About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Sunday, June 15, 2008

தந்தையர் தின வாழ்த்துகள்(டிஸ்கியும் சேர்த்து)இந்தத் தந்தையர் தின வாழ்த்துகளில் கிட்டத்தட்ட ஐம்பது அப்பாக்களும் குழந்தைகளும் வந்துவிட்டார்கள்.
தொழில்நுட்பக் கோளாறு என்று நம் கொத்ஸ் கண்டுபிடிச்சி சொல்லிட்டாரு. அதில எப்பவும் போல என்று வேற குறிப்பிட்டு இருக்காரு:)
என்ன செய்யறது நான் ஒரு தடவை படம் போட்டா அது 50 தடவை வரும்னு தெரியாமப் போச்சு. :)
இந்தப் பதிவை டெலிட் செய்யவும் குப்பையில் போடவும் மனசில்லா.:)
அதனால் பொறுத்திருந்து படங்களை ஸ்க்ரோல் செய்யும்படித் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.
அட ராமா. டிஸ்கியே பதிவாயிடிச்சே!!!!!!!!!

இணையத்தில் உலவிக் கொண்டிருக்கும் அத்தனை தந்தையர்களுக்கும்

அவர்களுடைய தந்தையருக்கும் இன்னும்

குடும்ப நலனுக்காகப்

பாடு பட்ட, உழைத்துக் கொண்டிருக்கும், பாப்பாக்களைக் கைகளில் வைத்துக் காப்பாற்றும் அருமை அன்பு அப்பாக்களுக்கும்இப்போது திருமணமாக அப்பாவாக மாறப் போகும் இளைஞர்களுக்கும்

எங்கள் அன்பு நிறைந்த வணக்கங்களும் வாழ்த்துகளும்.

22 comments:

வல்லிசிம்ஹன் said...

அன்புத் தந்தையரே, படத்தைப் பதிவில் ஏற்றும்போது ஏதோ ஆகிவிட்டது. பரவாயில்லை. மன்னித்து விடுவீர்கள் என்று நினைக்கிறேன்.
புது அப்பாக்கள் அம்பிக்கும்,இலவசக் கொத்தனாருக்கும்

மனம்நிறைந்த ஆசிகள்.
டிஸ்கி! கொத்ஸ்! போட்டுட்டேன்.

வாழ்த்துகள் அனைவருக்கும்.!!!!!!

இலவசக்கொத்தனார் said...

வாழ்த்துகளுக்கு நன்றி.

வழக்கம் போல தொழில்நுட்பக் கோளாறு மன்னிக்கப்படுகிறது.

டிஸ்கி: இணையத்தில் உலவிக் கொண்டிருக்கும் அத்தனை தந்தையர்களுக்கும் அப்படின்னு ஒரு க்ரூப் குடும்ப நலனுக்காக பாடு பட்ட, உழைத்துக் கொண்டிருக்கும் அப்படின்னு இன்னும் ஒரு க்ரூப் என பிரித்து நீங்கள் செய்யும் நுண்ணரசியல் பிரமிக்க வைக்கிறது! :))

துளசி கோபால் said...

அங்குள்ள தந்தையருக்கு வாழ்த்து(க்)கள்.

எங்களுக்கு செப்டம்பர் முதல் ஞாயிறு:-)

வடுவூர் குமார் said...

மிக மிக நீளமான பதிவாகி போச்சே!!
ஒவ்வொரு மினுக்குக்கும் ஒரு படமா?

நானானி said...

வல்லியின் அத்தனை வகை வாழ்த்துக்களையும் நானும் வழிமொழிகிறேன்!!
வேற வழி? எங்கேயும் நுழைய விடாமல் எல்லா சந்துபொந்துகளிலும்
பூந்து வாழ்த்திட்டாங்களே!
எங்கள் குடும்பத்திலும் புதிதாக தந்தையாகப்போகும் இருவருக்கும்
என் வாழ்த்துக்கள்!!!வல்லி, இப்ப
என்ன செய்வீங்க? இது நீங்க போகாத,
தெரியாத சந்து!!ஹா..ஹ்..ஹா!!!

ராமலக்ஷ்மி said...

//வடுவூர் குமார் said...
மிக மிக நீளமான பதிவாகி போச்சே!!//

நீளமான பதிவானாலும் மனம் குளிர வாழ்த்தி தந்தையரை மனம் நிறையச் செய்யும் பதிவு. வாழ்த்துவதில் உங்களோடு இணைந்து கொள்ளலாம்தானே வல்லிம்மா?

நந்து f/o நிலா said...

நன்னி...நன்னி...நன்னி...

வல்லிசிம்ஹன் said...

என் பையனுக்கு சாம்பார்
அரைச்சுவிட்ட
ரொம்பப்பிடிக்கும்.

அதிலயே எல்லாக் காய்கறியும் போட்டு,பச்சடியும் செய்தாச்சு.

அம்மா பொரியல் ஒண்ணும் இல்லையா அப்டீன்னான். அதான் எல்லாக் காய்கறியும் குழம்பில இருக்கேப்பானு சொன்னேன்.
அதுக்கு அவன் அவன் சொன்ன பதில்
அம்மா "வென் டிட் யூ பிகம் சோ பொலிடிகல்!!!":)
இப்பதான் புரியுது. கொத்ஸ் சொல்ற நுண்ணரசியல் இது தானா:)

பின்ன இல்லையா கொத்ஸ். நெட்ல நீங்க இருக்கீங்க. வெளில தமிழ்படிக்காத எத்தனையோ அப்பாக்கள் இருப்பார்கள்:)
ரெண்டு குழுவையும் வாழ்த்த வேணாமா, நீங்களே சொல்லுங்க.

