Blog Archive

Tuesday, April 22, 2008

289,பாப்பா வழி தனி வழி.







இங்க படங்களில் இருக்கும் பாப்பா,
சும்மா ஒரு யானை, டெடி,பார்பி னு விளையாடுவதில் இஷ்டம் கிடையாது.
எல்லாருடைய செருப்புகளையும் போட்டுக்கொள்ளும்.
கைப்பைகள் ரொம்பப் பிடிக்கும்.
உள்ள இருக்கிற கைப்பேசி, அழகு சாதனங்கள், வீட்டு சாவி, க்ரெடிட் கார்ட் எல்லாத்தையும் வெளில எடுத்து பிரித்து, தட்டி, கொட்டி மறுபடியும் உள்ள போட்டு
கொண்டாட்டம்தான்.
அதைத்தவிர எடை பார்க்கும் மஷின்தான் அதற்கு சக்கர வண்டி:)
எதையாவது கையில இருந்து வாங்கணும்னா வேற ஒண்ணைக்
கொடுத்துவிட்டுத்தான் பண்ட மாற்று செய்ய முடியும்.
இப்ப இன்னும் ஒரு வயசு கூடி விட்டாலும்,
இன்னும் ஷூ மோகம் போகலை.
பளையல்(வளையல்), செயின் எல்லாம் , பாட்டி கழுத்தில் இருப்பது ரொம்பப் பிடிக்கும்.
கொடுத்துடு பாட்டி என்று கேட்டு வாங்கிப் போட்டு நடக்கும் அழகே தனி!!
எங்க அப்பா வழிப்பாட்டியைப் பார்ப்பது போல ஒரு தோற்றம் கொடுக்கும்.

16 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அக்கா!
இந்தக் குழந்தைகள் ரசனையே விசித்திரமானது. எதை நாம் தொடக்கூடாதென நினைகிறோமோ அதைத் தொட அடம்பிடிப்பார்கள்.
என் தம்மி மகன் கையில் எப்போதும் திறப்புக் கொத்தொன்று ; அவுஸ்ரேலியாவில் இருக்கும் அவருக்கு
என்ன அனுப்ப என்று கேட்டபோது; பழைய திறப்பு வேண்டுமெனக் கேட்டு நான் கடிதத்தில் சில திறப்புக்கள் அனுப்பினேன். இப்போ 10 வயது ஆனாலும் திறப்பில் ஒரு கண் உண்டு.
நிச்சயம் நம் மூத்தோர் தான் நம் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளாக வருகிறார்கள் என்பதில் சந்தேகம் என்ன??என்னை என் மாமாமார் தங்கள் தந்தையார் போல்(என் தாய் வழிப் பாட்டா)எனக் கூறுவார்கள்.
உருவமும்;செயலும்..
பாப்பாவில் முகம் நன்கு தெரியவில்லை.
அன்பான முத்தமும் வாழ்த்துக்களும்..; சந்தோசமாக இருங்கள்.

பாச மலர் / Paasa Malar said...

அழகோ அழகுதான்..

PPattian said...

ச்ச்ச்சோ.. ச்வீட். இந்த காலத்து குழந்தைகள் அழுதால் சமாதானப்படுத்த சிறந்த பொருள் மொபைல் போன்..

வல்லிசிம்ஹன் said...

மலர் நன்றிப்பா. இந்தக் குழந்தைகள் நம் மனதை எப்படிக்
களிப்பாக்குகிறார்கள் பார்த்தீர்களா.
சந்தோஷமாக இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

தம்பி யோகன், குழந்தைகள் நம் பெரியோரின் மறு தோற்றம் என்பதில் எனக்குத் துளியும் மறுப்பில்லை.

ஒங்க தம்பி மகன் போல எங்க இன்னோரு பேரனும் (அவனுடைய 3ஆவது வயசில்)திறப்புக்கோலைத் தேடுவான்,.
ஒரு தடவை கும்பகோணம் கோவில் பேரிய கதவின் சாவியைப் பார்த்து விட்டு,
அந்தக் கோவில் அர்ச்சகரிடம் பிடிவாதம் பிடித்துக் கொஞ்ச நேரம் கையில் வைத்திருதுதான் தந்தான்.
கோவிலீலிருந்து ரயில் நிலையத்துக்கு வரத்தான் நேரம் இருந்தது:)

வல்லிசிம்ஹன் said...

