Blog Archive

Monday, May 26, 2008

ஓஹோ எந்தன் பேபி






எங்க வீட்டுப் பாப்பாக்கு இன்னும் திரும்பக் கூடத் தெரியலை. அதனால கிடைச்ச படத்தைப் போட்டுட்டேன்.
கவுந்தக்கலைன்னா என்ன.அம்மா எல்லாம் கண்ணாலியே கவர் செய்துடறாங்க.
உலகத்திலேயே சமத்துப் பொண்ணு யாருன்னு கேட்டா எங்க மானுதான். அஃப்கோர்ஸ் அவங்க அக்காவத் தவிர.
அவங்க அக்காவும் இங்க ரெண்டு நாளுக்கு வராங்களாம்.
அவங்களுக்கு,தன்னைத் தவிர வேற யாரையும் தாத்தா பாட்டி கொஞ்சக் கூடாது.
பாட்டி'' பாப்பாவ விட்டுடு. பாவம் அழும்'' என்று சொல்லும்.:)
அதே சமயம் வெளி மனிதர்கள் யாராவது வந்தால் தான் பாடிகார்ட் மாதிரி நின்னுக்கும்.
பாப்பா தொடாதே. எங்க குட்டி என்று வேறு சொல்லும்
மானுவோட அண்ணா வெப்காமிரா பார்த்தே தங்கச்சிக்கு அழைப்பு கொடுத்துட்டான்.
பொம்மையெல்லாம் காண்பித்து 'விளையாட வானு' கூப்பிடுகிறான்.
எங்களை மாதிரியோ அடுத்த தலை முறைகளான எங்கள் வீட்டு பத்துப் பதினைந்து பேரன்கள் பேத்திகள் கோடை காலம் வந்தால் எங்கிருந்தெல்லாமோ வந்து சேருவார்கள்.
அது 25 வருடங்கள் முன்னால்.
அந்தப் பத்து பதினைந்து இப்போது ஐந்து ஆறகக் குறுகிவிட்டது. ஒரு பெற்றோர் ஒரு குழந்தை என்றால் இப்படித்தான் ஆகும். அப்புறம் சம்மர் காம்ப் உறவுகளைத்தான் பிடித்துக் கொள்ளவேண்டும்.
அப்படியும் வாழ்க்கையில் சேர்ந்து வாழ இந்தத் தலைமுறை கற்றுக் கொண்டு விட்டால் வாழ்க்கை நலம் பெறும்.

22 comments:

ராமலக்ஷ்மி said...

//பேரன்கள் பேத்திகள் கோடை காலம் வந்தால் எங்கிருந்தெல்லாமோ வந்து சேருவார்கள்.அது 25 வருடங்கள் முன்னால். அந்தப் பத்து பதினைந்து இப்போது ஐந்து ஆறகக் குறுகிவிட்டது. ஒரு பெற்றோர் ஒரு குழந்தை என்றால் இப்படித்தான் ஆகும்.//

ராமலக்ஷ்மி said...

//பேரன்கள் பேத்திகள் கோடை காலம் வந்தால் எங்கிருந்தெல்லாமோ வந்து சேருவார்கள்.அது 25 வருடங்கள் முன்னால். அந்தப் பத்து பதினைந்து இப்போது ஐந்து ஆறகக் குறுகிவிட்டது. ஒரு பெற்றோர் ஒரு குழந்தை என்றால் இப்படித்தான் ஆகும்.//

ஆமாம், மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்! பழைய தலை முறைக்குக் கிடைத்தப் பந்தங்களை இந்தத் தலைமுறை இழந்து கொண்டுதான் இருக்கிறது. (சம்மர் கேம்ப் உறவுகள் வெயில் சாய்ந்ததும் சாய்ந்து விடும்)

வல்லிசிம்ஹன் said...

(சம்மர் கேம்ப் உறவுகள் வெயில் சாய்ந்ததும் சாய்ந்து விடும்)//

சரியாகச் சொன்னீர்கள் ராமலக்ஷ்மி. இந்தக் குழந்தைகளுக்கு விடுமுறையே கிடையாதோ என்று எனக்கு வருத்தமா இருக்கும்.

