Blog Archive

Thursday, July 03, 2008

சொற்களே மிச்சம்.



அம்மா.
கடுகு தாளிக்கும்போது,
இட்லித்தட்டில் எண்ணெய் தடவினால்,
''கூந்தலிலே நெய் தடவி'' பாட்டைக் கேட்டால்
மௌனமாகச் சிரிக்கும் மகாலக்ஷ்மி படத்தைப் பார்த்தால்,
கசங்கல் துளியுமில்லாமல் நேர்த்தியாகக்
கட்டிய புடவையில் மெலிந்த தேகத்தோடு எதிரே
வரும் ஏதோவொரு வயதான
அம்மாவைப் பார்க்கும் போது இன்னமும்
கண்ணில் தண்ணிர் கட்டுகிறதே.
எவ்வளவு வருடம் போனால் உன்னை
வலியில்லாமல் நினைப்பேன் என் அன்புள்ள அம்மா.

18 comments:

ambi said...

பிறந்த தினம்..?

வல்லிசிம்ஹன் said...

இல்லை அம்பி.

பிறந்த நாளும் இல்லை. மறைந்த நாளும் இல்லை.

தவறிப்போய் ஒரு பாடலை யூ டியூபில் பார்த்து விட்டேன்.

நினைத்து நினைத்துப் பார்த்தால்னு வரும்.அதில ஒரு சீன் பெசண்ட்நகர் ......இடத்தைக் காட்டும்.

சாரிம்மா.என் மன நிம்மதிக்கு எழுதிட்டேன். நீங்கள் கண்டுக்காமல் போய் விடவும்:)

ராமலக்ஷ்மி said...

கண்டு கொள்ளாமல் எப்படி வல்லிம்மா போக வேண்டும்? 'அம்மா' என்கிற ஒற்றைச் சொல்லும் அது ஏற்படுத்தும் உணர்வுகளும் அனைவருக்கும் பொதுவானதல்லவா?

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராமலக்ஷ்மி. உண்மைதான். எழுதிய பிறகு தோன்றியது.இணையத்தில் எல்லோரும் குழந்தைகள். அவர்களை வருத்தப் பட வைக்கிறோமே என்று. இந்தப் பதிவை எடுக்கவும் மனசில்லை.

அதுதான் அம்பிகிட்டே அப்படிச் சொன்னேன்.

நோ வொரீஸ். எல்லாருக்கும் உண்டானது எனக்கும் நிகழ்ந்தது.
அம்மாவே இல்லாமல் வளரும் குழந்தைகள் எத்தனையோ. நான் கொடுத்துவைத்தவள்.

நன்றிம்மா.

Geetha Sambasivam said...

:((((((((((((((((((((((((((((((((

கோபிநாத் said...

;-(

ஆனால் எங்களுக்கு அப்படி இல்ல...எங்களை சுத்தி அம்மாக்கள் தான் ;)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கோபிநாத். பிறந்த நாள் வாழ்த்துகள். இந்த அம்மாக்கு ஒரு கேக் பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்.

நிறையா ஷுகர் போட்டு,பட்டர்,க்ரீம்,
சாக்லேட்

பாதாம்,பிஸ்தா, எல்லா நட்டுகளையும் போட்டு வச்சு வைங்க. நவம்பர்ல வந்து சாப்பிடறேன்:)

வல்லிசிம்ஹன் said...

கீதா நன்றி.

இலவசக்கொத்தனார் said...

என்ன ரென்ஷன்? அதான் எங்க எல்லாருக்குமா சேர்த்து நல்ல அம்மாவா இருக்கீங்களே.....

வல்லிசிம்ஹன் said...

ரென்ஷனா, எனக்கா!! யாரு சொன்னா:0)
கொத்ஸ்,

இந்த மாதிரி கடிதம் எழுதினா எங்க அம்மாக்குப் போய்ச்சேரும். இணையத்தில வந்தால் அது வான்வெளில போயிட்டுத் தானெ வரணும். அதான்பா விஷயம்.:)

நன்றி.இதைவிட நல்ல நற்சான்றிதழ் யார் கொடுப்பார்கள்.

