Blog Archive

Wednesday, April 23, 2008

290,எங்க புது வாகனம் வாகனார்









வாகனார் வந்ததுமே போட்டு இருக்க வேண்டிய பதிவும்.

இவர் வெள்ளையும் சாம்பலும் கலந்த வர்ணத்திலிருக்கிறார்.

ரேடியோ கூட இருக்கிறது:)


சிங்கத்துக்குச் சத்தமாப் பாட்டு வச்சா பிடிக்காது.

எனக்கோ இசை என்னை மூழ்கவைக்கவேண்டும் என்று ஆசை.

அதனால் நடுவாப்பில சத்தம் வச்சுக்கிறது.



முன்னால நம்ம ஃபியட்(அது விழுப்ப்ரத்தில கல்யாண அழைப்பு வண்டியாப் போயிருக்காம்.)

ஓட்ட எந்த ஓட்டியும் வரமாட்டாங்க.

எங்க நிக்கும். எங்க தண்ணீர் கேட்கும்னு எங்க ரெண்டு பேருக்குத் தான்

தெரியும்.


ஒரு தடவை பெரியவனை விமான நிலையத்திலிருந்து அழைத்து வரும்போது, புதுசாப் பாலம் கட்டுகிற இடத்தில சட்டுனு நின்றுவிட்டது. அதற்குப் பிறகு ஒரு கால் டாக்ஸி பிடித்து வந்தோம்.

ரிப்பேரான பிறகு,

இரண்டு நாட்கள் கழித்து வந்த வண்டியில் ஏற இருவரும் மறுத்துவிட்டார்கள். உங்க பஞ்சகல்யாணி உங்களுக்குத்தான் ஓடும்னு ஒரே சிரிப்பு.


ஆனா சிங்கம் பக்கத்தில டிரைவ் செய்தா யாரும் அவரை நம்பி வண்டில வரலாம்.

ஒருதடவை அப்படித்தான் இங்கிருந்து ஒரு மஷ்டாங் என்கிற கறுப்புக் கலர்

அமெரிக்கன் வண்டியைத் திருச்சியில் கொண்டுவந்து விடச்சொல்லி இவரோட அத்தை மருமகன் கேட்டுக்கொள்ள

அது ஒரு வார இறுதியாக இருந்ததால்,

நாங்க எல்லோரும் கூட வருவதாக் அடம் செய்யவும்,

பின் இருக்கைகளில் இந்த மூணு பசங்களையும் தலையணை வசதிகளோடு பார்க் செய்து விட்டு ஒரு சனிக்கிழமை மாலை கிளம்பினோம்.

அபோதெல்லாம் இப்போதைய வசதிகள் கொண்ட சாலைகள் இல்லை, பயம் தரும் பெரிய லாரிகள் கிடையாது.

வேகமாக விரட்டி வரும் திருவள்ளுவர்கள்(மன்னிக்கணும் ஆசானே) கிடையாது.

அதனால் படு வேகமாகக் கிளம்பினோம்.

விக்கிரவாண்டி வருவதற்குள் குழந்தைகள் தூங்கியாச்சு.


நாங்அளும் நிலவை அனுபவித்தாறு போய்க்கொண்டிருந்தோம்.

நடுவில் வந்ததுப்பா ஒரு மோட்டார் சைக்கிள்.விளக்குப் பொருத்தாமல் வேகமாக வந்தவனை,

மோதிவிடாமல் சரேலென்று சாலையோரம் வண்டியை ஒடிக்க

அது இறனங்க்கியது ஒரு குட்டிப் பள்ளத்தில்.

பிள்ளைகள் அதிர்ச்சியில் விழித்துக் கொண்டு,என்ன்ன்ன்ன்னப்பா????னு சுதாரித்துக் கொண்டார்கள்.