நன்றிம்மா,.

இலவசக்கொத்தனார் said...

என்ன வல்லிம்மா, இப்படி ஒரு போஸ்ட் போட்டு ஒண்ணும் சொல்ல விடாத படி செஞ்சுட்டீங்க. :)

நானானி said...

விடுமுறை காலங்களில் மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பா வீடுகளுக்குப் போய் கழித்ததெல்லாம்
கதையாகப் போய்விட்டது.
உறவுகளை அறிமுகப் படுத்தவேண்டிய
காலமாகிவிட்டது, வல்லி!

வல்லிசிம்ஹன் said...

சொல்றதுக்கென்ன இருக்கும்மா கொத்ஸ்.

இரண்டு குழந்தைகளாவது ஒரு வீட்டுக்கு வேணும்.

அதில சில பேரை(எனக்குத் தெரிஞ்சு ஒருத்தர் இன்னோரு அடிஷன் செய்திருக்கார்):) நான் விட்டு விட்டேன். இந்த ஒண்ணைப் பெத்திண்டு அத்தையே கொண்டாடிண்டு, அது வளர்ந்தப்புறம் ஏங்கறே ஏக்கம் ,ரொம்ப பாவமா இருக்கும். அதைத்தான் குறிப்பிட்டேன்.
வேற யாராவது பெற்றோர் கம்பெடுக்கறத்துக்குள்ள எஸ்கேப்!!!!!

வல்லிசிம்ஹன் said...

வரணும் நானானி. இந்த ஊரில வெப்காம் கூட சில சமயம் வேலை செய்ய மாட்டேன் என்கிறது.

போன் செலவு மாளாது.

என்னடானு போயிடறது. நம்ம ஊரு மாதிரி வருமா:)

உங்களுக்கும் எனக்கும் இன்னும் பலபேருக்கும் கிடைத்த ஒன்று விட்ட உறவுகள் இப்ப இந்தப் பரம்பரைக்குக் கிடைக்க வில்லை.
அதனால் பகிர்ந்து கொள்வது என்பது ஒரு இயல்பா நடக்க வழியே இல்லை. நன்றிப்பா.

அபி அப்பா said...

ஆமாம் வல்லிம்மா, எனக்கு எத்தனை பெரியப்பா, சித்தப்பா பசங்க தெரியுமா கிட்டத்தட்ட 64 பேர். என் செட் பசங்க, என் தம்பி செட் பசங்க, இப்படி எல்லா வயதுக்கும் தனித்தனி குருப்பா இருப்போம். ஆஹா சம்மர் என்றால் சந்தோஷம் தான். அதல்லாம் இப்ப எங்க. அபிக்கு அவ அம்மா தான் பிரண்ட் இத்தினி நாள். இப்ப நட்டு. என்க்கு பாவமா இருக்கும் அந்த பசங்கள்ளை பார்க்கும் போது!

அன்புடன்

அபிஅப்பா

கோபிநாத் said...

ம்ம்ம்...ஒன்னும் சொல்ல முடியல

ambi said...

@கொத்ஸ் அண்ணே, அதான் பொண்ணு பிறந்துடுச்சே! :)


பாருங்க, எனக்கு ஒரு மச்சினனும் கிடையாது மச்சினியும் கிடையாது. என் தங்கமணிக்கு நாத்தனார் கிடையாது.

//இரண்டு குழந்தைகளாவது ஒரு வீட்டுக்கு வேணும்.
//

சற்று சிந்திக்க வேண்டிய விஷயம். :)

வல்லிசிம்ஹன் said...

அபி அப்பா, நல்லவேளை நட்டு வந்தான். பிற்காலத்தில அபியோட குழந்தைகளுக்கு விளையாட தங்கச்சி தம்பி இருக்கும்:)

வல்லிசிம்ஹன் said...

கோபிநாத், இப்ப ஒண்ணும் சொல்ல வேண்டாம்:).
கல்யாணம் ஆனாட்டு நான் வாழ்த்துகள் அனுப்புவேன். அப்ப ஆசைக்கு ஆஸ்திக்குன்னு வாழ்த்துவோம். சமத்தாக் கேட்டுப்பீங்களாம்.:)

வல்லிசிம்ஹன் said...

