Blog Archive

Wednesday, April 23, 2008

291, நூறும் ஒண்ணும்




Posted by Picasa இந்தப் பாட்டிக்கு நூறு வயசாச்சு.
நம்ப முடியுதா:)
அவங்களோட பேரன்தான் இவங்களை நல்லா வச்சிருக்காரு.
பாட்டிக்குப் பொண்ணு வயித்துப் பேரன்.                                                                                     அவரோட பொண்டாட்டி நம்ம பொண்ணுக்கு நல்ல சினேகிதி.
சாலினு பேரு.
க்ரானி,க்ரானினு கூப்பிடறதைப் பார்த்துட்டு நான் அசந்து போனேன்.அத்தனை அன்பு இந்தப் பாட்டிகிட்ட அவங்களுக்கு.
இந்த வயசுக்கே உரித்தான சில முக்கிய பிரச்சினைகள் இருந்தும், இந்த சாலி(Sally) ரொம்பப் பொறுமை சாலியா(!)ப் பார்த்துக்கறாங்க.
பாட்டிக்கு நல்ல க்ரொஷா பின்ன வருமாம். நான் பொண்ணு வீட்டில இருந்த சமயம் ஒரு நாள் இவங்களை ஒரு மாலைப் பொழுதுக்கு வரச்சொல்லி இருந்தோம்.
பாட்டிக்கு வாக்கர் கூடத் தேவையா இருக்கவில்லை. பேத்தி கையை இறுக்கப் பிடித்து மெதுவா ஏறி வீட்டுக்குள்ள வந்து இருக்கையில உட்கார்ந்து,எங்க குட்டிப் பேரனோட விளையாடினாங்க.
அவனுக்குத் தான் பாட்டியோட எலும்பு உறுத்தவே ரொம்ப நேரம் அவங்களோட இருக்கலை.
Sally, பொறுமையா பாட்டிக்கு என் பொட்டு, என் உடை எல்லாத்தையும் விளக்கிச் சொல்ல அவங்க கேட்டுக்கிட்டு கிராஸ் கேள்வி வேற கேட்க ஆரம்பிச்சாங்க.
நீ உன் பாட்டியைப் பார்த்துக் கொண்டாயா. உன் அம்மாவுக்கு சேவை செய்தியா.இப்படி....
நானும் என் பழைய வரலாறிலிருந்து கொஞ்சம் சொன்னேன்.
அவ்வளவா இம்ப்ரஸ் ஆகலை பாட்டி.
ஆனா சமோசாவையும், பால்கோவாவையும் ரசிச்சு சாப்பிட்டாங்க.
பாட்டிக்கு இப்பத்தான் ஒரு இடுப்பு எலும்பு முறிவு சிகிச்சை முடிஞ்சு இருக்கு. இல்லாட்டி மாடிக்கும் போய்ப் பார்த்துட்டு வருவாங்கனு சாலி சொன்னாங்க.
அங்க இருந்த ஒரு இரண்டு மணி நேரத்தில் பாட்டி எழுந்து கீபொர்ட் வாசிச்சு, குஷன் கவரெல்லாம் சுத்தமா முடி போட்டு வச்சு, கீழ சிதறிக் கிடைந்த விளையாட்டுப் பொருட்களை அதோட பொட்டில போட்டு,
(ஹய்யோ) மீண்டும் சோஃபாவில வந்து உட்கார்ந்து கொண்டா.ர்......                                                                                                                                                                                                                                                                       
சற்றே செனீலிடி வந்து இருக்கிறது என்பது எனக்குப் பிறகே உரைத்தது.
அடுத்த வீட்டு அல்(ஆதி)சேஷன் குரைக்க ஆரம்பித்ததும்,
ஓ டாகி டாகி, எனக்கு இப்பவே டாகி பார்க்கணும்.
'Sally you are a bad girl. you will not let me play''
என்று விசும்ப ஆரம்பித்துவிட்டார்.
எனக்கு மனமே என்னவோ ஆகிவிட்டது.
ஆனால் இதை அந்தப் பெண் ரொம்ப அழகா சமாளிச்சா.
உடனே ஒரு நாய் பொம்மையைக் கையில் கொடுத்து நீங்க இதோட விளையாடுங்க. நான் இதோ வரேன். நாம் கோவிலுக்குப் போகலாம். உங்க தோழி அங்க காத்து இருப்பாங்கனு சொன்னதும் பாட்டிக்கு மீண்டும் உற்சாகம் வந்து விட்டது.
சாலி நீ ரொம்ப நல்ல பொண்ணு என்று சர்ட்டிஃபிகேட்டும் கொடுத்து விட்டார்.
ம்ம். என்னவெல்லாமோ அயல் நாடு பத்திச் சொல்றாங்களே.
இப்படியும் ஒரு பேரன் பொண்டாட்டி பாட்டியைப் பார்த்துக்கிறாளே என்று சந்தோஷப்பட்டேன்.
இன்னும் பாட்டிக்குத் தன் சொந்த ஊரானமெம்ஃபிஸ் போகத்ட்தான் ஆசை. தனியாக இருந்தால் அடிக்கடி கீழே விழுந்து விடுவதால்
தாங்கள் தங்களுடைய வீட்டுக்கு அழைத்து வந்ததாக சாலி சொன்னார்.
பாட்டிக்கு ஒரே பெண் தான் அவரும் நோய் வந்து இறந்து விட்டார்.
அந்த பெண்ணின் பையந்தான் சாம்,சாலியின் கணவன்.
பாட்டிக்குப் பிறகு ஒரு எஸ்டேட் (20 ஏக்கர்)இவர்களுக்குக் கிடைக்கும் என்று என் பெண் அவர்கள் கிளம்பியதும் சொன்னாள்.:)

