About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Monday, June 09, 2008

சிவாஜி வாயிலே ஜிலேபி(சங்கிலி,செயின்,கொத்ஸ்)இணையத்தில எல்லாருக்கும் எழுதி எழுதி அலுத்துப் போயிட்டாங்களாம்.
அப்புறம் சில பேருக்கு மொக்கை(என் எழுத்து மாதிரி கிட்டத்தட்டன்னு வச்சுக்கலாமே)களாப் படிச்சு அழவாச்சி நிலைக்கு வந்துட்டாங்களாம்.
அதனால்
வெண்பா புலவர் கொத்ஸை அழைச்சு கொத்ஸு கொத்ஸு நீ
ஒரு செயினை எங்கிட்ட இருந்து வாங்கி இன்னும் மூணு பேரை
மாட்டி விடுவியாம். அவங்க அதை இன்னும் மூணு பேருக்குக் கொடுக்க அல்லாருக்கும் சங்கிலி சங்கிலிய ஜிலேபி சாப்பிட்ட மாதிரி இருக்குமாம்
அப்படீனு அட்வைஸ் செய்தாராம்.
நம்ம கொத்ஸ் தான் ராத்திரி தூங்கறது இல்லையே :) யோசிச்சு உடனடியா ஆறிப்போன ஜிலேபி பதிவை சூடு செய்து ஆவசர அவசரமா வாயில போட்டுகிட்டு,
இன்னும் புதிசா ஜிலேபி சுத்துங்கனு என்னையும் இன்னும் ரெண்டு பேரையும் சங்கிலில கொண்டாந்துட்டாரா.
இப்ப நாம இன்னும் மூணு பேரைத் தேடணுமா.
நமக்கோ சிவாஜியை ரொம்பப் பிடிக்கும்.அதுக்கு மேல ஜிலேபியை இன்னும் பிடிக்கும்.
ஒருத்தரைப் பார்க்க முடியாது. அமரர் உலகத்துக்குப் போனா நடக்கும் . இப்ப சத்திக்குப் போறதா இல்லை:)
ஜிலேபியோ சரவணபவன்ல பார்த்ததோட சரி.
ஹ்ம்ம். அந்த ஜிலேபியத்தான் என்ன லாவகமா சுத்தறாரு அந்த மனுஷன்.
ஒரு வேளை ரீல் மாஸ்டரா இருந்திருப்பாரோ.
ரீலோ ரியலோ நமக்கென்னவோ அது கிடையாதுன்னு ஆகிப் போச்சு.
என் கண்ணு முன்னால ஒரு பொட்டி நிறைய ஜிலேபி அன்னிக்கு யாரோ வீட்டில கொண்டு வந்து வச்சாங்க.
பொட்டியைத் தொட்டிருப்பேனா.
இல்லையே!!! அடுத்த நாள் கார்த்தால வெள்ளிக்கிழமை, பையனும் அப்பாவுமா ஒரே நேரத்தில சமையலறையிலே நுழைந்து,
அடடா இந்த டப்பாவை யாரு திறந்ததுனு ஒருத்தரைச் சந்தேகமாகப் பார்த்துக் கொண்டார்கள்.
நான் இல்லை நீயா என்று கேட்டுக் கொண்டே என் பக்கம் திரும்பினார்கள். 'இதென்னடா வம்பாப் போச்சே, நான் தான் ஸ்வீட் பக்கமே திரும்பறதில்லையே' னு நான் கடுகு கொட்டப் போனேன்.
அதென்னம்மா ஒரு சின்ன பீஸ் உடைஞ்சிருக்கு ,மிச்சதெல்லாம் அப்படியே இருக்கு. போனாப் போறது, முழுசாவே எடுத்துக்கோ' என்று ஒரு ஜிலேபியை நீட்டினான் பையன்.
வேண்டாம் பாபு. இதைச் சாப்பிடுவானேன்,அப்புறம் அவஸ்தைப்படுவானேன்.
எல்லாம் தொண்டைக்குக்கீழே போனா ஒண்ணுமில்ல' என்று விரக்தியின் முழு அடையாளமாகச் சொல்லிவிட்டேன்.
அதான் முதல் நாளே பாதிக்கு மேல சாப்பிட்டாகிவிட்டது. எதற்கு இரண்டாம் பரிசோதனை என்று நான் இருந்தது அவர்களுக்குத் தெரிய நியாயமில்லை.!!!!!
இனி, மேற்கொண்டு சிவாஜியையும் ஜிலேபியையும் கனெக்ட் செய்யத் தெரியலை.
அதனால அவர் நடிச்ச சவாலே சமாளி படம் போட்டு விட்டேன்.:)
இந்தச் சங்கிலியைத் தொடர நான் அழைக்க நினைக்கும் மூன்று பதிவாளர்கள்,
(அவர்களை இதற்கும் முந்திக்கொண்டு வேறு யாரும் அழைக்காமல் இருக்கணுமே)
நினைத்தாலே கொசுவத்தி கொளுத்தி வாசம் கமழ வைக்கும் துளசி,
துளசிகோபால்
இரண்டாவது நானானி. சமையல்ல மும்முரமா இருந்தாலும்
பதிவு போட்டுடுங்க:)
ப்ளீஸ்பா கட்டாயம், தொடருங்க.
மூணாவதாக நான் கூப்பிடுவது
ராமலக்ஷ்மி.
அருமையா எழுதிடுவாங்க. கவலையே இல்லை.
நீங்களும் அழைப்பை ஏற்று ஜிலேபி செய்ய வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
திடீர் தலைப்புல எல்லாம் நாம ரொம்ப கெட்டினு சொல்ல முடியாது.ஏதோ சொன்னதைச் செய்யும் வழக்கம் இருக்கிறதனால எழுதிட்டேன்.
கொத்ஸ் சார் சரியா:)

