About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Monday, March 17, 2008

காணி சோம்பல்...


இந்தப் படங்களுக்கும், கீழே வரும் கதைக்கும் சம்பந்தம் இல்லை:)

ஒரே ஒரு ஊரிலெ ஒரு அம்மா. அந்த அம்மாவுகு வயதாகி விட்டது.
இருந்தாலும் மனது இளமையா இருந்தால் உடலும் சொன்ன பேச்சு கேட்கும் என்ற பரிபூரண நம்பிக்கை.

தப்பு இல்லைதான்.
அதே சமயம் ஆரோக்கியமும் பேணிக்காக்க வேண்டியதுதான்
என்பதில் கொஞ்சம் அசிரத்தை அந்த அம்மாவுக்கு.
என்ன, அந்த அந்த வேளைக்கு உண்டான மருந்தை உட்கொண்டால்
தானே உடல் வயப்படும்.'' என்று எண்ண.

அந்தச் சிந்தனைக்கு ஒரு தடை போடுவது போல, ஒரு நிகழ்ச்சி,.
கொசுக்களும், கரப்பான்பூச்சிகளும் திடிர்ப்பெருக்கம் செய்து வீட்டில் நிறைந்தன.
இந்தத் திடீர் தாக்குதலுக்கு என்னடா காரணம் என்று தேடியதில்,
பக்கத்து மனையில் பெஸ்டிசைட் நிறைய போட்டு, அங்கிருந்து தப்பி வந்த ஜீவராசிகள்.
சுற்றுச் சுவரைத் தாண்டியதும் அம்மா வீட்டுக்கு வந்துவிட்டன,.
ஒரு எலி,
ஒரு பெருச்சாளி, இதெல்லாம் பெரிய ஜந்துக்கள்.
நம்ம சாம்பர்(பூனை) சாரும் வேட்டைக்களத்தை மாற்றிவிட்டதால்
அம்மாவுக்கு ஆதரவு கொடுக்க யாருமில்லை:)
சரி என்ன செய்யலாம்னு யோசித்த அம்மா, தங்களோட சிங்கத்துக்கிட்ட சொல்லி
சாளரங்கள்:)
எல்லாவற்றுக்கும் கொசு வலை அடித்தாச்சு.
அது இனிமேல் கொசு வராம இருக்கும்.
ஏற்கனவே அடைக்கலாமாகி விட்ட கட்டில்களுகுக் கீழே,
கோத்ரேஜ் பீரோ மேலே ,சாமி ரூம் படங்களுக்குப் பின்னால்...
இடமா இல்லை.
அப்போது குழந்தைகள் பேரன்கள், பேத்தி வீட்டில் இருந்த காரணத்தால்
அவர்களை ஒரு பகலுக்கு வெளியே அனுப்பி விட்டு
வீடு முழுக்க பேகான் அடித்தாச்சு.
நமக்கு சுவாசம் சம்பந்தப் பட்ட பிரச்சினை ஏதுமில்லை,
அதனால் குளிக்கும் அறைகளுக்கு நாமே அமிலம் ஊற்றி மிச்ச மீதி
பாக்டீரியா அமீபா இனங்களை வெளியேற்றி விடலாம்னு அம்மா நினைச்சாங்க..
அங்க வந்தது காணி சோம்பல்.
எல்லாவற்றையும் பொறுமையாக முடிக்கும் போது,
நம்ம கொத்ஸ் சொல்லுவாரே:)
இதை இவன் முடிப்பான் என்று அதை அவன்கண் ஒப்படைப்பதுனு ஒரு வாக்கியம்