கோபிநாத், இப்ப ஒண்ணும் சொல்ல வேண்டாம்:).
கல்யாணம் ஆனாட்டு நான் வாழ்த்துகள் அனுப்புவேன். அப்ப ஆசைக்கு ஆஸ்திக்குன்னு வாழ்த்துவோம். சமத்தாக் கேட்டுப்பீங்களாம்.:)

வல்லிசிம்ஹன் said...

ம்ம் சிந்திங்க சிந்திங்க.

அம்பி, எங்க வீட்டில மூன்றாவதாப் பையன் பிறந்தபோது, அய்ய இந்தக் காலத்தில மூணு குழந்தைகளானு கேட்டு காயப்படுத்தினவங்களும் உண்டு.

மனசும் தைரியமும் இருந்தா எல்லாம் நடக்கும்.
தம்பி சார் கல்யாணத்தும்போது பதினாறு வாழ்த்திடலாம்:)

குசும்பன் said...

கண்டிப்பா இரண்டாவது வேண்டும்!இல்லை என்றால் சில உறவுகளை அவர்கள் இழக்க நேரிடும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்மா சரவணன்.

துணையோடு வளரும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு உணர்ச்சியும் நிறைய இருக்கும். சண்டை மண்டை உடையும். இருந்தாலும் ஒரு வயதுக்கு மேல் ஒருவர்மேல் ஒருவர் வைக்கும் அன்பும் அதிகரிக்கும்.
நன்றிப்பா.
உங்க வாழ்க்கைலேயும் மழலைகள் சீக்கிரம் வர்ப் பிரார்த்திக்கிறேன்.

pudugaithendral said...

http://paatukupaatu.blogspot.com/2008/05/blog-post_7349.html

நீங்க கேட்ட பாட்டு போட்டிருக்கேன்.

வந்து பாருங்க.

துளசி கோபால் said...

நேத்துருந்து பின்னூட்டவே முடியலைப்பா.....(-:

கூட்டுக்கெல்லாம் இனி எங்கே போறது?

ஒன் டிஷ் மீல் தான் இந்த அவசர யுகத்தில்.

ஆமாம், ரெண்டு பசங்களா ( வேற ஜாதி?) இருந்தாப் பரவாயில்லைதானே?

வல்லிசிம்ஹன் said...

புதுகைத் தென்றல், நன்றிம்மா. பாட்டுக் கேட்டு விட்டேன்..இப்போ இந்தப் பதிவில இன்னோரு வரி சேர்த்துக்கணும்.
இணையத்தில கிடைக்கிற உறவுகளும் பெருகணும்னு:)

வல்லிசிம்ஹன் said...

துளசியைக் காணோமேனு பார்த்தேன். நீங்க ஆன்லைன்ல கூட இல்லையே!!

எத்தனை ஜாதி இருந்தாலும் பரவாயில்லை. ரெண்டு இல்லாட்டா மூணு. ஒரு பெண் சாதி, ஒரு ஆண் சாதி அப்புறம் எத்தனை வேணும்னாலும்:)

மாதங்கி said...

இனியதொரு பதிவு ரேவதியம்மா,

புத்தகம் படிக்க ஆசையாக இருக்கிறது என்று பின்னூட்டியிருக்கிறீர்களே, மிக்க நன்றி .இந்த புத்தகம் உயிர்மை பதிப்பகம்
11/29 Subramaniam street, abhiramapuram Chennai 600 018 இல்
கிடைக்கிறது.

நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. முகவரி கொடுத்தால் தபாலில் அனுப்புகிறேன்

வல்லிசிம்ஹன் said...

ஓ. உயிர்மைல கிடைக்குமா. சரிம்மா.
மாதங்கி
நான் இப்போ துபாயில இருக்கேன்.
மீண்டும் டிசம்பரில் தான் சென்னை திரும்புவொம்.
அப்போது வாங்கிக் கொள்ளுகிறேன். சென்னையில் மைலாப்பூரில் தான் வீடு.
ரொம்ப நன்றிப்பா..