41 comments:

வல்லிசிம்ஹன் said...

துளசி, ராமலக்ஷ்மி,நானானி கைக்கடுதாசியும் அனுப்பறேன்பா:)

Jeeves said...

நல்லா இருக்கு உங்கக் கதை. உடம்புக்கு முடியலைன்னா யாருக்கும் தெரியாம ஜிலேபி உள்ளாரப் போகுதா...

ஷேம் ஷேம்...


சவாலே சமாளி !! ஜிலேபி பாத்தும் சாப்டாம இருக்கனும்.


ஸ்லர்ப்... என்னமா மஞ்சத் தங்கம் மாதிரி மின்னும் போது.. சாப்டாம இருக்க முடியறதில்லை... என்னதான் கட்டுப் பாடு போட்டாலும் அப்படின்னு மறுக்கா எடுத்து சாப்டுடாதீய

என்ன நாஞ்சொல்றது ?

ராமலக்ஷ்மி said...

சவாலை நல்லாவே சமாளிச்சுட்டீங்களே என படிச்சுக்கிட்டே வந்தேனா...ஆகா.. ரெண்டு திருநெல்வேலிக்காராளுக்கே (அல்வாவா)ஜிலேபியா? அப்புறம்தான் கைக் கடிதாசையும் பிரிச்சுப் படிச்சுட்டு வந்தேன். சரி, நம்ம வல்லியம்மா சொன்னா தட்ட முடியுமா? சவாலை சமாளிக்க வேண்டியதுதான். நம்ம சீனியர் மேடமும், ஜூனியர் மேடமும் மொதல்ல அல்லாருக்கும் ஜிலேபி தருவாங்களாம். அப்புறம் நானாம்.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா, வெண்பா வாத்தியாரே வந்துட்டாரா.
வருக வருக.

நம்ம வைத்தியரே சொல்லி இருக்காருப்பா. வாரத்துக்கு ஒரு தரம் ஒரு பாயசம்,ஒரு வடை,ஒரு அப்பளம் சாப்பிடலாம்னு:)

உண்மையாவே ஒரு பீஸ் தான் எடுத்துக்கிட்டேன்.
அவ்வளவு பயம் என் அருமை சர்க்கரையிடம்!!!
பதிவுக்கோசரம் பொய் எழுதலாம்னு சட்டம் இருக்காமே?????

