Blog Archive

Monday, April 14, 2008

இராம ராம சரணம்!



















இது மிகவும் அதிசயம். நேற்று முழுவதும் இ கலப்பை,தமிழ்த் தட்டச்சு எல்லாம் தடுமாறி சோர்ந்து போன போது, பரவாயில்லை ராமன் பிறக்கிறான் அவன் படங்களாவது போடலாம் என்று ஆரம்பித்து ஏதோ ஒரு நொடி ஆசையில் மீண்டும் கலப்பையைத் தேடி
வேலை செய்யறதானு பார்த்தால் வந்தேன் வந்தேன் நானும் தானே வந்தேன் என்று தமிழ் எழுத்து வந்துவிட்டது:)
என் அருமை விஸ்டாவே உனக்கு என் பரிபூர்ண நமஸ்காரம்.
அதுவும் இந்தக் கணினியில் முதலாக ராமனைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சியே.
மன்னுபுகழ் கோசலைதன் மணி வயிறு வாய்த்தவன்,
பேராண்மை வள்ளல்,
சீதையின் அன்பன்,
இலக்குவனின் உயிர்த் தலைவன்,
தசரதன் மனம் மயக்க வந்த கண்மணி,
அனுமனின் பேராற்றலுக்கு வழி வகுத்தவன்,
வாய்மை வாழ வந்த பட்டாபிராமன்
எங்கள் ராமா, நீ என்றேன்றும் இருப்பாய்.
நாங்கள் எடுக்கும் பிறவிகள் அனைதிலும் உன்னை மறக்காமல்,
உன்நாமம் ஜபிக்கும் புத்தியைக் கொடுப்பாய்.
ஸ்ரீராம,லக்ஷ்மண,ஜானகி
பரத,சத்ருக்கின,ஹனுமான் சூழ
அமைந்த உலகம் ஸ்ரீராமராஜ்யமாக அமைய அருள வேண்டும் ஐயா.

21 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Vista-ன்னா வழி! இது இராமன் காட்டிய வழியோ வல்லியம்மா? :-)
புதுக் கணிணியிலும் கலக்க ஆரம்பிச்சாச்சா?

இனிய இராம நவமி வாழ்த்துக்கள்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரவி, புத்தாண்டு நல் வாழ்த்துகள்:)
போன் செய்ய முடியவில்லை.
விஸ்டா சரியாய் இருந்தால் பயணமும் இனிதே அமையும் இல்லையாம்மா:)
நன்றிப்பா.

ambi said...

புது வருஷம், புது கணிணி, ப்ரமாதம் வல்லி மேடம், :p

பானகமும், நீர் மோரும் செய்து ராமருக்கு காட்டிட்டு நாங்க சாப்டோம். :)

மெளலி (மதுரையம்பதி) said...

ராமநவமி வாழ்த்துக்கள் வல்லியம்மா....புது கணினிக்க்காகவும் தான் :))

இன்னைக்கு உங்க சித்ர ராமாயணம் பதிவுகள் பற்றி நினைத்தேன். :))

சிவமுருகன் said...

புது வருஷம், புது கணினி! பிரமாதம்.

//இனிய இராம நவமி வாழ்த்துக்கள்!//

இரவி! நவமியில் (Apr 18) தானே இராமநவமி!

(அடச்சே எந்த கிழமையில் குட் ஃபிரைடேங்கர மாதிரில இருக்கு!)

குமரன் (Kumaran) said...

சிவமுருகன். ஏப்ரல் 14 தான் நவமி. அன்று தான் இராமநவமியும். ஏப்ரல் 18 சித்திரை உத்திரம் - மீனாட்சி திருக்கல்யாணம்.

வல்லிசிம்ஹன் said...

அம்பி,
உம்மாச்சிக்குக் காண்பித்துவிட்டுத்தானே சாப்பிட்டீர்கள்;)
உள்ள இருக்கிற சாமியும் பார்த்திருக்கும்.அடுத்த வருஷம் அதுவும் உட்கார்ந்து ராம நாமம் ஜபம் செய்யும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மௌலி,
ஒரு வருடம் ஓடிவிட்டது பார்த்தீர்களா. ஒரு வெகு சிறிய முயற்சிக்கு இப்படி ஒரு ஊக்கம் நண்பர்களிடமிருந்துதான் கிடைக்கிறது.
இராமர் எல்லோருக்கும் சாந்தியையும் சந்தோஷத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சிவமுருகன்,எப்படியோ உங்க மூலமா மதுரையும் வந்துவிட்டது:)
குமரன் பதில் சொல்லி இருக்கார் பாருங்க.