அந்த வாக்கியத்தை மறந்து,
மூக்கில துணி போட்டு மறைக்காமல் அப்படியே அத்தனை அமிலத்தையும் சீராக
மாடி குளியலறை, கீழே இருக்கும் குளியலறை என்று ஒரு துளி இடம் விடாமல் தூவியாச்சு.
அசட்டுத்தனம் தான்.
இப்ப தான் ஹார்பிக் வந்துடுத்தே, ஏன் இன்னும் அமிலம் என்று நீங்க கேட்டீங்கன்னா
ரொம்ப வம்பாப் போயிடும் சொல்லிட்டேன்.
எனக்கு புதீசா வரப் பொருட்கள் மேல அவ்வளவு நம்பிக்கை போதாது.
அதுக்கு மாத்தா எங்க வீட்டு உதவிக்கு வர இரண்டு அம்மாக்களுக்கும் அமிலத்தைக் கண்டாலே பயம்.
''ஐய்ய அத்தை யாரு திறக்கறது.
கையெல்லாம் பொரிஞ்சு போயிடும்மா. நீ பெனாயிலைக் கொடு களுவறேன்'' என்று விலகிக் கொள்ளுவார்கள். பினாயிலுக்க் அடங்குகிற ஜன்மங்களா இந்தக் கரப்பான் பூச்சிகள்???

அதுவும் திடீர் தீடீரினு பாய்ச்சல் வேற காட்டும் ,பறக்கும்
.பெண் மருமகள் உட்பட அத்தனை பெரும் அலறுவார்கள்.
ஏம்மா இத்தனை ஜீவராசிகளை வளர்க்கறே வீட்டுக்குள்ள?? என்று கடுப்பேத்துவார்கள்.
நாம் பெற்ற செல்வங்களைக் காப்பது நம் கடமையலாவா என்றுதான் அமிலத்தைக் கையிலெடுத்தார்.
அம்மா:))
அப்படிப் பொறுப்பாக வீசும்போது கொஞ்சம் தன் கால் களிலும்(இதற்குத்தான் அறியாமை விபத்து என்று பெயர்)
தெளித்துவிட்டார்:((
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது''னு யாராவது பாடுவதற்குள் இந்த ஆசிட் விஷயத்தை மறைத்து அதற்கு சந்தனம் பர்னால்,வெண்ணை,தோசை மாவு எல்லாம் அபிஷேகம் செய்து
உடை மாற்றிக்கொண்டு பழைய அம்மாவாகவே வளைய வந்து அவர்களை எல்லாம் ஊருக்கு அனுப்பிய பிறகு வைத்தியரிடம் போனால்,
நாகரீகமாக என்னை வைதார். '' நீங்க எல்லாம் படிச்சவங்கதானே.
காயம் பட்ட அன்னிக்கே வந்திருந்தா இவ்வளவு பெரிதாகி இருக்குமா.
இப்போ மூணு பெரிய புண்களான இவைகளுக்கு சிகிச்சை அளித்துக் குணமாவதற்கு 40 நாட்களாவது ஆகும்''
என்றார் அவர்.
ஏதோ இரண்டு மாதங்கள் ஓடி விட்டது.
அவர் சொன்ன ஒரு அறிவுரையும் கேட்கவில்லை.
காலைக் கீழே வைக்கக் கூடாது, நடக்கக் கூடாது....இத்தியாதி இத்தியாதி.
நமக்குப் பதிவுகள் பார்க்க,படிக்க,பின்னூட்டம் இட எல்லாவற்றுக்கும் காலைத்தூக்கி ஒரு முக்காலியில் வைத்துக்
கொண்டா செய்ய முடியும்?
அப்புறம் முதுகு வளைந்து போகாதா.
அதற்கு வேற மருந்தெடுக்கணும்.
வைத்தியரைப் பார்க்கும்போது,அவர் கேட்கும் கேள்விகளுக்கு
மகா பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு பதில் சொல்லிவிட்டு வந்துவிடுவேன்.
சும்மா இருக்க முடியாமல்
துளசியிடம் மட்டும் புலம்பிவிட்டு
உங்களையெல்லாம் பயங்கரமான சவுக்கார் ஜானகிப் புலம்பலில் இருந்து காப்பாற்றி,
மீண்ட ஆரோக்கியத்தோடு இதோ சிரித்துக் கொண்டே பதிவு போட்டு விட்டேன்.
அறிவுரை.
அமிலம் பக்கம் போகாதீர்கள்.
அன்புடன்:)))


Posted by Picasa

20 comments:

இலவசக்கொத்தனார் said...

அடக் கடவுளே!! நல்ல படியா கால் சரியாச்சா? (சரியாச்சுன்னா மீதி முக்கால் எப்ப சரியாகும் அப்படின்னு கேட்பேன். அதனால முழுசாவே சரியா போச்சுன்னு சொல்லிடுங்க!)