18 comments:

துளசி கோபால் said...

அவசரமாப் படிச்சேன்.

அப்புறம் இன்னொருக்கா வர்றேன்.

பாட்டி இன்னும் ஒரு அம்பது வருசம் நல்லா இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

ம்ம் இருக்கட்டும்.சாலியும் நல்லா இருக்கணும்.
பாட்டிக்கு டிரெஸ் செய்து விடுவதே அந்தப் பொண்ணுதான். இறை நம்பிக்கை வெகுவாக உள்ள பொண்ணு. மெதுவா வாங்கப்பா துளசி.

G.Ragavan said...

பாட்டி பேத்தி எல்லாரும் நல்லாருக்கட்டும் முருகா.

இங்கல்லாம் வயதானவங்களுக்கு இருக்குற மனவலிமையே தனி. ஒரு டச்சுக்காரர் கிட்ட பேசிக்கிட்டிருந்தேன். கூட வேலை பார்க்கிற நண்பர்தான். அம்மா அப்பா வர்ராங்கன்னு சொல்றப்போ.. அவங்களுக்கு வயசு ஆயிருச்சு.. அதுனால பாத்துக் கூட்டீடு வரனும்னு சொன்னேன். என்ன வயசுன்னு கேட்டாங்க. அம்மாவுக்கு 57ன்னு சொன்னேன். ஆன்னுட்டாரு. 57வயசுதானா. அப்ப இன்னும் வயசாகலைன்னு சொல்லுன்னு சொன்னாரு. இங்கல்லாம் 60-65க்கு மேலதான் வயசாச்சுன்னே சொல்வாங்க. அத்தோட 70-80 வயசானவங்க கூட தனியா வெளிய போறது..பஸ்ல போறதுன்னு நம்பிக்கையோட இருக்காங்க.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஜிரா.
ஆமாம் நீங்க சொல்கிற மனத்திடத்தை நானும் பாசலில் பார்த்து இருக்கேன்.

இவங்களுக்கூ வயசே ஆகாதோனும் நினைச்சுப்பேன்.
முணுக் என்பதற்குள் கண்ல தண்ணீர் பார்க்கிற நான் எங்கே, கணவனுடன் கை கோர்த்தோ,தனியாகவோ நடக்கும் இந்த 70,80 வயசு இளைஞர்கள் எங்கே.:)

கோபிநாத் said...

நல்ல பதிவு..நல்ல பாட்டி ;)

வல்லிசிம்ஹன் said...

நல்ல பதிவு நல்ல பாட்டியா?
இல்ல நல்ல்ல்ல்ல்்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல பதிவு நல்ல்ல்ல்ல பாட்டியா:)

பிரேம்ஜி said...

