About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Saturday, June 07, 2008

எலுமிச்சைப்புல்லும் க்ளீன் களியும் லெட் களியும்


வியாழக்கிழமை வந்தால் இங்கே இருப்பவர்களின் முகத்தைப் பார்க்கவேண்டுமே.:)

ஒரே மகிழ்ச்சி.

ரேடியோவில் மகிழ்ச்சி. தெருக்களில் கூட்டம்.வெய்யிலோ,காற்றோ

வெக்கையோ, வெறும் ஃபலாபல்தான் சாப்பிடுவார்களோ இல்லை ஏழு நட்சத்திர விடுதிகளுக்குத் தான் போவார்களோ


கோவிலில் தான் கூடுவார்களோ ,ஆகக்கூடி வீட்டில் இருக்க மாட்டார்கள். இருந்தால் கட்டாயம் வீடியோக் காட்சிகள் உண்டு.


வார இறுதியாயிற்றே.!

இன்னும் கொஞ்ச நாட்கள் போனால் வீதிகளில் நடக்கக் கூட முடியாமல் அனல் வீசும். இப்போதைக்கு நடக்கட்டும் என்று கங்கணம் கட்டியது போல ஒரே கலகலாதான்.


அப்படி ஒரு வெள்ளிக்கிழமை ஒரு உணவு விடுதிக்கு நாங்களும் போனோம்.

அது ஒரு தாய் உணவகம்.


எனக்குக் கொஞ்சம் தயக்கம்தான்.

பாங்காக் போனவர்கள் பேச்சைக் கேட்டதிலிருந்து அவர்கள் உணவு மீது கொஞ்சம் பயம்.

(அய்ய, இன்னோரு பயமா)


மகனுக்கும் மருமகளுக்கும் தாய் உணவு மிக விருப்பம்.' சைவம்தான்மா,

கேட்டு வாங்கிச் சாப்பிடலாம். ரொம்ப ஆரோக்கியமாக ,எளிதில் ஜீரணம் ஆகிடும்.ம்ம்ம்ம்.


நாமதான் சந்தேகப் பாற்கடல் ஆச்சே:(


அப்பா ஏற்கனவே உங்க தம்பி ஊரில் ஏமாற இருந்தேன். கடல் வாழைக்காயைக் கொடுத்து விடப்போகிறார்கள் என்று சொல்லிக் கொண்டே இந்த ''எலுமிச்சைபுல்'' கடைக்குள் நுழைந்தோம்.
நாசியைத் துளைக்கு ஏதோ ஒரு அவ்வளவாகச் சுகமில்லாத வாசம்.
அபௌட் டர்ன் செய்திருப்பேன்.
இரும்மா. ட்ரை சம்திங் நியூனு உள்ள தள்ளாத குறையா சிங்கமும் சேர்ந்து கொள்ளவே போனோம்/
அழகாகச் சிரித்தபடி வரவேற்று உட்கார வைத்து. 'வில் யூஹேவ் க்லீன் களி ?
என்றது அந்தப் பெண்.
என்னது களியா என்று நான் திரும்ப. சிரிப்பை அடக்க முடியாமல் என் மருமகள் அது க்ரீன் கறிமா என்றாள்
இவர்களுக்கு ஆர் அவ்வளவாக வராது . எல் சுலபமாச் சொல்லுவார்கள் என்றதும் நான் ஜாக்கிரதையாகி விட்டேன். எனக்கு அது ஸ்ப்ளீன் என்று கேட்டது.
அதற்குள் சிங்கம் பூமிங் வாய்ஸில் \I want fried rice with minced chiken'' என்றாரா. அவள் நோட் பேப்பரைக் கையில வச்சுகொண்டு எழுதத்தெரியாத குழந்தை மாதிரி விழித்தாள்.
மீண்டும் மெனுவைச் சொல்ல ஆரம்பித்தாள்
வெஜிடேரியன்
க்ளீன் களி, லெட் களி,
ஃப்ளைட் லைஸ்,
ஷ்ளிம்ப் என்று அடுக்கவும் என் வயிறு கீழே இருந்து மேலே போய் வந்தது. ஏகத்துக்குப் பசி.
அப்பா மவனே வேணா ராசா நாம் சரவணா சங்கிதானு ஓடிடலாமேன்னால்
கேட்கவில்லை.
அவனும் மருமகளுமாக வெகு அழகான தெளிவான இந்தியில் சொல்லவும் அவள் புரிந்து கொண்டாள்.
மம்மா வெஜிடேரியான் அப்படீனு தலையை மேலும் கீழும் கொண்டு போனாள்.
பப்பா நான் வெஜ் ஒரு டிக்
பேபி? நோ நோ.
மிஸ்டர் ச்லீநாத் மிஸஸ் வெஜ்.
ஓகே:)
எல்லாம் சரிதான். மூங்கில் திரை, படங்கள், ட்விஸ்டட் பாம்பூ,அரக்குத் திரைச்சீலைகள் ....சரி.
க்வான்யின்(ரெய்கி) சிலை கூட சரிதான். அவங்கதான் வயிற்றுவலி வராம காப்பாத்தணும்.:(
காரம் குறைக்கலாம்.
கொஞ்சம் சாம்பிராணி போட்டு இருக்கலாம்.
சந்தேகத்தோடயே சாப்பிட்டதில் வயிறு நிறையலை.
ஸ்ப்ரிங் ரோல்ஸ் நல்லா இருந்தது.
டிஸ்கி.
என்னைத்தவிர எல்லாருக்கும் பிடிச்சிருந்தது:))