சதங்கா (Sathanga) said...

வல்லிம்மா, படிச்சிட்டேன். ஜிலேபி கண்ணுக்குள்ளேயே நிக்குது. அருமையான படம். கொசுவத்தியும் சூப்பர். நீங்கள் சாமர்த்திய கள்ளி :))))

ராமலக்ஷ்மி said...

//திடீர் தலைப்புல எல்லாம் நாம ரொம்ப கெட்டினு சொல்ல முடியாது.// நான் ஓரளவு இதிலே ஓகே. பல முறை இன்டர் காலேஜ் கவிதை கதை போட்டிகளில் பொளந்து கட்டி பரிசும் வாங்கிய அனுபவம். இப்பவும் அந்த 'கெட்டி' இருப்பது எனக்கே ஆச்சரியமா இருக்கு. அதற்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி. உங்களுக்குப் பின்னூட்டமிட்ட பத்தாவது நிமிஷம் மேட்டர் ரெடி. ஆனா பில்டப்புக்கு கொஞ்சம் படமெல்லாம் சேர்த்தா நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன். மேலும் அடுத்த 4 நாள் வரும் விருந்தினரோடு சந்தோஷமான பிஸி. அதான், திண்ணைக்கும் கமிட் பண்ணியிருந்தாலும் சின்ன விடுப்பு எடுத்துக்கறேன்.

ராமலக்ஷ்மி said...

சதங்கா said://வல்லிம்மா, படிச்சிட்டேன். ஜிலேபி கண்ணுக்குள்ளேயே நிக்குது.//

அப்படியே நிக்கட்டும் சதங்கா, கண்ணைத் திறந்து வெளியே விட்டிராதீங்க. ஏன்னா, என் பதிவின் முடிவிலே உங்களுக்குத்தான் ஜிலேபி தரலாம்னு இருக்கேன். வல்லிம்மா மாதிரி கடிதாசியும் போடறேன். இப்பவே மேட்டர் யோசிக்க ஆரம்பிங்க. டைம் இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

ராமலக்ஷ்மி, நினைச்சா குடுக்க முடியாத அல்வாவா:)

ஆனா இந்த விஷயத்தில என்னையே நான் ஏமாத்திக்கறது தப்பு. ச்சும்மா ஜிலேபிக்கோசரம் எழுதினேன்.
ஒத்துக்கிட்டதுக்கு நன்றிம்மா.
காத்துக்கிட்டு இருக்கேன்.

வல்லிசிம்ஹன் said...

சதங்கா, கள்ளியோ ஜிலேபியோ :)இன்னும் நிறையப் பேர் எழுதினாங்கன்னால் ரொம்ப நல்லா இருக்கும்.

சவாலைப் பாத்துட்டீங்க இல்ல. சதங்கா ரெடி ராமலக்ஷ்மி:)

cheena (சீனா) said...

வல்லிம்மா, சிவாஜி - ஜிலேபி - சரி - ம்ம்ம் இடிக்குதே

அது சரி எழுதிட்டீங்க பதிவு - மூணு பெண் பதிவர்களைக் கூப்பிட்டுங்கீங்க

பார்ப்ப்பொம்

வல்லிசிம்ஹன் said...

திடீர் தலைப்புன்னதும் ஜாம் செஷன்ஸ் தான் ஞாபகம் வருது:)

எனக்குப் பேச்சு சுலபம். அதையே யோசிச்சு எழுதும்போது சில பாயிண்ட்ஸ் விட்டுடும்.
ராமலக்ஷ்மி , விருந்து கொண்டாடிட்டு வந்து எழுதுங்க.
என்னையும் முன்னால ஆடின சங்கிலித்தொடர் விளையாட்டுகள் தான் ஊக்கப் படுத்தின. அட நாம கூட இப்படி எழிதினோமானு தோணும்:)

வல்லிசிம்ஹன் said...