இப்படி நூறு வயசிலயும் பேரன் பேத்தியோட க்ரோஷா பின்னி சந்தோசமாக வாழ குடுப்பினை வேணும்

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ப்ரேம்ஜி,
அவங்க மடியில இருக்கிறது எங்க பேரன்.:)
அவங்களுக்கு ஒரு பேரன் ,ஒரு கொள்ளுப்பேரன்.
எல்லாரும் பொறுமையா அந்தப் பாட்டியைக் கவனிச்சுக்கிறாங்க.
குடுப்பினைதான். நல்லா இருக்கட்டும்.

Anonymous said...

அழகான பதிவு வல்லிம்மா, நிறைய பேர் மேற்கத்திக்காரங்க அன்பு பாசம் இல்லாதவங்கன்னு நினைக்கறாங்க. இங்க ஒரு பாட்டி, அவங்க பேத்தி, கிண்டில இருந்து பள்ளிக்குபோற விழாக்கு போக முடியலைன்னு கண்ணீர் விட்டு அழுதாங்க. குடும்பத்து மேல அவ்வளவு பிரியம்

லதா said...

சற்றே செனீலிடி வந்து இருக்கிறது என்பது எனக்குப் பிறகே உரைத்தது.

அவர் உரைத்தது எனக்குப்பிறகுதான் உறைத்தது.
:-)

வல்லிசிம்ஹன் said...

அம்மிணி,

உலகம் சுருங்கிப்போச்சு அப்படீனு என்ன எல்லாமோ சொல்றாங்க.

அதெல்லாம் ஒரு எல்லை வரைதான்.உங்க ஊருப் பாட்டியின் சோகம் நன்றாகவே புரிகிறது.
போன தலைமுறை(என்னுடைய)க்கு இருந்த அதிர்ஷ்டம் இப்ப இல்லை.
இப்ப பாருங்க. வீட்டை விட்டுப் ப்ளேன் ஏறி அவங்க எல்லாரையும் பார்க்கப் போகணும்னு நினைத்தாலே ரொம்ப யோசனையா இருக்கு.பிரமிப்பாகவும் இருக்கு.
This involves so much planning and it is mind boggling.:(

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் லதா.
நானும் அறுபதில் நிற்கிறேன் இல்லையா... எனக்கும் புரிய கொஞ்சம் நேரம் ஆச்சு:))

சதங்கா (Sathanga) said...

வல்லிம்மா,

நல்லதொரு பதிவு. பாட்டி பற்றின செய்தி அருமை. குறிப்பா இவர்களின் மனவலிமை நாம் கண்டிப்பாகக் கற்றுக் கொள்ள வேண்டும் :)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் சதங்கா.
the will to live is great in them.
கற்றுக்கொள்ளலாம்.
நன்றிம்மா.
உங்க மீசைக் கவிதை மகா ஜோர்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பது தான் நினைவிற்கு வந்தது....கற்றுக்கொள்ள வேண்டிய பொறுமை..

சதங்கா (Sathanga) said...

//உங்க மீசைக் கவிதை மகா ஜோர்.//

ரொம்ப சந்தோசம் வல்லி டீச்சர் :)

Geetha Sambasivam said...

யு.எஸ்ஸின் தென் மாநிலங்களிலேயே கூட்டுக் குடும்பத்தை நிறையவே பார்க்கலாம் வல்லி, அதுவும் சில குடும்பங்களில் கொள்ளுப் பாட்டி, கொள்ளுத் தாத்தா கூட உண்டு. குடும்பம் சேர்ந்து இருந்தாலே இங்கே ரொம்பவே மதிப்பும் கூட. நல்லதொரு பதிவு, நன்றி. வரவே முடியலை! ரொம்ப நாள் கழிச்சு வரேன். :))))

வல்லிசிம்ஹன் said...

வலைச்சரம் விடுதலை கொடுத்தப்புறம்தானே வரமுடியும். ;)

உண்மையாவே இந்த மாதிரி குடும்பங்கள் இருப்பது பற்றிக் கேட்க சந்தோஷமா இருக்கு.
பாரம்பரியத்தை விடாமல்
இவர்கள் நடப்பதைப் பார்த்து ஆச்சரியப்படறேன்.