Blog Archive

Thursday, May 22, 2008

302, அமீரகத்தின் அழகிய பக்கம்




























தலைப்பிலே சொல்லியது போல ஊருக்கு வந்ததும் கண்களில் படும் சில அழகிய காட்சிகள்.
நிறைய,ஏகப்பட்ட உழைப்பை இவை உள்வாங்கி இருக்கின்றன.
உழைத்திருக்கக் கூடியவர்கள் யார் என்றும் நமக்குத் தெரியும்.
துபாய் படகுகள் போக்குவரத்துக்கு மிகுதியாகப் பயன்படுத்தப் படுகின்றன.
கூலியும் குறைவுதான்.
இப்பொது கட்டப் பட்டுக் கொண்டிருக்கும் மெட்ரோ திட்டம் பூர்த்தியாகும் சமயம் இந்த ஆப்ரா படகுகளுக்கு வருமானம் குறையத்தான் செய்யும்.
விதவிதமான மனிதர்கள் வேறு வேறு இலக்குகளை நோக்கிப் பயணிக்கும் பாங்கு அமைதியாக இருக்கும்.
இந்தக் கரைகளின் ஓரம் அமர்ந்து விரையும் படகுகளைப் பார்ப்பதும் சுவாரஸ்யமாக இருக்கும்
துபாய் க்ரீக் அரபிக்கடலின் பாக்வாடர்ஸ் (backwaters) என்று நினைக்கிறேன்.
தெரிந்தவர்கள் சொல்லலாம்.
இங்கு நவநாகரீகமாகக் கட்டப்பட்ட க்ரூயிஸ் படகுகள் ஏகப்பட்ட விளக்குகளுடன் பயணிகளை ஏற்றி மாலை வேளைகளில் இந்த ஆற்றில்(?) ஆடல் பாடலுடன் மிதப்பது
பார்க்க நன்றாக இருக்கும்.,.100 திரமோ என்னவோ டிக்கட்டாம்:)








Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

10 comments:

கோபிநாத் said...

நல்லா என்ஜாய் பண்ணுங்கம்மா ;))

வல்லிசிம்ஹன் said...

கோபிநாத்,
நீங்க எல்லாம் வேலை செய்துட்டுப் பதிவு போடறீங்க. நான் சமையல் செய்துவிட்டுப் பதியறேன்.:)

சென்னைல கேட்கிற சத்தங்கள் வேற. இங்கே காலைப் பறவைகள் மட்டும் அதே சத்தம். மற்றபடி பழைய மரங்களைக் காணோம். புறாக்களும் குறைந்து விட்டன.
இனிமேல் தான் வீட்டை விட்டு வெளியே வரணும்.
நன்றிம்மா.பார்க்கலாம்.

பினாத்தல் சுரேஷ் said...

ஷார்ஜாவில் ஒரு அழகிய போட்டோ எடுக்க எப்போது உங்களுக்கு வாய்ப்பு வரப்போகிறதோ!

துளசி கோபால் said...

படங்கள் அட்டகாசம்..

அது என்னப்பா.....

'ஓடமும் ஒரு நாள் மேடையில் ஏறும்'?????

வேகாத வெயிலில் ரோடைக் கிராஸ் செஞ்சு போறது யாரா இருக்கும்?
அதான் அந்த ஆரஞ்சுப்பொடவை.....:-))))

வல்லிசிம்ஹன் said...

ஷார்ஜா ஊருக்கு நிறைய தடவை வந்திருக்கேன்மா சுரேஷ். அப்போ கையில காமிரா கிடையாது. இப்போ ஒரு வருஷமாத்தான் நமக்கு கிஃப்ட் கொடுத்தாங்க.
அந்தப் பக்கத்திலிருந்து துபாய் ஸ்கைலைன் போட்டோ எடுக்கணும்:)
எங்க வீட்டுப்பிள்ளை ஒருத்தரு அங்க இருக்காரு.அங்க போகும்போது எடுப்பேன்:)

வல்லிசிம்ஹன் said...

ஹை துளசி. அது துபாய் மியூசியம் முன்னால இருக்கிற தோ என்கிற படகு. முழுசும் ஹாண்ட்க்ரஃப்டட். பழைய காலக் கதைகள் எல்லாம் படமெடுத்து வச்சிருக்காங்க. நல்லாப் பாதுகாக்கவும் செய்யறாங்க.
ஆனா ஒண்ணு. பார்த்துப் பார்த்து ரூமுக்குள்ள போகணும். எப்போ வெளில வருவோம்னு ஆகிடும். உள்ள போறதும் வெளில வரதும் ஒரே மாதிரி இருக்கும்.
நமக்கு பயா தான்:)
அந்தக் கதை அடுத்தாப்பில எழுதறேன்.
வெய்யிலுக்கு அந்த அம்மா தலைலே புடவையைப் போர்த்திக்கிட்டுப் போறாங்க .வட இந்தியர்களும் அண்டை நாட்டவர்களும் இங்கே கோலோச்சிக்கிட்டு இருக்காங்க.துணி வியாபாரம்.அசப்பில பாம்பே வந்துட்டோமோனு தோணும்:)

இலவசக்கொத்தனார் said...

படங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு. நடாத்துங்க!!

(ஸ்பெல்லிங் மிஷ்டேக் எல்லாம் இல்லை, உங்க ஷார்ஜா பிள்ளை கிட்ட கேட்டுக்குங்க!) :))

வல்லிசிம்ஹன் said...

ஆஹா, ஷார்ஜா பிள்ளை தமிழ் சட்டாம்பிள்ளையோ:)
ஏகத்துக்கு ஆங்கில வார்த்தைகளைத் தெளிச்சிருக்கேனே!!!
நடாத்தலாம் கொத்ஸ்.

நாம இருக்குற ஊருக்குத் தக்கனதானே ஷ்பெல்லிங் தப்பும் வரும்:)!!!!

ராமலக்ஷ்மி said...

அமீகரத்தின் அழகிய பக்கங்களை அழகிய படங்களுடன் காட்டியிருக்கீங்க வல்லிம்மா.
//வெய்யிலுக்கு அந்த அம்மா தலைலே புடவையைப் போர்த்திக்கிட்டுப் போறாங்க //
அந்த படத்துக்கு அழகு சேக்கறாங்க!

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராமலக்ஷ்மி. இந்தப் படம் ரொம்பப் பழையது.
கூகிள்ள இருந்து எடுத்ததும்மா.

இப்போது எடுக்கிற படங்களை பெரிய பெரிய மால் களில் தான் எடுக்கணும்:)
நன்றிம்மா.