சீனா சார், எனக்கும் பதிவு பூர்த்தியான திருப்தி இல்லை. அதுக்காக இரண்டாம் தடவை வேற மாதிரி எழுதினால் நல்லா இருக்காது,.
நான் முதலில் மறைந்த சிவாஜி சார்,மனோரமா ஆச்சியோட பேட்டி காணற மாதிரி எழுதலாம்,ஜிலேபியையும் அதில உருட்டி விடலாம்னு யோசிச்சேன்.

கொஞ்சம் அரைவேக்காடாகிவிட்டதோனு தோணுது.

நான் மூணு பேரும் பெண் பதிவர்களைக் கூப்பிட்டதற்கே ''ஒருத்தரை அழைச்சா அத்தனைபேரும் வந்துடுவோம்னு சொல்லத்தான்:))

தமிழ் பிரியன் said...

சின்னதா சுத்தினாலும் படங்களொடு அழகா சுத்தி இருக்கீங்க ஜிலேபி... :))

தமிழன்... said...

அப்பாடா இந்த பதிவையும் பாத்துட்டேன்...:)

தமிழன்... said...

ஜிலேபி படம் சூப்பரு...

இலவசக்கொத்தனார் said...

//''ஒருத்தரை அழைச்சா அத்தனைபேரும் வந்துடுவோம்னு சொல்லத்தான்:))//

ஏற்கனவே பார்லிமெண்டில் அந்தச் சட்டம் பாசாக மாட்டேங்குது. இதுல இப்படி வேற உண்மையைச் சொன்னீங்கன்னா.. சுத்தம்!!

எல்லாரும் என்னை மாதிரி நல்லவனா இருக்க மாட்டாங்கம்மா!!

இலவசக்கொத்தனார் said...

சிங்கம் சிவாஜி படத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போனதும் வரும் போது ஒரு கடையில் ஜிலேபி வாங்கிக் குடுத்ததும் அதைப் போல் வருமான்னு சிலாகிச்சுப் பேசினதும் அது உங்க தன்மான உணர்வைத் தட்டி எழுப்பினதும் உடனே நீங்க அதை விட பெட்டரா ஜிலேபி பண்ணக் கிளம்பியதும் ஜிலேபி அல்வா ஆனதும் அப்படின்னு ஒரு தொடர் பதிவே எதிர்பார்த்தேன்!!

நீங்க என்னடான்னா சும்மா ரெண்டு சுத்து சுத்திட்டு இதுதாண்டா ஜிலேபின்னு சொல்லிட்டீங்க!!

போகட்டும். உங்க ஆளுங்க என்ன செய்யறாங்கன்னு பார்க்கலாம்!

ராமலக்ஷ்மி said...

//நான் முதலில் மறைந்த சிவாஜி சார்,மனோரமா ஆச்சியோட பேட்டி காணற மாதிரி எழுதலாம்,ஜிலேபியையும் அதில உருட்டி விடலாம்னு யோசிச்சேன்.//

அருமையான ஐடியா. நீங்கள் எழுதினால் அற்புதமாக வரும். முன்னாபாய் பார்ட் டூ, தூம் பார்ட் டூ,(பில்லா பார்ட் டூ-வருதாம்) மாதிரி சி.வா.ஜி பார்ட் டூ வரக் கூடாதா என்ன? எங்களுக்காக எழுதுங்கள்.

சதங்கா (Sathanga) said...

அஹா, வச்சிட்டாங்கய்யா ஜிலேபி நமக்கும் :))) அதான் வல்லிம்மா, நான் ரெடினு சொல்லிட்டாங்களே. அப்புறம் மறுப்பேது. சரிங்க ராமலஷ்மி மேடம்.

யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.

ஆமா, எது பத்தி எழுதணும் ? :))

வல்லிசிம்ஹன் said...

தமிழன் ,ஜிலேபி சுத்தறதுன்னா சும்மாவா.
சர்க்கரை கொஞ்சமா சாப்பிட்டாதான் நல்லா இருக்கும்.
அதான் சுருக்கமா முடிச்சுட்டேன். இன்னோரு காரணம் ஜிலேபியைப் பத்தி எழுதப்போயி அதை ருசிக்கணும்னு யோசனை பந்திட்டா முதலுக்கே மோசம்:)நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தமிழ்ப்பிரியன்.
ஜிலேபி நல்லா இருந்ததா.

