About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Saturday, May 10, 2008

298,அம்மாவுக்கு என்ன கொடுக்கலாம்?

அம்மா, அன்னையர் தின வாழ்த்துகள். உனக்கு 50 வயது ஆனபோது ஒரு ஒன்பது ரூபாய்க்கு வாங்கின விக்டோரியா தொழில் கழகத்தில வாங்கின கூடை கொடுத்தேன். அதில பேரனோட பொம்மைகளைப் போட்டுக் கொள்வதாகச் சொன்னாய்.

உனக்குப் பிடித்தவங்களோட படமெல்லாம் பதிவில போட்டு விடுகிறேன்.மேல இருக்கிற மூல ராமன் படம் உனக்குப் பிடிக்கும் அப்பாவுக்கு ராமனைப் பிடித்த ஒரே காரணத்தினால்.அதனால் உனக்குக் கொடுக்கிறேன்.


பத்மினி ராகினி நாட்டியம் நீங்கள் புரசைவாக்கத்தில் இருந்தபோதே பார்த்ததாகச் சொல்வாய்.
அவர்கள் போடும் சட்டை (ப்ளௌஸ்) டிசைனில் ஒரு வெல்வெட் துணியில் மாங்காய் சரிகை வைத்துத் தைத்த உடை ஒன்று தயாரித்துக் கொடுத்தாயில்லையா....
எம்.எஸ் அம்மா குரல் உனக்குத் தெய்வத்தை வழிகாட்டுகிறது என்று சொன்னதால் உனக்கு அவங்க பாடின பாடல்களை வாங்கிக் கொடுத்தேன் ஒரு வருடம்.


வைஜயந்திமாலா நடித்த படம் பெண். அதில் வரும் "அகில பாரதப் பெண்கள் திலகமாய் அவனியில் வாழ்வேன் நானே ''என்ற பாட்டை என்னை அடிக்கடி பாடச் சொல்வாய்.
மனமிருந்தால் பாடிக்காட்டுவேன்.
''இத்தனையும் நீ செய்தும்,நான் உன் அருகாமையை விரும்பிய அந்தக் கடைசி நாளில் நீ எங்கே இருந்தாய்னு ''
நீ கேட்கிற மாதிரி
எனக்கு அடிக்கடி தோன்றுகிறது.
அம்மா மன்னித்துவிடு.
வாழ்க அன்னையர்கள்.
அவர்கள் பெற்ற பெண்கள் அந்தப் பெண்களின் செல்வங்கள். தொடரட்டும்
பரம்பரை. அன்பும் அறனும் எங்கும் தங்கட்டும்.


Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

12 comments:

ambi said...

சூப்பர். உங்களுக்கும் என் அன்னையர் தின வாழ்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

உங்கள் அன்னைக்கும் இன்னும் அன்னையாகப் போகிறவர்களுக்கும் வாழ்த்துகள் அம்பி. நன்றி.

சதங்கா (Sathanga) said...

வல்லிம்மா

டச்சிங்கான அன்னையர் நினைவூட்டல்கள் பதிவு. உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

சூப்பர் பதிவு.


அன்னையர் தினமுன்னு ஒண்ணு இருக்கறதே தெரியாமலிருந்த காலத்திலே வாழ்ந்து மறைந்த என் அம்மாவை நினைச்சுக்கிட்டேன்ப்பா........

மாமியாரைக் கூப்பிட்டு வாழ்த்தினேன்.

அந்த விக்கிரஹங்கள் கொள்ளை அழகு. என்ன ஒரு ஜொலிப்பு!!!!

கோபிநாத் said...

அழகு..! ;)

அன்னையர் தின வாழ்த்துக்கள் ;)

வல்லிசிம்ஹன் said...

சதங்கா வரணும்.
உங்க அம்மாவையும் அழைத்து வாழ்த்துகள் சொல்லி இருப்பீர்கள்.
என் அம்மாவைப் பதிவில அழைத்து விடவேண்டும் என்று ஒரே எண்ணத்தில் எழுதினேன்...
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

துளசி,
அம்மானு நினைக்கிறபோதே உங்க அம்மா பற்றிய எழுத்துகள் நினைவு வந்தது.

அம்மா அம்சம் எல்லோரிடமும் இருக்கு இல்லையா. அந்த விதத்தில் அப்பாக்களும் தாயுமானவர்கள்தான். ஜிகே அப்பாவுக்கும் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கோபிநாத்.
உங்க ஊருக்கும் போன் பேசி இருப்பீங்க.
அனைத்து அன்னையரும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.

Anonymous said...

அந்த பாடலுக்கு ஏற்ப பதிவு எழுதிறீங்களே! :) உங்கம்மா ஆசை நிறைவேறுதே இங்க. :)

படிக்கும்போது இதை மாதிரி பாட்டு உண்ணு நம்ம பொண்ணுக்கும் தேடி வச்சிக்கணும்னு தோணுது ...
அந்த பாடலுக்கு ஏற்ப பதிவு எழுதிறீங்களே! :) உங்கம்மா ஆசை நிறைவேறுதே இங்க. :) படிக்கும்போது இதை மாதிரி பாட்டு ஒண்ண நம்ம பொண்ணுக்கும் தேடி வச்சிக்கணும்னு தோணுது ...

உங்கம்மாவுக்கு பிடிச்சவங்களில நீங்களும் உண்ணா? :)))) ... எனக்கு தெரியாது இல்லையா :)

வல்லிசிம்ஹன் said...

மதுரா, மனதில் உறுதி வேண்டும் பாட்டை மனப்பாடம் செய்யச் சொல்லிக் கொடுங்கள் உங்கள் பொண்ணுக்கும்.
எங்கம்மாக்குப் பிடிச்ச பொண்ணு நாந்தான் அவங்களுக்குப் பிடித்த இன்னோரு பேரனோட இருக்கேனே.

படத்தில எட்டி,எட்டி
அன்னையர் தின வாழ்த்துகள்மா. உங்களைத்தான் பார்க்கிறேன்:0)

சுந்தரா said...

உங்களுக்கும் என் அன்னையர்தின வாழ்த்துக்கள் வல்லி அம்மா...
மறையாத நினைவுகளை மீண்டும் மணக்கச் செய்திருக்கீங்க...

வல்லிசிம்ஹன் said...

வரணும் சுந்தரா. குடும்பத்தோடு சீரும் சிறப்புமாக இருக்கணும்.
உங்கள் பதிவுக்கு
வர இயலவில்லை. இன்றாவது முடிகிறதா என்று பார்க்கிறேன்.
நன்றி.