வல்லிசிம்ஹன் said...

அன்பு குமரன் திருமணத் தகவலுக்கு மிகவும் நன்றி.
மீனாட்சியும் சொக்கனும் பிரியாவிடையும் நமக்கு நமக்கு மங்களம் அருளட்டும்.

குமரன் (Kumaran) said...

இன்னொரு பின்னூட்டம் போட்டிருந்தேனே. வரலைங்களா அம்மா?

துளசி கோபால் said...

ஆஹா.....விஸ்டாவுக்கு வடையா?

எனக்குத்தானே அந்த ரெண்டும்?

விஸ்டாவில் ஜெயித்து வந்தமைக்கு வாழ்த்து(க்)கள்.

வல்லிசிம்ஹன் said...

இன்னோண்ணா. எந்தப் பதிவும்மா குமரன்?

பார்க்கிறேன் பா. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

துளசிக்கேதான் வடை. இது ஜெய்ஸ்ரீ சுட்ட வடைன்னு எனக்கு ஒரு சந்தேகம். அங்க கேட்டுடலாமா:)))

இலவசக்கொத்தனார் said...

ராம்!ராம்!

வல்லிசிம்ஹன் said...

ஹரே ராம் ஹே ராம்!!

Geetha Sambasivam said...

ஸ்ரீராம், ஜெயராம், ஜெய ஜெய ராம்! நன்றி வல்லி. அருமையான படங்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா, இவ்வளவு படங்களும் கூகிளில் கிடைக்கும் போது படங்களுக்காகவே ஒரு பதிவு ஆரம்பிக்கலாமானு இருக்கு.

துளசி கோபால் said...

//இவ்வளவு படங்களும் கூகிளில் கிடைக்கும் போது படங்களுக்காகவே ஒரு பதிவு ஆரம்பிக்கலாமானு இருக்கு.//

படங்களுக்குத் தனிப் பதிவு நல்ல ஐடியா. ஆனா அதுலே போடறதெல்லாம் சொந்த சாகித்தியமா இருக்கணும். யாரோ சுட்டதை நாம சுட்டா நல்லா இருக்காதுன்றது என் தாழ்மையான எண்ணம்.

நாமே அரைச்சுச் சுட்ட நம்ம தோசையா இருக்கட்டுமே வல்லி.

கோச்சுக்காதீங்கப்பா:-)

வல்லிசிம்ஹன் said...

துளசி:)

தோசை அரைக்கிறதை விட்டு ரொம்ப நாளாச்சும்மா.

சுடறது அப்ப அப்ப.
சாகித்தியம் இப்பசத்திக்கு பதிவுதான்.
ஏற்கனவே நாலு ஆரம்பித்து அது கிடப்பில கிடக்கு.
இந்த அழகில நானாவது இன்னும் ஒரு ப்ளாகா!!!!!!வது ஆரம்பிக்கிறதாவது:)
ச்சும்மாக்கோசரம்பா.
ஆசை இருந்தாப் போதுமா. பொறுமை வேண்டாமா. ம்ம்ஹூம்.

தி. ரா. ச.(T.R.C.) said...

வணக்கம் வல்லியம்மா. புது காரு,புது கணினி, புது தமிழ் வருஷம்(60துக்கு0 பிறகு) ஜாம்ய்ங்க!

ராமநவமியை நாங்களும் நன்றாகவே கொண்டாடினோம்.தங்கமணி வந்தாச்சு. கரண்டி வேலை போச்சு. ஆனா டூர் ஆரம்பம்.பாண்டி,டெல்லி, மும்பாய்,கொல்கொத்தா, எர்னாகுளம்(குருவாயூர் இல்லாமலா)இந்த தடவை நைமிசாரண்யம் போக நினைப்பு டெல்லியில் இருக்கும் போது. ஆண்டவன் அருள் வேண்டும்