருக்கோ
அங்க எல்லாம் டேரா போட்டு விட்டுத் திரும்பலாம்.:)
துணைக்கு இணையமும் பெறாத பிள்ளைகளும் இருக்கையில என்ன கவலை:)மீண்டும் சந்திக்கலாம்.36 comments:

இலவசக்கொத்தனார் said...

வெயிட்டிங். சீக்கிரம் வாங்க!!

வல்லிசிம்ஹன் said...

இதோ வந்தாச்சு.:)
நன்றி கொத்ஸ்.....

Ramya Ramani said...

இனிமையான் பயணத்திற்க்கு வாழ்த்துக்கள் :))

எம்.ரிஷான் ஷெரீப் said...

Pathirama poyittu vaanga.. :)
ange ponaalum ezudhuveenga thaane ?

தஞ்சாவூரான் said...

பயணம் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்!!

ராமலக்ஷ்மி said...

Welcome back! இதுவரை நாம் கருத்துக்களோடு அன்பையும் பரிமாறிக் கொண்டதெல்லாம் துபாய் to பெங்களூர் & பெங் to துபாய். இனி சென்னை என்பது இன்னும் அருகாமையைத் தருகிறாற் போலொரு உணர்வு.

//துணைக்கு இணையமும் பெறாத பிள்ளைகளும் இருக்கையில என்ன கவலை:)மீண்டும் சந்திக்கலாம்.//

உண்மைதான். இது குறித்து என் திண்ணைப் பதிவுக்கு சூரி அய்யா மூன்றாவது முறையாக நேற்று இட்டிருந்த பின்னூட்டத்துக்கான பதிலில், இந்த இணையம் தந்திருக்கும் இதமான உறவுகளுக்கு நன்றியாக என் எண்ணங்களைப் பதிந்திருக்கிறேன். ஊருக்கு வந்து செட்டில் ஆன பிறகு நேரம் இருக்கையில் அதைப் பாருங்கள். அடுத்த பதிவில் சந்திப்போம். அதுவரை நாங்களும் சொல்கிறோம் பை பை:))!

வல்லிசிம்ஹன் said...

நன்றி ரம்யா ரமணி.

இணையம் இருக்கும் வரை பை பை சில நாட்களுக்கு மட்டுமே.அதாவது வானத்தில் பறக்கும் போது மட்டும்.

மற்ற நேரம் வலை வசம்தான்.சாப்பாடு,தூக்கம் தவிர.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ரிஷான். எல்லோரோட வார்த்தைகளையும் வாங்கிக் கொண்டு வலை மேய்ந்து கொண்டுதான் இருப்பேன்:)நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தஞ்சாவூரான்.

வாழ்த்துகளுக்கு நன்றி. மீண்டும் பார்க்கலாம்,.

வல்லிசிம்ஹன் said...

அம்மாடி., ராமலக்ஷ்மி நாங்கள் இன்னும் மேற்கு நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம்.

சென்னை வர இன்னும் ஆறு மாதங்கள் ஆகும். மெயிலனுப்புங்கப்பா. அதிலயும் பேசலாம். உங்க பதிவைப் படிக்க உடனே போக வேண்டியதுதான். கரும்பு கூலின்னு சொல்ல மாட்டாங்க? அது மாதிரி:)

ராமலக்ஷ்மி said...

மேற்கு நோக்கிச் செல்கிறீர்களா? (அதனால்தான் இலவசக் கொத்தனார் "சீக்கிரம் வாங்க" என்கிறாரா?) நல்லது நல்லது. இனி அடுத்த ஆறு மாதம் அந்த நாட்டுப் பின்னணியில் பதிவுகளைக் காணக் காத்திருக்கிறோம். (அப்படியே அங்கே எந்த ஊருக்கு என்றும்தான் சொல்லிடுங்களேன். தெரிஞ்சுக்கறேன்.)

ராமலக்ஷ்மி said...