ராமலக்ஷ்மி said...

இலவசக்கொத்தனார் said...
//அதான் எங்க எல்லாருக்குமா சேர்த்து நல்ல அம்மாவா இருக்கீங்களே.....//

உண்மை!

வல்லிசிம்ஹன் said...
//இதைவிட நல்ல நற்சான்றிதழ் யார் கொடுப்பார்கள்.//

எங்கள் எல்லோரது சார்பாகவும் கொத்தனார் கொடுத்திருக்கிறார்.
[நானும் கொடுத்திருக்கிறேன் என் பதிவின் பின்னூட்டத்தில் தங்களின் பாசத்துக்கு வணங்கி..]

NewBee said...

என்ன சொல்றதுன்னு தெரியல வல்லியம்மா.

அம்மாவுக்குக் கொடுத்த பூக்கள் மணக்கின்றன.கூடவே ஒரு கப் 'டீ' யும்.மகளின் அன்பை ரசிக்கும் அம்மாவுக்கும் பசிக்கும் தானே.:-|.

வல்லிசிம்ஹன் said...

உண்மை ராமலக்ஷ்மி.

நானும் இரண்டு கைகளும் நீட்டி இந்தப் பாசத்தை அணைத்துக் கொள்கிறேன்.

நன்றி அம்மா.

வல்லிசிம்ஹன் said...

நியூ பீ,
அதிசயம். எங்க அம்மா டீ தான் குடிப்பார்கள்.

ரொம்ப வினோதம் பார்த்தீர்களா. ஒரு அறுபது வயது அம்மா தன் அம்மாவை நினைத்துப் புலம்புவதும்
ஆறுதல் சொல்ல நீங்கள் அனைவரும் வருவதும்.

நன்றிப்பா.

Vijay said...

என்னான்னு தெரியல, இன்னக்கி கண்ணும் மனசும் அடிக்கடி கலங்குது, தளும்புது. படிக்கிற நெறைய பதிவுங்க இதே ரேன்ஞ்லதான். ஒருவேளை லின்க் அப்பிடி இளுத்துக்கிட்டு போகுதோ என்னமோ. இருக்கட்டும்...இருக்கட்டும்....எல்லா பீலிங்க்ஸ்சும் வேணும்தானா வாழ்க்கைக்கு. ரொம்ப நன்றிங்க.

வல்லிசிம்ஹன் said...

அன்பு விஜய்,
இதுவும் அதுவும் கலந்ததுதான் வாழ்க்கை.

லின்க் தானே நம்ம இப்படிக் கட்டிப் போடறது.

நிறைந்த நாட்கள் நமக்கு நிறைய கிடைக்கட்டும். நேத்திக்கு கலங்கினது போறும். இன்னிக்கும் இன்னும் எப்பவும் சந்தோஷமா இருக்கலாம்.

தி. ரா. ச.(T.R.C.) said...

எவ்வளவு வருடம் போனால் உன்னை
வலியில்லாமல் நினைப்பேன் என் அன்புள்ள அம்மா

வலியால் உண்டான வலிமை பெற்ற பந்தம் வாழும் வரை தொடரும்......

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் தி.ரா.ச.
ஒன்று பார்த்துவிட்டேன்.
ஒரு அம்மாவுக்கு மட்டுமே நான் செலுத்தின அன்பு இப்போ இணையம் பூராவும் விரிந்து விட்டது.
திரு.சுரேஷ் அவர்களின் மனைவி சொன்ன வார்த்தையில் உள்ளமே நிறைதது. உங்க மேல நாங்க எல்லாரும் எவ்வளவு பாசம் வச்சிருக்கொம்னு தெரியுமா அம்மா? என்று கேட்டார்கள்.

அந்தப் பந்தத்தில் உங்கள் குடும்பமும் ஒன்றில்லையா.அதற்குப் பெருமாளிடம் நன்றி சொல்கிறேன்.