பாயிண்ட்!!!!
எங்க சின்னப் பேரன் அழும்போது மொபைல் போனில் ஒரு காட்டுக் கத்தல் ஸ்பானிஷ் ம்யூசிக் போட்டால் சிரித்துவிடுவான்.:)
நன்றி புபட்டியன்.

NewBee said...

ச்ச்ச்ச்சோ கியூட்!

எடை பார்த்து, யாரும் மனம் வருந்தி நெய் விட்ட அடை சாப்பிடாமல் இருந்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் அதைத் தள்ளிக் கொண்டு போடும் குட்டிக்கு....

என் சார்பில் ஒரு சூப்பர் சபானிஷ் பாட்டு ப்ளீஸ்! :))))))

பாப்பா குட்டி சார்மிங்.:)

வல்லிசிம்ஹன் said...

ஆஹா நெய் விட்ட அடையா.....நினைத்தாலே இனிக்கும்ம்ம்ம்ம்.
ஆமாம் பாட்டி எடை பார்த்தால் ,

மெஷினுக்கும் வருத்தம்,பாட்டிக்கும் வருத்தம். அதான் பாப்பா அதை நடை வண்டி ஆக்கிட்டா.
நன்றிம்மா. நியூபீ.

துளசி கோபால் said...

ஹைய்யா.... ஹை.

பாப்பா செம க்யூட் குட்டி.

இப்பெல்லாம் பசங்க பிறக்கும்போதே ரிமோட் & செல்ஃபோனோட வருதுங்கப்பா.

நேஹாவுக்கு செல்ல முத்தங்கள்.

கோபிநாத் said...

:))

அழகான குட்டி..;)

ஜீவி said...

//கொடுத்துடு பாட்டி என்று கேட்டு வாங்கிப் போட்டு நடக்கும் அழகே தனி!!
எங்க அப்பா வழிப்பாட்டியைப் பார்ப்பது போல ஒரு தோற்றம் கொடுக்கும்.//

அனுபவித்து அழகாக உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
மனசுக்கு சந்தோஷமாக இருந்தது.

குமரன் (Kumaran) said...

நீங்க பேத்தியைப் பத்தியும் நானானி பேரனைப் பத்தியும் எழுதுறீங்க. நீங்க எழுதுனதை எல்லாம் பாத்தா எங்க பையனைப் பத்தியும் எழுதலாம் போல இருக்கு. :-) நான்கு வயது ஆகும் வரை குழந்தைகளைப் பார்ப்பதே தனி மகிழ்ச்சி தான் இல்லையா? :-) நான்கு வயதிற்கு மேல் ஆகிவிட்டால் வேறு விதமான அழகு வந்துவிடுகிறது; மூத்தக் குழந்தை என்றால் கொஞ்சம் பெரிய மனுஷத்தனமும் வந்துவிடுகிறது. :-)

வல்லிசிம்ஹன் said...

பாப்பா கிட்ட உங்க முத்தங்களைச் சேர்த்துவிட்டேன், துளசி.

இன்னோரு பாட்டியானு கேட்டுது. ஆமாம்னேன்.
அதனால உங்க பேரு இன்னோரு பாட்டி:)

வல்லிசிம்ஹன் said...

ஓ.ஆமாம் கோபி.அழகிதான் அவள்.:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஜீவி.

அச்சு அசல் எனங்க்க்க பாட்டிதான் அவள். அதே புருவ நெரிப்பு. செயின் ஆசை.:)
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

குமரன். அப்படியே நிஜம். இரண்டு வயது வரை ஒரு மழலை. தளர் நடை.எல்லாம் அணு அணுவாக ரசிக்கலாம்.
அதற்கப்புறம் கொஞ்சம் பிடிவாதம் கூடின அழகு.
உங்க செல்வனும் இப்போது இந்த நிலையில் தான் இருப்பான்:)
என்ன எல்லாம் பேசுகிறானோ.
ரெண்டாவது வந்தால் முதலாவது்க்க்குப் பெரியவள் என்கிற பட்டமும் நடத்தையும் வந்து விடும்.:)