ராமலக்ஷ்மி said...

வல்லிம்மா said..//ரெண்டு குழுவையும் வாழ்த்த வேணாமா//

மூணாவதா இன்னொரு குழுவையும் வாழ்த்திப் புடலாம் வாங்க வல்லிம்மா.

நானானி said..//எங்கள் குடும்பத்திலும் புதிதாக தந்தையாகப்போகும் இருவருக்கும்
என் வாழ்த்துக்கள்!!!வல்லி, இப்ப
என்ன செய்வீங்க? இது நீங்க போகாத,
தெரியாத சந்து!!//

உலகின் எந்த சந்திலிருக்கும் தந்தையாரானால்தான் என்ன? நானானியின் அந்த சொந்தக்கார- தந்தையாகப் போகும் இருவருக்கும் நமது வாழ்த்துக்கள். சரிதானா வல்லிம்மா?

நானானி said...

தொழில்நுட்ப கோளாறு என்று ஏன்
பதிகம் பாடுகிறீர்கள், வல்லி?

சம்திங் டிஃரண்ட் என்று சொல்லி வழிந்திருக்கலாமே? எல்லோரையும்
ட்ரில் வாங்கியிருக்கிறேன் என்றும்
சொல்லியிருக்கலாமே?
திஸ் இஸ் கால்ட் சமாளிஃபையிங்!!

வல்லிசிம்ஹன் said...

குமார். தந்தையர்கள் இப்படி மினுக்கு;வார்கள் என்று தெரியாமல் போச்சே:)
தந்தையர் தின வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

நானானி வீட்டில அடிஷனா. சூப்பர். நல்ல நேரமாப் பார்த்துதான் சொல்லி இருக்கிறீர்கள். வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறோம்.
என்னப்பா சந்தில லேன்ல எல்லாம் போலைப்பா நம்ம பதிவு. ஒரே ப்ராட்காஜ்ல போயிருக்கு.:)
என் பதிவு நான் சொன்னதைக் கேட்கவில்லை

வல்லிசிம்ஹன் said...

வரணும்மா ராமலக்ஷ்மி. உங்க வீட்டு தந்தைகளுக்கும் வாழ்த்துகள் அனுப்பறேன்.
நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

நல்லது நல்லது நல்லது.
நிலா அப்பா.எப்பவும் நல்ல ஆரோக்கியத்தோட சிறப்பா இருக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

சர்த்தான்பா ராம்லக்ஷ்மி வாழ்த்திடலாம்.
நல்லா இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

நானானி, அதென்னவோ உண்மைதான்

ரொம்பவே டிஃப்பரண்டாப் போயிடுச்சேன்னு தான்....யோசிக்கிறேன்.
நல்ல ட்ரில்.
விரல் பயிற்சினு சொல்லிடலாமா:)

நானானி said...

கடைசிலே....'குப்புரவிழுந்தாலும்....
ஒட்டவில்லை என்பார்கள். நீங்க
ஒட்டிடுச்சுன்னுட்டீங்களே!!!அப்ப இருக்கா?

வல்லிசிம்ஹன் said...

எனக்கா. ?
இதுவரைக்கும் இல்லை.

இனிமேலும் வரச் சான்ஸ் இல்லை:)

அப்புறமா சொல்லணும்னா ஒட்டிச்சா ஒட்டலையானு தெரியலை.

கீதா சாம்பசிவம் said...

//அதுக்கு அவன் அவன் சொன்ன பதில்
அம்மா "வென் டிட் யூ பிகம் சோ பொலிடிகல்!!!":)
இப்பதான் புரியுது. கொத்ஸ் சொல்ற நுண்ணரசியல் இது தானா:)//

ஹிஹிஹி, இது நல்லா இருக்கே,
ஏன் தொழில் நுட்பக் கோளாறுனு எல்லாம் சொல்லணும்?? நீங்க சொல்லி இருக்கும் அத்தனை தந்தைகளுக்கும், தனித்தனியா வாழ்த்துத்தெரிவிச்சிருக்கிறதாச் சொல்லிடுங்க, அதைவிட்டுட்டு, உண்மையை எல்லாம் ஒத்துக்கிட்டு, "எங்கப்பா குதிருக்குள்ளே இல்லை"னா சொல்றது??? :P :P

ambi said...

மிக்க நன்னி. நேத்திக்கு தான் பையனை பாத்துட்டு பெயர் எல்லாம் வெச்சுட்டு வந்தேன். :))

வல்லிசிம்ஹன் said...

கீதா,
இதுதான் கீதை வழியா:)

நல்லா இருக்கே.
(அசல் திருநெல்வேலி அசட்டுத்தனம்தான்னு

எங்க வீட்டில சொல்வாங்க.)

நேர்மைப்பா நேர்மை.நன்றி கீதா.

வல்லிசிம்ஹன் said...

ஆகா. நாமகரணம் ஆகி விட்டது. குடும்பத்தில் அனைவருக்கும் வாழ்த்துகள் அம்பி.