இருந்தாலும் காயம் பட்டுதுன்னா டாக்டரிடம் போகாம இருக்கறது எல்லாம் ரொம்ப த்ரீ மச்சு.....

இலவசக்கொத்தனார் said...

//நம்ம கொத்ஸ் சொல்லுவாரே:)
இதை இவன் முடிப்பான் என்று அதை அவன்கண் ஒப்படைப்பதுனு ஒரு வாக்கியம்//

அம்மா, ஏற்கனவே எல்லாரும் நம்ம பேரில் ரொம்ப கடுப்பா இருக்காங்க. நீங்க வேற புதுசா கிளப்பாதீங்க!

அதெல்லாம் திருவள்ளுவர் அப்படின்னு ஒரு ஆசாமி சொன்னது, நான் இல்லை!! :))

துளசி கோபால் said...

அடிப்பாவி....
( செல்லமாத்தான் சொல்றேன்)

அமிலக்கேஸா?

அப்ப வாயைத் திறக்கலையே....
ஆனாலும் .............இத்தனை விஷமம் ஆகாது.

இப்பப் பூரண குணம்தானே?

வல்லிசிம்ஹன் said...

கொத்ஸ்,
அதெல்லாம் விட்டுடுவோமா.
கோவில் கோவிலா எழுதிப்போட்டு, ஒரு மாதிரி சரிசெய்துட்டோமில்ல.:)

ஒரு மைனர் (துளீயூண்டு கீறல்) சர்ஜரி செய்து தோல்வைத்தியர் சரியாக்கிவிட்டார். இப்போ முழுக்காலும் சௌக்கியம் மகமாயி துணையால்.நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

கொத்ஸாரே,

வள்ளுவர் சொன்னதென்னமோ உண்மைதான்.

அதை எங்களை மாதிரி எழுதறவங்களுக்கும்,
பின்னூட்டமா சொல்றது சில பேரு தானுங்களே.;))

பாச மலர் said...

இப்போ முழுசா சரியாய்ருக்கும்னு நினைக்கிறேன்...ஜந்துக்களின் தொல்லையும்..காலும்..

வல்லிசிம்ஹன் said...

நல்லாக் கேளுங்க துளசி.
அப்படியாவது கொஞ்சம் உறைக்கும்.

நல்லா ஆறிக்கிட்டு வரது.

உடனே என்னைப் பத்தி ஏகப்பட்ட விளம்பரமாயிடுமேனு ( ஹி ஹி)
உங்க கிட்டே சொல்லலை:))

வல்லிசிம்ஹன் said...

வரணும் பாசமலர்.

எல்லாம் துண்டைகாணோம் துணியைக் காணோம்னு ஓடிவிட்டது.
கடல் கடந்து வர திட்டுகள்தான் இன்னும் ஓயவில்லை(என் புத்திரச் செல்வங்களைச் சொல்றேன்:))

சுல்தான் said...

//அவர்களை ஒரு பகலுக்கு வெளியே அனுப்பி விட்டு
வீடு முழுக்க பேகான் அடித்தாச்சு.//
பார்த்து செய்ய வேண்டிய வேலை. இங்கே துபையில் இது ஒரு பெரிய பிரச்னையாகி விட்டது. தனிப்பதிவாக இடுகிறேன்.
விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.

ambi said...

நான் மட்டும் அந்த டாக்டரா இருந்தா அந்த அம்மா தலைல நறுக்குனு ஒரு கொட்டு வெச்ச்ருப்பேன். :p

அதான் கொட்டலையே? ஏதுக்கு தலைய தொட்டு பாக்கனும்? :))

இப்ப கால் எப்படி இருக்கு?

டாய்லெட் ரூமிலிம் பேகானே அடிக்கலாம், ஹார்பிக் நல்லா வேலை செய்யுது.

சொந்த அனுபவம் தான், தைரியமா யூஸ் பண்ணுங்க. ஹார்பிக்குக்கு நான் கியாரண்டி. :))

வல்லிசிம்ஹன் said...

வரணும் சுல்தான்.
கட்டாயம் எழுதுங்கள்.