உலகம் பூரா ஜிலேபி விலை ஏறிப்போச்சாம்:)

வல்லிசிம்ஹன் said...

ஏற்கனவே பார்லிமெண்டில் அந்தச் சட்டம் பாசாக மாட்டேங்குது. இதுல இப்படி வேற உண்மையைச் சொன்னீங்கன்னா.. சுத்தம்!! //
கொத்ஸ்,
:)

ஜிலேபி எவ்வளவு நல்லா இருக்கோ,இனிப்பு எவ்வளோ உண்மையோ அவ்வளவு உண்மை இந்த மாதிரி சட்டமும் வரப் போறது.

வல்லிசிம்ஹன் said...

கொத்ஸ், நீங்க கோயம்பத்தூர் சிவசக்தி தியேட்டர் பக்கம் வந்தீங்களா என்ன? இல்லையே நீங்க அப்போ சின்னப்பிள்ளையால்ல இருந்திருப்பீங்க:)
பக்கத்தில வந்து பார்த்தா மாதிரிச் சொல்லிட்டீங்க. ம்ம்.ஞானதிருஷ்டிதான்:) சவாலெல்லாம் அப்ப சமாளிச்சது என்னவோ உண்மைதான். அதெல்லாம் சொன்னா நொந்து போயிடுவீங்க.:)
உலகத்திலேயே மாங்காய் ஜாம் செய்த ஒரே அம்மா நானாத்தான் இருக்கணும். பாத்திரத்தை விட்டு வெளிலயே வரலை:) நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

சதங்கா, ஒண்ணுமே கஷ்டமில்லை.
ஆரம்பத்தில சிவாஜி,
அப்புறமா ஜிலேபி. அவ்வ்வளவுதான் மாட்டர் ஓவர்.:)
நடுவில சிவாஜி த பாஸ் வரலாம். சிவாஜி , மராத்தி கிங் வரலாம். நம்ம சிவாஜி சார் வரலாம். ஆர்யபவன் ஜிலேபி, ராமக்ரிஷ்ணா ஸ்வீட்ஸ்.
எல்லாம் சும்மா பூந்து வெள்ளாடிடலாம்:)

நானானி said...

வல்லி!
ரொம்ப நன்றிப்பா! அழைப்புக்கு.
ஜிலேபிதானே அது எனக்கு ஜுஜுப்பி!!
சுத்திட்டாப் போச்சு! வெளியூரிலிருக்கேன். கொஞ்சம் பொறுத்துக்கணும்...சொன்னா கேட்டுக்கணும். சீக்கிரம் ஜிலேபியோடு வருவேன் அது யாரு வாயிலே என்பதுதான்......ரகசியம்!!!

வல்லிசிம்ஹன் said...

சொன்னாக் கேட்டுக்கறேன்.சகோதரி கொஞ்சம் பொறுத்துக்கிறேன்.

வாங்க வாங்க. காத்திட்டிருக்கேன்.

cheena (சீனா) said...

நானானி,

ஜிலேபியோட வாங்க

யாருக்குங்கறது சஸ்பென்சாவே இருக்கட்டும். சென்னை வரும் போது உங்க வூட்லே எனக்கு ஜிலேபி தருவீங்கல்ல - அது போதும்

ambi said...

ஜிலேபியா? நடக்கட்டும் நடக்கட்டும். இதுல என் அப்பாவுக்கு அட்வைஸ் வேற. :p


என் பெரியப்பா சூப்பரா ஜிலேபி சுத்துவார். தீபாவளி சமயத்துல அவர் வீட்டுக்கு போய் பக்கத்துல உக்காந்துருவேன்.

சுடசுட தட்டுல போட்டு முத ஜிலேபிய எங்கிட்ட தருவார். வியாபாரம் உண்டு. அடடா! அந்த நாள் இனிய நாள்.

இப்ப ஜிலேபியும் இல்ல, பெரியப்பாவும் இல்ல. :(

வல்லிசிம்ஹன் said...