நடுநிசினு சொல்கிற நேரம். இப்ப வண்டியை மேல எடுக்கணும். என் புஜபல பராக்கிரமம் மட்டும் போதாது.:)

இந்த மட்டும் விபத்து ஏற்படாமல் தப்பித்தோமேனு சுத்து முற்றும் பார்த்தால் கொஞ்சம் தள்ளி டீக்கடை ஒன்று தெரிந்தது.


டீயும் பொறையும் சாப்பிடறியானு கேட்டார். ஆஹா கட்டாயம், சாப்பிடலாமே என்று சம்மதித்து நான் வண்டியில் காவல் இருக்க,அவர் மட்டும் அந்தக் கடைக்குப் போனார்.
ஏம்மா இந்த வண்டில அஞ்சு மணி நேரத்திக்ல திருச்சிக்குப் போலாமுன்னு அப்பா சொன்னாரேனு பெரியவன் முணுமுணுக்கிறான்.
அவனைவிட இரண்டு வயசு சின்னவள்,எங்க பெண் இல்லடா அண்ணா,

அப்பா நமக்கெல்லாம் மூன்லைட் டின்னர் கொடுக்கிறார் என்று அழகாகச் சொல்கிறது.

அதையும் விடச் சின்னவருக்கோ,(3 வயசு) தூக்கக் கலக்கத்திலியே ''நாந்தான்

அப்பவே சொன்னேனே லின்கன் காந்டினெந்டல் வாங்கலாம்னு' அப்பாதான் கேட்கலைனு மீண்டும் தூங்கி விட்டான்.


அவனோட டஜன் காரில அதுதான் ரொம்ப நீளமான கார்:)

நான் காருக்கு வெளில நின்று கொண்டு அவர் வேற யாரையாவது கூப்பிட்டு வருவாரா,திருச்சிக்கு எப்போ போவொம்னு யோசித்துக்கொண்டிருக்க,அவரும் டீக்கடைப் பையன்,பொறை,டீ சகிதம் வந்து விட்டார்.

''இன்னா கார் சார் இது. இவ்வளவு குள்ளமா இருக்கு'' என்று வியந்தான், கடைப்பையன்.

நம்ம ஊருக்கு லாயக்கில்லை.இறங்கிடுச்சே:(

என்று வருத்தப் பட்டவனிடம் விவரத்தை சொல்லி,

வண்டிச் சக்கரத்தை மேல எடுக்கணும்னு விளக்கினார்.

ஆ,கொஞ்சம்தான் இறங்கி இருக்கு. செய்துடலாம்னு ஓடிப்போய் இன்னும் இருவரைக் கூப்பிட்டு வந்தான்.
குழந்தைகளைக் கீழே இறங்கவைத்து, காரோட மெத் மெத் காலடியை போட்டு உட்கார வைத்து எல்லோரும் 'மஷ்டாங்கை' வழிக்குக் கொண்டுவர முனைந்தோம்.
கடப்பாறை இல்லாமல் வெளியிலேயெ கிளம்பாத இவரது பழக்கத்தை
அன்று மிக மெச்சிக்கொண்டேன். எதுக்கும் உபயோகப்படும் என்று டிரன்க்கில் போட்டு எடுத்து வருவார்.


அந்தக் கடப்பாறையால் இவர் நெம்ப நாங்கள் அனைவரும் 'ஏய் ஐலசா'னு சொல்லித் தம் பிடித்து வண்டியைத்தூக்க அதுவும் வெளியே ரோட்டுக்கு வர

,,சூரியன் உதயமாவதற்குத் தயாராகிவிட்டான்.


முதலில் பார்த்தது ஏதாவது கீறல் விழுந்திருக்கான்னு தான் பார்த்தோம்.

நல்ல வேளை ஒன்றும் இல்லை.

பசங்க மீண்டும் உற்சாகமாக ஏறிக்கொள்ள உதவி செய்தவர்களுக்கான

மரியாதைச் செய்துவிட்டு, பெரம்பலூர் அய்யர் உணவு விடுதியில்

பெஞ்சில் உட்கார்ந்து காலைப் பலகாரம்(பல் தேய்த்துவிட்டுத்தான்)

சுவையாக முடித்துக் கொண்டு கண்டோன்மெந்ட் வீட்டுக்கு ஒரு 8 மணி வாக்கில் வந்தோம்.