பிள்ளைகள் நடமாடும் வீட்டில் இந்தப் பொருட்களை வைத்திருப்பதே சிரமமாக இருக்கு.

அதுவும் வித விதமாக அழிப்பான்கள்.
அவற்றின் வீர்யமும் அதிகம்.
அந்தக் காலத்து வாஷிங் சோடாவூக்கே போய்விடலாம்:)

வல்லிசிம்ஹன் said...

அம்பி,
ரெண்டு மாசம் இழுத்தடிச்ச டாக்டர் ஒருத்தர்.
இந்த ஸ்கின் எடுத்த டாக்டர் இன்னோருத்தர்.
ஆகக்கூடி எல்லோருக்கும் ஒரு பேஷண்ட்டை விட்டு விட மனசில்லையோனு தோன்றுகிறது

எல்லாம் ஒரு க்ஷ்ணம் யோசித்திருந்தால் தவிர்க்கலாம்.
இனிமே ஹார்பிக்கே கதி:)

கோபிநாத் said...

ம்ம்..பார்த்தும்மா..!

தி. ரா. ச.(T.R.C.) said...

உங்களையெல்லாம் பயங்கரமான சவுக்கார் ஜானகிப் புலம்பலில் இருந்து காப்பாற்றி,
மீண்ட ஆரோக்கியத்தோடு இதோ சிரித்துக் கொண்டே பதிவு போட்டு விட்டேன்
என்ன இப்படி பண்ணீட்டிங்க. நாங்க என்ன அவ்வளவு வில்லன்களா? நாங்களும் பரிவாதான் இருப்போம்

வல்லிசிம்ஹன் said...

நன்றி கோபி.
துபாயிலிருந்து இன்னோரு பையன் பாத்தும்மா..னு சொல்லியாச்சு:))

வல்லிசிம்ஹன் said...

ஏதாவது சமர்த்தா செய்துவிட்டு,
பாராட்டு வாங்கறது எப்படி...
இப்படி அசட்டுத் தனத்தைப் பின்னால சொல்றதுதாஅன் பெண்டிர்க்கு அழகில்லையா தி.ரா.ச சார்.
மத்தபடி நட்புகளோட அருமை எனக்குத் தெரியாதா...

தி. ரா. ச.(T.R.C.) said...

இரண்டு ரூபா காயின் அளவுக்கு காலை அரிச்சு இருக்கு இது மைனாரா?
காலல் காலத்தில் கால்கட்டு போடனும்ன்னு கேட்டு இருக்கேன். ஆனா இப்படி போறாத காலத்தில் கால் கட்டு போட்டவர் நீங்கள்தான் ஜாக்கிரதாய் இருக்கனும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி. தி.ரா.ச சார்.

கவனமாக இருப்பேன் இனிமேல்.
பட்டால் தெரியும்.......:))

கீதா சாம்பசிவம் said...

//எல்லாவற்றுக்கும் கொசு வலை அடித்தாச்சு.
அது இனிமேல் கொசு வராம இருக்கும்.//

அப்படினு யார் சொன்னது? வீட்டுக்குள்ளே இருப்பது வெளியே போகாது, அவ்வளவு தான், வெளியே இருப்பது தாராளமாய் உள்ளே வந்து இரண்டும் கொஞ்சிக் குலவும்.

இவ்வளவு மோசமா ஆயிருக்கு, அன்னிக்கு ஒரு நாள், அதான் லாங் லாங் அகோ, நான் தொலைபேசிய போது ஒண்ணுமே சொல்லவில்லையே? ம்ம்ம்ம்ம், உங்க உடம்பில் சர்க்கரை வேறே இருக்கும்போது கவனம் அதிகம் இருக்கணும், இது எல்லாம் விளையாட்டில்லை. :(((((((((((

வல்லிசிம்ஹன் said...

கீதா,
உண்மைதான். பொங்கல் போதுதான் ஆரம்பித்தது.

தோழியோடும் நோய் பேசேல்னு புது மொழி வச்சுக்கலாமா.
கவனமா இருக்கேன்மா. இது ஒரு நல்ல படிப்பினை.
தாமதமாகப் பதில் சொல்வதற்கு மன்னிக்கணும்