Blog Archive

Saturday, April 05, 2008

தனிமை...புகைப்படப் போட்டிக்காக

ஏப்ரில் மாதப் புகைப்பட்ப் போட்டிக்காக எனக்கு மிகவும் பழக்கமான ஒருவர் ,

ஆனந்தமாக ஒரு பார்சலைத் திறப்பதை அவர் அறியாமல் போட்டோ எடுத்துவிட்டேன்.

அவருக்குத் தனிமை மிகவும் பிடிக்கும்.

எனக்கோ எதிர்மறையாகக் கூட்டம் போட்டுப் பேச ஆசை:)

எப்படியோ சண்டை கிண்ட போடாம,சிரிச்சுகிட்டு கிரிச்சுகிட்டு

சன்ன்ன்ந்தோஷமா இருக்கிறதா முடிவு பண்ணி ரொம்ப வருஷங்கள் ஆச்சு.

எங்க மறுபாதி இவங்க. அவங்க சம்மதம் கேட்டுத்தான்

போட்டு இருக்கேன்.


Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Posted by Picasa

21 comments:

ஆயில்யன் said...

நல்லா இருக்கு :)

லொக்கேஷன் சூப்பரா இருக்கற மாதிரி ஒரு ஃபீலிங்:)

எந்த இடம்?

கோவி.கண்ணன் said...

வல்லி அமமா,

ஐயா படம் இது - என்று
அதை சொல்லும் போது உங்கள் மகிழ்ச்சி பதிவில் எதிரொளிக்குது !

உங்களுக்கும் ஐயாவுக்கு வாழ்த்துகள் !

துளசி கோபால் said...

சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்!!!!!!

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஆயில்யன்.
பின்ன சும்மாவா:)
ஸ்விட்சர்லாண்டுப்பா.

ஹ்ம்ம். கொடுத்த வைத்த பூமி.

வல்லிசிம்ஹன் said...

கண்ணன் :))
தெமேனு சரி சொன்னாரே!
அதுக்குத் தான் சந்தோஷம்.
வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

ம்ம் அது:)
நன்றிப்பா துளசி. அது என்ன பாக்கெட் தெரியுமா.
பாப்பாவோட வேஃபர்ஸ்!!

சகாதேவன் said...

பாப்பாவின் வேஃபர்ஸா?
தனிமையில்லையா,
நான் ஒரு குவார்ட்டர் என்று நினைத்தேன்.

சகாதேவன்

கோபிநாத் said...

ஐய்ய்ய்...வல்லிம்மா...பதிவுல ஒரு விதமான வெட்கம் தெரியுது..;)))

நன்றாக எடுத்திருக்கிங்க ;))

வாழ்த்துக்கள் ;)

நானானி said...

அதுதான் அவ்வளவு அக்கறையோடு ஏகாந்தமாக பிரிக்கிறார். குழந்தைக்கென்றால் ஆர்வமும் அக்கறையும் தாத்தாக்களுக்குத் தானே வந்துவிடுகிறதே!
எங்க வீட்டுத் தாத்தாவும் இப்படித்தான். வல்லி!
அமைதியான லொக்கேஷன்!!

வல்லிசிம்ஹன் said...

கோபிநாத்,

பாருடா, இந்தப் பையனை:)
ஷார்ப் லுக் ன்னு கேள்விப்பட்டு இருக்கேன்.
கரெக்டாதான் சொல்லி இருக்கீங்க,.:)

வல்லிசிம்ஹன் said...

நானானி, ஊருக்குப் போய் வந்துட்டீங்களா.

ஆமாம், தாத்தாக்களுக்குப் பேத்திகள்னா உயிர்தான். அந்தக் குட்டியும் என்ன பண்ணும்னா
பாப்புத்தாத்தானு இன்னும் ஒட்டிக்கும்.:)
பேரன்களும் அதே.

வல்லிசிம்ஹன் said...

கூட்டமா இருக்கும்போது அது ஒரு தனிமை. அதான் போட்டோ சொல்லுது.
பொதுவா எங்களுக்கு அந்தப் பழக்கம் பிடிக்காது.குவார்ட்டரைச் சொல்றேன்:)

Boston Bala said...

கலக்கல் :)

வடுவூர் குமார் said...

இதை நான் "தனிமை" என்று ஒத்துக்கொள்ள முடியாது.... அதான் கையில் பிஸ்கெட் வைத்திருகாரே,எப்படி தனிமையாகும்???
வேறு ஏதாவது தேடி போடுங்க.

Anand V said...

//முன் பின் ஆக்கம் ஒண்ணும் செய்யவில்லை. எப்படி எடுத்தேனோ அப்படியே போட்டு விட்டேன்.:))

இப்படி சொல்லீட்டீங்கன்னா எப்படி ?

கொஞ்சம் ஆக்கம் செய்த படம் இங்கே இருக்கு.

http://viewlens.blogspot.com/2008/04/va-sim.html

அழகான படம்.வீட்டு நினைப்பை தூண்டி விட்டு விட்டது.

தி. ரா. ச.(T.R.C.) said...

வல்லியம்மாவுக்கு இவ்வளவு வெட்கமா? கணவன் மனைவிக்கு இடையில் ஊண்மையான அன்பு 60 அப்புறம்தான் வரும் போல இருக்கு. ஆறிலிருந்து அறுபதுவரை எழுதலாமோ? படம் சூப்பர்

வல்லிசிம்ஹன் said...

நன்றி பாலா.வேறு ஒருத்தர் கூட கலக்கலாச் சொல்லி இருக்காரு:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் குமார் சார். ராமனை நினைக்கும்போது வடுவூராரும் நினைவுக்கு வருகிறார்.
ஒரு போட்டோ தான் கொடுக்கலாமாம்.
இன்னோண்ணுல நானே தொலஞ்சு போன அனார்கலி மாதிரி போஸ் கொடுத்து இருக்கேன்.
அதைப் போட்டா அப்புறம் யாரும் என் ப்ளாக் பக்கம் வரமாட்டாங்க.:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா a .n &
மிகவும் நன்றி. உங்க பதிவில போய் பார்த்தேன்.
வீட்டுநினைப்பா. ஏன்பா வீட்டை விட்டுத் தள்ளி இருக்கீங்களா.

வல்லிசிம்ஹன் said...

அறுபதைச் சுத்தியே வருதே கமெண்டு:)
உண்மையும் அதுதான் தி.ரா.ச.
வயதான பிறகு வரும் அன்பு வேறு & சிறப்புதான்.

NewBee said...

ரொம்ப நல்லா இருக்கு...:)

சரியான நேரத்துல கிளிக்கி இருக்கீங்க...expression apt-ஆ capture ஆகி இருக்கு....

எனக்கு இப்போ பசிக்குதே...ம்ம்ம்ம்ம்ம்ம்...அந்த wafer biscuit தான் வேணு.... :)

PIT-லே இருந்து இங்கே வந்தேன்...சூப்பர் படம்..