பயணம் இனிதாக அமையவும் என் வாழ்த்துக்கள்!

ராஜ நடராஜன் said...

என்னாது?இப்பத்தான் பதிவப் படிச்சேன்.அதுக்குள்ள ஊருக்குப்போய் சேர்ந்திட்டீங்களா?

ஆயில்யன் said...

//துணைக்கு இணையமும் பெறாத பிள்ளைகளும் இருக்கையில என்ன கவலை:)//


அதானே! அடுத்த ஊர்லேர்ந்து உங்களை பதிவில் சந்திக்கும் ஆவலுடன்...!

தம்பி said...

சந்தோஷமா போயிட்டு வாங்க

வல்லிசிம்ஹன் said...

ராமலக்ஷ்மி, மேற்காப்பில
நடுவழியில இறங்குவோமா. கையைக் காலை நீட்டி உதறிகிட்டு
அங்க ஒரு மக(ர்)ன் இருக்கிறாரா:)
அவங்க வீட்டில அஞ்சு நாளு காம்ப்.

அப்படியே சிகாகோ போற வண்டியப் பிடிச்சுப் போயிடுவோம். 9&1/2 மணித்தியாலம் முடிஞ்சு பொண்ணுவீட்டுக்குப் போயி ஜெட்லாக் கொண்டாடிட்டு,கொஞ்சம் அதகளம் செய்துட்டு வந்துடுவோம்.

அங்கயும் நமக்கு இணையத்தை விட்டாப் பொழுது போகாது.
பேரன்கள் உடன் செலவிடும் நேரம் போக காலை 5 மணிவாக்கில் கீழ வந்துடுவோம்:)

வாழ்த்துகளுக்கு நன்றிம்மா. மலைப்பாகத்தான் இருக்கு இந்தப் பயணங்களை நினைத்தால்.

கானா பிரபா said...

கலக்கல், நீங்களும் பயணப் பிரியை போல

வல்லிசிம்ஹன் said...

என்ன பதிவு. நான் இன்னும் இங்கதாம்பா இருக்கேன் ராஜ நடராஜன்.

சின்ன வயசிலிருந்து ஒரு வழக்கம். அடுத்தவார்ரம் இந்த நேரம் மெட்ராஸ்ல இருப்போமே அப்படீன்னு நாங்க சகோதர ச்கோதரிகள் உற்சாகப் படுத்திக்கொள்வோம். அதே பழக்கம் இப்பவும் பதிவில எழுதிடறேன்.

வல்லிசிம்ஹன் said...

கண்டிப்பா ஆயில்யன். உங்கள் பின்னூட்டம் தென்றல் பதிவில் படித்தேன். மனதுக்கு மிக இதமாக இருந்தது .நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அதே அதே தம்பி. போயிட்டு வந்துடுவோம்:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் பிரபா.

பிரியம் உண்டுதான். இப்போது பயணப்படுவது அவசியத்தை ஒட்டி.

பிள்ளைங்களுக்கு உதவியாக இருக்க என்ற திட்டம். அவர்களுக்கு நாங்கள் அவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று நினைப்பு.:)

நானானி said...

உலகம் சுற்றும் வாலிபியா?
நல்ல சுத்தீட்டு சௌகர்யமா வாங்க!
சிகாகோ போறீங்களா? ஜாலிதான்.
அதுவரை பதிவுகளிலும் பின்னோட்டங்களிலும் சந்திப்போம்!!

வல்லிசிம்ஹன் said...

நானானி, கண்டிப்பாகச் சந்திக்கலாம். உங்கள் நைன்வெஸ்ட் பெயருக்குத் திண்ணையில் விளக்கம் பார்த்தேன் பா.

மீண்டும் பார்க்கலாம் வருட முடிவில். அதுவரை நீங்கள் சொன்னது போலப் பதிவுகளில் பார்க்கலாம்.

சுல்தான் said...