மதியமே ஒரு ஸ்டேட் ட்ரான்ஸ்போர்ட் பஸ்ஸில் திரும்பினபோது குழந்தைகளுக்கு உற்சாகம் குறைந்து விட்டது.
முன்னாலியே ஏறிவிட்டதால் அவர்களை வண்டி ஓட்டுபவருக்கு அருகில் இருக்கும் இருக்கைகளிலேயெ உட்கார வைத்ததும்,ஃப்ரண்ட் சீட் கிடைத்த

சந்தோஷத்தில் ,பேசிப் பாடிக்கொண்டு சென்னை சைதாப்பேட்டை வந்து சேர்ந்தோம்.


வாகனாரைப் பற்றிச் சொல்ல வந்து வேறெங்கியோ சுத்தி வீட்டுக்கு வந்துட்டேன்:)










18 comments:

வல்லிசிம்ஹன் said...

கறுப்புக் கலர் வண்டி கூகிள்ள கிடைக்கலை. அதான் சிவப்பு வண்ண வண்டியைப் பிடிச்சுப் போட்டு விட்டேன்;)

ACE !! said...

Black mustang can be found here :).. Googlandavar yaarayum kai vida maattaar.. :)

http://images.google.com/images?gbv=2&hl=en&q=black+ford+mustang

கோபிநாத் said...

நாங்களும் பதிவுலேயே ஒரு ரவுண்டு அடிச்சிட்டோம் ;))

வல்லிசிம்ஹன் said...

அடடா,
சிங்கம்னா இது அல்லவோ சிங்கம்.
பார்த்தேன் சார். பார்த்தேன். தேடத் தெரிந்தவர்கள் தேடினால் ஆண்டவர் வழி விடுவார் போலிருக்கு:)

ரொம்ப நன்றி சிங்கம் லே ஏஸ்!!!!
எத்தனை வண்டி அங்க நிக்குது.
அதில 1969 கன்வர்டபிள் தேடி இருக்கணும்:)))

வல்லிசிம்ஹன் said...

இனிமே ரவுண்டு போகும்போது கோபிநாத்தையும் அழைச்சுட்டுப் போகலாம்னு இங்க சொல்லிக்கறேன்:)

துளசி கோபால் said...

ஹைய்யா....அருமையான காரும் அதனால் கிடைச்ச கதையும் :-))))

எனக்கொரு ரைடு (அதுலே) வேணுமடா.......

வல்லிசிம்ஹன் said...

ஆஹா. துளசிக்கில்லாத ரைடா.

சரி கோபி ஒரு பக்கம் ,துளசி இன்னோரு பக்கம். நடுவில ஒரு இடம் பாக்கி. கோபாலையும் அழைத்துப் போகலாமா:)

வல்லிசிம்ஹன் said...

ஆஹா. துளசிக்கில்லாத ரைடா.

சரி கோபி ஒரு பக்கம் ,துளசி இன்னோரு பக்கம். நடுவில ஒரு இடம் பாக்கி. கோபாலையும் அழைத்துப் போகலாமா:)

Radha Sriram said...

//ஆஹா. துளசிக்கில்லாத ரைடா.

சரி கோபி ஒரு பக்கம் ,துளசி இன்னோரு பக்கம். நடுவில ஒரு இடம் பாக்கி. கோபாலையும் அழைத்துப் போகலாமா:)//

அப்ப நாங்கெல்லாம் ட்ரங்க்லயா........boohoo....:(??

வல்லிசிம்ஹன் said...