அம்பி ஹையோ.அந்த சூடான ஜிலேபி ருசி எதில கிடைக்க்கும்??

டயப்பர் மாத்தாம தமிழ்மணமாப் பாத்துக்கிட்டு இருக்கீங்க:))

பாப்பா,அப்பாவைக் கண்டுக்கோ.

சாரிம்மா , பெரியப்பா போனதுக்கு.அதான் பையனா வந்துட்டாரோ என்னமோ:)

வல்லிசிம்ஹன் said...

நானானி அப்படிய்யே எனக்கொரு பார்சல்:)

நானானி said...

வல்லீ........!
வந்துட்டேன். ஆலவட்டம் போட்டுகிட்டு
ஜிலேபியையும் சுத்திக்கிட்டு வந்தேனே..
எப்படி? சஸ்பென்ஸ் ஓகேயா?
சொல்லுங்கோ!
சீனாவுக்கு கட்டாயம் ஜிலேபி உண்டு.
வாங்க சீனா!
வல்லி உங்களுக்கு....பார்சலா?
ஆங்...ஒரே ஒரு தூண்டு அம்புடுதேன்.

திகழ்மிளிர் said...

தலைப்பும்
அதற்கு ஏற்ற
படமும்
அருமை

வல்லிசிம்ஹன் said...

நன்றி திகழ்மிளிர்,
வாங்கப்பா.

சில சமயம் அப்படி அமைந்துவிடுகிறது.

வல்லிசிம்ஹன் said...

ஆஆல மரத்துக்கிளியே, வந்தாச்சா. இதோ போறேன்.

சீனா பேரிலியெ சீனி இருக்கே. எனக்குத்தான் யாரும் தர மாட்டேங்கறாங்க.
அய்ய இந்த ஜிலேபி புளிக்கும்
அப்படீனு சொல்ல மாட்டேன்.எல்லாரும் நல்லா சாப்பிட்டு நல்லா இருக்கணும்.நன்றிப்பா.

ராமலக்ஷ்மி said...

படமெல்லாம் போட்டு என பண்ணிய ப்ளானை விட எழுதுவதாய் கொடுத்த கமிட்மென்ட் முக்கியமாய் பட்டதால்
சிம்பிளாய் வந்து விட்டார் என் சிவாஜி. அதிலே சிவாஜி இருப்பார். சந்திக்க முடியாது. ஆனாலும் சிந்திக்க வைப்பார் என நம்புகிறேன்.ஜிலேபி இருக்கும். ருசிக்க முடியாது. ஆனாலும் ரசிப்பீர்கள் என நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றிப்பா. ராமலக்ஷ்மி.

படத்தை விட விஷயம் முக்கியமில்லையா.
ரசிப்பதற்குத் தடையில்லை:) இதோ போறேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றிப்பா. ராமலக்ஷ்மி.

படத்தை விட விஷயம் முக்கியமில்லையா.
ரசிப்பதற்குத் தடையில்லை:) இதோ போறேன்.

கீதா சாம்பசிவம் said...

ம்ம்ம்ம் ஜிலேபியும் ரொம்பவே லேட்டாப் பார்த்துட்டேன், பரவாயில்லை, ஆனால் மைதா ஜிலேபி மாதிரி இருக்கே??? உளுந்து இல்லைனு நினைக்கிறேன். :))))))

வல்லிசிம்ஹன் said...

aamaam Geetha. ithu jileebithaan.
jangiri illai:)
rendume kashtamnu Naanaani solRAnga.

கீதா சாம்பசிவம் said...

மைதாவிலே செய்யறது அவ்வளவு கஷ்டம் இல்லை. உளுந்து தான் சுத்துக் கொஞ்சம் வரணும், வந்துட்டா பின்னிடலாம். :))))))))

வல்லிசிம்ஹன் said...

ஒஹோ சுத்தணுமா:)

நமக்குக் கை வந்த கலையாச்சே:)

கீதா, உண்மையாவே நான் ஜிலேபி செய்ததில்லை. அதனால தெரியாது.