இந்த முறை பார்க்க இயலாமல் போய் விட்டது.
பயணங்கள் சிறக்க வாழ்த்துக்கள்.

NewBee said...

வல்லிம்மா,

பயணம் இனிதாக அமைய என் வாழ்த்துக்கள்! :))). என்ஸாய் மாடி :)

பி.கு.:எப்பவும் வல்லிம்மா பதிவு படிக்கறேன்.ஆனா இந்தப் பதிவின் நடை தெளிந்த நீரோடை போல, இன்னும் அருமையாய் இருந்தது.என்னைக் கவர்ந்தது.:). Flow, தங்கு தடையில்லாமல் படிக்க நன்றாக இருந்தது.ஜுப்பரு. :)

வல்லிசிம்ஹன் said...

newbee,

உங்கள் வாழ்த்துகளுக்கும் அருமையான வார்த்தைகளுக்கும் நன்றிம்மா. இது நான் பேசும் நடையிலியே அமைந்து விட்டது.

அதுதான் உங்களுக்குப் பழகினமாதிரி எளிதாக இருக்கு.

மீண்டும் பார்க்கலாம்மா.

சதங்கா (Sathanga) said...

வல்லிம்மா,

//துணைக்கு இணையமும் பெறாத பிள்ளைகளும் இருக்கையில என்ன கவலை:)//

சூப்பரான வரிகள். பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள.

துளசி கோபால் said...

என்னப்பா வண்டி கிளம்பிருச்சு போல!!!

'எங்கிருந்தாலும் வாழ்க'ன்னு பாடவேண்டியதுதான்.

சந்தோஷமா எல்லா இடத்துக்கும் போயிட்டு வாங்க.

தேர் நிலைக்கு வர 6 மாசம்:-)

வல்லிசிம்ஹன் said...

வாங்க சதங்கா. உங்க ஊருக்குப் பக்கத்திலதானே வரொம். தொலைபேசியில் பேசலாம்:)
கவிநயா கிட்ட கூட பேசணும்
வாழ்த்துகளுக்கு நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

துளசி, வரணும்பா.காணுமேன்னு பார்த்துண்டு இருந்தேன்.

அங்க கூகிள் ஈசியா பேசலாம்.
தேர் நல்லபடியா ஊர் போய்ச் சேர்ந்ததும் லஸ் பிள்ளையாருக்குத் தேங்காய் சூறை உண்டு.

ராமலக்ஷ்மி said...

விவரமாய் கொடுத்த விவரங்களுக்கு நன்றி. வெட்டி வைத்தக் கரும்பை விரும்பி வந்து உண்டதற்கும் நன்றி!

வல்லிசிம்ஹன் said...

ம்ம்ம். கரும்பை மனசிலதான் ரசிச்சேன். சாப்பிடலை.மகன் காதில விழுந்துடப்ப் போகிறது:0)வரேன்மா ராமலக்ஷ்மி.

கீதா சாம்பசிவம் said...

Switzerland, Chicago payanamaa?? poyittu vangga, paarkkalaam!

Vijay said...

நான் அடுத்த மாசம் சென்னை போறேன்ங்க. நீங்களும் அங்கதான் வரிங்கண்ணு நெனச்சி அவசரமா பின்னூட்டம் போடலாம்னு பார்த்தா நீங்க மேற்கே போறீங்க. நல்லது. அதான் நீங்க சொன்னாமாதிரி வலை இருக்கே. பார்க்கலாம் வேற ஒரு முறை. உங்கள் பயணம் இனிதே அமய வாழ்த்துக்கள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

எனக்குத்தான் சாமர்த்தியம் போதாது. அவசியமும் இல்லை:)


நம்பச்சொன்னா நம்பிக்கிறேன். வாழ்த்துக்கள் புதிய பயணத்துக்கு.

வல்லிசிம்ஹன் said...

T.R.C SIR,

Nambanum.Nambanum.:)

thanks ma. tamizh fonts vanthathum paarkkalaam.