நோ நோ.ராதா:0
அழக்கூடாதுமா.
மேல இடம் இருக்கே.
உங்க ஊரில போட் எடுத்துப் போபாங்களே,அதுமாதிரி காரியர் செஉது சேர் போட்டு இன்னும் வரவாளுக்கெல்லாம் இடம் செய்துடலாம்..ரைட்டா;)

நானானி said...

நான்...எங்கே? ஜெயலலிதா காரில் சைடில் தொங்கிக்கொண்டே வரும்
செக்யூரிட்டி மாதிரி தொங்கிக்கொண்டே வரலாமா? நான் ரெடி!
புது வண்டிக்கு பாடி முனீஸ்வரர் கோயிலில் பூஜை போட்டாச்சா?
வாகனாருக்கு என் வாழ்த்துக்கள்!!

வல்லிசிம்ஹன் said...

நானானி என்னப்பா நாமெல்லாம் சீனியர் சிடிசன் இல்லையா.
ஒண்ணு செய்யலாம். பின்னாடி ஒரு காரவான் இணைச்சுட்டா என்ன?

அப்டி இப்டி சமைச்சு சாப்பிட்டு,தூங்கி எழுந்து ,பயணம் போகலாமே. இது எப்படி;)

Radha Sriram said...

கோலம் ரொம்ப அழகா இருக்கு வல்லி.....அந்த செம்மண்ணும் அந்த நாலு மூலை கோலமும்..அய்யோ ஊர் நியாபகம் ரொம்ப வருது....!!

வல்லிசிம்ஹன் said...

ராதா, புது வருஷப் பிறப்புக்குப் போட்டது. நன்றி.
இதுதான் உங்க ஊரில போட முடியாதே. இப்ப வந்தால் முடியும் சம்மர் தானே. பொண்ணு வீட்டு வாசலில் பளிச்சுனு போட்டுடலாம். நான் இந்தத் தடவை வரும்போது உங்க வீட்டுக்கும் வந்து போட்டுட்டுப் போறேன்.
நீங்க இந்தப் பக்கம் வரமாட்டீங்களா:)

Geetha Sambasivam said...

//எங்க நிக்கும். எங்க தண்ணீர் கேட்கும்னு எங்க ரெண்டு பேருக்குத் தான்


தெரியும்.//

ஹிஹிஹிஹி, நல்லா இருக்கும் இல்லை? நினைச்சுப் பார்த்துட்டுச் சிரிச்சேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா. இவரைப் புரிந்து கொண்ட அளவு இருவருக்குமே அந்தக் காரோட நடவடிக்கைகள் அத்துபடி.

கிளம்பும்போதே சத்ததை வைத்து எத்தனை தூரம் சங்கடம் வராம ஸ்மூதாப் போகும்னு சொல்லிடலாம்.
பழைய கார்களின் குணமே அதுதான்.

இலவசக்கொத்தனார் said...

வெளிய போனாக் கடப்பாரை எடுத்துக்கிட்டு போற பழக்கமா??? ஐயாம் தி எஸ்கேப்பூ!!!

வல்லிசிம்ஹன் said...

கடப்பாறை இல்லாமல் வெளியிலேயெ கிளம்பாத இவரது பழக்கத்தை
அன்று மிக மெச்சிக்கொண்டேன். எதுக்கும் உபயோகப்படும் என்று டிரன்க்கில் //
ஆமாம் கொத்ஸ். நாங்க பிரயாணம் செய்யற வண்டி எல்லாம் ரோட் டெஸ்ட் செய்யற வண்டியாக இருக்கும். அப்போ நாம ஏற்பாடா போறததுதானே புத்திசாலித்தனம்.

எங்க சிங்கம் தங்கம்பா. ராத்திரி வண்டி நின்னாக்கூட இவரே ரிப்பேர் செய்துடுவார், கூட டெஸ்ட் லாம்ப் பிடிக்க நான்.ஒரு சிவப்புக் கலர் டூல் பாக்ஸும் கூட வரும். அதுல ஸ்பான்னர்,இத்தியாதிகள் வரும்:)